மண்ணில் பாதி
தங்கள் வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்கு சம்பளம்:
சொல்ல சொல்ல இனிக்குதடா....
மஞ்சுளா
இல்லப்பணியாளர் ஒருவர், 4 பேர் கொண்ட குடும்பத்தில் பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, வீடு பெருக்கி துடைக்க மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 சம்பளம் பெறுகிறார். மூன்று வேளை சமையல் செய்பவர் ரூ.2,000 சம்பளம் பெறுகிறார்.
படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர் அல்லது நோயுற்றோரை கவனித்துக் கொள்பவர் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தது ரூ.500 சம்பளம் பெறுகிறார். அதாவது மாதம் ரூ.15,000. இவர்கள் இரவுப் பணி அல்லது பகல் பணி என்று மாறி மாறி வருவார்கள். ஆக, இந்த வேலைக்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.30,000 செலவாகும்.
மேலே சொல்லப்பட்டுள்ள வேலைகளில் எந்த வேலையையும் நிறுத்தி வைக்க முடியாது. இவற்றை செய்பவர்களுக்கு இன்றைய சந்தை நிலவரப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.33,500 சம்பளம் தரப்படுகிறது. இதில் முதல் வகை வேலையில் மட்டும் ரூ.3,500 சம்பளம்.
இதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் இன்று சந்தை விலை உண்டு.
இந்த அனைத்து வேலைகளையும் தங்கள் வீட்டில் செய்யும் பெண்கள் எந்த சம்பளமும் பெறுவதில்லை. அப்படி சம்பளம் தரப்படாமல் இருக்க கடமை, பாசம், தாய்மை, குடும்பம், மானம், இப்படி பல பெயர்கள் சொல்லப் படுகின்றன. அந்த உழைப்பு கூலி தரப்படாத உழைப்பு. அந்த கூலி தரப்படாத உழைப்புக்கு கூலி தரப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ணா திராத் அறிவித்தார்.
தங்கள் வீட்டில் மட்டும் வேலை செய்யும் பெண்களை இல்லத்தரசிகள் என்று சொல்வதை தான் விரும்பவில்லை என்றும் அவர்களை இல்லப் பொறியாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணா திராத் சொல்கிறார். தனது முன்வைப்பை வலியுறுத்த, மணமுறிவு ஏற்பட்டாலோ கணவன் இறந்து விட்டாலோ பெண்ணுக்கென்று ஏதும் இருப்பதில்லை, இந்த முன்வைப்பு பெண்களை பொருளாதாரரீதியாக அதிகாரமுடையவர் களாக்கும் நோக்கம் கொண்டது, இதனால் குடும்ப வன்முறை கட்டுக்குள் வரும், வீட்டை விட்டு வெளியே போ என்று ஆண்கள் பெண்களை சொல்ல முடியாது, சமூகத்தில் பெண்களுக்கு அங்கீகாரம், மதிப்பு இருப்பதை உறுதி செய்ய முயற்சி செய்கிறோம், பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளின் அளவைக் கணக்கிட்டு அதற்கான சம்பளத்தை தங்கள் சம்பளத்தில் 10% முதல் 20% கணவன்மார்கள் தர வேண்டும் என்று சொல்கிறார்.
இந்த முன்வைப்பு கருத்தளவில் இருப்பதாகவும் இந்த முன்வைப்புக்கு ஆதரவு இருக்கு மானால் பெண்களுக்கு சம்பளமாக தரப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிப்பது பற்றி கூட யோசிக்கலாம் என்றும் அன்பும் பாசமும் இருக்கும் குடும்பத்தில் இந்த முன்வைப்பை எதிர்க்க ஏதுமில்லை என்றும் அமைச்சர் சொல்கிறார்.
