பாஜக தந்திரங்களை
முதலாளித்துவ எதிர்க்கட்சிகளால் சமாளிக்க முடியவில்லை
எஸ்.குமாரசாமி
மோடியும்
பாஜகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. சங்
பரிவார் ஆபத்து தீவிரம டைந்துள்ளது. சங்பரிவார் எதிர்ப்பு முதலாளித்துவ கட்சிகள்,
தாராளவாத சக்திகள்
அனைவரும் பரந்த மிகப்பரந்த, அனைவரையும் உள்ள
டக்கிய ஒரு முன்னணி கட்டியே, தேர்தலைச்
சந்திக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவற்றுக்கு எல்லாம் அப்பால், இன்றளவில் கைவசம் உள்ள தகவல்கள் அடிப்படையில்,
பார்த்த மாத்திரத்தில்
தெரிவதை வைத்து, தேர்தல்
முடிவுகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
உத்தர்கண்ட்
காங்கிரஸ்
வெற்றிகரமாகத் தோற்றுள்ளது. பிளவுண்ட பாஜக, ஓடிப்போய் கட்சி மாறியவர்களைக் கொண்ட பாஜக,
தோற்கடிக்கும் அளவுக்கு
ஹரிஷ் ராவத்தின் காங்கிரஸ் ஆட்சி மோசமாக மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.
பாஜகவில் யார் முதல்வர் என்ற போட்டி தீவிரமடையும்.
மணிப்பூர்
பல முறை ஆள
நேர்ந்த காங்கிரசுக்கு, அரசியல்
சாணக்கியர் முதல்வர் இபோபி சிங்குக்கு இந்த முறை, மணிப்பூர் மக்கள் வலுவான எச்சரிக்கை
தந்துள்ளனர். காங்கிரஸ் வாக்குகள் 7.3% சரிந்துள்ளன. பாஜக, நாகாக்களை தன்
பக்கம் கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ், மணிப்பூர் சமவெளி மெயிடி மக்களையும் குகி உள்ளிட்ட பழங்குடியினரையும் தன்
பக்கம் நிறுத்தி உள்ளது. மணிப்பூரில் காங்கிரஸ் சட்டமன்றத்தில் ஆகப் பெரிய
கட்சியாக இருந்தபோதும், 60 இடங்களில் 29 இடங்கள் பெற்றும், 21 இடங்கள் பெற்றுள்ள பாஜக அப்பட்டமான இனவாத
அணுகுமுறையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பாஜக, நாகா ஆயுதக்குழுக்களோடு செய்துள்ள ரகசிய உடன்பாட்டாலும் நாகாக்களை
மற்றவர்களுக்கு எதிராக நிறுத்துவதாலும், மணிப்பூரில் மிகப் பெரிய இனமோதல்கள் நடக்க வாய்ப்புள்ளது.
கோவா
இந்த மாநில
முதலமைச்சர் மனோகர் பரிக்கரை பாஜக மத்திய இராணுவ அமைச்சராக எடுத்துக் கொண்டது.
சென்ற முறை 34.68% வாக்குகளும் 21 இடங்களும் பெற்ற பாஜக, இந்த முறை 32.5% வாக்குகளும் 13 இடங்களும் பெற்றுள்ளது. பாஜக முதலமைச்சர்
லட்சுமிகாந்த் பர்சேகர் மற்றும் 6 அமைச்சர்கள்
தோல்வியடைந்துள்ளனர். கோவாவில் 40 இடங்களில் காங்கிரஸ் 17 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வென்றுள்ளது. ஆன போதும், தில்லுமுல்லுகள் செய்து பாதுகாப்பு அமைச்சரை,
கோவா
முதல்வராக்கியுள்ளது.
பஞ்சாப்
மக்கள், அகாலி தளம் - பாஜக கூட்டணியை
முறியடித்துள்ளனர். ஆளும் கூட்டணி, 41.94% வாக்குகளுடன் 68 இடங்கள்
வைத்திருந்தது. இம்முறை 30.6% வாக்குகளுடன் 18 இடங்களே பெற்றது. 68ல் 50 காலி. காங்கிரஸ் சென்ற முறை 40.9% வாக்குகளுடன் 46 இடங்கள்
பெற்றிருந்தது. இம்முறை 38.5% வாக்குகள்
மட்டுமே பெற்று 77 இடங்கள்
வென்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 117 பேர் கொண்ட
பஞ்சாப் சட்டமன்றத்தில் 20
உறுப்பினர்களுடன் நுழைகிறது. மக்கள், ஆளும் கூட்டணியைத் தோற்கடிப்பதில், காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கட்சியை விட கூடுதல் வாய்ப்பிருந்ததாகக் கருதி
உள்ளனர் போல் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி, உட்கட்சிப் பூசல்கள், சில தலைவர்கள்
மீதான ஊழல் புகார் போன்றவற்றை எல்லாம் தாண்டி, பஞ்சாபில் 20 இடங்கள் பெற்றுள்ளது.
உத்தரபிரதேசம்
மொத்தம் 403 தொகுதிகள். பாஜக 312 இடங்களிலும் அதன் கூட்டாளிகள் 13 இடங்களிலும், வென்றுள்ளன. அந்த கூட்டணிக்கு 325 இடங்கள். பகுஜன் சமாஜ்வாதி கட்சி 19 இடங்கள் பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 47,
காங்கிரஸ் 7 என அந்தக் கூட்டணி 54 இடங்கள் பெற்றுள்ளது.
