பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்
இருப்பவர்கள் தர மாட்டார்கள்
இல்லாதவர்கள் விட மாட்டார்கள்
அன்பு
பிரிக்கால் தொழிலாளர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் 15.02.2019 அன்று ஓர் இடைக் காலத் தீர்ப்பும் 06.03.2019 அன்று ஓர் இறுதித் தீர்ப்பும் வென்று தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு, தொழிற்சங்க இயக்கத்துக்கு, ஜன நாயகத்துக்கான போராளிகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் தந்துள்ளனர்.
இருப்பவர்கள் தர மாட்டார்கள் என்பது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே, இல்லாதவர்கள் விட மாட்டார்கள் இறுதி வரை உறுதியாகப் போராடுவார்கள் என்பதே அவர்கள் சொல்லும் செய்தி.
முதலீட்டாளர்களில், ஆட்டோ முதலீட்டாளர்கள் அரசுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். அவர்களுக்கு ஆட்டோ தொழிலே வளர்ச்சிக்கான என்ஜின் ஆகும். ஆட்டோ உதிரிபாகத் தொழிலில், கோவை பிரிக்கால் லிமிடெட் நாடெங்கும் உலகெங்கும் தடம் பதித்துள்ளது.
புதிய ஆயிரமாண்டில் உற்பத்தித் துறை போராட்டங்களில் ஆட்டோ தொழிலாளர்களே முன்னணிப் பங்காற்றினர். ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் சிறை சென்றுள்ளனர். மாருதி, பிரிக்கால் தொழிலாளர்கள் பல முறை சிறை சென்றுள்ளனர். இந்த இரண்டு ஆலைகளின் தொழிலாளர்களும் ஆயுள் சிறை வாசத்தில் உள்ளனர். இன்னும் பல ஆட்டோ நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் உள்ளிட்ட பலவித பாதிப்புகளுக்கு உள்ளாயினர். 2018ல் போராட்டக் கொடியை யமாஹாவில், ராயல் என்ஃபீல்டில் இளம்தொழிலாளர்கள் உயர்த்திப் பிடித்தனர்.
பயிற்சி, ஒப்பந்த முறை, சம்பள பிடித்தம், பெரும்பான்மை சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பது, தொழிலாளர்களின் சுயமரியாதைக்குச் சவால் விடுவது என்பவை, இந்த நிறுவனங்களின் வாடிக்கை. 20ஆம் நூற்றாண்டில், 21ஆம் நூற்றாண்டு பற்றியும், 21ஆம் நூற்றாண்டில் 22ஆம் நூற்றாண்டு பற்றியும் தானியங்கி முறை, செயற்கை நுண்ணறிவு என்ற நவீன காலப் புதுமைகள் பற்றியும், இந்த நிறுவனங்களின் முதலாளிகள் பெருமை பேசுவார்கள். ஆனால் சிந்தனையால் 18ஆம், 19ஆம் நூற்றாண்டு பண்ணை எசமானரின் ஆதிக்க சிந்தனையைத் தாண்டி வர, இன்று வரை மறுக்கிறார்கள். முதலாளி அய்யாவின் ஈகோ, தான் என்ற திமிர், பிளடி ஒர்க்கர்ஸ், முட்டாள்கள், லாயக்கில்லாதவர்கள், என் தயவில் வாழும் தொழிலாளர்கள் என்ற எண்ணம், இன்னும் தொடர்கிறது. தொழிலாளி 21ஆம் நூற்றாண்டு மனிதராய் வளர்ந்து விட்டார். முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சில விஷயங்களில் 18, 19ஆம் நூற்றாண்டு தாண்டி வளரவே இல்லை. முதலாளித்துவம், குறிப்பாக நமது இந்திய முதலாளித்துவம், வளர்ச்சியாலும் நம்மை துன்புறுத்துகிறது. வளர்ச்சியின்மையாலும் நம்மை துன்புறுத்துகிறது.