இந்த முன்வைப்பு கட்டத்திலேயே எதிர் கேள்விகள் வந்ததும் சம்பளம் என்று அதை எடுத்துக் கொள்ளக் கூடாது, மதிப்பூதியம் அல்லது அதுபோன்ற ஒன்றாகக் கருத வேண்டும், ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்வார்கள் என்றால் பெண்கள் வெளியில் வேலைக்குச் செல்வார்கள் என்றால் பெண்கள் தரட்டும் என்று சொல்லிப் பார்த்தார்.
அமைச்சரின் வாதங்களை எதிர்க்க அந்த முன்வைப்பின் முகத்தில் அறையும், அதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடப் பார்க்கும் சில ஆணாதிக்கக் குதர்க்கக் கேள்விகள் நீயா நானா பாணியில் எழுப்பப்படுகின்றன.
• இது மேற்கத்திய கருத்து.
• இந்த முன்வைப்பை அமலாக்கவே முடியாது. அரசாங்கத்துக்கு வேலை அதிகமாகி விடும். எந்த வேலைக்கு என்ன சம்பளம் என்று நிர்ணயித்து அரசு ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இது சட்டமாகிவிட்டால், அமலாக்க இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் வந்துவிடும்.
• இந்த வேலைகளுக்கு சம்பளம் எப்படி கணக்கிடுவது?
• இது பெண்களை இழிவுபடுத்துவதாகாதா? அவர்களுடைய மேன்மையான பங்களிப்பை வேலைகளை மலினப்படுத்துவது அல்லவா?
• பண்டிகை, விசேஷ நாட்களில் கூடுதல் வேலை என்று இருக்கும்போது கூடுதல் சம்பளமா? கணவன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டால் சம்பளம் குறையுமா?
• மனைவிக்கு சம்பளம் தரும்போது சம்பளம் பெறும் இல்லப்பணியாளர் மனைவி ஆவாரா?
• குடும்பம் வர்த்தகம் போல் ஆகி விடுமே? தனிப்பட்ட விசயத்தில் அரசு தலையிடுகிறது.
• கணவனை விட மனைவி கூடுதல் சம்பளம் பெறுகிறார் என்றால் என்ன செய்வது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் கேட்கிறார். நான் என் சம்பளம் அனைத்தையும் என் மனைவியிடம்தான் தருகிறேன் என்று லாலு சொல்கிறார்.
இவை சில வகைமாதிரி கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு இன்னும் துணைக்கேள்விகள் பல கேட்கப்படுகின்றன. இவை அனைத்தும் பெண்ணடிமையை நிலைநிறுத்த ஆண்டாண்டு காலமாக சொல்லப்படும் கருத்துக்களை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துபவை.
பெண்கள் தங்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு கணவன்மார்கள் சம்பளம் தர வேண்டும் என்ற முன்வைப்பின் முன்பாதி முன்னோக்கியது, பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு பொருளாதார மதிப்பு உண்டு என்று அங்கீகரிப்பது. பெண்விடுதலை நோக்கிய பயணத்தில் இது ஒரு மிக முக்கிய படி. ஆனால், முன்வைப்பின் பின்பாதி பின்னோக்கியது.
அந்த வேலைகளுக்கு ஏன் கணவன் அதாவது குடும்பத் தலைவன் சம்பளம் தர வேண்டும்? அந்தப் பெண் செய்யும் வேலைகள் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அந்த ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கானதுதான். ஆனால் குடும்பம் என்று அலங்கரிக்கப்பட்ட மூடுதிரைக்குப் பின்னால் முதலாளித்துவ சுரண்டலின் தந்திரம் ஒளிந்திருக்கிறது.
