அசாதாரணமான தேர்தல்களில் அசாதாரணமான முடிவுகள்
எஸ்.குமாரசாமி
ஏப்ரல் 11 துவங்கி சுமார் 6 வாரங்கள் நடந்த, சுமார் 60 கோடி மக்கள் (67%) வாக்களித்த, 17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23 வெளிவந்தன.
2014ல் தனியாக 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக 2019ல் கூடுதலாக 21 தொகுதிகளில் வெற்றி பெற்று 303 தொகுதிகளைப் பெற்றுள்ளது. கூட்டாளிகளுடன் சேர்ந்து 350 தொகுதிகளுக்கும் மேல் பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற தொகுதிகளில், 200 தொகுதிகளில் 50%க்கும் மேலான வாக்குகள் பெற்றுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிஷா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலுங்கானா தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு பெரிய போட்டி ஏதும் இல்லை. குஜராத், ராஜஸ்தான், உத்தர்காண்ட், இமாச்சல், டெல்லி, திரிபுரா, அருணாசலபிரதேசத்தில் உள்ள 71 தொகுதிகளில் ஒரு தொகுதியைக் கூட எதிர்க்கட்சிகள் வெல்ல முடியவில்லை. இந்தி பேசும் வடக்கு, மேற்கு, மத்திய மாநிலங்கள் தாண்டி, கிழக்கிலும் வடகிழக்கிலும் பாஜக ஊடுருவியுள்ளது. வடக்கு, மேற்கு, மத்திய மாநிலங்களின் சில அரசியல் பண்புகள் உடைய கர்நாடகாவில், தெலுங்கானாவில் ஒரு பகுதியில் வென்றுள்ளது.
கூடுதல் வாக்குகள், கூடுதல் தொகுதிகள், கூடுதல் பகுதிகள் என மோடியும் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது அசாதாரணமானதுதான். ஏனெனில் டிசம்பர் 2018ல் நடந்த ராஜஸ்தான், மத்தியபிரதேச, சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தல்களில், ஆஜ்மீர், ஆல்வார், புல்பூர், கைரானா, கோரக்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கான 2017, 2018 இடைத் தேர்தல்களில் பாஜக அடுத்தடுத்து தோற்றுப் போனது. 2019 ஜனவரி வரை பாஜகவின் தோல்வி எழுதி உத்தரவாதம் தரக்கூடிய ஒன்றாக இருந்த நிலையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில், பாஜக, நிலைமையை தலைகீழாக மாற்றியது அசாதாரணமானது.
ஒரு விதத்தில், முற்போக்கு ஜனநாயக தாராளவாத சக்திகளின் விருப்பத்திற்கு மாறான மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவையும்தான். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த மோடி எதிர்ப்பு அலையின் தீவிரமும் வீச்சும், வடக்கு, மேற்கு, மத்திய, கிழக்கு, வடகிழக்கு இந்தியாவில் மோடிக்கு கிடைத்த ஆதரவை அறிவியல்பூர்வமாகக் கணிக்க விடாமலும் தடுத்தன.
மோடியும் பாஜகவும் ஏன் தோற்றிருக்க வேண்டும்?
அதற்கான நியாயமான அடிப்படைகள், காரணங்கள் இருந்தனதானே?
இவ்வளவு குற்றங்கள் புரிந்த பாஜகவும் மோடியும் தேர்தலில் தண்டிக்கப்பட்டு தோற்கடிக்கப்படுவார்கள், இடைத் தேர்தல் முடிவுகள், 2018 டிசம்பர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆட்சியின் முடிவு துவங்கியதைக் காட்டும் என நினைத்ததில் தவறேதும் இல்லை.
மோடிக்கு கிடைத்த பரிசுப் பெட்டகமும்
ஆதரவாகக் கட்டமைக்கப்பட்ட பெருங்கதையாடலும்
ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் அரச பயங்கரவாதமும் நச்சு சுழலேணிகள். எல்லை தாண்டி வரும் பயங்கரவாதம், இந்துத்துவாவை, பிற்போக்கு வலதுசாரி போர் வெறியை பலப்படுத்தும். இவர்கள் பகைவர்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் உதவுபவர்கள்.
