களம்
டீசல் விலையை குறை!
சிறுவணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு கூடாது!
சமையல் எரிவாயு உருளை குறைப்பை கைவிடு!
எதிர்ப்பு - கைது - விடுவிப்பு
15.09.2012 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் டீசல் விலையை குறைக்க வேண்டும். சிறு வணிகத்தில் அந்நிய மூலதன நுழைவை கைவிட வேண்டும். கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாட்டை அனுமதிக்க மாட்டோம் போன்ற முழக்கங்களுடன் அம்பத்தூர் ஓ.டி.யில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில துணைத் தலைவர் தோழர் தேவகி தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாரதி கண்டன உரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், ஏஅய்சிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் பழனிவேல், பொருளாளர் தோழர் பாலகிருஷ்ணன், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் மோகன், செயலாளர் தோழர் பசுபதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர்கள் தோழர் முனுசாமி, தோழர் ஏ.சேகர், தோழர் பொன்ராஜ், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகிகளில் ஒருவர் தோழர் லில்லி, புரட்சிகர இளைஞர் கழக அமைப்புக்குழு உறுப்பினர்கள் தோழர் சுஜாதா, தோழர் தண்டபாணி, சீனிவாசன் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கூடன்குளத்தில் கடுமையான காவல்துறை வேட்டை நடந்து கொண்டிருந்த பின்னணியில் சென்னையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 10.00 மணிக்கு விடுதலை செய்தது.
மன்மோகன் கொடும்பாவி எரிப்பு
செப்டம்பர் 17 அன்று அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டீசல் விலையை குறை, சிறு வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு கூடாது, சமையல் எரிவாயு உருளை குறைப்பை கைவிடு போன்ற முழக்கங்களுடன் மன்மோகன் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சி சென்னை சட்டக்கல்லூரி அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். கட்சி மாநிலக்கமிட்டி உறுப்பினர் தோழர் இரணியப்பன் மற்றும் புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்புக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் சுஜாதா, தண்டபாணி, அன்பு, அகில இந்திய மாணவர் கழக மாநில துணைத் தலைவர் தோழர் சீதா, மோகன், அல்லிமுத்து, ராஜலட்சுமி, மணிகண்டன், பிரகாஷ், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் தோழர் சுரேஷ், தோழர் விஜய் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.டீசல் விலையை குறை!
சிறுவணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு கூடாது!
சமையல் எரிவாயு உருளை குறைப்பை கைவிடு!
எதிர்ப்பு - கைது - விடுவிப்பு
15.09.2012 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் டீசல் விலையை குறைக்க வேண்டும். சிறு வணிகத்தில் அந்நிய மூலதன நுழைவை கைவிட வேண்டும். கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாட்டை அனுமதிக்க மாட்டோம் போன்ற முழக்கங்களுடன் அம்பத்தூர் ஓ.டி.யில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில துணைத் தலைவர் தோழர் தேவகி தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாரதி கண்டன உரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், ஏஅய்சிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் பழனிவேல், பொருளாளர் தோழர் பாலகிருஷ்ணன், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் மோகன், செயலாளர் தோழர் பசுபதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர்கள் தோழர் முனுசாமி, தோழர் ஏ.சேகர், தோழர் பொன்ராஜ், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகிகளில் ஒருவர் தோழர் லில்லி, புரட்சிகர இளைஞர் கழக அமைப்புக்குழு உறுப்பினர்கள் தோழர் சுஜாதா, தோழர் தண்டபாணி, சீனிவாசன் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கூடன்குளத்தில் கடுமையான காவல்துறை வேட்டை நடந்து கொண்டிருந்த பின்னணியில் சென்னையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 10.00 மணிக்கு விடுதலை செய்தது.
மன்மோகன் கொடும்பாவி எரிப்பு
பேரணி, ஆர்ப்பாட்டம்
செப்டம்பர் 17 அன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 300 பேர் கொண்ட பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி முழுக்க நல்ல வரவேற்பு பெற்ற இந்த பேரணி, ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், அவிதொச மாவட்ட தலைவர் தோழர் வண்ணை சந்திரன், தோழர் திருநாவுக்கரசு, தோழர் ராஜா, தோழர் அன்பு, தோழர் சீதா, தோழர் சாந்தி, தோழர் அன்பரசி, நெற்குன்றம் பஞ்சாயத்து தலைவர் தோழர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டம்
செப்டம்பர் 16 அன்று அகில இந்திய மாணவர் கழகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், ஆவத்திப்பாளையத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் மாரியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.புகழேந்தி, சிபிஅய் (எம்.எல்) மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ், சிபிஅய் (எம்.எல்) நகர செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
செப்டம்பர் 15 அன்று விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் செண்பகவள்ளி, அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்
செப்டம்பர் 20 முழுஅடைப்பு
சென்னை: செப்டம்பர் 18 அன்று அம்பத்தூர் பகுதி முழுக்க அனைத்து கடைகளிலும் தோழர் பசுபதி, தோழர் மோகன், தோழர் முனுசாமி, தோழர் வேணுகோபால் ஆகியோர் தலைமையில் 4 குழுக்கள் கடை, கடையாக அயப்பாக்கம், அம்பத்தூர் பஜார், மார்கெட், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் மேற்கு ஆகிய பகுதிகளில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தன. செப்டம்பர் 20 அன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு அங்காங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோயம்பேடு மார்கெட் அருகில் வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் முனுசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
கோவை: சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கண்டித்து காந்திபுரம் பஸ் நிலையம் அருகில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சுமார் 100 பேர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தாமோதரன் மற்றும் பிரிக்கால் சங்க முன்னணிகள், ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நெல்லை: கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தேன்மொழி, தோழர் ஆறுமுகம், தோழர் கருப்பசாமி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். கட்சி ஏற்கனவே அறிவித்தபடி நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து தோழர்கள் போராட்டம் நடத்தினர். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கணேசன் உட்பட போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
சேலம்: செப்டம்பர் 20 அன்று நாடுதழுவிய முழு அடைப்பில், அம்மாப்பேட்டை பகுதியில் தோழர் ஆர்.வேல்முருகன் தலைமையில் ஏஅய்சிசிடியு தோழர்கள் விசைத்தறி கூடங்களை மூடுவதற்கு பிரச்சாரம் மேற்கொண்டனர். 40க்கும் மேற்பட்ட பட்டறைகள் மூடப்பட்டன. தோழர் எ.ஜோதிபாசு தலைமையில், பனங்காடு பகுதியில் மளிகை கடை அடைப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 25க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் சிபிஅய் (எம்.எல்) கோரிக்கையை ஏற்று கடைகளை அடைத்தனர். பிகண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கோ.மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கோஆப்டெக்ஸ் செயலாளர் விஸ்வநாதன், ராசிபுரம் தாலுகா கட்சி பொறுப்பாளர் பி.கணேசன், வேல்முருகன், ஈஸ்வரி, ஜோதிபாசு கண்டன உரையாற்றினர்.
