மூலதனத்துக்கு
எதிரான போரில் அர்ப்பணித்துக் கொள்ள பகத்சிங் நினைவு நாளில் உறுதியேற்பு
திருபெரும்புதூரில்
தொழிலாளர் - இளைஞர் பேரணி
வெள்ளையர்களுக்கு
எதிராக களமிறங்கிய பகத் சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 அன்று கொள்ளையர்களுக்கு எதிராக புரட்சிகர
இளைஞர் கழகத்தின் தோழர்கள் அணிதிரண்டார்கள்.
பன்னாட்டு உள்நாட்டு மூலதனம்
தமிழகத்தின் இளைஞர்களின் வாழ்க்கையை பதம் பார்க்கும் திருபெரும்புதூரில், மூலதனத்துக்கு எதிராக தொழிலாளர்களின் குரலை
ஓங்கி ஒலிக்கச் செய்தார்கள். தொழிலாளர்களின் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட
இல்லை என்ற நிலைமை இருக்கிற திருபெரும்புதூரில் நடந்த தொழிலாளர்களின் எழுச்சிப்
பேரணி, மூலதனத்தின்
விசுவாசிகளுக்கு சவால் விடுவதாக அமைந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள்,
மூலதனத்துக்கு எதிரான
போரில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பெயர்களால் உறுதியேற்றனர்.
மாருதி
நிர்வாகத்துக்கு எதிராக நடக்கும் பேரணியில் கலந்துகொள்ள, தொழிலாளர்களை அனுப்பக் கூடாது என்று திட்டமிட்ட
அதிகாரியிடம் நீங்கள் மாருதி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவீர்கள் என்றால்
மாருதி தொழிலாளர்களுக்காகச் செயல்படுவது எங்கள் கடமை என்றார்கள்.
ஹுண்டாய், ஏசியன் பெயின்ட்ஸ், ரெனோ நிசான், சான்மினா, சிஅண்டுஎஃப், என்விஎச்,
டென்னகோ, டேய்ம்லர், அப்போல்லோ டயர்ஸ், விப்ரோ, மியாங்குவாங், செவரன், சோனா (ஹுண்டாய் துணை
நிறுவனம்), டான்சன், எம்எஸ்அய், யுடிஎஸ் என திருபெரும்புதூர் மற்றும் அதைச்
சுற்றியுள்ள ஆலைகள், உயிரியல் பூங்கா,
பத்மா மெட்டல்ஸ், டைமன்ட் என்ஜினியரிங், சவுந்தர்யா டெகரேட்டர்ஸ், ஆர்எம்சி ஆகிய ஆலைகள், அம்பத்தூரின் டிஅய் டைமன்ட் செயின்ஸ், ஓஎல்ஜி, சென்னையின் மய்யத்தில் இருக்கும் ஜிம்கானா
கிளப் நிறுவனங்களின் தொழிலாளர்கள் மாருதி, பிரிக்கால் தொழிலாளர்களை விடுதலை செய் என்று முழக்கமிட்டனர்.
ஏஅய்சிசிடியு,
புரட்சிகர இளைஞர் கழகம்,
ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்கத் தோழர்களுடன் திருபெரும்புதூர் பகுதியின் யுஎல்எஃப் சங்கத்தின் தொழிலாளர்
தோழர்களும் பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்கள். இவர்களுடன்
மண்ணிவாக்கம், நெடுங்குன்றம் பகுதியின் புரட்சிகர இளைஞர் கழக
தோழர்களும் அம்பத்தூர் பகுதியின் அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தின்
தோழர்களும் இணைந்து கொண்டார்கள்.
திருவள்ளூர்
மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகம், இகக மாலெ,
ஏஅய்சிசிடியு, அவிகிதொச தோழர்களும் நூற்றுக்கணக்கில்
பேரணியில் கலந்துகொண்டார்கள்.
நிரந்தர, நிரந்தரமற்ற தொழிலாளர்கள், அமைப்பாக்கப்பட்ட, அமைப்புசாரா தொழிலாளர்கள் என மூலதனம் பிரித்து
வைத்திருக்கிற தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.20,000 சம்பளம் வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும், வருடத்தில் 240 நாட்கள் வேலை செய்தால் பணி நிரந்தரம் வேண்டும்,
பெரும்பான்மை
தொழிலாளர்கள் இருக்கும் சங்கம் அங்கீகரிக்கப்பட திருத்தச் சட்டம் வேண்டும்,
பயிற்சியாளர் நலன்
காக்கும் நிலையாணைகள் சட்டம் அமலாக்கப்பட வேண்டும், தொழிலாளர் போராட்ட உரிமையை பறிக்கும்விதம்
ஆட்டோ மற்றும் ஆட்டோ காம்பனன்ட் தொழிலை பொதுப் பயன்பாட்டுச் சேவை எனச் சொல்லும்
அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பினர்.
பேரணியை இககமாலெ
திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், சென்னை மாநகரச் செயலாளர் தோழர் சேகர் ஆகியோர்
துவக்கி வைத்தனர். பொதுக் கூட்டத்துக்கு புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர்
தோழர் ராஜகுரு தலைமை தாங்க, இகக மாலெ மாநிலச்
செயலாளர் தோழர் எஸ். குமாரசாமி துவக்கி வைத்தார். ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச்
செயலாளர் தோழர் ராஜேஷ் உறுதிமொழியை முன்வைத்தார். சான்மினா தொழிலாளர் சங்கத்தின்
தலைவர் தோழர் நித்தியானந்தம், ஜனநாயக வழக்கறிஞர்
சங்கத்தின் தோழர் புவனேஸ்வரி, அகில இந்திய
விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தின் தோழர் ஜே.மோசஸ் டேவிட்ராஜ் உரையாற்றினர்.
புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி நிறைவுரையாற்றினார்.
பகத்சிங் நினைவு
நாள் உறுதியேற்பு கூட்டங்கள்
கோவையில் மார்ச் 23 பகத்சிங் நினைவு நாள் உறுதியேற்பு கூட்டம்
புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் பெரோஸ் பாபு தலைமையில் நடைபெற்றது.
ஊழல், குற்றமய ஒடுக்குமுறை,
எதேச்சதிகார ஆட்சிக்கு
முடிவு கட்டுவோம், தலித்துகள்,
சிறுபான்மையினர், பெண்கள் மீதான வன்முறை, கல்வி நிறுவனப் படுகொலைகளுக்கு எதிராக, கல்வி கடன், விவசாயக் கடனை ரத்து செய்ய அணிதிரள்வோம் என்ற
முழக்கங்களுடன் கூட்டம் நடைபெற்றது. பகத்சிங் வழியில் சமூக மாற்றத்திற்காகப் போராட
இளைஞர்கள் உறுதியேற்றனர். இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன்,
மாவட்டச் செயலாளர் தோழர்
பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை
மாவட்டம் கறம்பகுடியில் நடைபெற்ற உறுதிமொழியேற்புக் கூட்டத்திற்கு புரட்சிகர
இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் திருமேணிநாதன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை
அரசு கலைக் கல்லூரி மாணவர் தோழர் ராஜதுரை வரவேற்புரை ஆற்றினார். இகக(மாலெ)
மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் விஜயன், ரெங்கசாமி, சாமி.கோவிந்தராஜ், துரை.பெரியசாமி உரையாற்றினர். அகில இந்திய
மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா சிறப்புரையாற்றினார். பள்ளி,
கல்லூரி மாணவர்கள்,
இளைஞர்கள் என ஏராளமானோர்
கலந்துகொண்டு தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பெயரால் இயற்கை வளங்களை, விவசாயத்தை அழிக்க வரும் ஹைட்ரோகார்பன்
திட்டத்துக்கு எதிராகப் போராட உறுதியேற்றனர். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர்
பழ.ஆசைத்தம்பி, மாநிலக் குழு
உறுப்பினர் தோழர் வளத்தான் கலந்துகொண்டனர். தோழர் உயிரோவியன் நன்றி கூறினார்.
சேலத்தில்
புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் ஜெயராமன் தலைமையில் உறுதியேற்பு கூட்டம்
நடைபெற்றது. தோழர் அய்யாதுரை பாடல்கள் பாடினார். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர்
தோழர் மோகனசுந்தரம், மாநிலக் குழு
உறுப்பினர்கள் தோழர்கள் சந்திரமோகன், வேல்முருகன் கலந்து கொண்டனர். தோழர் அய்யந்துரை உறுதிமொழி வாசிக்க கலந்து
கொண்ட தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
குளச்சலில்
புரட்சிகர இளைஞர் கழக மாவட்டத் தலைவர் தோழர் அய்யப்பன், அகில இந்திய மாணவர் கழக தலைவர் தோழர் தினேஷ்
தலைமையில் பகத்சிங் நினைவு நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இகக(மாலெ)
மாவட்டக் குழு தோழர் சுசீலா உறுதிமொழி வாசிக்க இளைஞர்களும், மாணவர்களும், கார்ப்பரேட் கொள்ளை, சாதிவெறி, மதவெறி, பெண்கள் மீதான ஒடுக்குமுறை எதிர்ப்பு என்று
பகத்சிங் வழியில் பயணிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இகக(மாலெ) மாவட்டச்
செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, தோழர் மேரி
ஸ்டெல்லா, தோழர் பால்ராஜ்
உரையாற்றினர்.
நீர்வளம்,
நிலவளம், விவசாயத்தை அழித்தொழிக்கும் ஹைட்ரோகார்பன்,
மீத்தேன் உள்ளிட்ட
திட்டங்களை ரத்து செய் என்ற முழக்கங்களோடு விழுப்புரத்தில் புரட்சிகர இளைஞர் கழக
மாவட்ட அமைப்பாளர் தோழர் கொளஞ்சிநாதன் தலைமையில் உறுதியேற்புக் கூட்டம்
நடைபெற்றது. அய்சா மாவட்ட அமைப்பாளர் தோழர் வெற்றிவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலாளர் தோழர்
செண்பகவள்ளி, அவிகிதொச
மாவட்டச் செயலாளர் தோழர் கஜேந்திரன், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் கணேசன் உரையாற்றினர்.
மதுரையில்
நடைபெற்ற கூட்டத்திற்கு பியுசிஎல் அமைப்பின் பேராசிரியர் முரளி தலைமை வகித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர்
விஜயகுமார், இகக(மாலெ) மாவட்ட
அமைப்பாளர் தோழர் மதிவாணன் கக்கூஸ் ஆவணப்படக் குழுவைச் சேர்ந்தவரும், புரட்சிகர இளைஞர் கழக ஊழியருமான தோழர் கோபால்,
மாவட்ட அமைப்பாளர் தோழர்
கணேஷ்குமார் உரையாற்றினர்.