பிப்ரவரி 14, 2019 காதலர் தினத்தன்று, காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். முற்றுகையிடப்பட்டு நிச்சய தோல்வியை எதிர்நோக்கி இருந்த மோடி, தானே, தாக்குதல் நிலைக்கு சென்றார். இந்திய தொலைக்காட்சிகள் மோடி யின் பிரச்சாரப் பிரிவாயின. பாமர மக்கள் வரை சென்று சேர்ந்திருக்கும் ஸ்மார்ட் போன் மூலம், வாட்ஸ் அப், முகநூல், சுட்டுரை என மோடி பக்தர்கள், தேச பக்தி, பாகிஸ்தான் எதிர்ப்பு செய்திகளை போட்டுத் தாக்கினார்கள்.
நாடெங்கும் புல்வாமாவில் பலியானவர்களுக்கு அனுதாபத்தில் இயல்பாக எழுந்த உணர்வை, சங் பரிவார் தன் கருத்துகளுக்குச் சாதகமாக, ஊதி வளர்த்தது. பயங்கரவாதத்தைத் தடுக்க, பயங்கரவாதத்தை வேரறுக்க, பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்ட வலுவான நாடு வேண்டும், நாடு இருந்தால்தான் வீடு, அந்த நாட்டைக் காக்க ஒரு வலுவான தலைவர் வேண்டும், பிளவுண்ட எதிர்கட்சிகள், பிரதமர் கனவு கொண்ட பல எதிர்க்கட்சி தலைவர் களால் அது சாத்தியமல்ல என மோடி பக்தர் களும், ஊடகங்களும் சொல்ல ஆரம்பித்தன.
பாலகோட்டில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை துணிச்சலாக இந்திய விமானப்படை போட்டுத் தள்ளியது, அதற்கு கலங்காமல் தயங்காமல் உத்தர விட்டது மோடியே, மோடிக்குப் பயந்தே விமானி அபிநந்தனை விடுவித்தனர் என்ற ஃபேக்ட் ஃப்ரீ (Fact Free), விவரச் சான்றுகள் இல்லாத செய்திகள், கோடிக்கணக்கான இந்திய மக்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் மற்றும் மின் அணு ஊடகம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. நாடு இருந்தால்தான் வீடு, விவசாயம், வேலை, மோடி இருந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும், பாகிஸ்தானை ஒரு தட்டு தட்டி வைக்க, உலக நாடுகளை மதிக்க வைக்க இந்தியாவால் முடியும் என்ற பெரும் கதையாடல் சில மாதங்களில் மிகவும் திறமையாகக் கட்டமைக்கப்பட்டது.
பெரும் கதையாடல்கள் இருக்கும்போது, சிறு கதையாடல்கள் வராமலா போகும்? மோடி ஒவ்வொரு நாளும் 18லிருந்து 20 மணி நேரம் வேலை செய்பவர், மோடி எளிய சாதியைச் சேர்ந்தவர், ஏழைத் தாயின் மகன், குடும்பப் பந்தம் இல்லாதவர், அதனால் ஊழல் செய்யாமல் நாட்டுக்கு சேவை செய்வார், அரசியல் தலைவர்களில் அவரே உயரமானவர், உன்னதமானவர் என்ற கதையாடல்களும் கட்டமைக்கப்பட்டு பரப்பப்பட்டன.
தேர்தல் பத்திரங்கள் என சில நூறு கோடி, பிரச்சாரப் பயணம் என சிலபல ஆயிரம் கோடி, காணாமல் போன புதிதாக வந்த மின்னணு வாக்கு எந்திரங்கள், பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் என எல்லாமே மோடிக்கு உதவின.
