அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம்
6ஆவது தேசிய மாநாடு, நவம்பர் 19 - 20, ஜெகனாபாத், பீகார்
நூறு நாள் வேலைத் திட்டத்தில் நாள் கூலி ரூ.500 வழங்கு!
பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விவசாயத்துக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்து!
கிராமப்புற தொழிலாளர்களின் நுண்கடன், கந்து வட்டி கடன்
அனைத்தையும் தள்ளுபடி செய்!
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், அனல்மின் நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், எட்டுவழிச் சாலை திட்டங்களை ரத்து செய்!
இருப்பிட உரிமையை அடிப்படைய உரிமையாக்கி சட்டம் இயற்று! கோவில், மட நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கு அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடு!
கிராமப்புற வறிய குடும்பங்கள் அனைவருக்கும்
வேலை, ஓய்வூதியம், பொது விநியோகத்தில் உணவுப் பொருட்கள் வழங்கு!
நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்காதே!
உள்ளாட்சித் தேர்தல்களை உடனே நடத்து! டாஸ்மாக் கடைகளை மூடு!