இலையும் பூவும் பழமும் சேர்ந்தது பெரும் பலமா?
பூங்குன்றன்
28 பிப்ரவரி 2019
இரட்டை இலை, தாமரை, மாம்பழம் சின்னங்கள் கொண்ட கட்சிகள், தங்களது கூட்டணி இயற்கையானது என்றும் முரசும் கொட்டினால் எல்லாம் மங்களகரமாக முடியும் என்றும் சொல்கிறார்கள்.
அவர்கள் கூட்டணி வெல்லப்பட முடியாத கூட்டணியாம். அவர்கள் சொல்வதில் சரியும் உண்டு. தவறும் உண்டு. பெருநிறுவன சார்பு, இந்துத்துவ சார்பு, சாதியாதிக்க, ஆணாதிக்க சார்பு கட்சிகளின் கூட்டணி இயற்கையானது. மக்கள் விரோதத்தில் முதல் வரிசையினரின் இயல்பான கூட்டணி என்ற உண்மையை, இலை துளிர்க்கும், பூ பூக்கும், பழம் பழுக்கும் என்ற வெற்று வசனங்கள் கொண்டு மறைக்க முடியாது. கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர் என்று தமிழ்நாட்டு சாதிப் பெரும்பான்மையினரின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வரும் என கணக்கு போடுவதோ, 2014ல் அஇஅதிமுக பெற்ற 49.3% வாக்குகளின், பாஜக கூட்டணி பெற்ற 18.5% வாக்குகளின் பெரும் பகுதி வந்தாலே வெற்றி நிச்சயம் என்றும் கணக்கு போடுவதோ, தவறாகும்.
சாதிக்குள் வர்க்கம் இருக்கிறது. சாதிகளில் பிறந்தவர்களுக்கும் பகுத்தறிவு சுயமரியாதை உண்டு. அவர்களால் முதன்மை மக்கள் விரோதக் கூட்டணியை அடையாளம் காண முடியும் எனப் புரிந்து கொள்ளாமல், தவறு செய்கிறார்கள். அரசியல் வெறும் எண் கணித கூட்டலும் கழித் தலும் அல்ல. அரசியலில் வேதியியலுக்கு முக்கிய இடம் உண்டு. நேற்று வேறு இன்று வேறு என, நேற்றைய பலசாலிகள், பலங்கள் இன்றைய பலவீனமானவர்களாக, பலவீனங்களாக மாறு வார்கள் என, காணத் தவறுகிறார்கள்.
அஇஅதிமுக பாஜக பாமக பலவீனங்கள்
அஇஅதிமுக: பளிச் எனத் தெரியும் பலவீனம் ஆளுமைமிக்க ஜெயலலிதா இன்று இல்லை. 2014ல் 37 இடங்களை அஇஅதிமுக வென்றது உண்மைதான். அன்று 217 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. அஇஅதிமுக 2016ல் தப்பிப் பிழைத்தே வென்றது. திமுகவைவிட அஇஅதிமுக 1.1% 4,44,746 வாக்குகளும் மட்டுமே கூடுதலாகப் பெற்றது. 2001, 2006, 2011ல் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், 2016ல் ஜெயலலிதாவே வேட்பாளராக இருந்தும் அஇஅதிமுக 97,218 வாக்குகள்தான் (55.89%) பெற்றது. 2017 இடைத் தேர்தலில் வெறும் 48,306 வாக்குகளுடன் (27.31%) இரண்டாம் இடம் பெற்றுத் தோற்றது. அஇஅதிமுகவின் ஒரே சாதனை, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இரட்டையர், ஜெயலலிதா மறைந்த பிறகும் இரண்டாண்டுகள் ஆண்டு விட்டார்கள் என்பது மட்டுமே ஆகும்.
சரிந்து கொண்டே வரும் அஇஅதிமுகவை, பாஜகவும் மத்திய அரசும் முட்டு கொடுத்து நிறுத்தி உள்ளன. ஆட்சியில் இருப்பதால், ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியால், தமிழ்நாட்டின் 16,500 வாக்குச் சாவடிகளிலும் ஒரு வாக்குச் சாவடிக்கு 18 பொறுப்பாளர்கள் போட்டு, அந்த 18 பேரும் ஆளுக்கு 50 முதல் 100 வாக்காளர்கள் மத்தியில் கவனம் குவிப்பார்கள் என அஇஅதிமுகவால் பாஜகவிடம் சொல்ல முடிகிறது. 37 இடங்களில் வென்றவர்கள், 7 இடங்கள் பாமக, 5 இடங்கள் பாஜக என ஒதுக்கி உள்ளனர். புதிய தமிழகத்தை சமரசம் செய்து கொண்டு வர முயற்சிக்கிறார்கள். தேமுதிகவையும் இழுத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
ஆகக் கூடுதலான நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதே நோக்கம் என்கிறார் பழனிச்சாமி. அஇஅதிமுகவைப் பொறுத்தவரையில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பாஜக, பாமக ஆதரவு என்பதுதான் கூட்டணியின் முக்கிய அம்சமாகும். நாடாளுமன்றத் தேர்தல் கூடவே சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடந்து, எப்படியாவது பெரும்பான்மை பெற்று 2021 வரை, தமிழ்நாட்டைச் சூறையாடும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பது தான், அவர்கள் குறிக்கோள். ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தந்த ரூ.1,000, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2,000 என்பவை மூலம் தப்பித்து விட முடியும் என அஇஅதிமுகவுக்கு நப்பாசை உள்ளது.