இசுலாமியர், பாகிஸ்தானியருக்கு எதிராக ஒரு மிகப் பெரிய இந்து பெரும்பான்மையில் நாம் ஒருவர் என்ற அடையாளப் பெருமிதத்தை, இந்துவாய் பிறந்த சாமான்யருக்கு மோடி தந்தார். பொருளாதார இட ஒதுக்கீடு 10% என உயர்சாதியினரை வளைத்துப் போட்டார். இந்து சமூகத்திலேயே, இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மத்தியில் யாதவர், சமார் என்ற ‘மற்றமைகளை’ காட்சிப்படுத்தி, புதிய வேதியியலை உருவாக்கினார். ஊழல் பிராந்திய சக்திகளை கூட்டாளிகளாக்கி, தேசம் முழுக்கக் காலடித் தடம் பதித்துள்ளார். எதிர்க்கட்சிகளால் தற்காப்பு ஆட்டமே ஆட முடிந்தது. அதுவும் பிரிந்து பிரிந்தே ஆட முடிந்தது. காங்கிரஸ் பிரச்சாரம் கரைந்து காணாமல் போனது. எல்லாம் தெரிந்த, எதையும் செய்யக்கூடிய, எங்கும் நிறைந்த மோடி வெற்றி பெற்றார்.
வெற்றி தோற்றுவித்துள்ள ஆபத்துகளும் முடிவுகள் தந்துள்ள வாய்ப்புகளும்
விடாப்படியான இந்துத்துவா எதிர்ப்பாளரான லாலுவின் கட்சிக்கு பூஜ்ஜியம் இடமே. புதிதாக வந்த ஆம் ஆத்மிக்கும் பூஜ்ஜியமே.
முதன்மை மாநிலங்கள் என கருதப்படாத தமிழ்நாட்டில் 9, கேரளத்தில் 15, தெலுங்கானா வில் 3, புதுச்சேரியில் 1 என 52ல் 28, பஞ்சாபில் 9, அசாமில் 3, மற்ற முதன்மை மாநிலங்கள் எனக் கருதப்படும் வடக்கு மற்றும் மேற்கில் ஒன்று அல்லது 2 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் அரசியலின் விளிம்புக்கு தள்ளப்பட்டுவிட்டது.
மாயாவதி அகிலேஷ் 10+5 தாண்ட முடியவில்லை. பிஜு பட்நாயக்க்கின் 11 தொகுதிகளும் ஜெகனின் 22 தொகுதிகளும் மோடிக்கு தொந்தரவு தராதவை. கேள்வி கேட்கக் கூடிய இடத்தில் மம்தாவின் 22 மக்களவை உறுப்பினர்களும் திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்களும்தான் உள்ளனர். இந்த நிலை ஜனநாயகத்திற்கு பேராபத்து.
இதில் இடதுசாரிகளுக்கு வெறும் 5 இடங்களே என்பது வரலாற்றுச் சோகமே. இகக(மா) திரிபுராவில் இரண்டாம் இடத்தை காங்கிரசிடம் இழந்து விட்டது. மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வைப்புத் தொகை பெற்றது. 2014ல் வங்கத்தில் 22.7% வாக்குகள் பெற்ற இகக(மா), 2019ல் 6.3% வாக்குகளே பெற்றுள்ளது. 2014ல் 16.3% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக 2019ல் 40.2% வாக்குகளுடன் 18 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது. இகக(மா) இழப்பு பாஜகவுக்குச் சென்றது. திரிணாமூலை வீழ்த்த பாஜகவுக்கு வாக்களிப்பது சரியல்ல என்ற தோழர்கள் மாணிக் சர்க்கார், புத்ததேவ் அறிவிப்புகளை, இடதுசாரிகளுக்கு வாக்களித்த மக்களில் கணிசமானவர்கள் ஏற்கவில்லை. கேரளத்திலும், தேசம் தழுவிய பாஜக எதிர்ப்பில் காங்கிரசுக்கே முன் உரிமை தரப்படுள்ளது. இகக (மாலெ) அர்ராவிலும், இகக பெகுசராயிலும் பல லட்சக்கணக்கான வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது மட்டுமே ஆறுதலான செய்தி ஆகும்.
உலகளாவிய அதிதீவிர வலதுசாரி அரசியல் மேலோங்கி உள்ள நாடுகளில் சகிப்புத்தன்மை இல்லாத வெறுப்பரசியல் மேலோங்கி உள்ள நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைந்துள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி உள்ளது, ஆபத்தானதே ஆகும்.
