கட்சியின் 48ஆவது நிறுவன தினத்தில் மத்திய கமிட்டியின்
அறைகூவல்
உத்தரபிரதேசத்தில்
தேர்தல் போரில் பாஜக வெற்றி பெற்றுள்ளது
இந்தியா
எதிர்த்து எழ வேண்டும்!
ஜனநாயகத்துக்கான
போரில் வெல்ல வேண்டும்!
2017ன் முதல்
காலாண்டு நிறைவுறுகிற போது, நாம் ஒரு சவாலான
சூழலை சந்திக்கிறோம். அய்க்கிய அமெரிக்காவில் ஆட்சியில் உள்ள ட்ரம்ப்
நிர்வாகம் கட்டுக்கடங்காத கொடுங்கோன்மை,
இனவெறி, குடியேறியவர்களுக்கு எதிரான வெறி ஆகியவற்றை
கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசுலாமியர்கள் அய்க்கிய
அமெரிக்கா வுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
குடியேறியவர்கள் இனவெறி
தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். இந்த, பெண்கள் வெறுப்பு, இனவெறி
ஆட்சியாளருக்கு எதிராக அய்க்கிய அமெரிக்க மக்களின் பெரும்பிரிவினர் போராட்டங்களில்
எழுந்துள்ளனர். ட்ரம்ப் தலைமையிலான அய்க்கிய அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு
எதிரான இனவெறிக்கு இந்தியர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் போது, இந்தியர்கள் பாதுகாப்பின்மைக்கும் இழிவுக்கும்
உள்ளாக்கப்படும்போது, அய்க்கிய
அமெரிக்க முகாமின் விசுவாசமான இளைய கூட்டாளி என்ற விதத்தில், மோடி அரசாங்கம், இசுலாமியரை வெறுக்கும் ட்ரம்ப் ஆட்சியின் புகழ்
பாடுகிறது.
ட்ரம்பும்
மோடியும் எதேச்சதிகார ஆட்சியாளர்கள் என்று உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறார்கள்.
மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை உணர்வு, கார்ப்பரேட் உலகமயத்தால் உருவாகியிருக்கிற
பொருளாதார நெருக்கடி, ஸ்திரமின்மை
ஆகியவற்றைப் பயன்படுத்தி, ட்ரம்பும்
மோடியும், ஜனநாயக
நிறுவனங்கள் மீதும் ஜனநாயகக் கோட்பாடுகள் மீதும் அனைத்தும் தழுவிய பாசிச தாக்குதலை
கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மோடி ஆட்சியின் உண்மையான இயல்புக்கு சமீபத்திய
சட்டமன்றத் தேர்தல்கள் மேலும் எடுத்துக்காட்டாக உள்ளன. உத்தரபிரதேசத்தில் விரிவான
பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ‘வளர்ச்சி’
என்ற தனது 2014 முன்வைப்பில் இருந்து விலகி அப்பட்டமான மதவெறி
விவாதப் போக்கை முன்வைத்தார்; இந்து
சுடுகாடுகளுக்கு எதிராக இசுலாமிய இடுகாடுகளை நிறுத்தினார்; இசுலாமிய, இந்து பண்டிகைகளின்போது நடக்கும்
மின்விநியோகத்தை கூட ஒப்பிட்டு பேசினார்.
