பிரேசிலில் பிற்போக்கு பொல்செனரோ வெற்றி பெற்றார்
ஆண்டி
பிரேசிலை அறிய
அமெரிக்க கண்டத்தில், அய்க்கிய அமெரிக்காவை அடுத்து பெரிய நாடு பிரேசில்.
கால் பந்துக்குப் பிரபலமான பிரேசிலில் இருந்துதான் பிலே, சாக்ரடீஸ், ரொனால்டோ, ரொனால்டினோ, நெய்மர் வந்தனர். பிரேசிலின் சம்பா நடனம் உலகையே ஆட வைக்கும். பிரேசிலின் மக்கள் தொகை, 03.11.2018 நிலவரப்படி 21,14,26,868. இது உலக மக்கள் தொகையில் 2.76%. 2010 மக்கள் தொகை கணக்குப்படி பிரேசிலின் மக்கள் தொகையில் அய்ரோப்பிய வம்சாவழியினர் 47.73% பேர். ஆப்பிரிக்க வம்சாவழியினர் 7.61% பேர். பூர்வகுடியினர் 0.43% பேர். கருப்பினத்தவர் 43.13% பேர். பிரேசிலின் முதன்மை மொழி போர்ச்சுகீசிய மொழி. பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) சுமார் 2 டிரில்லியன் டாலர். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா சேர்ந்துதான் பிரிக்ஸ் நாடுகள் என்ற கூட்டமைப்பு உருவானது.
இடதிலிருந்து வலது நோக்கி
அமெரிக்க கண்டத்து நாடுகளில் நிகரகுவா, வெனிசூலா, ஈக்வடார், பொலிவியாவில் இளம் சிவப்பு அலை வீசிய போது, அந்த அலை பிரேசிலின் கடற்கரைகள் தாண்டி, பிரேசிலுக்குள் நுழையாமல் போய் விடுமா என்ன?
1964 முதல் 1986 வரை, பிரேசில் இருண்ட இராணுவ சர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவித்தது. ஒளிக்கீற்றாய் மலர்ந்தது தொழிலாளர் கட்சியின் ஆட்சி. லூலாவும் டில்மாவும் அதன் தலைவர்கள். லூலா தொழிலாளர் மற்றும் மக்கள் போராட்டங்களில் இருந்து எழுந்த தலைவர். டில்மா இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிய பெண் கெரில்லா போராளி. இவர்கள் ஆட்சிகள், மூலதனத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரணடைந்து சமரசம் செய்து கொண்டன என்ற போதும், இவர்களது ஆட்சிக் காலமே, பிரேசில் மக்கள் வாழ்வில் ஆகச் சிறந்த காலமாகும்.
ஆப்பிரிக்க வம்சாவழியினரிடம், பூர்வகுடியினரிடம், விவசாயிகளிடம், தொழிலாளர்களிடம், இது உங்கள் ஆட்சி என லூலாவும் டில்மாவும் சொன்னார்கள். 4 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டார்கள். பல்லாயிரம் பல்லாயிரம் முதல் தலைமுறையினர் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தார்கள். பொருளாதார வளர்ச்சியின் எழுச்சியின் பயன்களில் ஒரு பகுதியை, மக்களை நோக்கி மக்கள் நலத் திட்டங்களாகத் திருப்பினார்கள். முன்னேறிச் சென்று தாக்குதலைத் தொடராததால், ஆளும் கும்பல்கள், லூலாவை சிறை வைத்தனர். டில்மாவை பதவி நீக்கம் செய்தனர். நெருக்கடியான காலகட்டத்தில்தான், அப்பட்டமான வலதுசாரி வாய்வீச்சாளரான இளைய டிரம்ப் ஆன ஜெயிர் பொல்செனரோ பிரேசிலின் ஆட்சித் தலைவரானார். இடது திசையை விரும்பிய மக்களுக்கு, வலதுசாரி தலைவரே கிடைத்தார்.
எப்படி நடந்தது மாற்றம்?
