மோடி அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால்
மாணவர் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது
நாட்டில் உள்ள 3000 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 7 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.
வேலை கிடைக்காமல் இருப்பது வேலை வாய்ப்பு உருவாக்குவதில் தோல்வி அடைந்துள்ள அரசாங்கத்தின் தவறு. வேலை வாய்ப்பு உருவாக்க இடமளிக்காத நவதாராளவாதக் கொள்கைகளை அமலாக்கும் அரசுகளின் தவறு. இந்தப் பிரச்சனையை தீர்க்க மீண்டும் ஒரு முட்டாள்தனமான, ஆபத்தான தீர்வை கண்டுபிடித்துள்ளார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.
ஆசிரியர் பணிக்கான பிஎட் படித்து முடித்த பின், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித்தான் ஆசிரியர் பணி பெற வேண்டும், +2 படித்து முடித்து கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற பின் நீட் எழுதித்தான் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புச் சூழலை சீரழித்துவிட்டவர்கள், பொறியியல் கல்வி பெறும் மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடத் துவங்கியிருக்கிறார்கள். பொறியியல் கல்வி முடிக்கும்போது, பொறியியல் கல்விக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றுவிட்டாலும், கேட் (எஅபஉ) எனப்படும் கிராஜ÷வேட் ஆப்டிட்யுட் டெஸ்டில் தேர்ச்சி பெற்றால்தான், பொறியியல் படிப்பு முடித்ததாக சான்றிதழ் தரப்படும் என்று தொழில்நுட்ப கல்வி கழகம் சொல்கிறது.
இது அநியாயம். சாமான்ய பிரிவு மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. பொறியில் கல்லூரிகள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் பொறியியல் படிப்பை இன்னொரு +2 படிப்பு என்றாக்கிவிட்டார்கள். அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை சாமான்ய வீட்டுப் பிள்ளைகள் பலர் படித்து முடித்து அதை வைத்துக் கொண்டு வேலை தேடுகிறார்கள்.
கேட் தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல. நீட் பயிற்சி மய்யங்கள் போல் அதற்கும் பயிற்சி மய்யங்கள், அதில் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெறுவது, இப்படியாக பொறியியல் படிப்பு முடிக்கும் சாமான்ய வீட்டுப் பிள்ளைகள் பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாலும் பொறியியல் பட்டதாரிகள் என்ற தகுதி மறுக்கப்படுவது, மன உளைச்சல், தற்கொலைகள்....
இது மீண்டும் மாநில உரிமை பறிப்பு. சமூக நீதி மறுப்பு. சாமான்ய மக்கள் எதிர்காலத்தை சூன்யமாக்குவது. பாசிசத்தின் மற்றுமொரு தாக்குதல்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தேர்வுத் தாளை தமிழில் தயாரிக்க ஆளில்லை என்று சொல்லும் துணிவு அடிமைகள் நடத்தும் இந்த அழுகிப் போன ஆட்சிக்கு வந்துவிட்டது.
தமிழ்நாட்டு உரிமைகளை காவு கொடுத்து நடக்கும் இந்த ஆட்சியை கலைத்துவிட்டு ஓடட்டும் இந்த துரோகிகள்.
பாசிச பாஜக ஆட்சி ஒழிக! அடிமை பழனிச்சாமி அரசே, உடனடியாக பதவி விலகு!