குமரி: நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு கலந்து கொண்ட மாநிலக்கமிட்டி உறுப்பினர்கள் தோழர் அந்தோணிமுத்து, தோழர் மேரி ஸ்டெல்லா, ஏஅய்சிசிடியு, புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
பரமக்குடி, பதானிதோலாவுக்கு நீதி வேண்டும்!
கூடன்குளத்தில் காவல்துறை ஒடுக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்!
செப்டம்பர் 10 அன்று கூடன்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை ஒடுக்குமுறையைக் கண்டித்தும் காவல்துறையினர் பகுதியில் இருந்து உடனடியாக வலியுறுத்தியும் போராடும் மக்களுடன் ஒருமைபாடு தெரிவித்தும், பரமக்குடியிலும் பதானி தோலாவிலும் கொல்லப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கோரியும் செப்டம்பர் 11 அன்று மாலெ கட்சி தமிழகம் முழுவதும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் கட்டமைத்தது.
சென்னை: 11.09.2012 அன்று கூடங்குளம் போலீஸ் தடியடியை கண்டித்தும் பரமக்குடியிலும் பதானி தோலாவிலும் கொல்லப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கோரியும் அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில் மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மாணவர் கழக மாநில துணைத் தலைவர் தோழர் சத்தியகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், புரட்சிகர இளைஞர் கழகத்தினுடைய மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்கமிட்டி உறுப்பினர்கள் தோழர் கோவிந்தராஜ், தோழர் மலர்விழி கண்டன உரையாற்றினார்கள்.
சேலம்: சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், மாநிலக்கமிட்டி உறுப்பினர் தோழர் சந்திரமோகன் பங்கேற்றனர்.
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை பஜாரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏஅய்சிசிடியுவினுடைய மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார் கண்டன உரையாற்றினார்கள்.
நெல்லை: திருநெல்வேலியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் செப்டம்பர் 10 அன்று கைது செய்யப் பட்டு விடுதலை செய்யப்பட்ட கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சங்கரபாண்டியன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, ஏஅய்சிசிடியு மாநில துணைத் தலைவர் தோழர் ரமேஷ் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர் சுப்பு நினைவு நாள் பொதுக்கூட்டம்
13.09.2012 அன்று தோழர் சுப்பு நினைவு நாள் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பரமக்குடி, பதானிதோலா படுகொலைகளை கண்டித்து நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி, கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி கண்டன உரையாற்றினார்கள். கட்சியினுடைய மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் வளத்தான், மற்றும் சிபிஅய் (எம்எல்) புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
11.09.2012 அன்று கூடங்குளம் போலீஸ் தடியடியை கண்டித்து ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்களில் கறுப்பு துணி கட்டி சென்னை உயர்நீதிமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர் தோழர் பாரதி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
ஒருமைப்பாடு மன்ற அலுவலகம்
பகத்சிங் 107ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 28 அன்று திருபெரும்புதூரில் ஒருமைப்பாடு மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் அலுவலகத்தையும் பெயர் பலகையையும் திறந்து வைத்தார். கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் எஸ்.சேகர், எஸ்.இரணியப்பன், மலர்விழி ஆகியோர் திறப்புவிழாவில் கலந்துகொண்டனர். ஹுண்டாய், டிஅய்டைமண்ட் செயின், ஜிம்கானா கிளப் ஆகிய ஆலைகளின் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
புரட்சிகர நீரோட்டத்திற்கு வருகை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய தோழர் பி.கணேசன் தலைமையில், ராசிபுரம் தாலுகாவின் பல கிளை செயலாளர்கள் மற்றும் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் கடந்த 14.09.2012 அன்று அத்தினூரில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சந்திரமோகன் முன்னிலையில் இகக மாலெ கட்சியில் இணைந்தனர். பி.கணேசன் தலைமையில் 5 பேர் கொண்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது.
களச்செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்