பீகாரில் பெண் காவலர்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை எதிர்த்துப் போராடிய
பெண் காவலர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக
இகக மாலெ தலைமையில் மாநிலம் தழுவிய போராட்டம், நவம்பர் 9, பாட்னா
போராடிய காவலர்களின் வேலை நீக்கத்தை ரத்து செய்!
போராடிய காவலர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு!
சவிதா பதக் உயிரிழப்புக்குக் காரணமான உயர்அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்!
சவிதா பதக் கொலைக்குக் காரணமான போலீஸ் அதிகாரிகளை கைது செய்!
காவலர் குடியிருப்புகளில் பெண் காவலர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்து நிறுத்து!
உயிரிழந்த சவிதா பதக் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கு!
பாட்னாவில் டெங்கு காய்ச்சலால் சவிதா பதக் என்ற பெண் காவலர் உயிரிழந்ததை அடுத்து பெண் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த காவல்துறையே அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்தது. தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக நிதிஷ்குமார் அரசு போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண் காவலர்கள் உட்பட 175 காவலர்களை பணி நீக்கம் செய்துவிட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
காவல்துறையினரும் அரசாங்க ஊழியர்களே. அவர்களுக்கும் ஜனநாயக உரிமைகள் உண்டு. காரணம் கோரும் அறிவிப்பு, இடைநீக்கம் எதுவுமின்றி, ராஜதர்பாரில் வேலையாட்கள் போல, மனம் போன போக்கில் அவர்கள் நேரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது நியாயமற்ற எதேச்சாதிகார நடவடிக்கை. காவல்துறை கையேட்டில் உயரதிகாரிகளுக்கும், அரசாங்கத்துக்கும் அந்த உரிமை கொடுக்கப்பட்டிருக்குமானால் அது மாற்றப்பட வேண்டும்.
பாஜக - அய்க்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சியில் கஸ்தூரிபா வித்யாலயா, பெண்கள் பாதுகாப்பு அரசு விடுதிகள், பெண்காவலர் குடியிருப்பு என எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவலர் குடியிருப்பில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அடுத்தடுத்து வருகின்றன.
ஒருநாள் விடுப்பு எடுப்பதற்கு உயர்போலீஸ் அதிகாரி தன் இச்சைக்கு அழைப்பது, பெண் காவலர்களை இழிவுபடுத்தும் பேச்சுக்கள், நடத்தைகள் என பெண் காவலர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண் காவலர் குடியிருப்பில் சாதாரண வசதிகள், மருத்துவம் போன்றவை இல்லாதபோது பாலியல் துன்புறுத்தலுக்கு மட்டும் ஆளாக்கப்படுவது நடக்கிறது.
நிதிஷ்குமார் அரசாங்கம் தன்னை சுயபரிசீலனை செய்திருக்க வேண்டும். கொடூரமான காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண் காவலர்களி டம், பொதுவாக பீகார் குடிமக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட, போராடுகிற பெண்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாமான்ய மக்களை காவல்துறையினர் ஒடுக்கி வருவதால் அவர்களோடு மக்களுக்கும் கட்சிக்குமான உறவு பொதுவாக சிக்கலுக்குரியதாகவே இருக்கிறது. வருங்காலங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை கட்சி தொடரும். ஆயினும், இன்று காவல்துறை பெண்களின் ஜனநாயக உரிமைகள் மீதான, கவுரவத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக நிற்க வேண்டியது அவசியமானதாகும்.