தப்பிப் பிழைத்தது தமிழ்நாடு அரசு
எஸ்.குமாரசாமி
மூன்றாண்டுகளுக்கு முன், மே 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதா தப்பிப் பிழைத்து வெற்றி பெற்றார்.
2011ல் பெரிய கூட்டணி அமைத்து 51.3% வாக்குகளுடன் அஇஅதிமுகவுக்கு 150 இடங்களையும் கூட்டணிக்கு 203 இடங்களையும் பெற்று வெற்றி பெற்ற ஜெயலலிதா, 2014 மக்களவைத் தேர்தலில் 49.3% வாக்குகளுடன் 217 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த ஜெயலலிதா, 2016ல் 40.8% வாக்குகளுடன் 134 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார். திமுக கூட்டணியை விட 1.1%, அதாவது 4,41,746 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று தப்பிப் பிழைத்தார். அதிருப்தியை, சரிவை ஜெயலலிதா இருந்தபோதே சந்தித்த அஇஅதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு 2019 இடைத் தேர்தல்கள் வரை தப்பிப் பிழைத்திருப்பது ஓர் அதிசயமே.
ஜெயலலிதா நோயுற்றிருந்த போதே, முதலமைச்சரான பன்னீர்செல்வம், அவர் இறந்த பிறகு, பின்னர் சசிகலாவுக்கு வழிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின் தர்ம யுத்தம் நடத்தினார். சசிகலா தண்டிக்கப்பட்டு சிறை செல்ல, பழனிச்சாமி முதலமைச்சரானார். கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறின. பின்னர் மோடி ஆலோசனைப்படி ஈபிஎஸ் - ஓபிஎஸ் இரட்டையர், ஆட்சி - கட்சி பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். தினகரன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற, கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் கலகம் செய்தனர். அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
மே 2019ல், 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் வந்தது. மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து இந்தத் தேர்தலும் வந்தது. அஇஅதிமுகவுக்கு 39 மக்களவைத் தொகுதிகளை விட 22 சட்டமன்றத் தொகுதிகளே முக்கியமானவையாக இருந்தன.
2016ல் மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்று திமுக, அஇஅதிமுகவுக்கு மாற்றாக விஜய்காந்தை முதலமைச்சராக்க அணி சேர்ந்த கட்சிகளில், 2019ன்போது, விசிக, மதிமுக, இகக, இககமா திமுக அணியில் சேர்ந்தன. மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிகவும் தமாகவும் அஇஅதிமுக அணியில் சேர்ந்தன. அப்போது வெளியே இருந்த பாஜகவும் பாமகவும் இப்போது அஇஅதிமுக அணியில் சேர்ந்தன. திமுக, அஇஅதிமுக இரண்டு பெரிய கட்சிகளும், 22 சட்டமன்றத் தொகுதிகளிலும், தாம் மட்டுமே போட்டியிடுவது என்ற முடிவை, கூட்டாளிகளை ஏற்க வைத்தனர்.
2014ல் 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற அஇஅதிமுக, இந்த முறை மக்களவைத் தேர்தலில் பாமக 6, பாஜக 5, தேமுதிக 4, தமாக 1, புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1 என 18 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கி தேர்தலை சந்தித்தது. திமுகவும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்க நேர்ந்தது. ஆனால், அதற்கு அந்தத் தந்திரம், பிரும்மாண்ட வெற்றியைத் தேடித் தர உதவியது.
22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தமிழரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், தினகரன் ஆதரவு பிரபு, ரத்தினசபாபதி, கலைச் செல்வன் ஆகியோரின் தொந்தரவு அஇஅதிமுக ஆட்சிக்கு தலைவலியாகவே இருந்தது. பிரபு, ரத்தினசபாபதி, கலைச் செல்வன் ஆகியோர் மீதான கட்சித் தாவல் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை தந்தது. ஆட்சிக்கு எப்போதும் ஆபத்து என்ற இந்தப் பின்னணியில், திமுகவும் அஇஅதிமுகவும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பெரும் கவனம் செலுத்தினர். 22ல் 20 வென்றால், திமுக நேரடியாக கூட்டணி ஆட்சி அமைக்க முடியும், 22ல் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலே, அஇஅதிமுக வசதியாய் ஆட்சியைத் தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
தலைநகர் மற்றும் வட மாவட்டங்களில் 6, டெல்டா - மத்திய மாவட்டங்களில் 2, தெற்கு மாவட்டங்களில் 10, மேற்கு மாவட்டங்களில் 4 என 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடந்தன. 2016ல் தெற்கில் 6 இடங்கள் மேற்கில் 34 இடங்கள் கூடுதலாகப் பெற்று வடக்கிலும் டெல்டாவிலும் அடைந்த தோல்வியை அஇஅதிமுக சரிக்கட்டியது. 2019லும் அஇஅதிமுக வட மாவட்டங்களில் 1 தொகுதி தென் மாவட்டங்களில் 5 தொகுதிகள், மேற்கு மாவட்டங்களில் 3 தொகுதிகள் வென்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் இந்த 22 தொகுதிக ளில் அஇஅதிமுக, ஆண்டிப்பட்டி, பரமக்குடி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பாப்பிரெட்டிப்பட்டி, பரமக்குடி போக, மக்களவைத் தேர்தலில் பின்தங்கிய விளாத்திகுளம், மானாமதுரை, அரூர், சோலிங்கர், சாத்தூர், சூலூர், நிலக்கோட்டை தொகுதிகளில், அஇஅதிமுக சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.
கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுக்கு உதவியுள்ளன. மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று விடக் கூடாது, பாஜக - அஇஅதிமுக அணி தோற்கடிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடெங்கும் சீராக இருந்த எதிர்ப்பு, அதே தீவிரத்தோடு முனைப்போடு சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அஇஅதிமுகவை தோற்கடிப்பதில் செலுத்தப்படவில்லை.
காணாமல் போயிருக்கும் எனக் கருதப்பட்ட அஇஅதிமுக, மக்களவைத் தேர்தலிலும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே வாக்காளர், இரண்டு வெவ்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். சரி பாதிக்கு இரண்டு தொகுதிகளுக்குக் கூடுதலாக திமுகவும் இரண்டு தொகுதிகளுக்குக் குறைவாக அஇஅதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியிலும் மோடி வெற்றி பெற்று விட்டதால், அஇஅதிமுக 2021 வரை ஆட்சி தொடரும் என்ற மகிழ்ச்சியில் உள்ளது. அஇஅதிமுக 123, திமுக 101, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, அமமுக 1 என சட்டமன்ற பலம் இருப்பதால், அஇஅதிமுக நிம்மதியாய் உள்ளது. தமிழ்நாட்டில், கேரளாவில், ஆந்திராவில் பாஜக மக்களவைத் தேர்தலில் ஓர் இடம் கூட பெறவில்லை.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழர் கட்சியும் நல்ல எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றுள்ளன. தினகரனின் ஊதி பெரிதாக்கப்பட்ட தோற்றம் 2019 தேர்தல்களில் மதிப்பிழந்துவிட்டது.
திமுகவுக்கு மாற்று, அஇஅதிமுக என்பதே தேர்தல் அரசியலில் வந்துள்ள முடிவாகும். இன்னமும் ஒரு மாநிலக் கட்சியாக அஇஅதிமுக நீடிக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை.
2014ல் ஜெயலலிதா 37 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு பெற அந்த வெற்றி உதவவில்லை. அவரது இறப்புக்குப் பிறகு அஇஅதிமுக ஒப்புக்குக் கூட மத்திய அரசு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இப்போதைய திமுக கூட்டணியின் 37 தொகுதிகள் வெற்றி, ஆட்சியில் இடம் தேடித் தராது என்பது தெளிவாகிவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து பாஜக எதிர்ப்பு என்ற மக்கள் உணர்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களவை உறுப்பினர்கள், மக்களின் அந்த உணர்வுக்கு விசுவாசமாக விடாப்பிடியான, விட்டுக் கொடுக்காத நிலையில் நிற்காவிட்டால், இவர்களும் தமிழ்நாட்டு மக்களின் சீற்றத்துக்கு ஆளாவார்கள்.
காரணங்கள் என்னவாக இருந்தபோதும், நாடெங்கும் வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவை என்ற கூடுதல் பொறுப்போடும் அக்கறையோடும் இடதுசாரி கட்சிகள் செயல்பட வேண்டும். கூட்டணி தர்மம் என்று சொல்லிக் கொண்டு, சுதந்திரமான இடதுசாரி, மக்கள் சார்பு போராட்ட அரசியல் பின்னுக்குச் செல்ல விட்டுவிடக் கூடாது. 2001க்குப் பிறகு பிறந்த, அதற்குப் பிறகு 18 வயதான தலைமுறையை சென்று சேர்வதற்கான கற்பனைத் திறன், படைப்பாற்றல், மன விடுதலையுடன் கூடிய அர்ப்பணிப்பு, பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் என்ற பாதையில் மட்டுமே மக்கள் சார்பு அரசியல் பலப்பட முடியும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் மட் டுமே செய்த அஇஅதிமுக அரசுக்கு, தமிழ்நாட்டு மக்கள் மீது போர் தொடுத்த அஇஅதி முக அரசுக்கு, தமிழ்நாட்டு மக்கள், மக்களவைத் தேர்தலில் பலத்த அடி தந்துள்ளனர். மீண்டும் ஹைட்ரோகார்பன், மீண்டும் எட்டுவழிச் சாலை, மீண்டும் ஜனநாயக பறிப்பு, மீண்டும் மத்திய அரசிடம் தமிழ்நாட்டு நலன்களை அடகு வைப்பது, மீண்டும் எழுவர் விடுதலையை புறக்கணிப்பது என்ற பாதையில் அஇஅதிமுக தொடர்ந்தால், 2019 மக்களவைத் தேர்தலில் தந்த பாடத்தையே, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் அஇஅதிமுக அரசுக்குத் தருவார்கள்.