இந்திய விமானப்படை தனது சொந்த ஹெலிகாப்டரை
தவறுதலாக சுட்டு வீழ்த்திய பட்கம் விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்
மோடி அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக
இந்திய விமானப் படை இந்த உண்மையை மறைத்ததா?
புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் டில் பிப்ரவரி 26 அன்று இந்தியப் போர்ப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
அடுத்து இந்திய விமானப் படையும், பாகிஸ்தான் விமானப் படையும் மோதிக் கொண்டதில் இந்தியப் படைக்கு இரண்டு பின்னடைவுகள் ஏற்பட்டன. ஒன்று இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானில் பிடிபட்டார். இன்னொன்று ஜம்மு காஷ்மீரின் பட்கமில் இந்திய விமானப் படை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது 6 விமானப்படை வீரர்களும் ஒரு சிவிலியனும் கொல்லப்பட்டனர். பட்கமில் விமானம் வீழ்த்தப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து மக்களவைத் தேர்தலில் கடைசி வாக்குப் பதிவு முடிந்த பிறகு, இப்போது பாதுகாப்பு தொடர்பான சில பகுப்பாய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியதை, அதாவது இந்திய விமானப் படையின் ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது இந்திய விமானப் படை விமானமே என்பதை இந்திய விமானப் படை உறுதி செய்திருக்கிறது.
பட்கம் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை முடிவுகள், தேர்தல் முடியும் வரை ஏன் மூடிமறைக்கப்பட்டன? இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரி படைக்கும் விதமாக விரைவாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள், குறிப்பாக, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயங்களைப் பகுப்பாய்வு செய்துவரும் அஜய் சுக்லா ஏப்ரல் 27 2019 அன்று தெரிவித்திருந்தார். ஆனபோதும், பெரிதுபடுத்த வேண்டாம் என்று மேலிருந்து வந்த அரசாங்க உத்தரவு அவர்களை பின்னுக்கு இழுத்தது.
பாலக்கோட் குண்டு வீச்சு, அதற்கான பாகிஸ்தானின் பதில்வினை, பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆகியவை இந்தியாவின் மாபெரும் வெற்றி என்று தேர்தல் பிரச்சாரத்தில் அரிதாரம் பூசிக் கொண்டிருந்தபோது இந்திய ஹெலிகாப்டரை இந்திய ஏவுகணையே சுட்டு வீழ்த்தியதில் 7 பேர் மரணம் என்று ஒத்துக்கொள்வது எதிர்கால கனவை முடமாக்கிவிடும் என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அநியாயமாக உயிரிழந்த 6 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் பற்றிய ராணுவ விசாரணை காலம் கடத்தப்பட்டு அதன் முடிவுகள் பாஜக மற்றும் மோடிக்கு தேர்தலில் உதவ மறைக்கப்பட்டது என்பதுதானே பொருள்? இது ராணுவ வீரர்களை அரசியலுக்கு பயன்படுத்தும் மிகவும் மோசமான கவலையளிக்கும் போக்கு.
தேர்தல் காலம் முழுவதும், பிரதமர் மோடி யும் பாஜகவும் ஆயுதப் படைகளை அரசியலுக்கு பயன்படுத்தத் தடை செய்யும் மாதிரி நடத்தை விதிகளை மீறி பாலக்கோட் தாக்குதலை வாக்குக்களைக் கறப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். பிரதமர் மோடி, தன்னை வியந்து பாராட்டும் தொலைகாட்சி செய்தியாளர்களிடம் ‘நான் தீவிரவாதிகளைக் கொல்வதற்காக பாலக்கோட் சென்றபோது’ என்று கூட குறிப்பிட்டுச் சொன்னார். பாலக்கோட் தாக்குதலின் வெற்றிக் கொண்டாட்டங்களை, அபிநந்தன் வர்த்தமான் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்ற கவலை திசை திருப்பிவிட்டதாக கூட தான் எரிச்சலுற்றுதை வெளிப்படுத்தினார். ‘இந்திய விமானப் படையின் வீரத்தை விட அபிநந்தன் பாதுகாப்பாக வரவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் கூடுதலாக கவலைப்படுகிறார்கள்’ என்றார். இந்திய விமானப் படை தாக்குதலில் 6 இந்திய படை வீரர்களுடன் ஒரு காஷ்மீர் சிவிலியனும் கொலை செய்யப்பட்ட பட்கம் சம்பவத்திற்கு மோடி பொறுப்பேற்பாரா?
