பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத
பழனிச்சாமி அரசே, பதவி விலகு!
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான, சிறுமிகள் மீதான, தலித் பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறை தீவிரமடைந்து வருகிறது. நவம்பர் 1 முதல் 5 வரை மூன்று பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துவிட்டன.
நவம்பர் 1 அன்று வசந்தப்ரியா என்ற 19 வயது பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நவம்பர் 2 அன்று திருப்பூரில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது. தருமபுரி, அரூர் அருகில் சிட்லிங் மலைப் பகுதியைச் சேர்ந்த +2 மாணவி, விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தபோது நவம்பர் 5 அன்று இரண்டு பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதிகாலை காலைக் கடன் கழிக்கச் சென்றவரை வாயில் துணியை அடைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர். தப்ப முயற்சி செய்தபோது கடுமையாக தாக்கியுள்ளனர். ஆளரவம் கேட்டதால் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தார் மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். நவம்பர் 10 அன்று அந்தச் சிறுமி இறந்துவிட்டார். குற்றவாளிகளைத் தேடுவதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டியதாகவும் மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு முறையான மருத்துவம் அளிக்கவில்லை என்றும் உறவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மீ டூ இயக்கத்தில் பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை, வன்முறைகளை, அத்துமீறல்களை வெளியே சொல்லிக் கொண்டிருந்த நேரம், தனக்கு நேர்ந்ததை தனது தாயிடம், உறவினரிடம் சொன்னதற்காக அக்டோபர் 22 அன்று ராஜலட்சுமி கொல்லப்பட்டார். முதலில் வெறும் கொலை வழக்கு, பிறகு எதிர்ப்புக் குரல்கள் எழுந்த பிறகு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு, பிறகு போக்சோ வழக்கு என்று பதிவு செய்யப்பட்டது. குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அவசியமான பிரிவில் வழக்கு பதிவு செய்யக் கூட நிர்ப்பந்தங்கள், போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
நாட்டைச் சூழ்ந்துள்ள ஒட்டுமொத்த இந்துத்துவ வெறி, சாதிவெறிச் சூழலும் பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகள் தீவிரமடையவும், தண்டனை பற்றிய அச்சமின்மை வளரவும் காரணமாக இருக்கின்றன.
2018 துவக்கத்தில் இருந்தே தலித் பெண்கள், சிறுமிகள் பாலியல்ரீதியாக தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 2018ல் கடலூர் சேத்தியாதோப்பு அருகில் பரத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி, பத்தாவது படித்து முடித்து புவனகிரியில் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தவர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
தலித் தாய், மகனை தாக்கிவிட்டு, மகளை பாலியல் வன்முறை செய்துவிட்டு தப்பியோடி விட்ட ஒருவனை பிடித்ததாக பின்பு சொல்லப்பட்டது. 2018 மார்ச்சில் திருக்கோவிலூர் அருகில் நடந்த வன்முறைச் சம்பவம், அந்தக் குடும்பத்துக்கும் பகுதியின் ஆதிக்க சாதி குடும்பத்துக்கும் இடையில் நிலம் தொடர்பாக இருந்த பிரச்சனையால் நடந்தது என்று உள்ளூர் தலித் மக்கள் சொல்லிக் கொண்டிருந்தது யார் காதிலும் விழவில்லை.
2018 செப்டம்பரில் தேனியின் 11 வயது தலித் சிறுமி ராகவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பின் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். அவளது உடலில் கொடூரமான காயங்கள் இருந்தன. புதுக்கோட்டை, கீரமங்கலம் அருகில் குலமங்கலத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற தலித் பெண் அக்டோபர் 29 அன்று காணாமல் போய், அக்டோபர் 31 அன்று பிணமாய் கண்டுபிடிக்கப்பட்டார். கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது பிறகு தெரிய வந்தது.
ஹாசினியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்றவன் பிணை பெற்று வெளியே வந்து தாயைக் கொன்றான். அயனாவரம் சிறுமி ஆறு மாதங்களாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணை கேட்கிறார்கள்.
