கஜா புயலை விட பெரிய பேரிடர்கள்
பழனிச்சாமி, மோடி அரசுகளே!
எஸ்.குமாரசாமி
கஜா புயல் தமிழ்நாடு அரசின் முன் தயாரிப்பு நடவடிக்கைகள் முன்பு கூஜாவாக மண்டியிட்டது என, எதுகை மோனையுடன் பேசினார் ஓர் அமைச்சர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை கஜா புயல் தீர்த்து விட்டது என்றும், 3, 4, கஜா புயல்கள் வந்தாலும் நல்லது என்றும் சொன்னார் அமைச்சர் சீனிவாசன். முதலமைச்சர் பழனிச்சாமி, ஜீபூம்பா மேஜிக் செய்து மின்சாரம் கொண்டு வர முடியாது என அறிவியல் பகுத்தறிவு பாடம் நடத்தினார். புயலைவிட மத்திய மாநில அரசுகளே பேரிடர்கள் என உணர்ந்த பாதிக்கப் பட்ட மக்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களை முற்றுகையிட்டனர். விரட்டி அடித்தனர். பழனிச்சாமி ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்ய 20ஆம் தேதி வரை காத்திருந்தார். புயல் தாக்கிய 16க்குப் பிறகு, 17, 18, 19 தேதிகளில் ஏன் மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை எனச் சொல்ல, பழனிச்சாமியிடம் எந்த காரணமும் இல்லை. 28ஆம் தேதி, 12ஆவது நாள்தான் ரயிலில் வந்து நாகை திருவாரூரைப் பார்வையிட்டார். 2 லட்சம் கான்கிரீட் வீடுகள், 5 லட்சம் பேருக்கு வேலை உறுதித்திட்ட வேலை, 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பை எனச் சொல்லி நழுவப் பார்க்கிறார்.
புயலின் தீவிரம் புரிந்ததா
இந்த நவீன கால நீரோக்களுக்கு?
ரோமாபுரி எரிந்த போது உல்லாசமாக பிடில் வாசித்து, அவப்புகழுடன் வரலாற்றில் இடம் பெற்றான் நீரோ மன்னன். ரொட்டி இல்லா விட்டால் கேக் சாப்பிடு எனப் பசித்திருந்த பிரான்ஸ் நாட்டு மக்களிடம் சொல்லி, தலையை கில்லட்டினில் இழந்தார் பிரான்ஸ் மகாராணி மேரி ஆண்டனெட். அரிசி இல்லை எனில் எலிக் கறி சாப்பிடு எனச் சொன்னதால் 1967ல் ஆட்சியை விட்டு விரட்டப்பட்டது காங்கிரஸ் கட்சி. 3, 4 கஜா நல்லது, கஜா கூஜாவானது, மேஜிக் ஜீம்பூம்பாவில் மின்சாரம் வராது என்று சொன்னவர்களை மக்கள் இப்போது விரட்டுகிறார்கள்; நாளை டெபாசிட் இழக்க வைப்பார்கள்.
பாதிப்பு எவ்வளவு தீவிரமானது என பழனிச்சாமி கும்பல் எப்படி உணராமல் போனது? தன்மானமும் பகுத்தறிவும் இல்லாமல் கொள்ளை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு விட்டதால், சொரணையும் கூருணர்வும் மொத்தமாகக் காணாமல் போய்விட்டதா?
கஜா புயலால் உயிரிழந்தவர்கள் 63 பேர். பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12. சேதமடைந்த குடிசை வீடுகள் 2,78,824. ஓட்டு வீடுகள் 68,996. முகாம்களில் வைக்கப்பட்டவர்கள் 5.5 லட்சம் பேர். உயிரிழந்த ஆடு மாடுகள் 12,298, பறவைகள் 92,507. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட நகராட்சிகள் 184, பேரூரட்சிகள் 270, ஊராட்சிகள் 8,522. முழுவதும் சேதம் அடைந்த படகுகள் 1,419, பகுதி சேதம் அடைந்தவை 2,625. சாய்ந்த மின்கம்பங்கள் 1,03,508. சேதமடைந்த மின் மாற்றிகள் 886. பழுதடைந்த துணை மின்நிலையங்கள் 201. துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்கள் 53,21,506. சேதமடைந்த பயிர்கள் 88,100 ஹெக்டேர். தென்னை 30,100 ஹெக்டேர். நெல் 32,706 ஹெக்டேர். வீழ்ந்த தென்னம்பிள்ளைகள் 40 லட்சம்.
