சென்னை
உயர்நீதிமன்ற வளாகத்தில்
அம்பேத்கர்
பிறந்த தினத்தை ஒட்டி
உறுதியேற்பும்
மாட்டுக்கறி விருந்தும்
அம்பேத்கர்
பிறந்த தினத்தை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை
அருகில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஏப்ரல் 13 அன்று உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்தியது.
நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட, கற்பி, கிளர்ச்சி செய், அமைப்பாக்கு என்ற வாசகங்களைத் தாங்கிய துண்டுப்
பிரசுரத்தில், உறுதியேற்பு
நிகழ்ச்சி செய்தியும், உறுதியேற்பு
நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாட்டுக் கறி விருந்து தரப்படும் என்ற செய்தியும்,
மாட்டுக் கறி உண்ண
விரும்புபவர்கள் முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும்
சொல்லப்பட்டிருந்தது.
நீதித்துறையில்
நிலவும் ஊழல், நிலப்பிரபுத்துவ,
பார்ப்பனிய சிந்தனையை
முறியடிப்போம், ஜனநாயகம்
பாதுகாப்போம், சாதி ஒழிப்பு,
மதவெறி எதிர்ப்பு அரசியலை
உயர்த்திப் பிடிப்போம், தலித்துகள்,
பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை
எதிர்த்திடுவோம், சாதி மறுப்பு
திருமணம் செய்தவர்களை பாதுகாக்க சட்டம் இயற்றப்பட போராடுவோம், ரோஹித் சட்டம் இயற்றப்பட போராடுவோம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு
மொழியாக்க போராடுவோம் உள்ளிட்ட முழக்கங்கள் மீது உறுதி ஏற்கப்பட்டது.
உறுதியேற்பு
நிகழ்ச்சிக்கு ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க சென்னை மாவட்டப் பொறுப்பாளர் தோழர்
கார்க்கி வேலன் தலைமை தாங்கினார். ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள்
மீதான தொழில் தடை நீக்கப்பட வேண்டும், ஏழை மக்களை நீதிமன்றத்துக்கு வரவிடாமல் தடுக்கும் நீதிமன்ற கட்டண உயர்வு
கைவிடப்பட வேண்டும், விவசாயக் கடன்கள்
தள்ளுபடி செய்யப்பட வேண்டும், வறட்சியால்
மரணமடைந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும், கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாட்டை களைய
ரோஹித் சட்டம் இயற்றப்பட வேண்டும், பிரிக்கால்,
மாருதி தொழிலாளர்கள்
விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அமைப்பாளர் தோழர்
பாரதி, விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் தோழர்கள் பார்வேந்தன் மற்றும் தமிழினியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யத்தின் மில்டன்,
தமிழ்நாடு முற்போக்கு
வழக்கறிஞர்கள் சங்கத்தின் மனோகரன், அகில இந்திய
மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர்கள் அதியமான், சங்கர், சட்ட மாணவர் தோழர் புவனேஸ்வரி ஆகியோர்
உரையாற்றினர். உறுதியேற்பு நிகழ்ச்சியின் முடிவில் மாட்டுக்கறி விருந்து
தரப்பட்டது. 100 பொட்டலங்கள்
முன்னரே சொல்லப்பட்டிருந்தன. ஆனால் அதற்கும் மேற்பட்டோர் உறுதியேற்பு
நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலருக்கு மாட்டுக்கறி விருந்து தர முடியாமல்
போனது.
உறுதியேற்பு
நிகழ்ச்சி வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள்
சிலர், நீங்கள் ஏன் தலித்
வழக்கறிஞர்கள் மத்தியில் இந்த வேலைகளைச் செய்கிறீர்கள், மற்ற பிரிவு வழக்கறிஞர்கள் மத்தியில் செய்யலாமே
என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், அந்த மாட்டுக் கறி விசயத்தை தவிர்த்திருக்கலாமே என்று கேட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் மத்தியில் இரண்டு முனைகளில் இருந்து வந்துள்ள இந்தக் கேள்விகள்
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சரியான நேரத்தில் சரியான முன்முயற்சி எடுத்துள்ளதைக்
காட்டுகின்றன.
அம்பத்தூரில்
ஏப்ரல் 14 அன்று மாநிலச்
செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை
செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோழர்கள் அம்பேத்கர் நினைவாக உறுதிமொழி
ஏற்றனர். புதுக்கோட்டை, நெல்லை, விழுப்புரம் ஆகிய மய்யங்களிலும் அம்பேத்கர்
பிறந்த தினத்தை ஒட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
(மாலெ தீப்பொறி 2017 மே 01 – 15)