கோவை பிரிக்காலில்
10 பி உத்தரவுக்கு பிறகு என்ன நடக்கிறது?
(பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்ட முன்னணிகளிடம் தீப்பொறி ஆசிரியர் குழு கேட்டறிந்த விவரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது)
சங்கத்தின் போராட்ட நடவடிக்கைகளால், அரசியல் முன்முயற்சிகளால், நீதிமன்ற வழக்குகளால், பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் 2007, 2009க்கு பிறகு 03.05.2019 அன்று தமிழக அரசு 10 பி ஆணை போட்டது என, ஏற்கனவே செய்தி சொல்லி இருந்தோம்.
கோவை பிரிக்கால் நிர்வாகம் தனது தொழிலாளர்களை உத்தர்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்தது நியாயம்தானா என்ற எழுவினா மற்றொரு எழுவினாவோடு சேர்த்து 03.05.2019 அன்று தொழிற்தகராறு சட்டம் 1947ன் 10 (1) பிரிவின் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அன்றே, அப்போதே அதே சட்டத்தின் 10 பி பிரிவின்கீழ் பிரிக்கால் நிர்வாகம் மேற்கொண்ட பணியிட மாற்றல் உத்தரவுகளை நிறுத்தி வைக்குமாறு ஆணையிடப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி சங்கம் 10.05.2019 அன்று எழுதிய கடிதத்திற்கு நிர்வாகம் 15.05.2019 அன்று ஒரு பதில் தந்தது. அந்த பதிலில், 10 பி அரசாணையில் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை அரசு நீதிமன்ற தீர்ப்பிற்கு அனுப்பிவிட்டதால் தீர்ப்பை எதிர்நோக்குமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர, மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளும் பிரச்சனை எழவில்லை என, அடாவடியாகச் சொன்னது.
அரசாணையை அமல்படுத்த வேண்டும் என மே 17 அன்று ஆலைவாயிலுக்குச் சென்று நியாயம் கேட்டதோடு, வேலை பெற்றுத் தருமாறு பிரிக்கால் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் நேரில் சென்று கோரினார்கள். அரசாணையை அமல்படுத்தாத நிர்வாகத்தின் மீது மேல்நடவடிக்கை எடுக்கவில்லை என மே 20 அன்று சென்னைக்கு வந்து தொழிலாளர் ஆணையகரகத்தில் நியாயம் கேட்டார்கள். மே 30 அன்று காலை கோவையில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் திமுக, இககமா, பெரியார் திராவிடர் கழக தலைவர்களும் பியுசிஎல் அமைப்பினரும் பெருந்திரளான பிரிக்கால் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆலை வாயிலுக்குச் சென்று நியாயம் கேட்ட தொழிலாளர்களுக்கு, 22.05.2019 தேதியிட்ட பதில் ஒன்றை நிர்வாகம் தந்திருந்தது. அந்தப் பதிலில். வேலை நீக்கத்திற்கு ஒப்புதல் கேட்டு, தான் தாக்கல் செய்துள்ள மனுவின் மீது கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகுதான் எதுவும் செய்ய முடியும் என்றது.
இந்தப் பின்னணியில் கோவை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் 31.05.2019 அன்று சட்டம் ஒழுங்கை ஒட்டி விசாரணை நடத்தப்பட்டது. அரசு அலுவலர்களை சந்தித்த நிர்வாகம், ஆர்டர் இல்லை வேலை இல்லை வேலை தர வாய்ப்பு இல்லை என்றும் 10பி அரசாணை வெறும் அறிவுரைதான் என்றும் வேலை நீக்க உத்தரவுக்கு ஒப்புதல் கோரிய மனுக்கள் நிலுவையில உள்ளபோது வேலை தரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் சொல்லி விட்டு சென்றுவிட்டனர் என, அரசு அதிகாரிகள் தொழிலாளர் தரப்பிற்கு தெரிவித்தனர்.
பிரிக்கால் நிர்வாகம் அரசாணையை மீறியுள்ளது, ஆகவே நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருவாய் கோட்டாட்சியர், தொழிலாளர் துறை செயலருக்கு, அறிக்கை தந்துள்ளதாகத் தெரிகிறது. இதனை அடுத்து தொழிலாளர் துறை நிர்வாகத்தை அழைத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கோவை பிளாண்ட் 1 மற்றும் பிளாண்ட் 3ல் 10 பி அரசாணைப்படி வேலை தர வேண்டும் என, ஜுன் மாத துவக்கத்தில் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
சங்கத் தரப்பில் 07.06.2019 அன்று தொழிலாளர் கூடுதல் ஆணையர், தொழிலாளர் ஆணை யர் தொழிலாளர் துறை துணை செயலர், தொழிலாளர் துறை செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து 21.08.2019 முதல் வேலையும் வருமானமும் இல்லாமல் உள்ள தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை பெற்றுத் தருமாறு கோரினோம். தொழிலாளர் துறை செயலர் மிகவும் திட்டவட்டமாக 10 பி உத்தரவுப் படி மீண்டும் வேலை தர வேண்டும் என நிர்வாகத்திற்கு தெரிவித்துவிட்டதாகவும், அவர்கள் அப்படிச் செய்யாவிடில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொழிலாளர்களை வேலைக்கு எடுக்காமல் இழுத்தடிக்க பிரிக்கால் நிர்வாகம் சொல்லும் சாக்குபோக்குகள் என்ன?
