கருப்பை வெள்ளையாக்கும்
தேர்தல் நிதிப் பத்திரங்கள்
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டிஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டிய பிரச்சாரத்தின்போது, பாஜகவுக்கு ரூ.5 நிதி தரச் சொல்லி பிரதமர் மோடி கேட்டார்.
இப்படி வருகிற நிதியில் மட்டுமா பாஜக இயங்குகிறது?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தேர்தல் நிதி பத்திரங்கள் தருகிறது. அக்டோபரில் 10 நாட்களுக்கு இந்த பத்திரங்கள் தரப்பட்டன. அக்டோபரில் 10 நாட்களில் ரூ.401.73 கோடி மதிப்புக்கு தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விவரத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்தான் பெற முடிந்துள்ளது. பேக்ட்லி என்ற நிறுவனம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் பற்றிய அறிவிப்பு 2017 - 2018 நிதியறிக்கையில் வெளியாகி ஜனவரி 2018ல் அதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு பிறகு மார்ச்சில் ரூ.222 கோடிக்கும் ஏப்ரலில் ரூ.114.9 கோடிக்கும் மே மாதத்தில் ரூ.101 கோடிக்கும் ஜ÷லையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாயின. அக்டோபரில் வந்துள்ள தொகை மிகப் பெரியது. இந்த நிதிப் பத்திரங்கள் பாஜகவுக்கு மட்டும்தான் சென்று சேரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், தேர்தல் நிதி பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும் பத்திரங்கள் மட்டும்தானா? அல்லது அவற்றின் பெயரால் வேறு ஏதும் நடக்கிறதா?
இந்தப் பத்திரங்களில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் மிகவும் குறைவாகவும் ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்கள் கூடுதலாகவும் விற்கப்பட்டுள்ளன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விற்கப்பட்ட பத்திரங்களில் 58.6% பத்திரங்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலானவை. 37.9% பத்திரங்கள் ரூ.1 கோடி மதிப்புள்ளவை. இந்த இரண்டு மாதங்களிலும் ரூ.1,000 மதிப்புள்ள பத்திரங்கள் வெறும் 17 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. அக்டோபரில் விற்கப்பட்டுள்ள 733 பத்திரங்களில் 49.3% பத்திரங்கள் ரூ.1 கோடி மதிப்பிலானவை. இவற்றில் 370 பத்திரங்கள் ரூ.1 கோடிக்கும் 313 பத்திரங்கள் ரூ.10 லட்சத்துக்கும் விற்கப்பட்டுள்ளன. 0.6% பத்திரங்கள் மட்டுமே ரூ.1,000 மதிப்புள்ளவை. நான்கு முறை நடந்த விற்பனையிலும் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்கள் 99.89% விற்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ரூ.782 கோடிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்களும் ரூ.89.6 கோடிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பத்திரங்களும் இந்த அய்ந்து முறையும் வாங்கப்பட்டுள்ளன. அதாவது, 782 பேர் தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்று ரூ.1 கோடி செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்றால், அந்த பணம் எப்படி வந்த பணமாக இருக்கும்? 2018 நவம்பரிலும் 1 முதல் 10 வரை பத்து நாட்களுக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு நிதி தருவதில் தற்போதைய நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இதில் கருப்புப் பணம் பெரிதும் புரள்கிறது என்றும் வங்கிகள் வெளியிடும் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் இதில் வெளிப்படைத் தன்மை கொண்டு வர முடியும் என்றும் நிதி அளிப்பவருக்கு மட்டும்தான் யாருக்கு தருகிறார் என்று தெரியும் என்றும் அருண் ஜெட்லி சொன்னார். ஆனால், இந்தப் பத்திரங்களில் சாதாரண பார்வைக்குத் தெரியாமல், ப்ளூரசன்ட் ஒளி வெளிச்சத்தில் தெரியும் விதம் ஆவண எண் தரப்பட்டுள்ளதாக க்வின்ட் இணைய இதழ் சொல்கிறது. தானே ரூ.1,000 மதிப்புள்ள இரண்டு பத்திரங்கள் வாங்கி பரிசோதித்துப் பார்த்து இதை உறுதி செய்துள்ளது.
தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கியது யார் என்பது வங்கிக்கு தெரியும். எந்த கட்சி பெறுகிறது என்பதும் வங்கிக்கு தெரியும். மத்திய அரசு இந்த விவரங்களை எப்போது வேண்டு மானாலும் பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். பின் இதில் எங்கிருக்கிறது வெளிப்படைத்தன்மையும் பத்திரத்தை வாங்கியவர் பற்றிய ரகசியம் காக்கப்படுவதும்? உங்கள் பொய்களுக்கு ஓர் அளவே இல்லையா?