ஆனால் இந்த ஆபத்து இப்படியே நீடிக்க முடியாது. வேலை, விவசாயம், வருமானம், கல்வி, மருத்துவம், குடியிருப்பு வசதிகள், பொருளாதார நிலை முன்னேற்றம் என்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள், அச்சமற்ற சுதந்திரம் ஜனநாயகம் என்ற அடிப்படையான மானுட வேட்கைகள் முன்னுக்கு வந்தே தீரும். பல்லுயிரி உலகில், பன்மைத்துவத்தை வெகுகாலம் அடக்கி வைக்க முடியாது. முதலாளித்துவம் தனக்கு சவக்குழி தோண்டுபவர்களையும் உருவாக்கியது என்றார் மார்க்ஸ். முதலாளித்துவ நெருக்கடிக்கு வந்த வலதுசாரி தீர்வான பாஜக, முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத நிலையிலேயே தோற்றுப் போவதும் நிச்சயம்.
கருத்துத் தளத்தில் களத்தில் காத்திருக்கும் கடமைகள்
பிரெஞ்சு தத்துவ ஞானி ழான் பால் சார்த்தர், பாசிசம் பாசிசமாக இருப்பதனாலேயே அது தோற்கடிக்கப்பட வேண்டும் என களம் காண்கிறோமே ஒழிய, அதை உடனடியாக சண்டையில் தோற்கடிக்க முடியும் என்பதற்காக அல்ல என்கிறார். மோடி முன்வர, ஆட்சியைப் பிடிக்க, மீண்டும் வெல்ல சமூக பொருளாதார நிலைமைகள் இருந்தன. அவரது தோல்விக்கும் நிலைமைகள் உண்டு. அவற்றை எப்படி துரிதப்படுத்துவது என்பதுதான் கேள்வி ஆகும்.
மைக்கேல் ரோசன் என்ற இங்கிலாந்து கவிஞர் 18.05.2014 எழுதிய கவிதை சொல்லும் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கவை:
பாசிசம் தலையில் கொம்புகளுடன் வாயை விட்டு வெளியே வரும் பற்களுடன் நீண்ட கூரிய நகங்களுடன் கொடிய தோற்றம் எடுத்து வராது. அது நம் நண்பனாக வருகிறது. அது நம் கவுரவத்தை மீட்பதாக, நம்மைப் பெருமிதம் அடையச் செய்வதாக, நமக்கு வீடு தருவதாக, நமக்கு ஒரு வேலை தருவதாக, நாம் வாழும் பகுதியை தூய்மைப்படுத்தி தருவதாகச் சொல்கிறது. நாம் ஒரு காலத்தில் எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தோம் என நினைவுபடுத்துகிறது. தீய ஊழல் பிடித்தவர்களையும் உங்களுக்கு பிடிக்காதவர்களையும் அப்புறப்படுத்தப் போவதாகச் சொல்கிறது. அது மக்கள் கூட்டத்திற்கு, குண்டர் படைகள், சிறைவாசம், ஒடுக்குமுறைதான் என்று சொல்லிக் கொண்டு ஒரு போதும் வருவதில்லை.
சரிதான். மோடி அப்படித்தான் வென்றார். பாசிசம் உருவாகும் நிலைமைகளை, பாசிசம் சொல்லும் பொய்களை விடாப்பிடியாய் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மாற்றுக் கதையாடலை, மக்கள் சார்பு கதையாடலை நாம் கட்டமைக்க வேண்டும்.