1. 10 பி பிரிவின்கீழ் போடப்பட்ட அரசாணை 222 பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்குமாறு அறிவுரைதான் தந்துள்ளதே தவிர, ஆணை ஏதும் போடவில்லை என்று நிர்வாகம் வாதாடுகிறது. இது வெறும் சொற்சிலம்ப விளையாட்டு ஆகும். வசதி படைத்த கோடீஸ்வரர்கள் வசதியில்லாதவர்களை பணிய வைப்பதற்காக எடுக்கும் விபரிதமான விசமத்தனமான வாதமாகும்.
தொழிற்தகராறு சட்டம் 1947ன் 10 பி பிரிவின் தலைப்பே, தொழிற்தகராறு நிலுவையில் இருக்கும்போது பணிநிலைமைகள் தொடர்பாக ஆணையிடும் அதிகாரம் தொடர்பாக என்று தான் குறிப்பிட்டுள்ளது. அந்த பிரிவுக்குள், பணி நிலைமைகள் தொடர்பாக அரசு, பொதுவான அல்லது தனித்த ஆணையிடுவது பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஆக 10 பி பிரிவே ஆணையிடுவது தொடர்பானதே தவிர, அறிவுரை வழங்குவது தொடர்பானது அல்ல.
10 பி பிரிவின்கீழ் இரண்டு ஆணைகள் போடுமாறு சங்கம் கோரிக்கை எழுப்பியது. நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தர வேண்டிய பணபாக்கிகளை கணக்கில் கொண்டு முன் பணம் தர உத்தரவிட வேண்டும் என்றும், பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருந்தது.
இந்த இரண்டு பிரச்சனைகளையுமே நீதி ன்ற விசாரணைக்கு அனுப்பிய அரசு, பண பாக்கிகள் தொடர்பாக முன்பணம் வழங்க 10பி பிரிவின் கீழ் ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் ஏற்கவில்லை. இந்தப் பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவை எதிர்நோக்குமாறு அறிவுறுத்தியது. ஆனால் பணியிட மாற்றப் பிரச்சனையில் அதனை நிறுத்தி வைக் குமாறு ஆணையிட்டது. தொழிலாளர் துறை செயலர் மற்றும் அதிகாரிகள் இது ஆணையே தவிர அறிவுரை அல்ல என திட்டவட்டமாக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர். ஆனால் பணியிட மாற்றலை நிறுத்தி வைக்குமாறு அறிவுரைதான் உள்ளது, ஆணை ஏதும் இல்லை என்பது அபத்தமும் ஆபத்தும் நிறைந்த வாதமாகும்.
2. நிர்வாகத்தின் முதன்மை மனிதவள அதிகாரி திரு.ஆர்.மலர்வண்ணன் கோவை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு 10.06.2019 அன்று அளித்துள்ள பேட்டியில், உயர்நீதிமன்றம் அரசு 10 (1), 10பி பிரிவுகளில் ஆணைபோடும் வரைதான் வேலைநீக்க உத் ரவிற்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது என்றும், 03.05.2019 அன்று 10(1), 10பி அரசா ணகள் போட்டுவிட்டதால், அதற்கு பிறகு வேலைநீக்கத்திற்கான தடை விலகி விடும் என்றும் வேலை நீக்கம் திரும்ப அமலுக்கு வரும் என்றும் இனி வேலை நீக்கத்திற்கு ஒப்பு ல் கோரப்பட்டுள்ள மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகுதான் பணியிட மாற்றல் செய்யப் ட்டவர்களுக்கு வேலை தருவது பற்றி முடிவு எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு சரியாக அறிவுரை தரும் வழக்கறிஞர்களை, அதிகாரிகளை பிரிக்கால் நிர்வாகம் ஏற்றுக்கொள்வதில்லை; மாறாக தான் சொல்வது போல் கேட்கிற, சொன்னபடி எங்கும் பேசுகிற வழக்கறிஞர்களையும் அதிகாரிகளையுமே விரும்புகிறது. அந்த வகையில் ஆலோசனை சொல்ப வர்தான் திரு.ஆர்.மலர்வண்ணன். நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை பறிக்கும் ஆலோசனைகளை கொஞ்சம் கூட தயங்காமல் சொல்கிற இவருக்கு, மனிதவள அதிகாரி என்று பதவி. என்ன வினோதம்!
