காவிரிப் படுகை காக்க, விவசாயம் காக்க, விவசாயிகள், விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள் நலன் காக்க, வெண்மணியின் அய்ம்பதாவது ஆண்டு தினத்தில் உறுதியேற்போம்!
உழுது பிழைக்க நிலமும் குடியிருக்க வீடும் எமது உரிமைகள்
எஸ்.குமாரசாமி
உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்றார்கள்.
ஜனநாயகப் புரட்சி, ஏகப்பெரும்பான்மை மக்கள் நலனுக்கான புரட்சி, அது, விவசாயப் புரட்சி, அதன் மய்யப் பிரச்சனை நிலமே என்றார்கள். இன்று கார்ப்பரேட்டுகளுக்காகவே, அனைத்து நிலமும் என்கிறார்கள் ஆட்சியாளர் கள். ஆலைகள் நிறுவ, எரிசக்தி பெற, நெடுஞ் சாலைகள் போட, ரியல் எஸ்டேட் ஊக வணிகம் செய்திட, மூலதனம் தணியாத நிலப்பசி கொண்டுள்ளது. எல்லா விளைநிலங்களையும் ஒப்படைத்துவிட்டு, கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு, விவசாயத்தைவிட்டு ஓடிப் போ என மிரட்டுகிறது.
உழுது பிழைக்க நிலம் வேண்டும்
சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட 277 நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் வாயிலாக வெறும் 2% விவசாய நிலம் மட்டுமே மறுவிநியோகம் செய்யப்பட்டது. வெறும் 4.42% விவசாய நிலம் மீது மட்டுமே நிலத்தில் பயிரிட்டு வந்த குத்தகைதாரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. 2004ல் மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு தெரிவித்த விவரப்படி உபரி நிலம் என நாடெங்கும் அடையாளம் காணப்பட்ட 630 லட்சம் ஏக்கர் நிலத்தில், 73.74 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரி நிலம் என அறிவிக்கப்பட்டது. அதில் 65.11 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் 53.05 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே மறுவிநியோகம் செய்யப்பட்டது. நிலச்சீர்திருத்தம் மாபெரும் மோசடியானது.
உலகமயம் தீவிரமடைந்தபோது பறித்தெடுத்தலின் மூலம் மூலதனத் திரட்சி, அதாவது, நிலம், வனங்கள், இயற்கை, கனிம வளங்கள் அனைத்தையும் மூலதனம் அரசின் துணை கொண்டு கைப்பற்றுவது நடைபெற்றது. நிலச்சீர்திருத்தம் பின்னோக்கித் திருப்பப்பட்டது. உழுபவர் நிலம் டாடாவுக்கு, சலேம் குழுமத்துக்கு, இன்னும் பலப்பல முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. பன்னாட்டு நோக்கியா, சான்மினாவில் இருந்து இந்நாட்டு கல்வி, மருத்துவ அறக்கட்டளை மற்றும் தொழில் வர்த்தக துறை முதலாளிகள் வரை, நிலங்களை விழுங்கினார்கள். ஏற்கனவே பூதான், பஞ்சமி நிலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. பஞ்சமி நிலமீட்பு போராட்டத்தில் காரணை துப்பாக்கிச் சூடு, படுகொலை நடந்தது.
2006ல் கருணாநிதி நிலமற்றவர்களுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாகச் சொல்லி நிலமற்ற ஏழை விவசாயிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். அப்போது வரை, நிலம் சக்தி வாய்ந்த, உணர்வை தூண்டுகிற விசயமாகவே இருந்தது. மனம் இருக்கிறது, கொடுக்கத்தான் நிலமில்லை என கருணாநிதி கைவிரித்துவிட்டார். இன்று, மருத நிலம் பாலைவனமாகிறது. நெல், கரும்பு, வாழை, உளுந்து, பயறு, நிலக்கடலை, சிறுதானியங்கள், பருத்தி விளைந்த, பூக்கள், பழங்கள், காய்கறிகள் பயிர் செய்யப்பட்ட, தென்னை, மா, பலா எனப் பலவித மரங்கள் செழித்த காவிரிப் படுகையை மூல தனம் விழுங்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில், 57.12% தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடக்கிறது. நமது மொத்த உணவுத் தேவையில் 60%அய் இந்த மாவட்டங்களே நிறைவு செய்கின்றன. இறால் பண்ணை, மீத்தேன், அனல்மின்நிலையங்கள், ஓஎன்ஜிசி என மூலதனம் விவசாய விளைநிலம் மீது மூர்க்கமான தாக்குதல் தொடுத்துள்ளது.