பொல்செனரோ இராணுவப் புரட்சி மூலம் வெற்றி பெறவில்லை. அரண்மனைக் கலகங்கள் மூலம் அவர் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அவர் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் இரண்டு சுற்று தேர்தல்களில் மக்கள் வாக்குகளைப் பெற்று பதவியைப் பிடித்தார். கணிசமானவர்கள் வாக்களிக்கவில்லை என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவுக்கு 50%க்கும் மேலான வாக்களித்த பிரேசில் மக்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொல்செனரோவைத் தேர்ந்தெடுத்தனர் என்பதும் உண்மை. தீமை, இயல்பானதாக, பரவலான ஏற்புடையதாக, சாதாரணமானதாக மாறும்போது, அது, மானுட சமூகத்திற்கு மிகமிக ஆபத்தானதா கும். பிரேசிலில் பிற்போக்கின் உருட்டித் திரட் டப்பட்ட வடிவமான பொல்செனரோ வெற்றி பெற்றுள்ளார். ‘ஜனநாயகம்’ எளிதில் நொறுங்கக் கூடியதாக இருப்பதால், பாசிஸ்டுகள், ஜனநாயக தேர்தல்கள் மூலமே, அய்க்கிய அமெரிக்காவில், ஹங்கேரியில், போலந்தில், பிரேசிலில், இந்தியாவில் ஆட்சிக்கு வருகிறார்கள். பிரதிநிதித்துவ ஜனநாயகம் செல்லரித்து உளுத்துப் போகும் நேரம், தேசியம், தேசபக்தி, ஒழுக்கம், மதம், ஜனரஞ்சகவாதம் பேசி பாசிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்து விடுவது, பிரேசிலிலும் நடந்தது.
பொல்செனரோவின் சமூக பொருளாதார அரசியல் என்ன?
பொல்செனரோ, தமக்கு பொருளாதாரம் அவ்வளவாகத் தெரியாது என தேர்தல் சமயத்திலேயே சொன்னார். அவரது சமூக அக்கறையும் அரசியலும் சிக்கலானவை.
பூர்வகுடியினர்: அடிமைத் தளையிலிருந்து விடுதலை அடைந்த ஆப்பிரிக்க வம்சாவழியினருக்கு ஒரு சென்டி மீட்டர் நிலம் கூட ஒதுக்க முடியாது. (அவர் ஒரு சென்ட் என்று சொல்லவில்லை. அவர் ஒரு சென்டி மீட்டர் என்றுதான் சொன்னார். பிழைத் திருத்தம் எதுவும் அவசியம் இல்லை)
பிரேசில் பெரும்பான்மையினருக்கானது: சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு வணங்கி வழிவிட வேண்டும். சிறுபான்மையினர் ஒத்துப்போக வேண்டும். இல்லாவிட்டால் காணாமல் போக வேண்டும். (அதாவது அய்ரோப்பிய வம்சாவழியினர்க்கு, பூர்வகுடிகள், ஆப்பிரிக்க வம்சாவழியினர், ஆசியர், கலப்பினத்தவர், அடங்கிப் போகாவிட்டால், அழிவார்கள். அழிக்கப்படுவார்கள். ஹிட்லரின் இனப்படுகொலை மொழியையே பொல்செனரோ பேசி உள்ளார்).
சமூக உதவி திட்டங்கள்: பொறுப்பற்ற பெற்றோர்களை உருவாக்கியவை. வருந்தத்தக்க விதத்தில் எந்த எதிர்காலமும் இல்லாத தலைமுறையினர் உருவாகின்றனர். இதனோடு கடுமையான தண்டனைகள் இல்லாத நீதிபரிபாலன முறை இருப்பதால் இந்த தலைமுறை குற்றத் தலைமுறையாகிவிட்டது.
நிலமற்றோர்: நிலமற்றோர். வீடற்றோர் சமூக இயக்கங்கள், பயங்கரவாத இயக்கங்கள். அவை நசுக்கப்பட வேண்டியவை.
