அய்க்கிய அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான (இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு போர், அந்த
போரில் இந்தியா இளநிலக் கூட்டாளியாக இணைந்தது, அரச பயங்கரவாதம், இந்துத்துவா எழுச்சி என்ற பின்னணியிலும், அவற்றின்
பதில்வினையாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் எழுந்துள்ளது. இந்த விஷச்
சுழலேணியும் இந்தச் சூழலும், இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்து எழுந்த
பகுத்தறிவுவாதி பாரூக்கின் படுகொலைக்கு
காரணமானது. பாரூக்கின் படுகொலையை வன்மையாக கண்டனம் செய்கிற அதே நேரம் அதற்கான
பின்னணியையும் கணக்கில் கொள்கிறோம். இங்கு கார்கில் போரில் பலியானவரின் மகளான
குர்மெஹர் கவுர், தன் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை போர்தான் கொன்றது
என்று சொன்னதை நினைவில் கொள்வோம்.
டில்லியில்
போராடுகிற விவசாயிகளுடன் இககமாலெ குழு சந்திப்பு
விவசாய
நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட, உயிரிழந்த தமிழக விவசாயிகளின் உறவினர்கள் டில்லியில் 17 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக்
கொண்டிருக்கின்றனர். இகக மாலெ தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள்
எஸ்.இரணியப்பன், கே.கோவிந்தராஜ்,
சென்னை மாவட்டக் குழு
உறுப்பினர் தோழர் முனுசாமி, நாகை - தஞ்சை
மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜன் மற்றும் புதுவை மாநிலத்தின் இகக மாலெ தோழர்
முருகன் ஆகியோர் கொண்ட குழு 30.03.2017 அன்று ஜந்தர்மந்தர் சென்று போராடுகிற விவசாயிகளை சந்தித்தது. தோழர்
எஸ்.இரணியப்பன் அவர்கள் மத்தியில் உரையாற்றினார். போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைகளை
மத்திய, மாநில அரசுகள்
உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், விவசாயிகளின் போராட்டத்துக்கு கட்சியின்
ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.
இககமாலெ கோவை
மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு, கோவையில் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர்
பாரூக்கின் குடும்பத்தினரை மார்ச் 28 அன்று சந்தித்தது. அவர் படுகொலைக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளை, நன்கு உறவாடியவர்களே அவரது படுகொலைக்கு துணை
போனதை கேட்டறிந்தது. அவரது குடும்பத்துக்கு இரங்கலும் ஆதரவும் தெரிவித்தது.
சமத்துவம்
இல்லையெனில் எதுவும் இல்லை
முத்துகிருஷ்ணன்
மரணத்துக்கு நீதி வேண்டும்!
ஜேஎன்யு பல்கலை
கழக தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது
மரணத்துக்கு நீதி கேட்டு, ஜனநாயக
வழக்கறிஞர் சங்கம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மார்ச் 15 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. ரோஹித் சட்டம்
இயற்றப்பட வேண்டும், முத்துகிருஷ்ணன்
மரணத்தில் விசாரணை வேண்டும், முத்துகிருஷ்ணன்
குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் அதியமான், வழக்கறிஞர்கள் சங்கர், கார்க்கி வேலன், புவனேஸ்வரி ஆகியோர் உரையாற்றினர்.
சேலத்தில்
புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய
மாணவர் கழகம், இந்திய மாணவர்
பெருமன்றம், இளைஞர்
பெருமன்றம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.