தொழிலாளி பெறும் கூலி அவர் உயிருடன் இருந்து மறுநாள் மீண்டும் உழைப்பில் ஈடுபடுவதற்கும் உழைப்பை மறுஉற்பத்தி செய்வதற்கும் ஆனது. அதற்கு மேல் தொழிலாளி எதுவும் பெறுவதில்லை. உதாரணமாக ஹ÷ண்டாயில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி நாள் முழுவதும் கடுமையான உழைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார். அந்தக் கடுமையான உழைப்பால் முழுவதுமாக பிழிந்தெடுக்கப்பட்ட பிறகு வீட்டுக்குத் திரும்பும் அவர் அதிகபட்சம் தொலைக்காட்சி முன் அமர்ந்து ஏதாவது பார்க் கலாம். பார்க்கும்போதே களைப்பு மேலிட்டு வீட்டில் இருப்பவர்கள் தட்டில் வைப்பதை உண்டு விட்டு அப்படியே சாய்ந்து ஓய்ந்து விடலாம். பின் மறுநாள் எழுந்து அவசர அவசரமாக ஆலை வண்டி பிடிக்க பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பார். இப்படி அவர் இயங்க அவருக்கு ஒருவர் உணவு தயாரித்து, அவர் வாழும் வீட்டை பராமரித்து, அவர் அணியும் உடைகளை துவைத்து தேய்த்து தயாராக வைத்து, இன்ன பிற வேலைகளை செய்து அவர் உழைப்புச் சக்தியை புத்துயிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்தத் தொழிலாளி திறம்பட கூலி உழைப்பில் ஈடுபட்டு முதலாளியின் லாபத்தைப் பெருக்குவார். அந்த வீட்டில் உள்ள பெண் அந்தத் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை தொடர்ந்து புத்துயிர்ப்பதற்கான வேலைகளைச் செய்வதுடன், இன்றைய தொழிலாளி வயதாகி உழைப்பில் ஈடுபட முடியாமல் ஓய்ந்துவிடும் போது, நாளைய உற்பத்தியில் ஈடுபடுவதற்கான தொழிலாளியை, உழைப்புச் சக்தியை இன்றே உருவாக்க வேண்டும். அதாவது பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி உழைப்பை, புத்துயிர்ப்பு செய்வது மறுஉற்பத்தி செய்வது என்ற முதலாளித்துவ லாபக் குவிப்புக்கு மிக அவசியமான வேலைகளைச் செய்யும் பெண்களிடம் முதலாளித்துவம், இந்த வேலைகளைச் செய்வதுதான் பெண்களுக்கு பிறவிப் பயன் தரும், மோட்சம் தரும் என்றெல் லாம் பொய்கள் பல சொல்லி அந்த உழைப்பை கூலி தராமல் பெற்றுக் கொள்கிறது.
ஆக, கிருஷ்ணா திராத் முன்வைப்பு, முதலாளிகள் பெண்கள் செய்கிற வேலைகளுக்கு சம்பளம் தரவேண்டும் என்பது நோக்கி தள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம், மற்ற பல திட்டங்கள் போல், கோவாவில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 தரும் அரசின் திட்டம் அமலாக்கப்படலாம். இது அவர்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கானது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாளித்துவம் பெண்கள் தங்கள் வீட்டில் செய்யும் இந்த வகையான உழைப்பை சந்தைப்படுத்தாமல், சந்தைப்படுத்தப்பட்ட மலிவான உழைப்பிலும் அவர்களை ஈடுபடுத்தி இரட்டிப்புச் சுரண்டலுக்கு பெண்களை ஆளாக்குகிறது. இடுப்பொடிக்கும் அடுப்படி வேலைகளில் இருந்து பெண்களை விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுத்த லெனின், உழைப்புச் சந்தைக்கு வந்தாலும், சமையலறையின் ஒரு மூலையில் நிற்க வேண்டியிருக்கும் பெண்ணின் சிந்தனை, ஆன்மா என்னவாகும் என்று சொல்கிறார். “.....அற்பமான, சலிப்பு தட்டுகிற வீட்டு வேலைகளை செய்வதில் பெண்கள் எப்படி களைத்துப் போகிறார்கள், அவர்கள் வலிமையும் நேரமும் எப்படி வீணாகிறது, அவர்கள் சிந்தனை எவ்வளவு குறுகியதாக, அழுகிப் போனதாக மாறுகிறது, அவர்கள் இதயம் எவ்வளவு மெதுவாக துடிக்கிறது, அவர்கள் உறுதி எப்படி பலவீனமடைகிறது என்றெல்லாம் பார்க்கும் ஆண்களின் அக்கறையற்ற ஒப்புதல்.....”
