ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில்
என்ன சண்டை அங்கே?
அன்பு
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுமம் 19.11.2018 அன்று கூடுகிறது. அதன் ஆளுநர் உர்ஜித் படேல் அன்று பதவி விலகுகிறார். இப்படி ஒரு செய்தி
. இல்லை, இல்லை, பிரச்ச னையைச் சுமூகமாக தீர்க்க உர்ஜித் படேல், அருண் ஜெட்லியையும் நரேந்திர மோடியையும் ஏற்கனவே சந்தித்துவிட்டார். இப்படியும் ஒரு செய்தி.
ரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி தா என மத்திய அரசு நிதி அமைச்சகம் மூலம் கேட்டது. ரிசர்வ் வங்கி தராமல் முரண்டு பிடித்தது. மத்திய அரசு ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7ன் கீழ், ரிசர்வ் வங்கிக்குக் கட்ட ளைகள் போட்டு, தான் நினைத்தபடி செய்யும். இவையே ஊடகச் செய்திகள்.
காற்றில் நெருப்பைக் கலந்தது, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, ஏ.டி.ஷ்ராஃப் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில், பேசிய விஷயமே. ‘மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பணிகளில் தலையிடத் தொடங்கி இருக்கிறது. மத்திய அரசின் கொள்கைகள் டி 20 கிரிக்கெட் போல் குறுகியகால தேவைகளோடு இருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் (5 நாட் கள்) டெஸ்ட் மேட்ச் ஆடுவது போலானவை ஆகும். இது இப்படியே போனால், அர்ஜண்டினாவுக்கு நடந்தது இந்தியாவுக்கும் நடக்கும்’. அவர், குறுகிய கால ஆதாயங்களுக்காக மத்திய அரசு நிற்பதாகவும், ரிசர்வ் வங்கி நீண்டகால நலன்களைக் கணக்கில் கொண்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி விவகாரத்தில் தலையிட்டு இருப்பதை, எல்லாம் பிடுங்கிக் கொண்டு செலவழித்தால், அப்படிச் செய்து வீழ்ந்த அர்ஜண்டினாவுக்கு நேர்ந்த கதி இந்தியாவுக்கும் நேரும் எனவும் அபாய அறிவிப்பு தந்தார். பேசாதே, பிரிவு 7 உத்தரவுகள் வரும் என்கிறது மத்திய அரசு.
எந்த நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனத்தையும் இந்த மத்திய அரசு மதிப்பதில்லை. மிதிக்க மட்டுமே செய்கிறது. உச்சநீதிமன்றம், பல்கலைக் கழகங்கள், மத்திய அமைச்சரவை, மத்திய புலனாய்வுக் கழகம் என்ற வரிசையில், இப்போது, ரிசர்வ் வங்கி, சேர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பணமதிப்பகற்றமும் ஜிஎஸ்டியும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை பின்னுக்கு இழுத்து விட்டன எனப் புகார் சொன்னார். நாடெங்கும் நவம்பர் 8, துக்க நாளாக, மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடிய நிதிப் போர் நாளாக அனுசரிக்கப்பட்டது. கவிஞர் வெண்புறா சரவணன் எழுதினார்:
நாடாளும் ராசாவுக்கு
நெஞ்சச் சுத்தி
அம்பத்தாறு அருவாளாம்.
ராசா ஒரு நா திடீர்னு
ஓட்டக் காலனாவும்
அருங்கோண அரையனாவும்
செல்லாதுன்னு சொல்ல
இடுப்பிலும்
சுருக்குப் பையிலும்
முடிஞ்சு வச்சக் காசுகளை மாத்த
கிறுக்குப் பய மக்களெல்லாம்
நாக்குத் தள்ளி
சாக வேண்டியதாச்சாம்
கள்ளக் காசு கருப்புக் காசுன்னு
கதையளந்த ராசா
புடுங்கின ஆணியெல்லாம்
புரயோஜனம் இல்லாம போச்சாம்
நவம்பர் 8 2016 அன்று, ரிசர்வ் வங்கியிடம் கருத்து கூட கேட்காமல் புழக்கத்தில் இருந்த பணத்தில் 86 சதத்தை, ரூ.1000 ரூ.500 தாள்களை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. ரூ.3.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் வெளியே வராமல் சிக்கி அழியும் என உச்சநீதிமன்றத்தில் தகவல் சொன்னது. ஆனால், செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.15,44,000 கோடியில், ரூ.15,28,000 கோடி திரும்ப வந்துவிட்டது என, ரிசர்வ் வங்கி தனது 30.08.2017 அறிக்கையில் சொன்னது. திரும்ப வராத பணம் 0.7% கூட இல்லை. கருப்புப் பணம், கள்ளப்பணம் முடங்கும், ரூ.3.5 லட்சம் கோடி லாபம், அவ்வளவும் மக்களுக்கே என மோடி முகாம் சொன்னதெல்லாம் பொய் என்று ஆனது. மோடி - ஜேட்லி நிதி சாகசம், சர்வநாசமாய் முடிந்தது. இப்போது திரும்பவும் நிதி சாகசம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்கிறது.
மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் என்ன கேட்கிறது?
1. இன்ஃப்ராஸ்ட்ரக்சுரல் லீசிங் அண்ட் பைனான்சியல் சர்வீசஸ் - அய்எல்அண்ட் எஃப்எஸ், (இதையே ராகுல் காந்தி, அய் லவ் பைனான்சியல் ஸ்கேம்ஸ் என கேலி செய்கிறார்) என்ற நிறுவனம் திவாலாக உள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் இல்லை. அவர்களுக்கு குறைந்த வட்டியில் நிதி ஆதாரம் வழங்க வேண்டும்.
2. பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன்களால் திணறுகின்றன. அவற்றுக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அடிப்படை மூலதன அளவு என்பதைக் குறைக்க வேண்டும். அவர்களின் நிதித் தேவைகளை ரிசர்வ் வங்கியே நிறைவு செய்ய வேண்டும். இவை அனைத்தும் பிசிஏ, துரிதமாக சரிசெய்தல் நடவடிக்கை கட்டமைப்பில் நடக்க வேண்டும். (பிசிஏ - பிராம்ப்ட் கரெக்டிவ் ஆக்ஷன்)
3. அதானி, ஜிண்டால், எஸ்ஸôர், டாடா போன்ற குழுமங்கள் நடத்தும் காற்றாலை, சூரிய ஒளி மின் சக்தி, நீராலை, அனல் மின் நிலையம் போன்ற எரிசக்தி நிறுவனங்கள் கடனில் சிக்கித் தவிக்கின்றன. நாட்டின் பொருளாதார நலன் கருதி, அவர்கள் கடன், வட்டி திரும்பத் தர போதுமான காலம் தர வேண்டும். நெருக்கக் கூடாது.
4. சிறுகுறு நடுத்தர முத்ரா கடன்களை வாராக் கடன்களில் சேர்க்கக் கூடாது. வங்கிகள் இவர்களுக்கு மேலும் கூடுதல் கடன் தர வழி செய்ய வேண்டும்.
5. 2017 - 2018ல் ரிசர்வ் வங்கியிடம் ரூ.36,17,594 கோடி சொத்து உள்ளது. ரிசர்வ் தொகை, கையிருப்பு சேமத்தொகை ரூ.10,46,304 கோடி உள்ளது. இந்த கையிருப்பில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.3.6 லட்சம் கோடி தர வேண்டும்.
இந்த விஷயங்களை ரிசர்வ் வங்கி ஏற்க மறுக்கிறது. நல்ல பணத்தை கெட்ட பணத்தின் பின்னால் அனுப்பினால், அதுவும் கெட்ட பணமாகும் என்கிறது. நான் வருடாவருடம் உபரித் தொகையை ஈவுத் தொகை போல் தந்து கொண்டுதானே இருக்கிறேன் என்கிறது. 2011ல் ரூ.18,759 கோடி, 2012ல் ரூ.15,009 கோடி, 2013ல் 33,010 கோடி, 2014ல் ரூ.52,679 கோடி, 2015ல் ரூ.65,896 கோடி, 2016ல் ரூ.65,876 கோடி, 2017ல் ரூ.30,659 கோடி, 2018ல் ரூ.50,000 கோடி தந்துள்ளேனே எனப் புலம்புகிறது. பணவீக்கமும், ரூபாய் மதிப்பு சரிவதும், அந்நிய நிதி முதலீட்டாளர் ஓட்டமும் இருக்கும்போது ரிசர்வ் வங்கியிடம் போதுமான இருப்புத் தொகை இருந்தால்தானே நாட்டுக்கு நல்லது எனக் கேட்கிறது.
ரிசர்வ் வங்கி ரூ.3.6 லட்சம் கோடி தந்தால் மத்திய அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து விடுமா?
விவகாரம், அருண் ஜேட்லி மோடி உர்ஜித் படேல் விவகாரம் அல்ல. விவகாரம் நிதி மூலதன, முதலாளித்துவ நெருக்கடி தொடர்பானது. 2019 மே மாதம் தேர்தல். 6 மாதங்களில் ரூ.3.6 லட்சம் கோடியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது.
இந்த நிதி மூலதன நெருக்கடி, முதலாளித்துவ நெருக்கடியை உந்தித் தள்ளவும், அதே நேரம் முதலாளித்துவ நெருக்கடியாய் நிதி மூலதன நெருக்கடி தீவிரமடையவும் வாய்ப்பு உண்டு.