தேர்தல் தோல்வியிலிருந்து, இடதுசாரிகளின் தோல்வி, ஜனநாயகத்தின் தோல்வி எனப் பார்ப்பது தவறு. தேர்தல் அல்லாத மக்கள் போராட்டங்கள், இயக்கங்கள், கோரிக்கைகள் ஆகியவற்றில் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தோல்வியே, தேர்தல் தோல்விக்கும் காரணம். தமிழ்நாட்டில் மோடி ஆதரவு கதையாடல் எடுபடவில்லை. நீட் எதிர்ப்பு, விளை நிலப் பறிப்பு எதிர்ப்பு, மாநில உரிமை மக்கள் உரிமை பறிப்பு எதிர்ப்பு, வாழ்வாதாரப் பறிப்பு ஜனநாயக மறுப்பு எதிர்ப்பு போராட்டங்களை, தமிழ்நாட்டு மக்கள் குண்டாந்தடிகளை, துப்பாக்கி தோட்டாக்களை, சிறைவாசத்தை சந்தித்து நடத்தியுள்ளனர். மாற்றுக் கதையாடல் மக்கள் போராட்டக் களத்தில் எழுந்து, மோடியே திரும்பப் போ என விண்ணதிர முழங்கியது. மக்கள் கோரிக்கைகளை, இயக்கங்களை, போராட்டங்களை விதைப்போம். மக்கள் நல்வாழ்க்கையை, சுதந்திரத்தை அறுவடை செய்வோம்.

- இந்திய மக்கள் தொகையில் 14% அதாவது சுமார் 19.5 கோடி பேரான இசுலாமியர்களை, மோடி ஆட்சியில், சீருடைப் படையினர் மட்டுமின்றி, சங் கும்பல்களும் வேட்டையாடின. எல்லா பயங்கரவாதிகளும் இசுலாமியர்களே, அவர்கள் பாகிஸ்தானுக்கு வேண்டியவர்களே எனப் பிரச்சாரம் செய்து, அவர்களுக்கெதிரான வெறுப்புக் குற்றங்களை அதிகரிக்க வைத்தது. மதச்சார்பின்மைக்கு இடமில்லை, இசுலாமியர் வாக்குகள் ஒரு பொருட்டல்ல என்று தேசத்தின் ஒற்றுமைக்கும் ஓர்மைக்கும் பாஜக ஊறு விளைவித்தது.
- சாதாரண மானுட நற்பண்பு என்பதைக் கூட பாஜகவிடம் எதிர்ப்பார்க்க முடியாது என்பது நிரூபணமானது. வழிபாட்டுத் தலத்தில், 8 வயது இசுலாமிய பெண் குழந்தையை, இந்துக்கள் 8 பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி யதை அடுத்து நாடே கலங்கி கொந்தளித்த போது, சங் பரிவார் குற்றம் சுமத்தப்பட்ட அந்த 8 பேருக்கு ஆதரவாக வரிந்து கட்டி அரசியல் அணிதிரட்டல்களை மேற்கொண்டது.
- சமூக, சாதிரீதியான இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் தன் சதியின் ஒரு பகுதியாக, பொதுப் பிரிவினர்க்கு 10% இட ஒதுக்கீட்டை நுழைத்தது.
- பெண்கள், தலித்துகள் மீதான தாக்குதல்கள், அனைத்து பரிமாணங்களிலும் தீவிரம் அடைந்தன.
- அரசியலமைப்புச் சட்ட, நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்கள் அனைத்திலும் சங் பரிவாரும் அதன் இருண்மையான காவி கருத்துகளும் ஊடுருவி பரவி படர்ந்தன.
- நீதித்துறை, ராணுவம், தேர்தல் ஆணையம், பல்கலைக் கழங்கள், ஆராய்ச்சி நிறுவனங் கள், வரலாறு அறிவியல் புள்ளியியல் நிறுவனங்கள் எங்கும் சங் பரிவார் ஊடுருவியது. மேற்கத் திய நவீனம், கான் மார்க்கெட், லுட்யன் மேட்டுக்குடிகள், சந்ததியினர் ஆட்சி வேண்டாம் என்று முழங்கிக் கொண்டு, ‘பாமர ஞானம்’ என்ற பெயரால், அறிவியலுக்கு, நவீனத்துக்கு, ஜனநாயகத்துக்குப் புறம்பான விஷயங்கள் அரங்கேற்றப்பட்டன.
- பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள் கொல்லப்பட்டனர். தாக்கப்பட்டனர். நகர்ப்புற நக்சல் என சிறை வைக்கப்பட்டனர். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு, புதிய சகஜநிலை என பாஜக அச்சுறுத்தியது.
