சான்மினா தொழிலாளர்களுக்கு
ஏஅய்சிசிடியுவின் அறைகூவல்
தோழர்களே,
போராட்டங்கள் பல கண்ட நம்மை, நிர்வாகம் வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கிறது.
ஒரு தொழிலாளியைப் பயன்படுத்தி, அவர் மூலம் அதிகாரி பழனி துணையுடன், விசாரணையில் நமக்கு வாய்ப்பு தராமல், சட்டவிரோதமாக, தோழர்கள் நித்தியானந்தம், லோகநாதன், சாரதி ஆகியோரை வேலை நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் நடுங்கிப் பின்வாங்குவார்கள், ஏஅய்சிசிடியு சங்கம் காணாமல் போகும் என்ற நிர்வாகத்தின் எண்ணத்தில், 23.02.2019 அன்று நாம் நடத்திய போராட்டம் மண் விழ வைத்தது.
65 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியவர்கள் நாம்.
நான்கு நாட்களுக்கு மேல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தியது நாம்.
போராட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3,570 சம்பள உயர்வு பெற்றது நாம்.
13ஆவது மாதத்தில், அடுத்த 12 மாதங்களுக்கு ரூ.3,800 சம்பள உயர்வு வென்றது நாம்.
சட்டமன்றத்தை, நீதிமன்றத்தை, தொழிலாளர் ஆணையத்தை முற்றுகையிட்டது நாம்.
அய்க்கிய அமெரிக்க தூதரகத்துக்கு நேரில் சென்று நியாயம் கேட்டது நாம்.
துணை முதலமைச்சரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியதும் நாமே.
கடந்தகால வலியையும், நமது போராட்ட வரலாற்றையும் நாம் மறந்தால், நாம் வாழத் தகுதியற்றவர்கள் ஆவோம்.
ஏஅய்சிசிடியு பலவீனங்களோடு சமரசம் செய்துகொள்ளாது. பலங்களோடு உறவாடி வளர்க்கவே முயற்சி செய்யும். இந்தப் பகுதியில் நாம் நடத்தியது போல் வேறு யாரும் போராட்டங்கள் நடத்தியதில்லை.
நம்மை தடுமாற வைக்க, தடம் புரள வைக்க முயற்சி செய்கிறார்கள். நமது மூளைக்கு விலங்கிடப் பார்க்கிறார்கள். 21 நாட்கள் சம்பளப் பிடித்தம் வழக்கு என்ன ஆனது, வெளிப் போராட்டங்கள் நமக்கு தேவையா என்ற இன்றைய கேள்விகள், நாளை போராட்டங்கள் தேவையா, ஏஅய்சிசிடியு தேவையா, சங்கம் தேவையா என்ற கேள்விகளாக மாறி, நம்மை அடிமைப் படுத்தும்.
நம்மில் பலருக்கு இன்னும் 30 ஆண்டுகள் சர்வீஸ் உண்டு. இன்று நாம் வாங்கும் ஓடியும் இன்சென்டிவ் தொகையும் சங்கம் இருப்பதால் வந்தது. அவை இரண்டும் சேர்ந்த சம்பளத்தை, இந்நேரம் நாம் வாங்கியிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் ரூ.7,370 சம்பளம் உயர்ந்தது என்றால், நாம் ஏஅய்சிசிடியுவோடு மேலும் 4 வருடங்கள் இருந்திருந்தால், குறைந்தது மேலும் ரூ.10,000 சம்பளம் உயர்ந்திருக்காதா?
இந்த ஆண்டு சம்பள உயர்வு, நிர்வாகம் ஒருதலைபட்சமாக அறிவிப்பதாக இருக்கக் கூடாது. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கத்தை வலுப்படுத்துவோம். மூன்று தோழர்கள் வேலை நீக்கத்தை முறியடிக்க வேலை நிறுத்தம் செய்திடுவோம். இந்தப் பகுதியிலேயே சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான முன்னணி போராளிகள் சான்மினா தொழிலாளர்களே என, நாளைய வரலாறு சொல்லட்டும்.
தோழமையுடன்
ஏஅய்சிசிடியு, காஞ்சிபுரம்