COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 16, 2019

மோடி அரசின் கார்ப்பரேட் கல்விக் கொள்கை, 2019

ஜி.ரமேஷ்

மோடி 2.0 என பத்திரிகைகளும் ஊடகங்களும் ரொம்பவே பரபரப்பூட்டுகின்றன
. எதிர்பார்த்ததுபோலவே பாசிச பாஜக தன்னுடைய வெறியாட்டங்களை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆரம்பித்துவிட்டது. மோடியும் அவரது அமைச்சர்களும் மே 30மாலை பதவி ஏற்றார்கள். மறுநாளே வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டது. அதன் மீது நாட்டு மக்கள் ஜ÷ன் 30க்குள் கருத்துகளை கூற வேண்டுமாம். 484 பக்கம் ஆங்கிலத்தில். இந்தியிலும் வெளியிட்டுள்ளார்கள்.
விவேகானந்தர் கல்வி பற்றி சொல்வதில் ஆரம்பிக்கும் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தியாவின் கல்வி முறை,  ஸரக்கா மற்றும் சுஸ்ருதா, ஆரியப்பட்டா, பாஸ்கராச்சார்யா, சாணக்கியா, பதஞ்சலி, பனினி போன்ற சான்றோர்களால் உருவாக்கப்பட் டது என்றும் அவர்கள் கணிதம், சோதிடம், உலோகக் கலை, மருத்துவ விஞ்ஞானம், அறுவை சிகிச்சை,  கட்டிடக் கலை, பொறியியல், கப்பல் கட்டுதல், கப்பல் போக்குவரத்து, யோகா, நுண் கலை, சதுரங்கம் இன்னும் இது போன்றவற்றில் உலகளாவிய அறிவுக்கு பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்றும் புத்த மதம் சீனாவிற்குச் சென்று ஆதிக்கம் செலுத்தியது என்றும் பேசிக் கொண்டு போகிறது.
தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம் இதிலேயே புரிய ஆரம்பித்துவிடுகிறது. இந்தியாவின் கல்வி முறை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். 2030-32ற்குள் அய்க்கிய அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பம், அதற்கேற்றாற்போல் அந்த காலக்கட்டத்திற்குள் இந்த கல்விக் கொள்கையும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று கல்வி கொள்கை சொல்கிறது. கல்வி முறையை முற்றிலும் மாற்றி அமைப்பதற்கு உணர்வுபூர்வமான, உறுதியான ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் துறைகள் வேண்டும், இந்தக் கொள்கையின் நோக்கத்திற்கேற்ப அவர்கள் தயார்படுத்தப்பட வேண்டும் என்கிறது. இந்த தேசிய கல்விக் கொள்கை 2019ன் நோக்கமே இந்தியாவை மய்யமாகக் கொண்ட கல்வி முறை (ஐய்க்ண்ஹ இங்ய்ற்ழ்ங்க் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) என்பதுதான் என்று நேரடியாகவே சொல்கிறது வரைவு.     
ராஷ்ட்டிரிய சிக்ஷா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையம்
புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான அம்சமே இதுதான். ஆனால், இதை நான்காவது பாகத்தில் வைத்துள்ளார்கள். நிதி ஆயோக் போல நாடு முழுவதும் கல்வியை மய்ய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் நாடு முழுமைக்கும் ஒரே விதமான கல்விமுறை பாடத் திட்டத்தை அமல்படுத்திடவும் மொத்த கல்விமுறையையும் மாற்றியமைக்க இந்த ஆயோக் கொண்டு வரப்படுகிறது. அனைத்து துறைகளிலும் உள்ள மய்ய அமைப்புகள், இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில், பல்கலைக் கழகங்கள் மானியக்குழு உள்ளிட்ட அனைத்தும், இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும் அல்லது முழுமையாகக் கலைக்கப்பட்டுவிடும்.
ராஷ்ட்டிரிய சிக்ஷா ஆயோக்கின் தலைவர் பிரதமர். துணைத்தலைவர் மத்திய கல்வி அமைச்சர். தற்போது உள்ள மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். கல்வி சம்பந்தப்பட்ட எந்தவொரு முடிவும் இந்த ஆயோக்தான் எடுக்கும். இதில் 20 முதல் 30 உறுப்பினர்களாக இருப்பார்களாம். நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர், பெண்கள் குழந்தைகள் நல அமைச்சர், மாநில கல்வி அமைச்சர்கள் (சுழற்சி முறையில்)  மற்றும் அந்தத் துறைகளின் செயலாளர்கள், 50 சதவீதத்திற்கு மேல் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் இருப்பார்களாம்.  ரோகித் வெமுலாவின் மரணத்திற்குக் காரணமான ஸ்மிருதி இராணி போன்றவர்கள் உறுப்பினர்கள் என்றால் என்னவாகும் என்பதையும் இவர்கள் யாரை இதில் உறுப்பினர்களாகப் போடுவார்கள் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குஜராத் மனிதப் படுகொலைக்குப்பின் மோடிக்கு மறுக்கப்பட்ட அமெரிக்கா விசாதிரும்பக் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த வெளியுறவுச் செயலர் சுப்பிரமணியன் ஜெய்சங்கருக்கு இப்போது வெளியுறவு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதை நாம் மறந்து விடக் கூடாது.
ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் பணியமர்த்தும் குழு ஒன்று அமைக்கப்படும். அதில் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவைச் சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்களாம். பள்ளிக் கல்வி, உயர் கல்வி அனைத்தையும் அரசு விரும்பும் திசையில் கொண்டு செல்ல 10 - 15 பேர் கொண்ட செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டு அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளுமாம். 20 - 30 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, இந்தியா மற்றும் உலகத்தில் சிறந்த கல்வியாளர்களை, ஆராய்ச்சியாளர்களை இதில் கொண்டு வருவார்களாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதே நாட்டின் முக்கியமான துறைகளில் ஆர்எஸ்எஸ் அதிகாரிகளை உள்ளே உட்கார வைத்தவர்கள் இந்த சங்கிகள். இப்போது அவர்கள் அசுர பலத்தில் இருக்கிறார்கள். ஆட்சிகள் ஒருவேளை மாறினால் தங்கள் ஆட்கள் மாறாமல் பல ஆண்டுகளுக்கு அதிகாரம் செய்ய தேவையான அனைத்தையும் மோடி அமித் ஷா கோஷ்டியினர் செய்து விடுவதற்கான திட்டம்தான் இந்த ஆயோக் குழுகள்.
பல்கலைக் கழக மானியக் குழு போன்றவை கலைக்கப்பட்டு, புதிதாக தேசிய உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி மானியக்குழு, பொது கல்விக் குழு, தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை உருவாக்கப்பட உள்ளன. இவையும் ஏற்கனவே இருக்கிற தரம் உயர்த்துதல் மற்றும் மதிப்பீட்டுக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (சஇஉதப), தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாக அமைப்பு ஆகியவையும் இந்த ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்கின் கீழ் கொண்டு வரப்பட்டுவிடும். கல்வி தொடர்பான அனைத்து விசயங்களும் நிதி மற்றும் பயன்பாடுகள் எல்லாம் இந்த ஆயோக்கினால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் அரசு அதை செயல்படுத்த முடியும். மாநில மட்டத்தில் ராஜ்ஜிய சிக்ஷா ஆயோக் அல்லது மாநில கல்வி ஆணையம் உருவாக்கப்படுமாம். அதற்கு முதல் அமைச்சர் தலைவராகவும் மாநில கல்வி அமைச்சர் துணைத் தலைவராகவும் இருப்பார்களாம். மத்திய ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்கில் இருந்து அனுப்பப்படும் பிரதிநிதிகளும் இதன் உறுப்பினர்களாக இருப்பார்களாம். அதாவது, மாநில அமைப்பும் கூட மத்திய கட்டுப்பாட்டில்தான் இயங்கும்.
பள்ளிக் கல்வி
பிறந்த குழந்தைகள் முதல் 8 வயது குழந்தைகள் வரை பற்றிப் பேசுகிறது வரைவு. குழந்தைகள் பிறந்த உடனேயே கற்கத் தொடங்கிவிடுகின்றன. குழந்தையின் ஒட்டு மொத்த மூளை வளர்ச்சியில் 85% ஆறு வயதிற்கு முன்பே ஏற்பட்டுவிடுகிறது. ஆகையால், மழலையர் கல்விக்கும் அதிக வருமானம், சொந்த வீடுகள் மற்றும் குறைவான விகிதத்தில் வேலையின்மை, குற்றங்கள், கைதுகள் ஆகியவற்றிற்கும் தொடர்பு உள் ளது என்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2019. அதற்காக ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி (உஹழ்ப்ஹ் இட்ண்ப்க்ட்ர்ர்க் இஹழ்ங் ஹய்க் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) என்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 1 ரூபாய் முதலீடு செய்தால் 10 ரூபாய் திரும்பக் கிடைக்குமாம். அதாவது குழந்தைகளுக்கு மழலைப் பருவத்திலேயே கல்வி புகட்டுவதன் மூலம் நல்ல மனித நேயமுள்ள நற்சிந்தனை உள்ள குழந்தைகளாக வளர்வார்களாம். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களை, பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும், குழந்தைகளுக்கு 3 வயதிலேயே 3க்கு மேற்பட்ட மொழிப் பாடங்களையும் கணிதம் போன்ற பாடங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது வரைவுக் கொள்கை. இரண்டு வேலைத் திட்டங்களாம். ஒன்று 0 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெற் றோர்களும் அங்கன்வாடி ஆசிரியர்களும் பணியாளர்களும் அறிவூட்ட வேண்டும். அதற்காக கிலுகிலுப்பை கள், தாள் கப்பல்கள், தொப்பிகள் செய்து கொடுத்தும் அறிவூட்ட வேண்டுமாம். கைவினைப் பயிற்சியாகவும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்.
