மொத்த உள்நாட்டு
உற்பத்தி புதிருக்கு விடை கிடைத்தது
புதிய துறை
அதிவேகமாக விரிவடைகிறது
பிப்ரவரி 28 அன்று மத்திய புள்ளிவிவர அமைப்பு 2017 அக்டோபர் - டிசம்பர் காலத்துக்கான மொத்த
உள்நாட்டு உற்பத்தி பற்றிய உத்தேச மதிப்பீட்டை முன்வைத்தது. ஆனால், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்த 86% பணத்தை செல்லாது என அறிவித்த காலத்தில் மொத்த
உள்நாட்டு உற்பத்தி 7% அதிகரித்தது
என்று, அதாவது, பணமதிப்பகற்றும் நடவடிக்கை தேசிய வருமானத்தில்
எந்த விளைவும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லியிருப்பது நம்பத் தகுந்ததாக இல்லை.
நாடு முழுவதும்,
அலிகாரில் இருந்து
லூதியானா ஊடாக பிவாண்டி வரை, சிறு தொழில்
நிறுவனங்கள் மூடப்பட்டதாக செய்திகள் வந்தன. அப்படியிருக்கும்போது, உற்பத்தி துறையில் கூட்டப்பட்ட மொத்த மதிப்பு,
மூன்றாவது காலாண்டில் 8.3% அளவுக்கு எப்படி அதிகரித்திருக்க முடியும்?
செலவு செய்ய யாரிடமும்
ரொக்கம் இல்லாதபோது, ‘தனிமனித இறுதி
நுகர்வுச் செலவு’ உண்மையில்
அதிகரித்துள்ளது; அதுவும் மொத்த
உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாக வளர்ந்தது; இதுவும் அதிகாரபூர்வ புள்ளிவிவர பொறியமைவை
கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
மத்திய
புள்ளிவிவர அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரிடம் இந்தக் கேள்விகளை எழுப்பினோம்.
பொருளாதார அறிஞர்கள் பலரும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புதிய துறையை கணக்கில்
எடுத்துக்கொள்ள தவறுகின்றனர், அந்தத் துறை புள்ளிவிவரங்களை
உற்பத்தி செய்யும் துறை, மத்திய
புள்ளிவிவர அமைப்பின் சமீபத்திய விவரங்கள்படி, புள்ளிவிவர உற்பத்தி மூன்றாவது காலாண்டில் 243%மும் நான்காவது காலாண்டில் 274%மும் அதிகரித்துள்ளது, இதன் ஆண்டு சராசரி உயர்வு 202% என்று அவர் சொன்னார்.
உற்பத்தி
துறையில் புள்ளிவிவரங்கள் மிகச்சிறிய அளவே இருக்கலாம்; ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் புள்ளிவிவர உற்த்தியின் துரிதமான வளர்ச்சி மொத்த
துறையையும் மேலே கொண்டு வந்துவிட்டது; மந்தமான தொழில் நிலைமைகளில் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ‘பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு
வேறெந்த தொழிலும் இந்த அளவுக்கு வேகமாக பதில்வினையாற்றவில்லை’ என்றார் அவர்.
பணமதிப்பகற்றும்
நடவடிக்கை அமலானபோது, பிற
தொழில்கள்போல் அல்லாமல், புள்ளிவிவர
உற்பத்தி தொழிலுக்கு டிமாண்ட் குறைந்துவிடவில்லை. ‘மாறாக, மிகச்சரியாக இந்த காலகட்டத்திலும் அதற்குப் பிறகும் உற்பத்தி செய்யப்பட்ட
புள்ளிவிவரங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிமாண்ட் இருந்தது. எங்களால்
ஆர்டர்களை முடிக்க முடியவே இல்லை. இந்த
ஆர்டர்கள் அரசாங்கத்திடமிருந்து மட்டும்தான் வந்தன’.
புள்ளிவிவர
உற்பத்தி துறை, பெரும்
எண்ணிக்கையில் புள்ளிவிவர நிபுணர்கள் வியர்க்க விறுவிறுக்க ஈடுபடும் ஒரு லாபகரமான
நடவடிக்கையாக இருக்கும் என நாங்கள் எதிர்ப்பார்த்தோம். மொத்த வேலைகளும் முழுவதும்
எந்திரமயமாக்கப்பட்டது எங்களுக்கு வியப்பு தந்தது. ஒரு மடிக்கணிணியுடன் ஒரே ஒரு
பயிற்சியாளர் மட்டும் இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, புதிய (2011 - 2012) மொத்த உள்நாட்டு உற்பத்தி சீரீஸ், புள்ளிவிவர மூலப்பொருட்களை சிக்கனமாக
பயன்படுத்தினாலே பெரிய அளவில் உற்பத்தி கிடைக்கும் என்பதைக் காட்டியது; ஆனால், மூலப்பொருட்களை குறைவாக பயன்படுத்தி கூடுதல் உற்பத்தி எடுப்பதில் சமீபத்திய
விவரங்கள் மிகவும் முன்னேறியவை. ‘இது ஒரு
குறிப்பிடத்தக்க புதுமை முயற்சி. இப்போது நாங்கள் எதுவுமே பயன்படுத்தாமல் எண்களை
உருவாக்க முடியும்’ என்று அந்த
அதிகாரி குறிப்பிட்டார்.
உற்பத்தி துறை
செயல்பாடு பற்றி இது விளக்குகிறது என்றால், வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து, தொலை தொடர்பு போன்ற பிற துறைகள், மூன்றாவது காலாண்டில் விதி விலக்காக எப்படி
மேலான செயல்பாட்டை கொண்டிருந்தன? அந்த அதிகாரி
விளக்கினார்: ‘புள்ளிவிவர
உற்பத்திக்கு பன்மடங்கு பெருகும் தாக்கம் இருந்தது. பிற துறைகளுக்கான விவரங்களை
அப்படி பெருக்கல் கணக்கு செய்து காட்டினோம்’.
(இது ஓர் அங்கதக்
கட்டுரை. இதன் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த உண்மையை நாங்கள்
குறிப்பிட வேண்டியிருப்பதே அங்கதத்துக்கான விசயம்தான்).
- மார்ச் 6, 2017, ரூப் இந்தியா
(நன்றி: ரூப்
இந்தியா)