எங்கள் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். அந்நிய படையெடுப்பு ஏதும் இல்லை. போர் மூளவில்லை. உறவினர் அக்கம்பக்கத்தார் ஆதிக்கத்துக்கு உள்ளாகி கொல்லப்படுகிறார்கள். முதலமைச்சர் பழனிச்சாமி எந்தப் பிரச்சனையில்தான் தலையிட்டார், இதை கவனிக்க? சொந்த மாவட்டத்தின் ராஜலட்சுமி குடும்பத்தாரை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. 20 நாட்களாகியும் அவர் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கும் பிரச்சனையில் 2017ல், தேசிய குற்றப்பதிவு மய்யம் 2015 விவரங்களை வெளியிட்டபோது, அது பற்றி கருத்து தெரிவித்த முதலமைச்சர் பழனிச்சாமி, பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் குறைவு என்றார். 2017ல் எழுப்பப்படும் கேள்விக்கு 2015 விவரங்களைச் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தார். 2016ல்தான் டிசம்பரில் அரியலூர் நந்தினி, தலித் சிறுமி, இந்து முன்னணி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். தமிழ்நாட்டை உலுக்கிய நிகழ்வு அது. 2016 ஆகஸ்டில் தஞ்சை சாலியமங்கலத்தில் கலைச்செல்வி என்ற 20 வயது தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். முதலமைச்சர் மேற்கோள் காட்டிய விவரத்தில் 2015ல் தமிழ்நாட்டில் 421 பாலியல் வன்முறை கொடூரங்கள் நடந்துள்ளன. அதாவது, பாலியல் வன்முறை நிகழ்வு நடக்காத ஒரு நாள் கூட 2015ல் இல்லை.
பின்தொடரப்படுவதை மறுப்பதால் எதிர்ப்பதால் கொல்லப்பட்ட இளம்பெண்கள் பட்டியல் ஒன்றும் இங்கு உள்ளது.
டாஸ்மாக் சாராயத்தால் உந்தப்பட்ட கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்தபோது, உணர்ச்சி வேகத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று சொன்னவர்தான் ஜெயலலிதா. மோடிக்கு மட்டும் பதில் சொன்னால் போதும் என்று இன்று ஆட்சி நடத்துபவர், மக்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறார்.
ராஜலட்சுமி கொலையில் வெளிவருகிற கள ஆய்வுகளும் உண்மையறியும் அறிக்கைகளும் ராஜலட்சுமி தண்ணீர் போன்ற அடிப்படை தேவைக்கு தினேஷ் குடும்பத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக, தண்ணீருக்காக ராஜலட்சுமி தினேஷ் வீட்டுக்குச் செல்ல நேர்ந்ததாகச் சொல்கின்றன. வீட்டில் கழிவறை வசதி இருந்திருந்தால் தருமபுரி சிறுமி அதிகாலையில் வெளியில் சென்றிருக்க மாட்டார்.
கரூரின் கே.பிச்சம்பட்டியில் 17 வயது தலித் சிறுமி, +2 முடித்துவிட்டு அடுத்து கல்லூரிக்குச் செல்ல ஆகும் செலவுக்காக தற்காலிகமாக கொசுவலை கம்பெனி வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். சமூக, பொருளாதார நிலைமைகள் உகந்தவையாக இருந்திருந்தால் அந்தச் சிறுமி வேலைக்குச் செல்ல நேர்ந்திருக்காது.
குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட உறுதி செய்யப்படாமல் இருப்பது, சாதாரண தேவைகளுக்கும் ஆதிக்க சாதியினரை சார்ந்திருக்க நேர்வது, பொருளாதாரரீதியாக ஆதிக்க சாதியினரை சார்ந்திருப்பது இந்த வன்முறை நிகழ்வுகளில் முக்கியமான காரணங்கள். அரசின் குற்றமய அலட்சியப் போக்கு இவற்றில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
ஆனால், வெளியில் சென்றால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவார்களா? அணிகிற உடை, இரவு நேரத்தில் தனியாகச் செல்வது, ஆண் நண்பர்கள் போன்றவை பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு காரணம் என்று சொன்னவர்கள் ராஜலட்சுமிக்கும் தருமபுரி சிறுமிக்கும் நடந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? அயனாவரம் சிறுமி இவர்கள் சொல்லும் வரம்புகளில் எதை மீறினாள்? நான் என்ன தப்பு செய்தேன் அண்ணா என்று அரிவாளை இறக்கிய தினேஷிடம் ராஜலட்சுமி கேட்டாள். விட்டுவிட்டானா? ஆதிக்க திமிர். ஆணாதிக்க, சாதியாதிக்க திமிர். அந்தத் திமிர் அடக்கப்பட வேண்டும். அதற்கு வலுவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். சட்டங்கள் அமலாக வேண்டும்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டு இன்று 198 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இவை அமைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. இவை தவிர, டில்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமை பெரிய போராட்டங்களை உருவாக்கியபோது, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற பெயரில் ஜெயலலிதா 13 அம்ச நடவடிக்கைகளை 2013ல் அறிவித்தார். இந்த நடவடிக்கைகளில், பாலியல் வன்முறைக் குற்றங்கள் கொடூர குற்றங்களாகக் கருதப்பட்டு பாலியல் வன்முறை புகார் மீதான புலன் விசாரணையில் காவல் துணை கண்காணிப்பாளர் நேரடியாக மேற்பார்வையிடுவது, பெண் காவல் ஆய்வாளர் விசாரிப்பது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் இந்த வழக்குகளை ஆய்வு செய்வது, பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க எல்லா மாவட்டங்களிலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது, அவற்றில் அரசு தரப்பில் பெண்கள் வழக்கறிஞர்களாக இருப்பது, தினந்தோறும் விசாரணை நடத்தி வழக்கை விரைவாக முடிப்பது, பாலியல் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குண்டர் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, பாதிக்கப்பட்டவர்களை கனிவுடனும் கண்ணியத்துடனும் நடத்த காவல் துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது, பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ செலவை அரசு முழுவதுமாக ஏற்பது, மறுவாழ்வு நடவடிக்கைகளை உத்தரவாதப்படுத்துவது, கண்காணிப்பு காமராக்கள் பொருத்துவது, மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சீருடை அணியாத காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது போன்ற விசயங்கள் சொல்லப்பட்டன. அவர் இருந்த காலத்திலும் இறந்த பிறகும் இந்த அரைகுறை நடவ டிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை.
தருமபுரி சிறுமி பாலியல் வன்முறை நிகழ்வில், ஜெயலலிதா கொண்டு வந்த 13 அம்ச திட்டம் எந்த விசயத்தில் அமலாகியிருக்கிறது? காவல்துறையினர் பாலியல் வன்முறை புகாரை பொருட்படுத்தவில்லை. அந்தச் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டார் என்பதே தெரியாது என்று மருத்துவமனை சொல்கிறது. காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.
அமைச்சர் ஜெயகுமார் மீ டூ புகாரில் சிக்கியுள்ளார். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, புகார் கொடுத்த பெண் என்ன ஆனார் என அதன் பிறகு செய்தியில்லை. விசாரணை, தண்டனை என்ற எந்த அச்சமுமின்றி அமைச்சர் ஜெயகுமார் அடுத்த வேலைகள் பார்க்கிறார்.
நிர்பயா கொல்லப்பட்டபோது, நாடு முழு வதும் எழுந்த போராட்டங்கள்தான் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய, சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்தன. இன்றும் போராட்டங்கள் தீவிரமடைந்தால்தான் இந்தக் கேளாச் செவியர்களுக்குக் கேட்கும். இருக்கிற சட்டங்கள் அமலாக்கப்படுவதும் கூடுதல் பாது காப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்படுவதும் உடனடியாக நடக்க வேண்டியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத பழனிச்சாமி அரசே, பதவி விலகு! (11.11.2018)