இப்போது, இசுலாமியரை வன்முறைக்கு உள்ளாக்குவது, அவர்களை நிந்தித்து ஒடுக்குவது ஆகியவற்றை மிகத்
தீவிரமாக முன்வைக்கிற, காவி
பயங்கரத்தின் உண்மையான தலைவரான யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேச முதலமைச்சராக பாஜக
கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கோவாவில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட போதும், மணிப்பூரில் இரண்டாவது இடத்துக்குத்
தள்ளப்பட்டபோதும், இந்த இரண்டு
மாநிலங்களிலும் குதிரை பேரம் நடத்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தியாவை,
இந்து ராஜ்ஜியமாக
மாற்றும் தனது கருவான நிகழ்ச்சிநிரலை மூர்க்கமாக முன்தள்ளும் நம்பிக்கைய பாஜக
இப்போது பெற்றுள்ளது என்பதையே, உத்தரபிரதேசத்தின்
முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டிருப்பது காட்டுகிறது. ‘நல்ல காலம்’ போன்ற மோடியின் மோசடி பேச்சுக்களுக்கு
ஏற்றாற்போல், தற்போதைய
கட்டத்துக்கு ‘புதிய
இந்தியாவின்’ அடித்தளம் என்று
பெயரிடப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத்,
சாக்ஷி மகராஜ்
போன்றவர்கள் பாஜக பிரதான நீரோட்டத்தின் ஓரஞ்சார சக்திகள் என்றும் பாஜகவின் பிரதான
நீரோட்டம் ‘தேசியம்’,
‘வளர்ச்சி’ பற்றி அக்கறை கொண்டது என்றும் இந்தியாவின்
வலதுசாரி தாராளவாத சக்திகள் சொல்லி வந்தனர். இப்போது, உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி
ஆதித்யநாத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கருவான சக்திகள், ஓரஞ்சாரத்தில்
உள்ள சக்திகள், வளர்ச்சி எதிர்
மதவெறி என்ற வேறுபாடு, வெறும் அரசியல்
கற்பனை என்று நமக்குத் தெரிகிறது. ஆயினும் உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில்
பெரிதும் திரையிடப்படாத மதவெறி வாய்வீச்சில் ஈடுபட்ட மோடி, ‘அனைவரையும் உள்ளடக்குவது, அனைவருக்குமான வளர்ச்சி’ என்பதையே மய்யக் கருத்தாக முன்வைத்தார்,
ஆதித்யநாத் போன்ற ஒருவர்
கட்சியின் முதலமைச்சர் என்று சொல்வதை கவனமாக தவிர்த்தார் என்பதையும் காணத் தவறக்
கூடாது.
உத்தரபிரதேசத்தின்
முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டிருப்பது, உத்தரபிரதேச தேர்தல் முடிவை மோசடியாக கையாள்வதே
ஆகும். வெறிகொண்ட மத வெறியை தனது தனிஅடையாளமாகக் கொண்ட ஆதித்யநாத்
போன்றவர்களுக்கான வாக்கு என்று உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளை வியாக்கியானம்
செய்வதற்குப் பதிலாக, பாஜகவின் இந்த
மிகப்பெரிய வெற்றியை உருவாக்கிய பல்வேறு விதமான காரணங்களை நாம் கணக்கில் கொள்ள
வேண்டும். உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கான தேடல் இருந்தது என்பது
புரிந்துகொள்ளக் கூடியதே. நம்பகத்தன்மை இழந்த, முற்றுகையிடப்பட்ட சமாஜ்வாதி கட்சியும்
ஓரஞ்சாரத்துக்குத் தள்ளப்பட்ட காங்கிரசும் தாமதமாக உருவாக்கிய தொகுதி உடன்பாடு,
சாமான்ய வாக்காளரின் இந்த
மனநிலையை தடுக்கும், பின்னோக்கித்
திருப்பும் நிலையில் இல்லை. சமாஜ்வாதி கட்சியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ உருவாக்கிய சமூகக்
கூட்டணியை விட மேலும் பரந்த சமூகக் கூட்டணியை பாஜக உருவாக்கியது என்பதை
அங்கீகரித்தாக வேண்டும். ஆனால் அது தெளிவாக, இசுலாமியர்களை வெளியே நிறுத்தும், மேல்சாதி ஆதிக்கப் பிரிவினரின் மேலாதிக்கத்தை
மீண்டும் நிறுவ முயற்சிக்கும் ஒரு சமூகக் கூட்டணி.
