மாலெ தீப்பொறி
தொகுதி 11 இதழ் 5 2012, அக்டோபர் 01 - 15
உள்ளே...
கற்றுத்தரப் பார்க்கும் மன்மோகனுக்கு கற்றுத் தருவோம்
இசுலாமிய சீற்றமும் அரசு ஒடுக்குமுறையும்
தங்கள் வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்கு சம்பளம்:
சொல்ல சொல்ல இனிக்குதடா....
திராவிட இயக்கத்தின் பரிணாமம்
கூடன்குளம்: ‘அரசு என்பது ஒடுக்குமுறை கருவி’
தலையங்கம்
செப்டம்பர் 20 முழுஅடைப்பில் தமிழக அரசியல் கட்சிகள்
செப்டம்பர் 20 முழுஅடைப்பை ஒட்டி அகில இந்திய அளவில் நடந்த
நாடகங்கள் அளவுக்கு தமிழக நடப்புக்கள், அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை.
ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க, காவிரி நீரைக் கொண்டு வர பிரதமரிடம் வாதாடுகிறார். உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டுகிறார். டீசல் விலையை உயர்த்தாதே, மானிய விலையிலான சமையல் எரிவாயு உருளைகள் எண்ணிக்கையைக் குறைக்காதே, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைப் புகுத்தாதே என்றெல்லாம் அறிக்கைகள் விடுகிறார். ஆனால், மத்திய அரசுக்கெதிரான முழுஅடைப்பில், முதல் நாள் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியிட்டு, தொமுசவும் திமுகவும் பந்த்தை ஆதரிக்கின்றன எனத் தெரிந்த பிறகு, பள்ளிகள் இயங்கும் என மறுநாளே தலைகீழாகப் பேசுகிறார். மன்மோகன் பதவி விலக வேண்டும் என்று கோரவில்லை. முழுஅடைப்பை ஆதரிக்கவுமில்லை. ஜெயலலிதாவின் மத்திய அரசு எதிர்ப்பு வெறும் நிழல் சண்டை என அம்பலமானது.
கருணாநிதி, தவித்துப் போய்விட்டார். தாம் மம்தா போல் செயல்பட முடியாது என ஒரு புறம் சொல்கிறார். மறுபுறம் முழுஅடைப்பில் கலந்து கொள்கிறார். விஜய்காந்த் தம் பங்கிற்கு இம்முறை, தாமும் முழுஅடைப்பில் கலந்து கொள்வதாகச் சொன்னார். மார்க்சிஸ்ட் கட்சி தன் முயற்சியில் சற்றும் தளராமல், ஜெயலலிதா முழுஅடைப்பில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. (இடதுசாரி ஜனநாயக அணிக்கு ஜனநாயக சக்திகளைச் சேர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி செயல்தந்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தா.பாண்டியனுக்கு 80ஆவது பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, முதல்வரே நேரில் வந்ததில், மகிழ்ச்சியில் திளைத்தது.
முலாயம் முழுஅடைப்பில் கலந்து கொண்டாலும், ஆட்சியைக் கவிழ்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பாஜக தலைவர் நிதின் கட்காரியும், உடனடி எதிர்காலம் தம் கட்சிக்குப் பிரகாசமாய் இல்லாததால், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப் போவதில்லை என்று சொல்லி விட்டார். தலைப்பாகை தலை இரண்டையுமே தற்காலிகமாகக் காப்பாற்றிக் கொண்டுள்ள மன்மோகன், தமது ஆட்சியின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். கருணாநிதி ஜெயலலிதா இருவரும் எப்போது எப்படி அடுத்த அரசியல் காய்களை நகர்த்தலாம் என யோசித்துக் கொண்டுள்ளனர்.
இவர்களது ஆட்டங்களுக்கு மத்தியில், தமிழக மக்கள் பெரும்துன்பங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகள் முன்பு 29 லட்சம் ஏக்கர் விளைநிலம் என்றிருந்தது. இப்போது 16 லட்சம் ஏக்கராகச் சுருங்கி விட்டது. இப்படியே போனால் 6 லட்சம் ஏக்கராவது மிஞ்சுமா என்ற அய்யம் ஏற்பட்டுள்ளது. விளைச்சல் இழப்பு ரூ.1500 கோடி முதல் ரூ.2000 கோடி வரை. கூலி இழப்பு ரூ.300 முதல் ரூ.500 கோடி வரை. வறட்சி மாவட்டம் என அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 நஷ்டஈடு, கிராமப்புற மற்றும் விவசாயத் தொழிலாளிக்கு ரூ.10,000 நஷ்ட ஈடு, 100 நாள் வேலை ரூ.132 கூலி கறாரான அமலாக்கம் என்ற கோரிக்கைகளுடன், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் மாலெ கட்சியும் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டது மட்டுமே, இந்த இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் அமைந்தது.
ஜெயலலிதா அரசு, நாளும் தொழிலாளர்கள் கொத்துகொத்தாய் விபத்துக்களில் மடியும்போது வேடிக்கை பார்க்கிறது. ஆனால், நியாயம் கேட்ட இசுலாமிய ஆண்களை சிறையில் அடைத்துள்ளது. பெண்களைக் கேவலப்படுத்தி உள்ளது.
இடிந்தகரை, கூடங்குளம் பகுதியில் கொடி கட்டிப்பிறக்கும் போலீஸ் ராஜ்ஜியம் மூலம், உயிர்ப்பலி வாங்கி உள்ளது. சிறப்பு கண்ணீர்ப் புகை வீசுகிறது. மக்களின் வீடுகளை உடைமைகளை நாசமாக்குகிறது. பெண்களை மிகவும் கேவலமான வசை மொழி கொண்டு ஏசுகிறது. மக்கள் மீதான தாக்குதலை எல்லா வகைகளிலும் தீவிரப்படுத்தி உள்ளது. போராட்டத்தின் தலைவர்கள் மீதான வேட்டை தொடர்கிறது.
மக்கள் விரோத தேசவிரோத மன்மோகன் அரசு பதவி விலகக் கோரும் பின்புலத்தில், தமிழகத்தில் மூர்க்கமான ஒடுக்குமுறையுடன் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை அமலாக்கும் ஜெயலலிதா அரசை மக்கள் போராட்டங்கள் மூலம் தீவிரமாக எதிர்க்க வேண்டியுள்ளது. அதனால்தான், மக்கள் விரோத வளர்ச்சித் திட்டங்களுக்கு, ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக தமிழகம் எங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) அக்டோபர் 1, 2012 அன்று எதிர்ப்பு நாள் அனுசரிக்கிறது.