புல்வாமாவும் பாலகோட்டும் மோடி அரசாங்கத்தின் இன்னும் இரண்டு மிகப்பெரிய தோல்விகள்
மோடி அரசாங்கத்தை விரட்டியடிப்போம்
புல்வாமா தாக்குதல், அதற்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நடத்திய வான்வழி தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து துணைக் கண்டம் ஆபத்தான போரின் விளிம்பில் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்
ளது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கிடையில் உருவாகியுள்ள போர்ச் சூழலுடன், அணுஆயுத பதிலடி தரப்பட வேண்டும் என்ற பொறுப்பற்ற ஊடகப் பேச்சுகளும் சேர்ந்துகொள்ள, துணைக்கண்டமும் உலகமும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.
முதலில், பாகிஸ்தானின் பாலகோட்டில் ஜெய்ஷ் – இ முகமது முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. சர்வதேச அளவில் சட்டபூர்வமான கருத்தாக இருக்க வேண்டும் என்பதால், இந்தத் தாக்குதல் ராணுவம் சாராத, முன்தடுப்பு தாக்குதல் என இந்தியா சொன்னது; ஆனால் நாட்டுக்குள் நடந்த விவாதத்தில் இந்தத் தாக்குதல் புல்வாமா தாக்குதலுக்கு நடந்த பதில் தாக்குதல் என்று மோடி அரசாங்கம் முன்னிறுத்தியது.
பதிலுக்கு பாகிஸ்தான் இந்தியாவின் ரஜோரியில் குண்டுகள் வீசியது. இந்திய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு அதன் விமானி பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அமைதிக்கான ஒரு அறிகுறி என்று பாகிஸ்தான் பிரதமர் சொல்ல, அந்த விமானி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆயினும் அமைதி திரும்பவில்லை. இந்திய, பாகிஸ்தான் படைகள், இரு நாடுகள் எல்லைகளில் குண்டுகள் போடுவது நடந்து கொண்டிருக்கிறது. சாதாரண குடிமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
தனது வான்வழி தாக்குதல் மூலம் ஜெய்ஷ் – இ முகமது முகாம்களை அழித்துவிட்டதாக, பெரிய சேதத்தை உருவாக்கியுள்ளதாக இந்தியா சொல்கிறது. பாகிஸ்தான் இதை மறுக்கிறது. பாலகோட்டுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் இந்திய அரசாங்கம் நடத்தியதாகச் சொல்லப்படும் தாக்குதலுக்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்கின்றனர். அரசாங்கமும் அதற்கான ஆதாரங்கள் எதையும் பொது மக்கள் பார்வைக்கு முன்வைக்கவில்லை. எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது பற்றி எந்த மதிப்பீடும் தரும் நிலையில் தான் இல்லை என்று இந்திய விமானப் படையும் தெளிவுபடுத்திவிட்டது. ஆக, பாலகோட்டில் வான்வழி தாக்குதல் எதுவும் நடத்தப்பட்டிருந்தால், அதன் தாக்கம் என்ன என இன்னும் எதுவும் திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.
இந்த மொத்த விசயத்திலும் இந்திய அரசாங்கம் தனது கடமைகளில் இருந்து தவறியுள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்தபோதும், நடந்த பிறகு சில மணி நேரங்களுக்கும் பிரதமர் கார்பெட் பூங்காவில் தன்னைப் பற்றி டிஸ்கவரி சேனல் எடுக்கும் படத்துக்கான படபிடிப்பில் இருந்தார்; அலைபேசி வழியாக ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்; அந்த உரையில் அவர் புல்வாமா தாக்குதல் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்போதிருந்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக அரைகுறை திட்டங்களை துவக்கி வைப்பது, ஆரோக்கியம் பற்றிய செயலியை வெளியிடுவது, பாஜக தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுடனான எனது வாக்குச்சாவடியே அனைத்தையும் விட வலுவானது என்ற வீடியோ கான்பரன்சில் பேசுவது போன்றவற்றை செய்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரது கூருணர்வின்மைக்கும் பொறுப்பற்ற தன்மைக்கும் சிகரம் வைத்தாற்போல், விமானியை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டபோது, விமானி திட்டம் முடிந்துவிட்டது, அது விரைவில் உண்மையான பொருளில் நடக்கும் என்றார்.