புல்வாமா தாக்குதல் நடைபெற்றதிலி ருந்தே, அரசியலால் உந்தப்பட்ட தேசவெறியாளர்கள் (பாஜகவும் அதன் நட்பு ஊடகங்களும்) பாகிஸ்தானுக்கு எதிராக, காஷ்மீர மக்கள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிராக இந்தியர்களின் உணர்ச்சிகளை விசிறி விட முயற்சி செய்தார்கள். அமைதிக்காக, வெறுப்புக்கு எதிராக பேசுகிறவர்களை, ‘நீங்கள் நம் படை வீரர்களின் உயிர் பற்றிக் கவலைப்படவில்லையா’ எனக் கூச்சலிட்டு வாயை அடைத்தார்கள்.
மோடியை விமர்சனம் செய்யும் எல்லோரையும் தேச விரோதிகள் என்றழைக்கும், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து இடம் பெறும், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஜி.டி.பக்ஷி, பாலக்கோட் பற்றிய ஒரு குழு விவாதத்தில் ‘ராணுவ வீரர்கள் சாகிறார்கள், யார் அதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள்? நாங்கள்தான் கவலைப்படுகிறோம், சரியா?’ என்று ஓங்காரமிட்டார். பட்கமில் கொல்லப்பட்ட விமானப் படை வீரர்கள் ஆறு பேர் பற்றி அவருக்கு கவலையில்லையா?
தொலைக்காட்சி நெறியாளர்கள், ஓய்வு பெற்ற ஜெனரல்கள், அக்ஷய் குமார் போன்ற கனடா நாட்டு நடிகர்கள், லாபத்துக்காகவோ அல்லது வாக்குகளுக்காகவோ தம்மை தேசப் பற்றாளர்களாக காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள் ஆகியோர் விவாதங்களில், உயிரிழந்த அந்த 7 பேர் பற்றி ஏன் எவ்வித கோபாவேசத்தையும் வெளிப்படுத்தவில்லை? இராணுவ வீரர்களின் உயிரிழப்பு, தேச வெறியையும் வெறுப்பையும் விசிறிவிட பயன்படும் என்றால் மட்டுமே அவர்கள் தங்கள் கோபாவேசத்தை வெளிப்படுத்துவார்களா?
இப்படி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் இவர்கள், தேவையில்லாமல் இந்திய விமானப் படை ஏவுகணை மூலம் கொலை செய்யப்பட்ட படை வீரர்கள், சிவிலியன்கள் பற்றி கவலைப்படமாட்டார்கள். பாலகோட் தற்பெருமையில் மோடி வாக்குகளைப் பெறுவதற்காக, தேர்தல் நேரத்தில் இந்தச் சம்பவம் இழிவான முறையில் வெட்கக்கேடான விதத்தில் மறைக்கப்பட்டது பற்றி இவர்களுக்கு எவ்வித கோபாவேசமும் வரவில்லை.
பட்கமில் கொல்லப்பட்ட இந்திய விமானப் படை விமானி நினாந் மந்தவ்கனேயின் மனைவி விஜிதா மந்தவ்கனேயின் அறிவுபூர்வ வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பட்கம் விபத்து நடந்தவுடனேயே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் போர் வீரர்களின் மரணங்களை போர் வெறிக் கூச்சலுக்குப் பயன்படுத்துவதை அவர் வெளிப்படையாகவே எதிர்த்தார். ‘நாங்கள் போரை விரும்பவில்லை. போர் மக்கள் மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணரவில்லை. இரண்டு பக்கமும் இன்னொரு நினாந் உயிரிழக்கக் கூடாது. ஒரு சிவிலியனாக உங்களுக்கு உணர்வு இருக்குமேயானால் நீங்கள் ஒன்று இராணுவப்படையில் சேருங்கள். அல்லது பொறுப்புள்ள குடிமகனாக மதவாத வெறுப்புக்கு எதிராக, பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராடுங்கள்’ என்று கூறினார்.
பட்கம் விபத்திற்கும், தேர்தல் காலகட்டத்தில் இந்த உண்மையை வெளிவராமல் அரசியல்ரீதியாக மறைத்ததற்கும் மோடி அரசாங்கத்திடம் இந்தியக் குடிமக்களாகிய நாம் பதில் கோர வேண்டும்.
தமிழில்: தேசிகன்