பிரிக்காலில், சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி, திரு.குமாரசாமி (தேசியத் தலைவர், ஏஅய்சிசிடியு) பிரிக்கால் நிறுவனத்தை ஏமாற்றியதால் ஏற்பட்டுள்ளதாக, பிரிக்கால் நிறுவன அதிகாரி மலர்வண்ணன் ஊடகங்களிடம் பேட்டி தந்தார். வன்முறை சங்கம், கொலைகார சங்கம், தீவிரவாதிகள் சங்கம் என கோயபல்ஸ் பாணியில் பொய் பேசும் நிர்வாகம், தனது பெருந்தன்மையால் 2012ல், 2014ல் இதே சங்கத்தோடு ஒப்பந்தம் போட்டதாகச் சொன்னது. சிறு பிள்ளைகளை, பிள்ளை பிடிப்பவர் ஏமாற்று வதாக, பலவீனமானவர்களை பலமானவர்கள் ஏமாற்றுவதாகச் சொல்வார்கள். ஆனால் சில ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ள பிரிக்கால் நிர்வாகத்தை, கோடி கோடியாய் வழக்கறிஞர்களுக்கு, சில அரசு அதிகாரிகளுக்கு, சில அரசியல்வாதிகளுக்கு, சில நடுவர்களுக்குக் கொட்டி கொடுக்கிற பிரிக்கால் நிர்வாகத்தை, ஒரு தொழிற்சங்க தலைவர் ஏமாற்ற முடியுமா?
அவர்கள் என்னதான் சொல்கிறார்கள்? வேலை நீக்க வழக்குகளில் உள்ளவர்கள் கணக்கு முடிக்க நிர்வாகம் ஒரு தொகை தர முன் வந்தபோது தோழர் குமாரசாமி அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டு கணக்கு முடிப்பதோ, அல்லது வேலை நீக்கத்திற்கெதிராக வழக்கு நடத்துவதோ, சம்பந்தப்பட்ட தொழிலாளியின் உரிமை என்ற பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்தார். கணக்கு முடிக்காமல் வழக்கு நடத்த வழி உண்டு என்று சொன்னதுதான், ஏமாற்றியதாகுமாம்.
இதனைப் பொறுக்க முடியாமலும், சங்கத்தை எப்படியாவது சிறுபான்மைச் சங்கமாக்க வேண்டும் என்றும்தான் பிரிக்கால் நிர்வாகம் 01.07.2018 முதல் போடவேண்டிய புதிய ஒப்பந்தம் பற்றி ஏஅய்சிசிடியு சங்கத்துடன் பேச மறுக்கிறது. பல ஆயிரம் ரூபாய்களை, நிர்வாகத்திற்கு வேண்டிய ஏஅய்டியுசி சங்கத்தினருக்கு தந்துவிட்டு, ஏஅய்சிசிடியு சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் தர மறுத்தது. சங்கம், 14.08.2018 ஒருநாள் வேலை நிறுத்தம், நிர்வாகம் சுமுகமாகப் பிரச்சனைகளைத் தீர்க்காவிட்டால் 21.08.2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என அறிவித்தது. உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து விளைவிப்பார்கள் எனப் பொய்யாகக் குற்றம் சுமத்தி 16.08.2018 முதல் 144 பேரை பகுதி கதவடைப்பில் நிர்வாகம் வெளியே நிறுத்தியது. பின்னர், உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை (!) என உணர்ந்து, அவர்களை திரும்பவும் வேலைக்கு எடுத்துக் கொண்டது.
ஆலைக்குள் நிர்வாகத்துக்கு உதவ ஏஅய் டியுசியும் நுழைய, பகுதி கதவடைப்பு, பணப் பயன் மறுப்பு, தொடர் போராட்டங்களால் ஏற்பட்ட அயற்சி ஆகியவற்றால் சங்கத்தின் எண்ணிக்கையில் ஒரு சரிவு ஏற்பட்டது. ஆனாலும் வேலை நிறுத்தம், சங்கம் துவங்கி 12 ஆண்டுகள் ஆனபிறகும், 100 நாட்களைத் தாண்டியது. சமரச அலுவலர் முன், ஒரு கவுரவமான தீர்வுக்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டு 03.12.2018 அன்று தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். அன்றே 302 பேர் ஆந்திரம், மகாராஷ்டிரா, உத்தர்கண்ட் மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மீண்டும் போராட்டங்கள். இந்த முறை பாஜக தவிர, பிற எல்லா கட்சிகளும் போராட்டத்தை ஆதரித்தன. அமைச்சர்களும் கூட நிர்வாகம் பக்கம் நிற்க மறுத்தனர்.
ஆனால் சில அரசு அதிகாரிகளை நிர்வாகம் கையில் போட்டுக் கொண்டது. அப்படியும், பணியிட மாற்ற உத்தரவை நிர்வாகம் திரும்பப் பெறாவிட்டால் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறும் அளவுக்கு, போராட்டம் வலுவடைந் தது. கட்சிகள், இயக்கங்களின் ஆதரவு பெரு கியது. திரும்பவும் பணியிட மாற்றம் செய்தவர்களில், நிர்வாகம் ஆள்பிடிப்பு முயற்சி எடுத்தும், 302 பேரில் 8 பேர்தான் அவர்கள் பக்கம் சென்றனர். பகுதி மக்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு தயாராக, பிற அமைப்புக்கள் ஆலை வாயிலை முற்றுகையிட தயாராக, நிர்வாகம் 294 பேரையும் விசாரணையின்றி, சமரச அலுவலர் ஒப்புதல் இன்றி வேலை நீக்கம் செய்தது. நிர்வாகத்தின் 11.03.2019 தேதிய பணிநீக்க உத்தரவுகள் 13.03.2019 அன்றுதான் தொழிலாளர்களுக்கு கிடைத்தன.
