பகத்சிங் நினைவு
தின உறுதிமொழியேற்பு
பகத்சிங்,
உன்னுடைய 23ஆவது வயதில், நீ தூக்கிலேற்றப்பட்ட மார்ச் 23, 1931அய், நாங்கள் நினைவு கூர்கிறோம். உன்னோடு தூக்கிலேற்றப்பட்ட தோழர்கள் ராஜகுரு,
சுகதேவையும் நாங்கள்
நினைவு கூர்கிறோம்.
நீங்கள்
நாட்டுக்காக, நாட்டு
மக்களுக்காக, வெள்ளையர்
அடிமைப்படுத்தியதற்கு எதிராக, நீதியும்
சமத்துவமும் நிறைந்த சோசலிச சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் உங்கள் வாழ்வைத்
தியாகம் செய்தீர்கள்.
இன்றைய
இந்தியாவும் தமிழ்நாடும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் அய்க்கிய
அமெரிக்காவுக்கும் சொந்தமானதாக மாற்றப்பட்டுள்ளன.
மாருதி, ஹோண்டா, ஹுண்டாய் போன்ற நிறுவனங்கள், இந்திய, தமிழக இளைஞர்களின் உழைப்பை ரத்தமாய்
உறிஞ்சுகின்றன.
மூலதனத்தின்
பலிபீடத்தில், மக்களின்
வாழ்க்கையும் ஜனநாயகமும் பலியாகத் தரப்படுகின்றன. அவ்வாறு பலி தர, பல கட்சிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றன.
ஆட்கொல்லி
முதலாளித்துவத்தால், அடிமைப்படுத்தும்
முதலாளித்துவத்தால், நாடும் மக்களும்,
சூறையாடப்படுகிறார்கள்.
ஒடுக்கப்படுகிறார்கள்.
பகத்சிங்,
ராஜகுரு, சுக்தேவ்!
உங்கள் நினைவுகளை
நாங்கள் போற்றுகிறோம். உங்கள் பெயரால் நாங்கள் உறுதியேற்கிறோம்.
சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகம் படைத்திட, நாங்கள் போராடுவோம்.
கார்ப்பரேட் ராஜ்ஜியத்தை, ஏகாதிபத்தியத்தை வேரறுக்க, நாங்கள் போராடுவோம்.
விவசாயத்தை, உழைக்கும் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை காக்க நாங்கள்
போராடுவோம்.
தலித்துகள், பெண்கள், இசுலாமியர், சமத்துவத்துக்காக கவுரவத்துக்காக அச்சமற்ற
சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுவோம்.
பாகிஸ்தானோடு, சீனத்தோடு நட்புறவு வேண்டும் என்பதற்காக,
மக்கள் நலன் காப்பதே
தேசபக்தி என்று நிறுவ, நாங்கள்
போராடுவோம்.
இயற்கை வள, மனித வளக் கொள்ளையை, பெருந்தொழில் குழுமக் கொள்ளையை, ஊழலை எதிர்த்து, நாங்கள் போராடுவோம்.
தொழிலாளர்களின் பணி நிரந்தரத்துக்காக, கவுரவமான ஊதியத்துக்காக, சங்க உரிமைகளுக்காக, நாங்கள் போராடுவோம்.
கல்வியை, மருத்துவத்தை அரசே எடுத்து நடத்தக் கோரி,
டாஸ்மாக் கடைகளை, சாராய ஆலைகளை மூடக் கோரி, நாங்கள் போராடுவோம்.
மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக, சாதி, மத வெறிக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு
எதிராக, நாங்கள்
போராடுவோம்.
எளிய, ஆடம்பரமற்ற, வரதட்சணை இல்லாத
திருமணங்களுக்காக, நாங்கள்
போராடுவோம்.
பகத்சிங்,
இந்த நாடு பண
மூட்டைகளுக்கு, ஊழல், மதவெறி, சாதிய அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக இருக்க
இனியும் அனுமதிக்க மாட்டோம் என்றும்
சுதந்திரமும்
சமத்துவமும் ஜனநாயகமும் நிலவும் சமூகம் படைக்க பாடுபடுவோம் என்றும்
மக்களுக்காக,
மாற்றத்துக்காக நேரம்
ஒதுக்கவும் அர்ப்பணிப்புடன் தியாகம் செய்யவும் எங்களை தயார்ப்படுத்திக் கொள்வோம்
என்றும்
நீ உயிர்த்
தியாகம் செய்த இந்த நாளில், உனது பெயரால்
உறுதியேற்கிறோம்.