2014 நாடாளுமன்றத்
தேர்தலில் 80 தொகுதிகளில் 73ல் வென்ற பாஜகவும் அதன் கூட்டாளிகளும் (71+2),
43.3% வாக்குகளுடன் 337 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்தனர்.
இம்முறை பாஜக கூட்டணி 41.8% வாக்குகளுடன் 325 இடங்கள் பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி
கட்சி நாடாளுமன்றத் தேர்தலின்போது, 17.2% வாக்குகளுடன் 9 இடங் களில்
முன்னிலை பெற்றது. இந்த முறை 22.2% வாக்குகளுடன் 19 இடங்கள் வென்றுள்ளது.
சமாஜ்வாதி கட்சி
நாடாளுமன்றத் தேர்தலின் போது 22.4%, இம்முறை 21.8% பெற்றது. ஆனால் 42 இடங்களில் முன்னிலை பெற்றிருந்த அந்தக் கட்சி,
இம்முறை 47 இடங்கள் பெற்றுள்ளது. காங்கிரஸ் 15 இடங்கள் முன்னிலை என்பது 7 இடங்களாக மாறியது.
பகுஜன் சமாஜ்வாதி
கட்சி 22.5%, சமாஜ்வாதி அணி 28.5% வாக்குகள் பெற்றுள்ளது. எதிரணிகள் 51% வாக்குகள் பெற்றும் 41.8% வாக்குகள் பெற்ற பாஜகவிடம் படுதோல்வி
அடைந்துள்ளன.
மோடியின்,
‘வறியவர் ஆதரவு கொள்கைகளும்,
1000, 500 ரூபாய் செல்லாது என்ற
அறிவிப்புமே’ இந்த வெற்றியைத்
தேடித் தந்ததாக அமித் ஷா சொல்கிறார். இது பிரும்மாண்டமான பொய்.
பாஜக மிகவும்
திறமையாக இந்துத்துவா துருப்பு சீட்டை ஆடுவதில், சாதிய துருவ சேர்க்கையை நிகழ்த்துவதில் வெற்றி
பெற்றது. 403 பேர் கொண்ட
உத்தரபிரதேச சட்டமன்றத்தில் சென்ற முறை 69 இசுலாமியர்கள் இருந்தனர். இந்த முறை, வெறும் 24 பேரே உள்ளனர். மக்கள் தொகையில் 19% இசுலாமியர்கள் உள்ள உத்தரபிரதேசத்தில்,
பாஜக, ஒரு இசுலாமிய வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.
இசுலாமியர் வாக்குகள் தமக்கு ஒரு பொருட்டல்ல என்று இந்துக்கள் மத்தியில் மோடி மார்
தட்டி நின்றார்.
காதல் போரில்
(லவ் ஜிஹாதில்) ஈடுபடும் இசுலாமியர் மீது நடவடிக்கை எடுக்க ‘ரோமியோ எதிர்ப்பு பிரிகேட்’ என்றார்கள். ராமர் கோயில் கட்டப்படும் என்ற
பல்லவி பாடினார்கள். இசுலாமியர்க்கு ‘கபிர்ஸ்தான்’ என்ற இடுகாடுகள்
தரப்படும் போது, இந்துக்களுக்கு ‘சமர்ஸ்தான்’ அதாவது சுடுகாடுகள் கிடையாதா என மோடியே
கேட்டார். ரம்ஜான், முகரம்க்கு
மின்சாரம் உண்டு, இந்து
பண்டிகைகளுக்கு கிடையாதா என்று அவரே கேட்டார். இது இந்துத்துவா பிரச்சாரம் இல்லை
என்றால் வேறு எதுதான் இந்துத்துவா பிரச்சாரம்?
பார்ப்பனர்,
தாகூர் என்ற 20% வாக்காளர்கள் பெருமளவுக்கு மோடியுடன்
நின்றனர். பனியா சாதியினரும் சேர்ந்து கொண்டனர். யாதவர் அல்லாத இதர
பிற்படுத்தப்பட்டோரை வென்றெடுக்க,
200 இடங்களில் மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மாநாடுகளை நடத்தினர்; யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 150 தொகுதிகள் தந்தனர்; தலித்துகளில் ஜாதவ் பிரிவினர் இல்லாதவரை
வென்றெடுக்க 85 ரிசர்வ்
தொகுதிகளில் ஜாதவ் அல்லாத பிரிவினருக்கு 64 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. (தலித்துகளில் 56% பேர் ஜாதவ்கள்). அப்பட்டமாக, இந்துத்துவ, சாதிய அணிதிரட்டலில் ஈடுபட்டுதான் பாஜக 403ல் 325 இடங்கள் பெற முடிந்தது.
காங்கிரசின்
வரலாற்றுச் சரிவு தொடரும் நேரத்தில், கோவா தவிர மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக இந்தத் தேர்தல் முடிவு கள்
வந்துள்ளன என்பதும் கவனத்துக்குரியது.
மத்தியிலும்
உத்தரபிரதேசத்திலும் பாஜக ஆட்சி ஒரே நேரத்தில் அமைந்து இருப்பது, சங்பரிவாரின் கார்ப்பரேட் மதவெறி நிகழ்ச்சி
நிரலை முன் நகர்த்த உதவும். சங் பரிவார் துணிச்சலுடன் துடுக்குடன் தமிழ்நாட்டிலும்
வாலாட்டும். வலதுசாரி ஆபத்து வளர உதவும் சமூக பொருளாதார நிலைமைகள், போராட்ட இடதுசாரி அரசியல் வளரவும் வாய்ப்புக்களைத்
தரும்.
(காலை 10 மணி, 13.03.2017)