கோவை மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த தோழர் சந்தானம் உழைப்போர் உரிமை இயக்கத்தில் இணைந்துள்ள தூய்மைப் பணியாளர் சங்கத்தின் பொறுப்பாளரும் ஆவார். கோவையில் ஆர்எஸ்எஸ் ஷாகாக்கள் எங்கெல்லாம் நடத்தப்படுமோ அங்கெல்லாம் புரட்சிகர இளைஞர் கழக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் அறிவித்தனர். தோழர் சந்தானம் வாழும் பகுதியான காமராஜபுரத்தில் சிலம்பம் பயிற்சி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் ஷாகா நடத்தப்பட்ட மறுநாள் (நவம்பர் 11) அதே இடத்தில் புரட்சிகர இளைஞர் கழக கொடி, பிடல் காஸ்ட்ரோ படங்களுடன் தோழர் சந்தானம் கூட்டம் நடத்தியுள்ளார். ஷாகா நடத்துபவர்கள் கூட்டம் நடத்துவதை தடுக்க முயற்சி செய்ததையும் மீறி கூட்டம் நடத்தப்பட்டது. காவல்துறையினர் தலையினர் தலையிட்டு அங்கு யாரும் கூட்டம் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.