உண்மையில் இந்த முறையில் கருப்புப் பணம் வெள்ளையாகிறது. கட்சிகளுக்கு வந்த கருப்புப் பணம் கூட வங்கிகளில் பத்திரமாக மாற்றப்பட்டு பத்திரமாக கட்சி கணக்கில் வெள்ளையாக்கப்பட்டு வந்து சேரும். அரசியல் கட்சிகளின் நிதி போக்குவரத்து அறிந்தவர்கள் சில விசயங்கள் சொல்கிறார்கள். ஒரு கட்சி தன்னிடம் இருக்கிற கருப்புப் பணத்தை சிலரிடம் கொடுத்து அதை பத்திரங்களாக மாற்றி மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பெரிய தொகை ரொக்கமாக தேவைப்படும் ஒருவர் 10% கூடுதல் தொகை கொடுத்து பத்திரம் வாங்கி அதை கட்சியிடம் கொடுத்து தனக்குத் தேவையானதை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம். கட்சிக்கு 10% கமிஷன். கருப்புப் பண ஒழிப்பு இப்படியும் நடக்கலாம்!
2015 - 2016ல் பாஜக காட்டிய வருமானத்தை விட, 2016 - 2017ல் அது காட்டிய வருமானம் 81.18% அதிகரித்து, ரூ.1,034 கோடியானது என்ற செய்தி ஏற்கனவே வந்துள்ளது. இதற்கும் தேர்தல் நிதி பத்திரங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வருமான விவரம் நிதி பத்திரங்கள் வருவதற்கு முந்தையது. 2018 - 2019 வருமான விவரம் வெளியாகும்போது நமக்கு அதிர்ச்சியும் இருக்கும்.
ப்ருடன்ட் எலக்டோரல் ட்ரஸ்ட் என்ற அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு நிதி திரட்டுகிறது. 2017 - 2018ல் திரட்டப்பட்ட நிதியான ரூ.169 கோடியில் ரூ.144 கோடியை பாஜகவுக்கு தந்துள்ளது. இதில் ரூ.52 கோடி டிஎல்எஃப் நிறுவனம் தந்தது. பார்தி குழுமம் ரூ.32 கோடி தந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த 2014 நிதி ஆண்டில் இருந்து, பாஜகவுக்கு இந்த ரூ.144 கோடி தவிர, ரூ.444.59 கோடி நிதி தந்துள்ளது. இந்த நிதி பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து திரட்டப்பட்டது. இன்னும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஜெனரல் எலக்டோரல் ட்ரஸ்ட், முருகப்பா குழுமத்தின் ட்ரயம்ப் எலக்டோரல் ட்ரஸ்ட் ஆகிய அறக்கட்டளைகளும் தாங்கள் திரட்டிய நிதியில் பெரும்பகுதியை பாஜகவுக்குத்தான் தந்துள்ளன. அம்பானி, அதானி வகை கணக்கு வேறு விதங்களில், வேறு மட்டங்களில் இருக்க வாய்ப்புள்ளது.
விமான நிலையத்தில் பாஜக தலைவரிடம் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று சொன்ன சோபியாவின் பின்னணி என்ன, அந்நிய நிதி, சதி உள்ளதா என்றெல்லாம் பேசியவர்கள், அரசியல் கட்சிகள் அந்நிய நிதி பெறலாம் என்று மோடி அரசின் நிதியமைச்சர் சொன்னபோது வெகுண்டு எழவில்லை.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, கூடவே தொழில் நிறுவனங்கள் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒன்று, தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தரும் நிதிக்கான உச்சவரம்பை நீக்கியது; மற்றும் ஒன்று எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி தருகிறது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றது. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நாங்கள் செய்துவிட்டோம், நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதற்கான வசதியும் செய்துவிட்டோம் என்று தொழில் நடத்துபவர்களிடம் மோடி அரசு சொல்லாமல் சொல்கிறது. நாட்டு மக்கள் சட்டப்படி எந்த கேள்வியும் இந்த விசயத்தில் எழுப்ப முடியாது.
இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டே இருக்கும் பாஜக, சாமான்ய மக்களுக்கான கொள்கைகள், திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்? கேள்வியை மாற்றியும் கேட்கலாம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கொள்கைகளும் திட்டங்களும் நட வடிக்கைகளும் கொண்ட பாஜகவுக்கு கார்ப்ப ரேட் நிறுவனங்கள் நிதி தருவதில் என்ன தவறு?
வெளிப்படைத்தன்மை, ரகசியம் காப்பது என்றெல்லாம் சொல்லி, தேர்தல் நிதிப் பத்திரங்கள் வந்த பிறகு தேர்தல் நிதி அறக்கட்டளைகள் தொடருமா? அல்லது அக்கம்பக்கமாக இரண்டும் ஒத்திசைந்து செயல்பட்டு பாஜகவின் தேர்தல் எந்திரத்துக்கு எண்ணெய் ஊற்றுமா?
கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இத்தனை வழிகளை பாஜக அரசு ஏற்கனவே வைத்துள்ளபோது, பணமதிப்பகற்றமும் செய்து சாமான்ய மக்கள் வயிற்றில் அடித்தது.
இந்தியாவின் சாமான்ய மக்கள் பாஜகவின் இந்த செழிப்பான தேர்தல் எந்திரத்துடன்தான் நேருக்கு நேர் மோதப் போகிறார்கள்.