இங்கேதான், இரண்டு கோணங்களில் இருந்து உழுது பிழைக்க நிலம் வேண்டும் என முழங்கியாக வேண்டும். காவிரிப் படுகை விளைநிலங்கள், விவசாயம் காக்கப்பட வேண்டும், அதற்கு காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். புலிகள், யானைகள், சிங்கங்கள் சரணாலயங்கள் அவசியமானவை. மானுடம் பிழைக்க, விவசாயம் தழைக்க வேண்டும். விவசாயத்தைக் காக்க ஒரு பெரும் மக்கள் கூட்டம் வேண்டும். நிலமற்றவர்களுக்கு உழுது பிழைக்கும் வசதிகளுடன் நிலம் தரப்பட்டால் அவர்கள் விளைநிலத்தை, உயிரைத் தந்தும் காப்பார்கள். மொழியை உழைக்கும் மக்களே காக்கிறார்கள். நாடெங்கும் சில கோடி பேரிடம் உழுது பிழைக்கும் நிலம் இருந்தால், அவர்கள் என்ன விலை கொடுத்தேனும் விவசாயத்தை காப்பார்கள்.
தருவதற்கு நிலம் உண்டா? இந்தக் கேள்வி கார்ப்பரேட்களுக்கு நிலம் தரும் போது எழுவதே இல்லை. மனோன்மணியம் சுந்தரனால் பல்கலை கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் வசந்தி தேவி அழுத்தம் திருத்தமாய் ‘நிலம் மய்யப் பிரச்சனை ஆக வேண்டும்’ என்கிறார். சமூக நீதிக்கான அறிஞர் பி.எஸ்.கிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கை யின்படி, தலித்துகள், பிற சாதி நிலமற்றோர் அனைவருக்கும் கொடுக்கக் கூடிய அளவுக்கு பஞ்சமி, பூதான், உச்சவரம்பு மற்றும் அரசு நிலங்கள் உள்ளன. ‘மாட்டின் வாலை நீ வைத்துக் கொள், எனக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும்’ என உனா எழுச்சியின்போது ஜிக்னேஷ் மேவானி முன்வைத்தது மிகவும் பொருத்தமான முழக்கமே ஆகும். அரசுகள் கார்ப்பரேட் டுகளுக்கு நிலம் தருவதோடு வங்கிக் கடன், வரிச் சலுகை, மூலதன மானியம், நீர், மின்சாரம், சாலை, உள்கட்டுமானம் என அனைத்து வசதிகளும் செய்து தருகிறார்கள். உழுது பிழைக்கவும் வங்கிக் கடன், நீர்ப்பாசனம், உள்கட்டுமானம், மலிவு விலை இடுபொருள், லாபகரமான விளைபொருள் கொள்முதல் வேண்டும் என்போம்.
ஜனநாயகம் வெல்ல, உழுது பிழைக்க நிலம் வேண்டும்.
குடியிருக்கும் வீட்டு உரிமை
சட்ட உரிமையாக வேண்டும்
நில அனுபோகதாரர்கள் உடைமை உரிமை வழங்கும் சட்டம் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான போராட்டத்தால்தான் வந்தது. அதனால்தான் நாம் காவிரிப் படுகையில் குடியிருக்கும் வீடுகளுடன் இருக்கிறோம். அந்த உரிமை இல்லாவிட்டால் நம்மை எப்போதோ வெளியேற்றியிருப்பார்கள். குடும்பங்களின் உறுப்பினர்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் சட்டபூர்வமான குடியிருப்பு உரிமையை வென்றாக வேண்டியுள்ளது.