இந்தத் தாக்குதல் நடந்த பிறகு பாதுகாப்பு அமைச்சரை காணவில்லை. நடந்து முடிந்துவிட்ட வான்வழி தாக்குதல்கள் பற்றி அவருக்கு எதுவும் தெரியவில்லை. அனுபவங்களின் அடிப்படையிலான அறிவுரைகள், நடைமுறைகள் ஆகியவற்றை மீறி, பிரதமரிடமும் அவருக்கு நெருக்கமான ஒரு சிலரிடமும் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ஜோவல் போன்றோர்) முடிவுகளும் தகவல்களும் ஆபத்தான விதத்தில் குவிந்திருப்பதையே இது காட்டுகிறது. உரி, பதான்கோட், புல்வாமா தாக்குதல்கள் நடப்பதில் இந்த இரட்டையர் முடிவு எடுத்தது காரணம் என்பதற்கான சான்றுகள் இருக்கும்போதும் இந்த நிலைமைகள் தொடர்கின்றன.
பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், புல்வாமா தாக்குதலை தேர்தல்களில் வாக்குகள் பெறவும் அரசாங்கம் பற்றிய கேள்விகளையும் விமர்சனங்களையும் வாய் மூடச் செய்யவும் பயன்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பாஜகவின் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, புல்வாமா தாக்குதலும் அதற்குப் பிறகு நடந்த வான்வழி தாக்குதலும் மோடிக்கு பெரும் வெற்றி பெற்றுத் தரும், கர்நாடகாவில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார். பாஜக தலைவர் அமித் ஷா, பாலகோட்டில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற ஆதாரமில்லாத செய்தியைச் சொன்னார்; அய்க்கிய அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பிறகு இந்தியாதான் இது போன்ற ஒரு பதில் தாக்குதலை நடத்தியுள்ளது என்றும் சொன்னார். ஆனால் மோடி அமைச்சரவையின் மத்திய அமைச்சர் எஸ்எஸ் அலுவாலியா, இந்தத் தாக்குதல் வெறும் எச்சரிக்கைக்காக நடத்தப்பட்டது என்றும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று அரசாங்கம் எந்த அதிகாரபூர்வ தாக்குதலும் தரவில்லை என்றும் சொன்னார்.
மோடியும், தன்னை, தனது அரசாங்கத்தை விமர்சனம் செய்வது இந்தியாவை வெறுப்பதற்கு ஒப்பானது என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், அபிநந்தன், தமிழர் என்று சொல்லி தமிழக மக்களையும் போர் வெறி நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமன் தமிழர் என்றார். நிர்மலா சீதாராமன் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்று அவர் சொன்னதும் தவறான செய்தி.
புல்வாமாவுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் நடக்கும் மோதலின் விளைவு, ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் மேலானதாக இருந்திருக்கும் என்று சொல்கிறார். அவர் முன்னின்று போட்ட ஊழல் ரபேல் ஒப்பந்தம் பற்றிய கேள்விகளை மறைக்க பாலகோட் தாக்குதலையும் போர் வெறிக் கூச்சலையும் பயன்படுத்த முயற்சி செய்தபோது, பாலகோட் தாக்குதல் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்று மோடியே ஒப்புக்கொள்கிறார்.