திரு.ஆர்.மலர்வண்ணனின் வாதம் சரிதானா?
பணியிட மாற்றலை ஏற்காததால் வேலை நீக்கம் செய்வதாக நிர்வாகம் சொன்னது. சங்கமோ, தொழிலாளர்களோ வேலை நீக்கத்திற்கு எதிராக தொழிற்தகராறுகள் எழுப்பவில்லை. 03.12.2018 முதல் பிறப்பிக்கப்பட்ட பணியிட மாறுதலுக்கு எதிராக மட்டுமே 24.01.2019 அன்று தொழிற்தகராறு எழுப்பிய தொழிற்சங்கம் 31.12.2018, 14.01.2019 தேதிய கடிதங்கள் மூலம் தமிழக அரசிடம் பணியிட மாறுதலுக்கு எதிரான தொழிற்தகராறை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புமாறும் 10பி பிரிவின் கீழ் பணியிட மாற்றல் உத்தரவை நிறுத்தி வைக்கு மாறு உத்தரவிடவும் கோரியது. 15.02.2019 அன்று வேலைநீக்க உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவு கோரிய சங்கம், முதன்மை ரிட் மனுவில் தனது 31.12.2018, 14.01.2019 தேதிய கடிதங்கள் மற்றும் 24.01.2019 தேதிய தொழிற் தகராறுபடி தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் 10(1), 10 பி பிரிவுகளின்கீழ் உரிய உத்தரவுகள் பிறப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திடம் கோரியது.
பணியிட மாற்றம் வேலை நீக்கமாக மாறி விட்டது, அதனால் இனி பணியிட மாற்றம் தொடர்பாக 10 பி உத்தரவு போட முடியாது என பிரிக்கால் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வாதாடவில்லை. மாறாக சங்கம் கோரிய 10 (1), 10 பி பிரிவு ஆணைகளை உரிய விதத்தில் அரசு பிறப்பிக்க தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை எனத் தெரிவித்தது. நிர்வாகத்தின் இந்த நிலைப்பாடு நீதிமன்ற உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அறிந்துதான் நீதிமன்றம் 06.03.2019, 02.04.2019 தேதிகளில் தனது உத்தரவுகளில் அவற்றைக் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசும் இந்தப் பின்னணியில்தான் பணியிட மாற்றம் தொடர்பாக 10 (1), 10பி உத்தரவுகளை பிறப்பித்தது.
பணியிட மாற்றல் தொடர்பாக 10 (1), 10 பி பிரிவுகளின் கீழ் அரசு உத்தரவுகள் போட சம்மதித்த கோவை பிரிக்கால் நிர்வாகம், இப் போது வேலை நீக்கம்தான் பிரச்சனை என்றும் வேலை நீக்க வழக்கை முடித்துவிட்டு வேலை கேளுங்கள் என்றும் சொல்வது அறிவுபூர்வமான வாதம் அல்ல. அறிவியலுக்கு புறம்பான, முரட்டுத்தனம் மிகுந்த வேண்டாத விதண்டாவாதமாகும்.
பணியிட மாற்றல் தொடர்பான 10 (1) தொழிற்தகராறு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, அந்த நீதிமன்றத்தின் எழுத்து மூலமான அனுமதி இல்லாமல், இனி பணியிட மாற்றலை அமல்படுத்தவில்லை என்று வேலை நீக்கம் செய்ய முடியாது. அப்படிச் செய்வது தொழிற்தகராறு சட்டம் 1947ன் 33 (1) (பி) பிரிவுக்கு புறம்பானதாகும். ஆக அதிபுத்திசாலித்தன போர்வையில் நிர்வாகம் எழுப்பும் வாதம் அநியாயமானதாகும்.
10 பி உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாதா?
தொழிலாளர் துறையின் சில அதிகாரிகள், 10 பி உத்தரவு கேட்டீர்கள், நீதிமன்றமும் போடச் சொன்னது, நாங்களும் போட்டு விட்டோம், இதற்கு பிறகு நிர்வாகம் அமல்படுத்த வில்லை என்றால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, நீங்களும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் என்ன செய்வது என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இது பொறுப்பற்ற அதிகாரத்தை துறக்கிற அணுகுமுறையாகும்.
10 பி உத்தரவை மீறுபவர்களுக்கு சிறை வாசம் அபராதம் என தண்டனை வழங்க 29 எ பிரிவும் தொழிற்தகராறு சட்டம் 1947ல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே அரசின் கைகள் கட்டப்படவில்லை. 29 எ பிரிவை சுட்டிக் காட்டி தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வைக்க சட்டப்படி அரசால் முடியும். அப்படிச் செய்தாக வேண்டும்.