கூட்டணி மூலம் தனக்கும் ஓர் அந்தஸ்து கிடைக்கும் என்ற அஇஅதிமுகவின் கணக்கு, யார் அசல் அதிமுக என்ற தோற்றத்துக்கான சண்டையில், தினகரன் விஷயத்தில் மட்டுமே அவர்களுக்கு வெற்றி தந்துள்ளது.
பாஜக: போர் மூலம் தப்பிக்கலாம் என மோசமான அரசியல் சூதாட்டக் காய்களை நகர்த்தி உள்ள மோடியும் பாஜகவும், அரசியல்ரீதியாக இறங்குமுகத்தில் உள்ளனர். பீகாரில் நிதிஷ் 2014ல் 2 இடங்களில் மட்டுமே வென்றார். ஆனால் பாஜக அவரோடு 2019ல் சரி சமமாகத் தொகுதிகள் பிரித்துக் கொண்டுள்ளது. நாளும் கடுமையாக விமர்சனம் செய்த சிவ சேனாவுடன், மகாராஷ்டிராவில் 25, 23 எனக் கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில், அஇஅதிமுகவிடம் 50:50 எனத் துவங்கி ஒரு டஜன் கேட்டு, பத்தாவது கொடுங்கள் எனப் பேசி, கடைசியில் 5 இடங்களுடன் திருப்தி அடைந்துள்ளது.
மோடியை பிரதமராக்க, ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு மட்டுமல்ல, வேறு எவரோடும் கூட்டணி சேர்வோம் என பாஜக சொல்கிறது. பாஜகவினரிடம், சோர்வடைய வேண்டாம், அடுத்த 5 ஆண்டுகளில் நிலைமை மாறும், நம் கை மேலோங்கும், நாம் நினைத்தது நடக்கும் என அமித் ஷாவால் அதிகபட்சம் சொல்ல மட்டுமே முடிந்தது. தமிழ்நாட்டில் 5 இடங்களில் போட்டி போட முடிகிறது என வேண்டுமானால் பாஜக ஆறுதல் அடையலாம்.
பாமக: அவர்கள் நிலைமையும் கவலைக்கிடம். சட்டமன்றத் தேர்தலில் ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை, அதனால்தான் கூட்டணி என்றார் அன்புமணி. அஇஅதிமுக ஊழல்களுக்கு எதிராக புத்தகம் போட்டு அச்சடித்து விநியோகித்த ராமதாஸ், 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் அஇஅதிமுகவுக்கு ஆதரவு தந்து, 7+1 என வாங்கிக் கொண்டு, தங்களுக்கான மாற்றத்தை, முன்னேற்றத்தை உறுதிசெய்து விட்டார்.
தனித்தனி பலவீனம் பார்த்தோம். அணி நிலைமை என்ன? விஜய்காந்துக்கு ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என நம்பி, அதனை எப்படியாவது பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். சந்தர்ப்பவாத கூட்டணி என்ற வேதியியல், இவர்களது கூட்டணி கூட்டல் கணக்கை தகர்த்துவிடும். விவசாய நெருக்கடி, வேலையின்மை, ஊழல், ஜனநாயக மறுப்பு ஆகிய பிரச்சனைகள் இந்த அணிக்கு பெரும் சவாலாக உள்ள விஷயங்களாகும்.
தமிழ்நாட்டில் இரண்டு பெரும் அணிகளின் போட்டிதான் என்றாகி உள்ளது. திமுக தரப்பும், தேமுதிக, காயைத் தந்திரமாக ஆடுகிறது. பாஜகவின் கணேசனும் இகக(மா)வின் பாலகிருஷ்ணனும் விஜயகாந்த் கட்சியை தத்தமது அணிக்கு இப்போதும் அழைக்கிறார்கள். திமுக, தேமுதிக தொடர்பாக, ஊடகங்களைப் பயன்படுத்தி மதிமுக, இகக, இகக(மா) தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளைத் தள்ளிப் போடவும், தருவதைப் பெற்று ஆறுதல் அடையும் மன நிறைவை உருவாக்கவும், தேமுதிக அஇஅதிமுகவிடம் மேற்கொள்ளும் பேர ஆற்றலை உயர்த்தவும், முயற்சிக்கிறது.
39 இடங்களில் பாஜக அஇஅதிமுகவை வீழ்த்தும் தேர்தல் நிலைப்பாட்டோடு தயாராகி உள்ள இகக மாலெ, எதற்கும் எவர்க்கும் காத்திராமல், இடதுசாரி அரசியலைப் பலப்படுத்தும் மக்கள் சார்பு நிகழ்ச்சி நிரலுடன் திருபெரும்புதூர், திருச்சி தொகுதிகளில் போட்டியிடுவதை அறிவித்துள்ளதுதான், முற்போக்கு இடதுசாரி ஜனநாயக முகாமுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் தரும் செய்தியாகும்.