உத்தரபிரதேச
தேர்தல் முடிவுகளை, பண மதிப்பகற்றும்
நடவடிக்கை சரி என்று வெகு மக்கள் அளித்த வாக்கு என்று பாஜகவின் பிரச்சாரகர்கள்
சொல்லப் பார்க்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை
பணமதிப்பகற்றும் நடவடிக்கை பாதிக்கவில்லை என்பது உண்மைதான்; ஆனால், பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல் முடிவுகளுடன் சேர்த்துப் பார்த்தால், தேர்தல் முடிவுகள், பணமதிப்பகற்றும் நடவடிக்கைக்கு ஆதரவானவை என்று
சொல்ல முடியாது. பணமதிப்பகற்றும் நடவடிக்கை, கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்க வல்லது
என்ற மாயை இன்னும் நிலவுகிறது; இதனுடன் மோடி
தான் புதிதாகக் கண்டுபிடித்துள்ள வறியவர் ஆதரவு தோற்றத்துடன் ஓர் அதிர்வை
உருவாக்கியுள்ளார். ஆனால் பணமதிப்பகற்றும் நடவடிக்கையால் விவசாயத்திலும் முறைசாரா
துறையிலும் ஏற்பட்ட வருமான இழப்பு, வாழ்வாதார இழப்பு
ஏற்பட்டுள்ளபோது, மோடி அரசாங்கம்,
இந்தியா பல ஆண்டுகளாக
உருவாக்கியுள்ள நல்வாழ்வு நடவடிக்கைகளை தகர்க்கிறது; மான்யங்களுக்குப் பதில் பணம் தருவதை கொண்டு
வந்து, மக்களை ஆதார் அட்டையின்
கண்காணிப்பில் வைத்து, அவர்களை
சந்தையின் ஏற்றஇறக்கங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. வறிய மக்கள், வரும் நாட்களில் மோடி அரசாங்கத்துக்கு எதிராக
நிச்சயமாக போராடி அதனுடன் கணக்கு தீர்த்தாக வேண்டும்.
உத்தரபிரதேசத்தில
பாஜக பெற்றுள்ள அபாரமான வெற்றியும் உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்
நியமிக்கப்பட்டிருப்பதும் நாடு முழுவதும் ஜனநாயகப் பிரிவினர் மத்தியில் ஆழ்ந்த
கவலையை உருவாக்கியுள்ளது. மின்னணு வாக்கு எந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன
என்று கூட சிலர் சொல்கிறார்கள். மின்னணு வாக்கு எந்திரங்கள் முறைகேடாக
பயன்படுத்தப்படுவதை மட்டுப்படுத்த வாக்காளர் சரி பார்க்கும் சீட்டுகள் கட்டாயமாக
வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரம், காவிப் படையின் சமூக அணிதிரட்டலை
பலவீனப்படுத்துவதில் நாம் கவனம் குவிக்க வேண்டும். மீதமுள்ள 60%அய் ஒன்றுபடுத்த ஆகப்பரந்த சாத்தியமான தேர்தல்
கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பேச்சுக்கள் எழலாம். வெறும் தேர்தல் எண்கணித
பலத்தில் ஒரு பாசிச ஆபத்தை வெற்றி கொண்டு விடலாம் என்று கருதுவது பயனற்றது என்று
நாம் உணர்ந்தாக வேண்டும். 2014க்குப் பிறகு,
டில்லி, பீகார், பஞ்சாப் என மூன்று தேர்தல்களில் பாஜக
அழுத்தம்திருத்தமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது; இந்த அனுபவத்தில் பொதுவான செய்தி ஒன்று உள்ளது;
இந்த மூன்று
மாநிலங்களிலும் நீடித்த, சக்தி வாய்ந்த
மக்கள் போராட்டங்கள் நடந்தன.
2014ல் இருந்து மோடி
அரசாங்கத்தை எதிர்கொள்ளும் நமது சொந்த அனுபவத்தில் இருந்து நாம் பெறும் ஆகப்பெரிய
படிப்பினை இதுதான். 2014 தேர்தல்களில்
மோடியின் தலைமையில் பாஜக பெருவெற்றி பெற்றபோதும், இந்தியா ஒவ்வொரு அரங்கிலும் எதிர்ப்புப்
போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளின்
பின்னணியில், இந்த எதிர்ப்பு
மேலும் தீவிரப் படுத்தப்பட்டாக வேண்டும். இககமாலெயின் 48ஆவது நிறுவன தினத்தை நாம் அனுசரிக்கும் போது,
இந்த இலக்கை நோக்கி நாம்
நமது அனைத்து வலிமையையும் செலுத்தியாக வேண்டும்.