2005 - 2006 தேசிய குடும்ப நல ஆய்வு 20 - 24% பெண்கள்தான் தங்கள் சம்பளம் மீது கட்டுப்பாடு கொண்டிருக்கிறார்கள் என்கிறது. சம்பளத்தை மனைவி கையில் தருவதாகச் சொல்வது குடும்பத்தில் உள்ள வேலைகளில் தான் எந்தப் பங்கும் செலுத்தாமல் அதை முழுக்க முழுக்க பெண்கள் தலையில் கட்டும் யதார்த்தத்தின் வெளிப்பாடு. லாலு பீகாரை வளைத்துப் போட்டிருக்கிறார். ராப்ரி வேலையாட்களை வேலை வாங்கும் வேலை செய்ய வேண்டும். ரூ.3,500 சம்பளம் பெறும் தொழிலாளி குடும்பம் என்ன செய்யும்? பெண் மட்டுமின்றி ஆணும் ஒட்டுமொத்த பொருளில் குடும்பத்துக்குள் அடிமையே.
குடும்பம் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படை பொருளாதார அலகு. முதலாளித்துவ அரசாங்கம் சமூகத்தை நிர்வகிப்பதில் குடும்பத்தை, அதில் உள்ள பெண்களை பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்கிறது. கல்வி, மருத்துவம், சமூக செல்வத்தைப் பெருக்குவதில் பங்காற்றிய முதியோர், நோயுற்றோர், அதில் பங்காற்றப் போகிற குழந்தைகள் ஆகியோரின் பராமரிப்பு போன்ற வேலைகளை குடும்பத்துக்குள் பெண்களைக் கொண்டு செய்து தனது சமூகப் பொறுப்பில் இருந்து தப்பித்துவிடுகிறது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பெண்கள் நாளொன்றுக்கு 273 நிமிடங்கள் செலவிடுவதாக ஆய்வொன்று சொல்கிறது. குடும்பத்தில் உள்ள அந்த ஆண் 60 அல்லது 58 வயதில் ஓய்வு பெற்று விடுவார். வீட்டில் மட்டும் வேலை செய்யும் பெண்களுக்கு என்று ஓய்வு பெறும் வயதென்று ஒன்று இன்னும் சமூகத்தில் எந்த வகையிலும் நிர்ணயிக்கப்படவில்லை. அவரால் எந்த மட்டத்தில் இயங்க முடியுமோ அந்த மட்டத்தில் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்.
கேரளாவில் தேசிய இல்லத்தரசிகள் சங்கம் என்ற ஒன்று அமைத்து தொழிற்தகராறு சட்டம் 1947ன் கீழ் பதிவு செய்யப் போனபோது, பெண்கள் தங்கள் வீட்டில் செய்யும் வேலைகள் சட்டத்தில் வரையறுத்துள்ளபடி தொழிலோ வர்த்தகமோ அல்ல, அதனால் பதிவு செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்களாம். பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு அரசாங்கம் சம்பளம் தர வேண்டும் என்பது அந்த சங்கத்தின் முக்கிய கோரிக்கை. எனவே, இந்த வேலைகளில் அரசாங்கத்தை வேலை அளிப்பவராகக் கொள்ள முடியாது என்றும் சொல்லப்பட்டது. உக்ரேன், வெனிசூலா போன்ற நாடுகளில் வீட்டில் மட்டும் வேலை செய்யும் பெண்களுக்கான சங்கங்கள் உள்ளன. உக்ரேனில் ஆண்கள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும்பட்சத்தில் அவர்களும் சங்கத்தில் சேரலாம். கிருஷ்ணா திராத் புதிதாக கண்டுபிடித்து ஏதும் சொல்லிவிடவில்லை.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வீட்டில் மட்டும் வேலை செய்யும் பெண்களை வேலை வாய்ப்பற்றவர்களுடன் சேர்த்து வகையினப்படுத்துகிறது. உண்மையில் வீட்டில் பெண்கள் செய்யும் வேலையைக் கணக்கிட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது மிகப்பெரிய பங்காக இருக்கும்.
பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் பற்றி பரிசுத்த ஆவி வாதங்கள் முன்வைப்பவர்கள் தாய்மையும் பாசமும்தான் குறுக்கே நிற்பது போல், அதற்கு விலை பேச முடியுமா என்று கேட்கிறார்கள். அதே பாசத்துடன், அதே தாய்மையுடன் ஆண்கள் ஏன் இந்த வேலைகளை செய்துவிடக் கூடாது என்ற கேள்வி நியாயமாக எழுகிறது.
அல்லது வீட்டில் உள்ள பெண்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியைத் தர வேண்டும் என்று வரும்போது ஆண்கள் கூடுதல் சம்பளம் கேட்டுப் போராடுவார்கள் என்றால் முதலாளித்துவத்துக்கு நெருக்கடிதானே? அந்த வகையிலும் இந்த முன்வைப்பு வரவேற்கத்தக்கதே.
பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. பெண்கள் அதிகாரம் அடுத்தடுத்த பல ஆட்சிகளை, அடுத்தடுத்த பல நாடாளுமன்றத் தொடர்களைப் பார்த்துக் கொண்டுள்ளது. கிருஷ்ணா திராத் முன்வைப்பு இந்தப் பிரச்சனைகளை மறைத்துவிடாது. மாறாக அவற்றைத் தீவிரப்படுத்தவே செய்யும். அந்த வகையிலும் இந்த முன்வைப்பு வரவேற்கத்தக்கது.
இல்லத்தரசிகள் எண்ணிக்கை, அவர்கள் பொருளாதார நிலை ஆகியவை பற்றி விவரங்கள் எடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர்.
2012 ஏப்ரல் 19 அன்று யாஹ÷ இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி: பங்களாதேஷின் டாங்கெயில். அங்குள்ள கந்தபாரா, நாட்டின் 14 அதிகாரபூர்வ பாலியல் தொழில் கூடங்களில் ஒன்று. அங்கே நூறு கட்டிடங்களில் கிட்டத்தட்ட 800 அறைகள். இந்த அறைகள் கிட்டத்தட்ட 900 பாலியல் தொழிலாளர்களுக்குச் சிறைகள். இவர்கள் நாளொன்றுக்கு 10 முதல் 15 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
தங்கள் மாடுகளை கொழுக்க வைக்க விவசாயிகள் பயன்படுத்தும் ஓரடெக்சான் என்ற ஊக்க மருந்து அந்த பாலியல் தொழில் கூடத்தைச் சுற்றியுள்ள தேநீர் மற்றும் வெண்சுருட்டு கடைகளில் கிடைக்கும். சரியான ஊட்ட உணவின்றி மெலிந்து காணப்படும் சிறு பெண்களை புஷ்டியானவர்களாக, வளைவுகள் உள்ளவர்களாகக் காட்ட, நீண்ட நாள் எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் உருவாக்கும் என்று தெரிந்தும், அவர்களுக்கு இந்த ஊக்க மருந்து தரப்படுகிறது.
இங்கு எதற்குத்தான் விலை இல்லை? பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை ஏன் கணக்கிட முடியாது? ஏன் அதற்கான கூலியைத் தர முடியாது? இந்தக் கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளை மீண்டும் வாசித்துக் கொள்ளுங்கள்.