பிபிபி பொல்செனரோ
பீஃப், பைபிள், புல்லட்ஸ் பொல்செனரோ என்று கூட அவரைச் சொல்கிறார்கள். மாட்டிறைச்சி, பைபிள், தோட்டாக்கள். தோட்டாக்கள், இராணுவ பூட்ஸ் கால் சத்தத்தில் பிரேசில் நடக்க வேண்டும் என்பது பொல் செனாரோவின் விருப்பம். பொல்செனாரோ வெற்றி பெற்றவுடன், பிரேசில் நாட்டின் வீதிகளில் இராணுவத்தினர் சீருடைகளுடன் கொண்டாட்ட ஊர்வலம் சென்றனர். (முதலா ளித்துவ பங்குச் சந்தை மகிழ்ச்சியில் மேலே மேலே சென்றது). 2017ல் ஒரு நாளில் 175 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 63,000க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. பொல்செனாரோ, இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன், போலீசுக்கு, இராணுவத்துக்கு மோதல் படுகொலை நடத்துவது வரையிலான வானளாவிய அதிகாரம் வழங்குவேன், குற்றம் செய்தால் தண்டனை தரும் வயதைக் குறைத்து, சிறுவர் குற்றவாளிகளைத் தப்பவிடாமல் பிடித்து உள்ளே தள்ளுவேன் என்றார். சமூகப் பிரச்சனைகளுக்கு வன்முறையே தீர்வு என்றார்.
பைபிள் என்று வரும்போது, கத்தோலிக்க பிரேசிலில், இன்று எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவம், அதாவது பண்டைக்கால கிறிஸ்தவத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள் சாகலாம், பெண்கள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும், வெள்ளைக்கார பைபிள்படி கருப்பின மக்கள் சோம்பேறிகள், குண்டானவர்கள் என்ற கருத்துக்கள் உடையவர் பொல்செனரோ. கண்ணுக்கு கண் என பழைய ஏற்பாடு பேசுபவர். முன்னாள் அதிபர் டில்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு தாம் அளித்த வாக்கை, இராணுவ சர்வாதிகார காலத்தில், டில்மா ஒரு போராளி என்பதால் அவரை சித்திரவதை செய்த இராணுவ அதிகாரிக்கு அர்ப்பணித்தவர்.
தமக்கு எதிராக கருத்து சொன்ன பெண் நாடாளுமன்ற உறுப்பினரை, அவர் மிகவும் அசிங்கமான தோற்றம் கொண்டிருப்பதால், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கக் கூட தகுதியற்றவர் என்று வக்கிரமாகப் பேசினார்.
பீஃப், மாட்டிறைச்சி என்பது ஏ - யுடன் அதாவது அமேசானோடு தொடர்புடையது. அமேசான் மழைக்காடுகள்தான், இன்று உலகின் நுரையீரல். இவற்றை அப்படியே விழுங்க, நாவில் எச்சிலூற மூலதனம் காத்தி க்கிறது. இங்கேதான் தேசியவாத சவடால் அடிக்கிறார் பொல்செனாரோ. ‘பிரேசிலின் ஆண்மையை கூண்டில் அடைத்துள்ளனர். நாம் அதனை விடுதலை செய்ய வேண்டும். அமே ôன் காடுகளில் நுழையக் கூடாது என நமக்கு சர்வதேச நாடுகள் தடை போட்டால், அது நம் நாட்டின் இறையாளுமைக்கே சவால்’ என்கிறார்
பொல்செனாரோ, அமேசான் காடுகளில், கால்நடை வளர்க்க, உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் நிறுவ, மரங்கள் வெட்ட, ஒப்பந்த விவசாயம் செய்ய, கனிம வளங்களைத் அகழ்ந்து எடுக்க, தயாராவேன் என்கிறார். அதுதான் தேச பக்தியாம். உலகின் நுரையீர க்குக் காயம் ஏற்பட்டால், உலகின் ஆயுட் காலம் அடிவாங்கும். இந்த 160 கோடி ஏக்கர் காடுகளுக்குள் மூலதனம் நுழைந்தால், 2030க்குள் 55% காடுகள் அழியும் என்கிறார்கள் பிரேசிலின் அறிவியலாளர்கள்.