இரண்டாவது வேலைத் திட்டம், 3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கானதாம். முதலில் குழந்தைகளை 3 வயதிலேயே மழலையர் பள்ளிக்கு கட்டாயம் அனுப்பி விட வேண்டும். அங்கு அவர்களுக்கு வரைய, வண்ணம் தீட்ட, பாட, எண்கள் சொல்ல, தாய் மொழி அல்லது உள்ளூர் மொழியும் மற்ற மொழிகளும், சமூக உணர்வு திறமை தொடர்பான ஆர்வம், பொறுமை, கூட்டு வேலை, கூட்டுறவு, அனுதாபம் போன்றவை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டுமாம். இந்த அடிப்படை மூலம் குழந்தைகளை அடுத்த கட்டமான பள்ளிக் கல்விக்குத் தயார்படுத்த வேண்டுமாம். தேசிய கல்விக் கொள்கையில் சொல்லியிருக்கிற இந்த விசயங்களை தற்போது காசு இருக்கும் குடும்பத்தின் குழந்தைகள் எல்லாம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கன்வாடிகளில் இவற்றை ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அங்கன்வாடிகளில் வசதிகள், அந்தப் பணியாளர்களுக்குத் தேவையான வசதிகள், ஊதியங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு மய்யங்கள் வாயிலாக அங்கன்வாடிகள் இந்தியா முழுவதும் நன்றாக செயல்பட்டு வருகின்றன என்று சொல்லும் அதேவேளை அங்கு கல்வி பயிற்று விப்பதில் குறைபாடுள்ளது, அங்கு பயிற்சி பெற்ற, அக்கறையுள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்கிறது வரைவு கல்விக் கொள்கை. இருக்கும் அங்கன்வாடிகளை மழலையர் பள்ளிகளாக மாற்றுவது, இருக்கிற பள்ளிகளில் எல்லாம் மழலையர் பள்ளிகளை உருவாக்குவது, வாய்ப்புள்ள இடங்களில் தனியாக மழலையர் பள்ளிகளை உருவாக்குவது எனச் சொல்கிறது வரைவு. அங்கன்வாடிகளுக்குத் தேவையான வசதிகள் அந்தப் பணியாளர்களுக்கான சம்பளம் அதற்கான நிதி பற்றி ஒன்றும் பேசவில்லை. மாறாக, உள்ளூர்களில் உள்ள படித்தவர்களை, குறிப்பாகப் பெண்களை, சமூக ஆர்வலர்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது. சம்பளம் இல்லா சேவைக்கு ஆட்கள் வேண்டும் என்கிறது.
பொதுவாக குழந்தைகளுக்கான பள்ளிக் கல்விக்கான வயது 5 அல்லது 6 என்கிறார்கள் கல்வியாளர்கள். ஆனால், நடைமுறையில், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளை 3 வயதிலேயே மழலையர் பள்ளிக்கு அனுப்பும் நிலை உள்ளது. அந்த மழலையர் பள்ளிகளும் விளையாட்டுப் பள்ளிகளாக (டப்ஹஹ் நஸ்ரீட்ர்ர்ப்) இருக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையோ மழலையர் பள்ளிகளை கட்டாயமாக்குகிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், மழலையர் பள்ளிகள் எண்ணிக்கை, எத்தனை பள்ளிகள் உருவாக்கப்படும் என்பது பற்றி விவரங்களே இல்லை. பொத்தாம் பொதுவாக குழந் தைகளுக்கு 3 வயதில் இருந்தே கல்வி புகட்ட  வேண்டும் ஏதாவது கலையையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. நிச்சயமாக ஒன்று மட்டும் சொல்ல முடியும். இந்து புராண இதிகாசங்களை கதைகளாகச் சொல்லிக்கொடுப்பார்கள். ஏற்கனவே யோகாவை ஒரு உடற்பயிற்சி என்று இல்லாமல் அதை இந்துக்களுக்கா னது என்று மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் பலமுறை எழுதிக் கொடுத்த சாவர்கர் போன்றவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களாகச் சித்தரிப்பார்கள். இப்போது நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் விடுதலைப் போராட்ட வீரர் வீர் சாவர்கர் என்று படம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். குழந்தைகள் மனதில் சமூக சமத்துவ சிந்தனை வளர்ப்பு என்பதற்கு மாறாக அதிக பணம் சம்பாதிப்பது, சொந்த வீடு கட்டுவது பற்றிய சிந்தனைகளைப் பற்றி