சங்கம் 15.03.2019 காலை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, இந்த அநீதிக்கு எதிராக முறையிட, அன்று பிற்பகலே, நீதிபதி திரு.வி.பார்த்திபன் சேம்பரில் இருதரப்பாரும் ஆஜராகி வழக்கு விசாரிக்கப்பட்டு 294 பேர் வேலை நீக்கத்திற்கு தடை வழங்கப்பட்டது. 27.02.2019 அன்று வழக்கு இறுதியாக நடத்தப்பட்டது. 06.03.2019 அன்று சங்கத்தின் ரிட் மனுவை உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
சங்கத்திற்காக இந்த முறையும் வழக்கறிஞர்கள் பாரதி, கே.எம்.ரமேஷ், எஸ்.குமாரசாமி ஆஜராயினர். தனியார் நிர்வாகம் சட்டப்படியான பொதுக் கடமையை மீறும்போது, ஓர் அரக்கத்தனமான சூழல் எழும்போது, உயர்நீதி மன்றம் அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் 226ன் கீழ் நீதியின் நலன் கருதி, தனியார் நிர்வாகத்திற்கு எதிராகவும் தலையிட்டு தடை வழங்க முடியும் என, சங்கத் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. தொழில் அமைதி கருதி, சம்பந்தப்பட்டவர்களோடு நேரடியாகத் தொடர்புள்ள தொழில் தகராறு நிலுவையில் உள்ள போது, அந்தத் தொழிலாளர்களை, அத்தகைய சமரச அதிகாரி, நீதிமன்றம் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல் பணி நீக்கம் செய்யக்கூடாது என, தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் பிரிவு 33(1) (பி) சொல்கிறது. அப்படி அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் பணி நீக்கம் துவக்கம் முதலே செல்லாது என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள்து.
இந்த வாதங்களுக்கு ஆதாரமாக, அண்ணாமலை நேஷனல் எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன், பெடரல் பேங்க், சென்னை உயர்நீதிமன்றத்தின் 12.01.2016 தேதிய தீர்ப்பு, ஜெய்பூர் ஜில்லா ஷகாரி பூமி விகாஸ் பேங்க் லிமிடெட் ஆகிய அனைத்தையும் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டம் விதித்த பொது கடமையை மீறி, பிரிக்கால் லிமிடெட் மேகொண்ட 294 பேர் வேலை நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக, 06.03.2019 தேதிய இறுதித் தீர்ப்பிலும் சொன்னது. சங்கம், அரசு செயலர் மற்றும் ஆணையரை முதல் இரண்டு எதிர் மனுதாரர்களாகவும் கோவை சமரச அலுவலரை 3ஆவது எதிர்மனுதாரராகவும் வழக்கில் சேர்த்திருந்தது. பாரபட்சமான பணப்பயன் மறுப்பு, 302 பேர் பணியிட மாற்றல் தொடர்பான தொழில் தகராறு, சட்டத்தின் 10(1) பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அதனோடு கூடவே 10 பி சட்டப்பிரிவின் கீழ், பணப்பயன்கள் முன்பணமாய் வழங்க, பணியிட மாற்றலை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மூன்று எதிர் மனுதாரர்களிடம் 31.12.2018, 14.01.2019, 24.01.2019 தேதிகளில் கோரியிருந்தது. 31.12.2018, 14.01.2019, 24.01.2019 தேதிய மனு கோரிக்கைகள் மீது 10(1), 10 பி பிரிவுகளின் கீழ், ஒரு காலவரையறைக்குள் அரசு உத்தரவிட வேண்டும் என்பதே சங்கத்தின் ரிட் மனுவில் முதன்மைக் கோரிக்கை. இதனை அனுமதிப்பதில் தனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லை எனவும், வேலை நீக்கம் மீதான தடையை விலக்குங்கள் எனவும் நிர்வாகம் வாதாடியது. இந்த நிலையில்தான், பிரிக்கால் தொழிலாளர்கள் ரிட் மனு டபுள்யுபி 4580/2019 மற்றும் டபிள்யுஎம்பி 5170/2018 வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
முதன்மை மனு, துணை மனு என்றெல்லாம் பேசி, சமரசப் பேச்சு வார்த்தைகள் நடக்கும்போது சட்டத்திற்கு புறம்பாக நடந்த அரக்கத்தனமான வேலை நீக்கங்களை தடுத்து நிறுத்தாமல், மவுன சாட்சியாக இருப்பது, அரசியலமைப்புச் சட்ட பொறுப்புக்களை துறப்பதும், அரசியலமைப்புச் சட்ட கோட்பாடுகளை ஏதுமற்றதாகச் செய்வதும் ஆகும் என நீதிமன்றம் முடிவு செய்தது.
நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் தாமதம் என்பது, இழுத்தடித்து பழிவாங்கும் நிர்வாகங்களுக்கு உதவும் என்று சொல்லி தொழில் தகராறுகள் சட்டப்படி தீர்வுக்கான முயற்சிகள் சட்டப்படி துவங்கும் வரை 294 பேர் வேலை நீக்கத்திற்கு இடைக்கால தடை இருக்கும் என உத்தரவிட்டது. மனுதாரர்கள் 10(1) பிரிவின்படி கோருகின்ற நீதிமன்ற விசாரணைக்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் 10 பி பிரிவின்படி உரிய உத்தரவு போட வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பிரிக்கால் தொழிலாளர்கள், மிகப் பெரிய வழக்கு ஒன்றில் மிகச் சிறந்த வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளார்கள். அடுத்த சுற்றுக்கள் சட்டப் போராட்டம் இருக்கலாம்.
சட்டம் சார்ந்த நீதிமன்றப் போராட்டம் நடத்த அடிப்படையாக இருந்ததே, தொழிலாளர்களின் களப்போராட்டங்கள்தான். வீட்டுக் கடனுக்கு மாதாமாதம் தவணையாக ரூ.5,000, ரூ.10,000 எனக் கட்டுபவர்கள், மாதச் சம்பளம் சுமார் ரூ.25,000 என்பதை 21.08.2018 முதல் 6 மாதங்களுக்கு மேல் இழந்துள்ளனர். ரூ.50,000க்கும் மேல் போனஸ், லாபத்தில் பங்கு, தற்செயல் விடுப்பு, கல்வித் தொகை ஆகிய வகைகளில் மறுக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், பணியிட மாற்றம் அநீதியானது என்பதால் அடி பணிய மறுத்தார்கள்.
பிரிக்கால் நிறுவனத்தை நடத்தும் குடும்பத்தினர், 2019லிருந்து தனிமனிதராய் யோசியுங்கள் எனத் தொழிலாளர்களுக்கு புத்தாண்டு செய்தி சொன்னார்கள். ஏஅய்சிசிடியுவும் இகக மாலெவும் 2007லிருந்தே தொழிலாளர்களிடம் தனிமனிதராய் யோசிக்காதீர்கள், தொழிலாளி வர்க்கத்தவராய் சிந்தியுங்கள், செயல்படுங்கள், வாழுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர்.
மூலதனம், கூலி உழைப்பிடம், உனக்குள் சுருங்கி அடங்கிப்போ, கொடுப்பதை வாங்கிக் கொண்டு கேள்வி கேட்காமல், அநீதியை எதிர்த்துப் போராடாமல் அடிமையாய் இரு எனத் தொடர்ந்து சொல்கிறது. தனக்கான வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் மாற வேண்டும் என்றால், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிற்சங்க போராட்டம் இருக்க வேண்டும் எனவும், சாத்தியமானவற்றோடு மட்டும் சுருங்கி முடங்கி நிற்காமல், அவசியமானதைச் செய்தாக வேண்டும் என்பதையும் பிரிக்கால் தொழிலாளர்கள் இன்று வரை செய்து வருகிறார்கள்.
தொழிற்சங்கப் போராட்டங்களில், மக்கள் போராட்டங்களில் நிறைய நிறைய தோல்விகள், எப்போதாவது வெற்றிகள் என்றுதான் இருக்கும். அதற்காக, இல்லாதவர்கள் போராடாமல் விட மாட்டார்கள். சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ள வரை, எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தே தீரும்.
பதிமூன்று வருடங்களாக, ஆகாயம் தலை மேல் விழுந்தாலும் பூமி காலுக்குக் கீழே பிளந்தாலும், இல்லாதவர்களாகிய நாங்கள் விட மாட்டோம் என, சொல்லாலும் செயலாலும் நிரூபித்து நிற்கும் பிரிக்கால் தொழிலாளர்களின் வீரமரபை உயர்த்திப் பிடிப்போம்.