COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 15, 2019

கார்ப்பரேட் விளம்பரங்கள் கூட கைவிடுகின்றன 
சங்கிகளது மதவெறியின் நாட்கள் எண்ணப்படுகின்றன

அன்று ஹோலி. அந்தச் சிறுமி வெண்ணிற மேல்சட்டையும் சற்று வண்ணம் செறிவான கால் சட்டையும் அணிந்து தனது சிறிய சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறாள்.
தெருவின் இரண்டு பக்கங்களிலும் மேல் வீடுகளிலும் கீழ் வீடுகளிலும் இருந்து மற்ற குழந்தைகள் அவள் மீது வண்ணங்கள் எறிகின்றனர். அவளும் தலை நிமிர்த்தி அவற்றை வாங்கிக் கொள்கிறாள். அவர்களிடம் இருக்கும் வண்ணப் பொடிகள், கலவைகள் அனைத்தும் முடிந்துவிடுகின்றன.
இப்போது அவள் அடுத்த வீட்டுக்குச் சென்று வெளியே வா என்று நிமிர்ந்த தலையுடன் சைகை செய்கிறாள். உள்ளேயிருந்து வெண்ணிற ஆடைகளுடன் ஒரு சிறுவன், இசுலாமியன், ஓடி வருகிறான். அந்தச் சிறுமியின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொள்கிறான். அவர்கள் முன்னே செல்லும்போது, எங்கோ ஒரு சிறு பொட்டலத்தில் வண்ணம் இன்னும் மீதம் இருப்பதை கண்டுபிடித்துவிட்ட ஒரு சிறுவன், அதை எடுத்துக் கொண்டு ஓடி வந்து அவள் மீது எறிய முற்படுகிறான். அந்தச் சிறுமி அந்த இசுலாமிய சிறுவனை அழைத்துச் செல்வதைப் பார்த்த இன்னொரு சிறுமி வண்ணம் வீச வந்தவனை தடுத்து நிறுத்துகிறாள். அவனும் நடப்பதை பார்த்துவிட்டு அப்படியே நின்று விடுகிறான்.
அந்தச் சிறுமி தனது நண்பனை மசூதி வாயிலில் தொழுகைக்கு இறக்கிவிட்டுவிட்டு டாடா சொல்ல, கறை நல்லது என்கிறது சர்ப் எக்சல் விளம்பரம்.
சங்கிகள் வழக்கம்போல், இந்த விளம்பரம் இந்து மதத்துக்கு எதிரானது என்று ஊளையிடத் துவங்கினர். சர்ப் எக்சலுக்கும் மைக்ரோசாப்ட் எக்சலுக்கும் வேறுபாடு தெரியாமல், மைக்ரோசாப்ட் எக்சலுக்கு எதிர்மறை மதிப்பீடு தந்து பாகிஸ்தானுக்குப் போய் உனது தொழிலைப் பார் என்றனர். மக்கள் மத்தியில் கேவலமாக அம்பலப்பட்டு நின்றனர். சர்ப் எக்சல் நிறுவனம் தனது விளம்பரத்தை வெளியிட்டது வெளியிட்டதுதான் என்று உறுதியாக நின்றுவிட்டது.
சர்ப் எக்சல் நிறுவனத்தின் விளம்பரத்தால் மூக்குடைபட்ட சங்கிகளின் ஆற்றாமை ஆறுவதற்குள் இன்னொரு மதநல்லிணக்க விளம்பரம் பிக் பஜார் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது.
ரம்ஜான் நோன்பில் இருக்கும் இசுலாமிய பெண் மருத்துவர் ஒருவர் அதிகாலையில் தனது அன்றைய உணவை அருந்தத் துவங்கும் நேரம், பிரசவ வலியால் ஒரு பெண் துடிப்பதாக செவிலியரும் கவலை தோய்ந்த முகத்துடனான தாயும் (இந்து) வந்து சொல்ல, அவர் உணவருந்தாமல் அப்படியே வைத்துவிட்டு, பிரசவம் பார்க்க வருகிறார். அடுத்த காட்சியில்,  இந்துத் தாயின் முகத்தில் தனது மகளின் பிரசவம் முடிந்த மகிழ்ச்சி. தாயும் சேயும் நலம். அதிகாலையில் அந்த மருத்துவரை உணவருந்தச் சொல்லி அழைக்கிறார். அந்த அறையிலேயே அவருக்கு பிக் பஜாரில் இருந்து அந்த இந்துத் தாய் வரவ ழைத்திருந்த ரம்ஜான் நோன்பு உணவு!
இந்த விளம்பரத்துக்கு சங்கிகள் இன்னும் எதிர்ப்புத் தெரிவிக்கத் துவங்கவில்லை. சர்ப் எக்சல் விளம்பரம் இந்த முட்டாள்களுக்கு போதுமான பாடம் தந்திருக்க வேண்டும். இந்த அய்ந்து ஆண்டுகளும் மதவெறி, சாதி வெறி, ஆணாதிக்க வெறி வெறுப்பு அரசியலின் பிளவுபடுத்தும் பாதகமான, ஆபத்தான விளைவுகளை இந்திய மக்கள் போதுமான அளவுக்கு பார்த்து விட்டார்கள்.
சங்கிகளே, உங்களது ஊளைகளுக்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அத னால்தான், உங்களுக்கு பேராதரவு தந்த, உங்களது பேராதரவு பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட மக்கள் மனநிலையை பயன்படுத்திக் கொள்ள இந்து - இசுலாமியர் ஒற்றுமை நிலவும் சூழலை, மதநல்லிணக்கக் கருத்துகளை தங்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். கருத்துகளை நீங்கள் மட்டும் அல்ல, உங்களுக்கு எதிராகவும் உருவாக்க முடியும். மக்களை பிளவுபடுத்தும் உங்களது மதவெறி வெறியாட்டத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

Search