- ஜனநாயகத்தை அரித்துப்போகச் செய்ய, கும்பல் மனோநிலையை, வேட்டை மனோ நிலையை உருவாக்க, பகுத்தறிவும் அறிவியலும் நசுக்கப்பட வேண்டும். பாமர அறிவு, பெரும் பான்மை மக்கள் நம்பிக்கை என்ற பெயரால் மூடக் கருத்துகள் பலப்படுத்தப்பட்டன. மேகக் கூட்டம், ரேடார் பார்வையை மறைக்கும், வேதகால பிளாஸ்டிக் சர்ஜரியில் விநாயகன் முகத்தில் தும்பிக்கை சேர்க்கப்பட்டது, கவுரவர்கள் மரபணு அறிவியலில் பிறந்தவர்கள், வேதகாலத்தில் விமானங்கள் பறந்தன, இமய மலையில் விலங்கு மனிதன், எட்டியின் காலடித் தடங்கள் பதிந்திருந்ததை ராணுவ ஆராய்ச்சியில் கண்டறிந்தோம் என்ற அபத்தங்கள், ஆபத்தான முறையில் பரப்பப்பட்டன. கருத்து சுதந்திரம், ஜனநாயகம் மறுக்கப்படும், ஓர் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவியது.
- விவசாய நெருக்கடி முற்றியது. விவசாயத்தை விட்டு வெளியே போ, தொழிலுக்கும் வீட்டுமனை வணிகத்துக்கும் வழிவிட்டு ஓடிப் போ என்றனர்.
- ஏழைகளுக்கான கல்வி, மருத்துவம், வேலை உறுதி உள்ளிட்ட நலத்திட்டங்கள் மதிப்பிழந்தன.
- பிரும்மாண்டமான வேலையின்மையைப் போக்க வக்கற்று, பக்கோடா, பால், பான் விற்றுப் பிழை, முத்ரா கடன் ரூ.50,000 வாங்கி, வேலை கேட்காமல் வேலை கொடு என்றனர்.
- மாருதி, பிரிக்கால் தொழிலாளர்கள் ஆயுள் சிறைவாசத்துக்கு ஆளாயினர். மிச்சம் மீதியுள்ள தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக்கட்ட போர்த் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. முத்தரப்பு கூட்டங்கள், இந்திய தொழிலாளர் மாநாடு, கூட்டு பேரம் எல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் ஒழிக்கப்படுகின்றன.
- நாட்டுப்புற, நகர்ப்புற வறுமை, வசதி கள் இன்மை, வீடின்மை, கல்வியின்மை, மருத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தன. தீவிரம் அடைந்தன.
- பண மதிப்பகற்றம், ஜிஎஸ்டி என்ற இரண்டு பெரும் தாக்குதல்களுக்கு ஏழை, நடுத்தர மக்கள் ஆளாக்கப்பட்டனர்.
- கருப்புப்பண ஒழிப்பு, குடும்பத்துக்கு ரூ,15 லட்சம் போன்ற எல்லா வாக்குறுதிகளும், சும்மா ஜ÷ம்லா என அமித் ஷாவே சொன்னார்.
- காஷ்மீரை ஓர் ஆக்ரமிக்கப்பட்ட பகுதியாக, காஷ்மீரிகளை உள்ளார்ந்த பகைவர்களாக பாஜக அரசு நடத்துகிறது.
- பாகிஸ்தானோடு பகைமை, ஆயுதப் போட்டி, சாவு வியாபாரம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை தரப்படுகிறது. பிரும்மாண்டமான இராணுவ பேர ஊழல்கள், தேசபக்தி என்ற பெயரால் மூடி மறைக்கப்படுகின்றன.
- உலகத்தின் பகைவர்களான இஸ்ரேலோடு, அய்க்கிய அமெரிக்காவோடு நட்பு பாராட்டி, ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாய் பாஜக செயல்படுகிறது.
- இந்தியாவின் செல்வங்களை, வளங்களை அம்பானி, அதானி கூட்டங்கள் கொள்ளையடிக்க உதவுகிறது.