பணமதிப்பகற்ற நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை நாசமாக்கி, பொருளாதார வளர்ச்சியை பின்னுக்கு இழுத்துள்ளது. டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் ஆதாயம் அடைந்தன. 2016ல் ரூ.4.5 லட்சம் கோடி இருந்த அவர்கள் வர்த்தகம் 2018ல் ரூ.10.6 லட்சம் கோடி ஆகி உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.14 லட்சம் கோடி ஆகி உள்ளது. ரூ.22 லட்சம் கோடி பேலன்ஸ் ஷீட்டில் உள்ள 11,400 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், அய்எல்அண்டுஎப்எஸ்சின் ரூ.91,000 கோடி கடன் சுமையால் பீதி அடைந்துள்ளன.
என்டிடிவி கணக்குப்படி தனியார் நிதி நிறுவனங்களிடமும் வாராக்கடன் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.
இந்தியாவில் இனி பிழைக்காது என்ற திட்டங்களில் ரூ.11,60,000 கோடி மூழ்கி உள்ளது. இதில் ரூ.9.5 லட்சம் கோடி வராது. எரிசக்தித் துறையில் மட்டும் ரூ.2.8 லட்சம் கோடி வராது.
இந்தியாவின் 300 பெருநிறுவனங்கள் மட்டும் அந்நிய வர்த்தகக் கடன்கள் ரூ.4.5 லட்சம் கோடி வாங்கி உள்ளன. மார்ச் 31ல் 1 டாலர் மதிப்பு ரூ.65, செப்டம்பர் 20ல் 1 டாலர் ரூ.71. வாங்கியதை விட கூடுதல் தொகை கடனை திரும்பச் செலுத்த வேண்டும். கடன் சுமை அதிகமாகி நெறிக்காதா?
சீனாவில் வர்த்தக நடப்புக் கணக்கு, அதற்குச் சாதகமாக பிரம்மாண்டமான அளவில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி 339 பில்லி யன் டாலர் (ரூ.23,73,000 கோடி). இறக்குமதி 261 பில்லியன் டாலர். (ரூ.18,27,000 கோடி). வர்த்தகப் பற்றாக்குறை 78 பில்லியன் டாலர், ரூ.5,46,000 கோடி ஆகும்.
இந்த கடன் மலை, நிதிசுமை மலையோடு ரூபாய் மதிப்பு சரிவு சேரும்போது, பொருளாதார தேக்கம் சேரும்போது, விலை உயர்வும் பண வீக்கமும் சேரும்போது, இந்த ரூ.3.6 லட்சம் கோடி, யானைப் பசிக்கு சோளப் பொறியே. கவனத்தைத் திசை திருப்பும் மற்றுமொரு நாடகமே. நான் கிழித்திருப்பேன், ரிசர்வ் வங்கியால்தான் முடியாமல் போனது என நாளை சொல்ல இன்றே தயாராகிறார்கள்.
இந்தியாவின் விவசாயம், உற்பத்தித் துறை, சேவைத் துறை பிரம்மாண்டமாய் வளர்ந்து பல கோடி வேலைகளை உருவாக்கவில்லை. மக்கள் வாங்கும் சக்தி இல்லாமல் தவிக்கிறார்கள். இதுவே எல்லா நெருக்கடிக்கும் ஆதாரமான, அடிப்படையான காரணமாகும். ரிசர்வ் வங்கியோ மத்திய அரசோ, கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார வளர்ச்சிப் பாதையை, ஒரு போதும் மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையாக மாற்ற மாட்டார்கள்.
மாட்டிக் கொண்டார் மோடி
மோடியின் முன், வங்கி நெருக்கடி, கார்ப்பரேட்டுகளின் கடன் சுமை, ரூபாய் மதிப்பு குறைவு ஆகியவை மிரட்டிக் கொண்டே உள்ளன. இவற்றோடு பங்குச் சந்தை சரிவும் சேர்ந்து கொண்டால், மோடி அரசுக்கு மிகப் பெரிய திண்டாட்டம் காத்திருக்கிறது. சிபிஅய் தலை இல்லாமல் போனதையும் ரபேல் விமான ஊழலையும் மக்கள் முடிச்சு போட்டுதான் பார்க்கிறார்கள். விவசாயிகளின் கடன் சுமையையும், ஏழைகளின் கிட்டத்தட்ட ஏதிலி நிலைமைகளையும் கார்ப்பரேட்களின் அரசு ஆதரவு சூறையாடலையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
மே 2014ல் ஆட்சி அமைந்த பிறகு பாஜக 16 மக்களவை இடைத்தேர்தல்களில் போட்டியிட்டது. இவற்றில் 12 இடங்கள், பாஜக 2014ல் வெற்றி பெற்ற இடங்கள். இவற்றில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, ஏற்கனவே வெற்றி பெற்ற 8 இடங்களில், கூடுதலாக போட்டியிட்ட 4 இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. -12, +4 இதுவே தேர்தல் கணக்கு.
2019ல் பாஜகவுக்கு மக்கள் தரும் அடி, திரும்பவும் பாஜகவை அதற்கே உரிய அரசியல் விளிம்பு நிலைக்குத் தள்ள வேண்டும்.