வருமுன் காத்தனரா?
புயலும் புயல்களின் பாதிப்புக்களும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்குப் புதியவை அல்ல. இப்போது பேரிடர் தடுப்பு ஆணையம் வேறு இருக்கிறது. நவம்பர் 16ஆம் தேதி மதம் கொண்ட யானையாய் கஜா புயல் தாக்கியது. அவசரப்பட்டும், அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கள் என கார்ப்பரேட் ஊடகங்களிடம் நற்பெயர் பெறவும் எதிர்க்கட்சியினர் உட்பட தடுப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டினார்கள். ஓரிரு நாட்களிலேயே தவறு புரிந்து தாமும் கண்டனம் முழங்கினர். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேவைக்கும் அளிப்புக்கும் இடையில் எட்டாத தூரம், நாங்கள் கற்பனை செய்ய முடியாத பாதிப்புகள் என ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். அதிகபட்சம் ஒரு லட்சம் பேருக்கு நிவாரண முகாம்கள் தேவை என நினைத்தோம். ஆனால் 5ணீ லட்சம் பேர் முகாம்களில் தங்க நேர்ந்தது என்றார். மின் கம்பங்கள் எவ்வளவு சேதம் ஆகும் என்று எதுவும் தெரியாமல், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மாவட்டங்க ளில் மின் கம்பம் சேர்த்துவைக்கத் தவறினார்கள். குளம் குட்டை ஏரி கண்மாய் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதால், அலட்சியப்படுத்தப்பட்டு தூர்வாரப்படாததால், கிணறு/கேணிகள் கிராமங்களில் இருந்து காணாமல் போனதால், அடிபம்பு குழாய்கள் இல்லாததால் தண்ணீர் இல்லை. தயாரிப்பு இல்லை. மின்சாரம், குடிநீர் தகவல் தொடர்பு, உணவு, உறைவிடப் பாதுகாப்பு இல்லாமல் போனது.
வந்தபின் என்ன செய்தனர்?
குடிசை இல்லா மாநிலம் என்று சொன்ன கூட்டம், டெல்டாவில் நவம்பர் 28 அன்று கால் வைத்த, 2 லட்சம் கான்கிரீட் வீடு பற்றிப் பேசும் பழனிச்சாமி, அவர்கள் கணக்குப்படி குடிசை வீடு, ஓட்டு வீடு என சேதமான 3,47,820 குடும்பங்களுக்கு அடுத்து பெய்த பெருமழையில் இருந்து காத்துக் கொள்ள குறைந்தபட்சம் தார்ப்பாய் வழங்கினார்களா? இல்லை. ரேஷன் அட்டை கணக்கில் அரிசி, மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி, மாற்றுத் துணி, போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்களா? இல்லை. குடிநீர் இல்லை. அலைந்து திரிந்து கற்காலம் செல்ல நேர்ந்தது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவை நவம்பர் 29 வரை மீட்கப்படவில்லை. மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மின்வாரிய, குடிநீர் வடிகால்வாரிய, சாலைத்துறை ஊழியர்கள், அதிலும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள், தூற்றப்படும் வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களே கிராமப்புற மக்களின் உற்ற துணைவர்களாக உயிரையும் பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். 25,000 தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு, ஆந்திரத்திலிருந்து வந்த 800 பேர், கேரளத்தில் இருந்து வந்த 500 பேர், கர்நாடகாவிலிருந்து வந்த 600 பேர் தோள் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு திராவிடம் துணை நின்றது.
மத்திய அரசு, பாஜக என்ன செய்கிறார்கள்?