பேசுகிறது வரைவு கொள்கை அறிக்கை. மோடி அரசின் இந்தக் கல்விக் கொள்கை சனாதன, மனுதர்ம கல்வியை ஆரம்பத்திலேயே குழந்தைகள் மனங்களில் விதைத்து விடும் நோக்குடன் உருவாக்கப்படுகிறது. குரு குலக் கல்வி இருந்தபோது மாணவர்களை அருகில் இருந்து உற்றுக் கவனித்துக் கற்றுக் கொடுத்தார்கள் ஆசிரியர் கள். மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்குச் சொல்லித் கொடுத்தார்கள் என்று குலக் கல்வி முறையைப் பாராட்டுகிறது வரைவு கல்விக் கொள்கை. எல்லா குழந்தைகளும் ஏதாவது ஒரு கலையை ஆழமாகக் கற்க வேண்டுமாம். அது அவர்கள் பிற்காலத் தில் பொறியார்களாகவோ விஞ்ஞானிகளாகவோ போனாலும் இந்தப் பயிற்சி அவர்களுக்கு புதிய முயற்சிக்கு உதவுமாம். மோடி ஆட்சிக்கு வந்த பின்பு கோவில்களில் எல்லாம் குழந்தைகளை பள்ளி மாணவர்களைக் கொண்டு மேளங்கள் அடிக்கச் செய்வது, பஜனைப் பாடல்களைப் பாட வைப்பது, அதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குப் பரிசளிப்பது என்று தற்போது அதிகம் பெருகி வருகிறது. இது பற்றி பேசுகிறபோது, கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஆராதனைப் பாடல்கள் பாடச் சொல்வதில்லையா என்று பதில்கள் முன் வைக்கப்படுகின்றன. தற்போது திட்ட மிட்டு கிராமப்புற, ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் படிக்கும் வாய்ப்பை முற்றிலும் ஒழித்துக் கட்டும் வகையில்தான் தகுதித் தேர்வுகள் நடைமுறை அமலுக்கு வந்துள்ளன. அதை எல்லா நிலைகளிலும் அமல்படுத்தி கல்வி ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாற்றுவதற்கே இந்த தேசிய கல்வி கொள்கை. பழங்குடிக் குழந்தைகளுக்கும் மழலையர் கல்வி, பள்ளிக் கல்வி பற்றி பேசும் இந்த வரைவு எந்த இடத்திலும் இட ஒதுக்கீடு பற்றி பேசவில்லை.
பள்ளிக் கல்வியில் தற்போது உள்ள 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நீக்கப்படும். 9ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு இரண்டு பருவ காலத் தேர்வுகள் நடத்தப்படும். எப்பொழுது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் என்று சலுகை வேறு. உயர் கல்வியில் பொறியியல் மருத்துவம் சட்டம் போன்ற தொழிற் கல்வியில் சேர்வதற்கு மட்டுமின்றி கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கும் இனி தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். நீட் தேர்வுகளே நிலையானது. நீ என்ன வகுப்பு படித்தாலும் எத்தனை வகுப்பு வரை படித்தாலும் நீட் தேர்வுகள் எழுதினால் மட்டுமே கலைக் கல்லூரிகளில் கூட சேர முடியும். தமிழ்நாட்டில் +2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தேவையான மதிப்பெண்கள் பெற முடியாததால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். மருத்துவப் படிப்பில் முதலில் நீட் தேர்வு மூலம் சேரும் மாணவர்கள் பின்னர் நான்கு ஆண்டுகள் முடித்தபின் அய்ந்தாவது ஆண்டில் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்வர். இனி பயிற்சி மருத்துவர் ஆவதற்கு முன்பு ஒரு தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் பயிற்சி மருத்துவர்கள் ஆகக்கூட முடியும். தகுதித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் காசிருந்தால் சேர்ந்து கொள்ளலாம்.
கல்விக்கு அரசின் நிதி ஒதுக்கீடு பற்றி பேசும் போது அதிமான கொடையாளர்களை சார்ந்துதான் கல்வி இருக்க வேண்டும் என்கிறது வரைவுக் கொள்கை. இந்தி மொழித் திணிப்பு, கார்ப்பரேட்களிடம் கல்வி ஆகியவை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

Search