டிரம்ப்பின், அய்க்கிய அமெரிக்காவின் ரசிகர் பொல்செனாரோ
2017ல் அய்க்கிய அமெரிக்காவில் 3 லட்சம் பிரேசில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பொல் சனாரோ, பிரேசிலை கம்யூனிஸ்டுகளிடம் இருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாக்கப் போவதாகவும், தமது கருத்துக்களும், டிரம்ப் ன் கருத்துக்களும் மிகமிக நெருக்கமானவை என்றும் சொன்னார். தொலைக்காட்சியில் அய்க்கிய அமெரிக்காவின் கொடி அசைவது காட்டப்பட்டது. கூட்டம் யுஎஸ்எ, யுஎஸ்எ என முழங்கியது. பொல்செனாரோ, அந்த அய்க்கிய அமெரிக்க கொடிக்கு சல்யூட் அடித்தார். கண்டத்தில் மீண்டும் ஓர் அய்க்கிய அமெரிக்க எடுபிடி அரசு கால் பதித்துள்ளது.
வெனிசூலா, லூலா என்றால், குழப்பம் வறுமை, பலவீனம், ட்ரம்ப், பொல்செனாரோ என்றால் வலிமை, வளமை, உறுதி என்ற பிம் ம் சமூக ஊடகங்களில் கட்டமைக்கப்பட்டது.
டிரம்ப் எவ்வழி பொல்செனாரோ அவ்வழி என, இஸ்ரேல் விருப்பப்படி ஜெருசலேத்திற்கு தமது நாட்டின் தூதரகத்தை மாற்றத் தயாராகிறார். இவரும் டிரம்ப்பைப் போலவே, புவி வெப்பமயமாதல் என்பதெல்லாம் மோசடி என்கிறார். சீனா பிரேசிலில் பொருள் வாங்குவது மட்டுமல்லாமல் பிரேசிலையே வாங்கப் பார்க்கிறது, பிரேசிலின் நிலங்களும் வளங்களும், சீனாவுக்கல்ல என வீரம் பேசுகிறார். தனியார்மயம் தவிர்க்க முடியாதது என்கிறார்.
பொல்செனாரோ முன் உள்ள சவால்கள்
பிரேசிலில் 418 அரசு உடைமை பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. பெட்ரோபாஸ் எலக்ட்ரோபாஸ், பேங்கோ டோ பிரேசில், ஆகிய நிறுவனங்கள் பிரேசில் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றவை. இவற்றில் கைவைப்பதை பிரேசிலின் மத்திய தர வர்க்கமும் விரும்பவில்லை.
பிரேசிலின் பொருளாதாரத்தில் சீனத்தின் பங்கு ஆகப்பெரிய ஒன்றாகும். 14 ஆண்டுகளில் சீனம் பிரேசிலில் 124 பில்லியன் டாலர் (ரூ.8,68,000 கோடி) முதலீடு செய்துள்ளது. 2009லிருந்து பிரேசிலின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனாவே ஆகும். சீனாவுடனான வர்த்தகம் ரூ.5,25,000 கோடி (75 பில்லியன் டாலர் ஆகும்). எண்ணெய் எரிசக்தி சுரங்கம், துறைமுகம், ரயில்வே, உள்கட்டுமானத் திட்டங்கள், அணைகள், மின்சாரம் நீண்ட தூரம் எடுத்துச் செல்லுதல் என சீனா பிரேசில் பொருளாதாரத்தில் நிறைந்துள்ளது. பிரேசில், பிரிக்ஸ் ஒத்துழைப்பின் பயன்களை அறுவடை செய்து வளர்ந்துள்ளது. கடந்தகால அய்க்கிய அமெரிக்க அணைப்பு, பிரேசிலுக்கு மூச்சுத் திணறலாக மாறியது. அவ்வளவு பெரிய பிரேசில் நாட்டை சீனாவின் விரோதியாக, அய்க்கிய அமெரிக்காவின் எடுபிடியாக மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல.
இறுதியாக, வேலை வருமானம் வளர்ச்சி சுதந்திரம், ஜனநாயகம் சமத்துவம் இல்லையென்றால், பிரேசில் மக்கள் பொல்செனாரோவை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிய தயங்க மாட்டார்கள்.