மோடி வாய்திறக்கவில்லை. நேசக்கரம் நீட்ட வேண்டிய நேரத்தில் மோடிக்கு தமிழ்நாடு இந்தியாவில் இருப்பதே மறந்து போய்விடும். மக்களைக் கொல்ல வழி செய்த கொடிய மத்திய அரசின் பிரதமர் தமிழ்நாட்டு மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லத் தயாராய் இல்லை. 2019 மே மாதத்துக்குள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி என்கிற இராமபிரானுக்கு குடியிருக்க இடம், மசூதியை இடித்த இடத்தில் கட்டப்படும் கோயிலாக இருக்க வேண்டும் என மீண்டும் கூப்பாடு போடத் துவங்கிவிட்ட மோடி கும்பலுக்கு, புயலால் வீடு இழந்தவர்கள் ஒரு பொருட்டா? தமிழ்நாட்டு மக்கள் அய்யோ பாவம் என்று கூட நினைக்காமல், பாஜக அய்யப்பனின் புனிதம் காக்க பந்த் நடத்துவதிலும் பஸ் உடைப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. பழனிச்சாமி மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்கிறார். தானே புயல், சென்னை பெருவெள்ளம், வர்தா புயல், வறட்சி நிவாரணம், ஒக்கி புயல் பாதிப்பு என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியது ரூ.94,494 கோடி. மத்திய அரசு தந்தது ரூ.4,734 கோடி. 5%. 5% கமிஷன் அரசுக்கு, 5% நிவாரணம் போதும் என முடிவு எடுத்து விட்டார்களா?
திருந்தாவிட்டால் விட மாட்டோம்
திருந்தும் வரை விடமாட்டோம்
எட்டு வழிச்சாலை போட, வளர்ந்த தென்னையை எடுக்க சேலம் ஆட்சித் தலைவர் ரூ.40,000 நஷ்டஈடு என்றார். இப்போது 40 லட்சம் தென்னை மரங்கள் விழுந்துவிட்டன. மரத்தை வெட்டி அகற்ற ரூ.500, நஷ்டஈடு ரூ.600, மறுசாகுபடிக்கு ரூ.500 என மரத்துக்கு ரூ.1600 மட்டும் தரப்படும் என்கிறது பழனிச்சாமி அரசு. நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, மறுசாகுபடி மான்யம் 40%, 50% என்கிறார்கள். கோழிக்கு ரூ.100. குடிசைக்கு ரூ.13,500தானாம். கொள்ளைக் கூட்டம் இந்த அற்ப சொற்ப தொகை பற்றிப் பேசவே அச்சப்படும் நிலை உருவாக்க வேண்டும்.
வேர்க்கால்மட்ட ஜனநாயகம் அதிகாரப் பரவல் என்றெல்லாம் ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசும் இந்த கூட்டம், உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாததால், என்ன நஷ்டம், என்ன பாதிப்பு என்று கணக்கு எடுக்கக் கூட ஆள் இல்லை. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணியில் கணிசமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்காத பழனிச்சாமி, குடிநீர் மின்சாரம் தராத பழனிச்சாமி, ஆறுதல் சொல்லக்கூட வர முடியாத பழனிச்சாமி, 9 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட மக்கள் தலைவர் எனத் தம்மை பற்றிப் பெருமை பேசுகிறார். சில தொகுதிகளில் மாற்றி மாற்றி போட்டியிட்ட கருணாநிதி ஜெயலலிதாவை எல்லாம் விடத் தாம் மேலானவர் என்கிறார். ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டுப் போனவர்கள் பட்டியலில் பழனிச்சாமியே முதலிடத்தில் உள்ளார் என அமைச்சர் ஜெயகுமாரிடம் சொல்ல வேண்டும்.
புயல் மக்களை வாட்டி வதைத்தபோது, மக்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டபோது, பழனிச்சாமி இந்தியா டுடே பத்திரிகையிடம் விருது பெற்றுக் கொண்டிருந்தார். ஆகச் சிறந்த செயல்பாடு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சுற்றுலா போன்றவற்றில் தமிழ்நாடு அரசு சாதித்துள்ளதாம்! 7.2 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், 80% எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், 50% நகர்மயமாதல் நடந்துவிட்டது, அமைதி வளமை முன்னேற்றம் நோக்கி தமிழ்நாடு பயணம் செய்கிறது என 22.11.2018 அன்று பழனிச்சாமி ஏற்புரையில் சொல்கிறார்.
கஜா புயலால் நிம்மதி இழந்த, வறுமையில் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், பழனிச்சாமி அரசுக்கு சீக்கிரமே நல்ல பாடம் புகட்டுவார்கள். ஒரு நாள் வீசிய கஜா புயலை விட நாளும் வீசும் கார்ப்பரேட் புயல் மோசமானதென மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.