இந்தியாவில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வீடற்ற ஏழைகள் உள்ளனர். 2017ல் இந்தியாவின் முதல் நூறு நில குடியிருப்பு வணிக (ரியல் எஸ்டேட்) முதலாளிகளிடம் ரூ.1,86,700 கோடி செல்வம் இருந்தது. 2018ல் இது 27% உயர்ந்து ரூ.2,36,610 ஆகியுள்ளது. ஒரே ஒரு ரியல் எஸ்டேட் அதிபர், மங்கள் பிரபா லோதாவிடம் ரூ.27,180 கோடி செல்வம் உள்ளது. அம்மாவின் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் பழனிச்சாமி, அம்மா தந்த வாக்குறுதிப்படி, வீடற்ற அனைவருக்கும் நகரங்களில் 3 சென்ட் நிலமும் வீடு கட்ட மானியமும் கிராமங்களில் 5 சென்ட் நிலமும் வீடு கட்ட மானியமும் வழங்கியாக வேண்டும்.
நிலம், வீடு, கூடவே தரமான சமமான கல்வியும் மருத்துவமும் வேண்டும்.
சாதி அழித்தொழிக்கப்பட வேண்டும்
நிலம், வீடு, வேலை, கல்வி, மருத்துவம் இவற்றோடு கூடவே, சமத்துவமும் கவுரவமும் அடிப்படையான தேவைகளாகும். இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், பட்டியலில் இப்போது நந்தீஷ் பெயர் சேர்ந்துவிட்டது. நந்தீஷ், ஸ்வாதி என்ற தலித் - வன்னியர் இணையர் ஆதிக்கக் கொலை செய்யப்பட்டுள்ளனர். பள்ளிச் சிறுவர்கள் ஆதிக்கக் கொலை செய்யும் அளவுக்கு சாதிய நஞ்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பரவி உள்ளதை இசக்கி கொலை காட்டுகிறது.
அன்று அரை படி கூலி உயர்வு கேட்டதால், கேட்டவர்கள் தலித்துகளாக இருந்ததால், சாதியாதிக்க நிலஉடைமையாளர்கள் 44 பேரை டிசம்பர் 25, 1968ல் கீழ்வெண்மணியில் எரியூட்டிக் கொன்றார்கள். நீதிமன்றம் கொலை செய்த கோபாலகிருஷ்ண நாயுடுவை மரியாதையுடன் விடுதலை செய்தது. பழங்கட்டை யெல்லாம் அறுக்க வந்த மனுசங்கடா, ரத்த கடனைத் தீர்க்க வந்த மனுசங்கடா என முழங்கிய தோழர்கள் கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்த பக்கமும் உண்டு என வழக்கும் வரலாறும் சொல்கின்றன.
வெண்மணியின் அய்ம்பதாவது ஆண்டு தினத்தில்
சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது. நம் மீது சவுக்கும் சாட்டையும் பாய்ந்தன. ‘சாமரம் வீசும் பாமரர் பிடித்தால் கையில் சவுக்கும் சாட்டையும் நிற்காதா? திருப்பி அடிக்காதா?’ என தோழர் சீனிவாச ராவ் அன்று கேட்டார். காவிரிப் படுகை கொதித்தெழுந்தது. சவுக்கடியும் சாணிப்பாலும் முடிவுக்கு வந்தன.
வெண்மணி நெருப்பை அணையாமல் நெஞ்சில் ஏந்துவோம். அந்த நெருப்பால் சுரண்டலையும் சாதியாதிக்கத்தையும் சுட்டுப் பொசுக்குவோம். கசடுகள் நீங்கிய சமூகம் பொலிவோடும் வலுவோடும் முன்னேறட்டும்.
காவிரிப் படுகை காக்க, விவசாயம் காக்க, விவசாயிகள், விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள் நலன் காக்க, நிலம், வீடு உரிமை, சமமான, தரமான கல்வி, மருத்துவம் வென்றிட, சாதியை அழித்தொழித்திட உறுதியேற்க, வெண்மணியின் அய்ம்பதாவது ஆண்டு தினத்தில், டிசம்பர் 25 அன்று மயிலாடுதுறை பேரணியில் ஆர்த்தெழுவோம். டிசம்பர் 26 அனைத்திந்திய விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு 6ஆவது மாநில மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம்.