சூழலியலாளரும் மனித உரிமை ஆர்வலருமான
தோழர் முகிலன் மாயமானது தொடர்பான அறிக்கை
பெறுநர்
தலைமைச் செயலாளர்/உள்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசு
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், வடக்கு பிராந்தியம், தமிழ்நாடு
காவல்துறைக் கண்காணிப்பாளர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம்
23, பிப்ரவரி 2019
மதிப்பிற்குரிய அய்யா/அம்மா,
கடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறையினரால் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் காவல்துறை உயரதிகாரிகள் இருப்பதாக சுட்டிக்காட்டும் காணொளிப் பதிவை பிப்ரவரி 15 அன்று வெளியிட்டு அரை நாளைக்குள்ளாக, அதாவது பிப்ரவரி 15 அன்று நள்ளிரவில் சூழலியல் போராளி தோழர் முகிலன் காணாமல் போய்விட்டார். தோழர் முகிலன், மணல் கொள்ளைக்கு எதிராகவும், அணுமின் நிûலையங்கள் மற்றும் தொழில்துறை மாசு பற்றியும் வெளிப்படையாக பேசி இயங்கிவரும் செயல்வீரர். அவர் மாயமானது எங்களிடையே பெரும் அதிர்வை உருவாக்கியுள்ளது. அவர் பாதுகாப்பாக திரும்ப வருவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
மனித உரிமை விசயத்தில் முன்னணி மாநிலமாக கருதப்படும் தமிழ்நாட்டில் தோழர் முகிலன் காணாமல் போயிருப்பதும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மவுனம் காப்பதும் தமிழகத்தின் மனித உரிமை, சிவில் உரிமை பற்றி எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் தோழர் முகிலனின் பாதுகாப்பு பற்றி மிகுந்த கவலைப்படுகிறோம். தமிழ்நாடு அரசும் காவல்துறையும் விரைவாக செயல்பட்டு அவர் குடும்பத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதை விரைந்து உத்தரவாதம் செய்வார்கள் என்று நம்புகிறோம்.
மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, ஒரு பிரிவினர் வன்முறையிலும் கலவரத்திலும் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் சொல்லப்படுவது தொடர்பாக பிப்ரவரி 15, 2019 காலை 11.30 மணிக்கு தோழர் முகிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டெர்லைட் - மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற தலைப்பில் காணொளியை வெளியிட்டார். அதில் காவல்துறை, ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு கூட்டுச் சேர்ந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஏதுவாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டும் சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொலைக்காட்சி பதிவுகளை ஆதாரமாக வெளியிட்டார்.
இந்த வன்முறை, கொலைக்குப் பின்னால் காவல்துறை உயர் அதிகாரிகள் இருப்பதாக சுட்டிக் காட்டினார்.
கடைசியாக அவரது நண்பர்கள் சிலர், எழும்பூர் இரயில் நிலையத்தில் அவரை சந்தித்திருக்கின்றனர்.
கூடங்குளம் அணுஉûலைக்கு எதிராக நடந்த வன்முறையற்ற கீழ்படியாமை போராட்டத்திலும் அவர் உட்பட பலர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது கடத்தப்பட்டு மூன்று நாட்கள் காவல்துறை வசமிருந்த அவர் சிவில் சமூகத்தின் நிர்ப்பந்தத்தால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
தட்பவெட்ப நிலை பெருந்தீங்கின் முனையில் நாம் நின்றுகொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக போராடி வரும் முகிலன் போன்றவர்களை, கிரிமினல் குற்றவாளிகளாக பார்த்து அவர்களை துன்புறுத்துவதற்கு மாறாக அவர்களை நீதி மற்றும் நியாயத்தின் குரலாக பார்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ஒப்பம்
நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்கள், சிவில் மனித உரிமை அமைப்புகள்