பாஜகவின் சமூக ஊடகப் படையினரும் மோடி அரசாங்கத்தின் செல்ல தொலைக்காட்சி அலைவரிசைகளும் செய்தியாளர்களும், போர் வெறிக் கூச்சலிலும் மோடியை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதிலும் மும்முரமாக இருக்கின்றனர். இந்த மோதல்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் போர் வெறிக் கூச்சலுக்கு எதிராகவும் போர் வீரர்களின் மரணத்தை அரசியல்ரீதியாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் பேசி வருகிறார்கள். புத்கம்மில் நொறுங்கிய விமானத்தில் இருந்த இந்திய விமானப்படை விமானி நினத் மந்தவ்கனேயின் மனைவி விஜேதா மந்தவ்கனே, சமூக ஊடகத்தில் இருப்பவர்கள் போர் வெறிக் கூச்சலில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் போருக்கும் எல்லையின் இரண்டு பக்கங்களிலும் போர் வீரர்கள் உயிரிழப்பதற்கும் எதிரானவர் என்றும் உறுதியாக அறிவித்தார். மதவெறி வெறுப்புக்கு எதிராகவும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் போராடுவதன் மூலம் சாதாரண குடிமக்கள் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். பிரதமர் தொடர்கிற, மதவெறி வெறுப்பை, பெண்கள் விரோத வசவுகளை கக்கும், அரசாங்கத்துக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, படுகொலை செய்வது என அச்சுறுத்தும், பல சமூக ஊடக செய்திகளுக்கு, அவர் சொல்லியிருப்பது சரியான பதிலடியாகும்.
கொல்லப்பட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விடுக்கிற இந்த வேண்டுகோள்கள், பிரதமரின் பொறுப்பற்ற சொல் விளையாட்டுகளுக்கு மாறாக, எந்த ஒரு போர் வீரரும் திட்டம் அல்ல, போர், பார்வையாளர் கணக்குகளை உயர்த்துவதற்காக, வாக்குகள் பெறுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல என நமக்கு நினைவுபடுத்துகின்றன. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைதி வேண்டும் என பலரும் துணிச்சலாக குரல் எழுப்புகின்றனர். பொறுப்பற்ற தேசவெறி ஊடகங்களின் கூக்குரலுக்கு அப்பால், தீவிரவாதத்துக்கு எதிராக, அமைதிக்காக, விமானி அபிநந்தன் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர்களும் சாமானியர்களும் இந்தக் குரலை எழுப்பிய விதம் வரவேற்கத் தக்கது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர், பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படுவது ஆகியவை, பாகிஸ்தானில் இருந்து உருவாகும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு தீர்வு கண்டதில்லை என்றும் காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் சாத்தியப்பாட்டை அது பாதிக்கிறது என்றும் அனுபவம் காட்டுகிறது. அமைதியை உறுதி செய்யவும் காஷ்மீர் பிரச்சனையில் நீடித்த அரசியல் தீர்வு காண்பதை நோக்கி நகரவும் இந்திய, பாகிஸ்தான் அரசாங்கங்களை பொறுப்பேற்கச் செய்வது அவசியமானது.
தேர்தல் காலம் துவங்கவிருக்கும்போது, போர்ச் சதி கொண்டு தேர்தலை மூடிமறைக்க மோடி அரசாங்கம் முயற்சி செய்வதை அனுமதிக்கக் கூடாது. தேர்தல் காலம், நடந்து கொண்டிருக்கிற அரசாங்கத்தின் கொள்கைகள், நடவடிக்கைகள் பற்றிய தீவிரமான ஆழமான பகுப்பாய்வுக்கான, விவாதத்துக்கான காலம். இந்த பகுப்பாய்வை, விவாதத்தை தேச விரோதம் என்று முத்திரை குத்தி, பாகிஸ்தான் ஆதரவு, தீவிரவாத ஆதரவு என்று முத்திரை குத்தி நசுக்கிவிட எடுக்கப்படும் எந்த முயற்சியும் நாடாளுமன்ற தேர்தல்களை கேலிக் கூத்தாக்கிவிடும். காஷ்மீர், இந்திய – பாகிஸ்தான் உறவுகள் ஆகிய விவகாரங்களில் மோடி அரசாங்கம் பளிச்சென தெரியும்படி தோல்வி அடைந்துள்ளது. காஷ்மீர் மக்களும் பாதுகாப்புப் படையினரும் மோடியின் ஆட்சியில்தான் இதற்கு முந்தைய எந்த ஆட்சியிலும் இருந்ததை விட கூடுதல் துன்பங்களை சந்தித்துள்ளனர். இந்தியாவின் அமைதி, ஜனநாயகம், மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை வலுப்படுத்த, இந்த பேரழிவுமிக்க ஆட்சியை இந்தியா விரட்டியடிக்க வேண்டும்.