அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு கருத்தரங்கம்
தேசத்தின் நெருக்கடியும்
இடதுசாரி ஜனநாயக நிகழ்ச்சிநிரலும்
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு டில்லியில் செப்டம்பர் 30 அன்று ‘தேசத்தின் நெருக்கடியும் இடதுசாரி ஜனநாயக நிகழ்ச்சி நிரலும்’ என்ற பொருளில் கருத்தரங்கம் நடத்தியது. கருத்தரங்கில் பல்வேறு இடதுசாரி கட்சிகள், ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் இவை பற்றி அக்கறை கொண்ட தனிநபர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள் தொடர் மெகாஊழல்களில் ஈடுபடுவதற்கு பொறுப்பான, பெருநிறுவன சூறையாடலை ஊக்குவிக்கிற, சாமான்ய மக்களின் வாழ்வுரிமை மீது தாக்குதல் தொடுக்கிற, அய்முகூ அரசாங்கத்தை வெளியேற்ற இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டம் வேண்டுமென கருத்தரங்கம் அறைகூவல் விடுத்தது.
தோழர்கள் ஸ்வப்பன் முகர்ஜி, ஹர்கன்வால் சிங், விஜய் குல்கர்னி, கோபிந்த் சேத்ரி, ஸ்மிதா, ராஜாராம் சிங், கவிதா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கில் தலைமை தாங்கினர்.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் நிறுவன அமைப்புக்களில் ஒன்றான கேரளா, இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தோழர் டி.பி.சந்திரசேகருக்கு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் துவங்கியது. மே 4 அன்று தோழர் டி.பி.சந்திரசேகர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தோழர் டி.பி.சந்திர சேகர் படுகொலைக்குக் காரணமான கொலைகாரர்களை, அரசியல் சதியாளர்களை அடையாளம் காண மத்திய புலனாய்வுத் துறை விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் கோரியது. கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் தியாகிகளான அந்தோணிசாமி மற்றும் சகாயம் பிரான்சிஸ் ஆகியோருக்கும் தீர்மானம் இரங்கல் தெரிவித்தது.
தோழர் ஸ்வப்பன் முகர்ஜி கருத்தரங்கில் வரவேற்புரை ஆற்றினார். தோழர் கவிதா கிருஷ்ணன் 12-அம்ச தீர்மானத்தை முன்வைத்தார். லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்), மகாராஷ்டிரா, தலைவர் பீம்ராவ் பன்சோட், தீர்மானங்களை ஆதரித்து உரை ஆற்றினார்.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு, அனைத்து இடது முன்னணி கட்சிகளையும் கருத்தரங்கில் உரையாற்ற அழைத்திருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பேசிய டி.ராஜா, அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் முன்முயற்சியை வரவேற்ற அவர், இடதுசாரி ஒற்றுமை பற்றி அவரது கட்சி கொண்டுள்ள கடப்பாட்டை வெளிப்படுத்தி னார். நாடாளுமன்ற ஜனநாயகத்தில், காங்கிரஸ் - பாஜக துருவத் தன்மைக்கு ஓர் அரசியல் மாற்று கட்டியெழுப்புவது பற்றி, இடதுசாரி கட்சிகள் சிந்திக்க வேண்டும் என்றார். இரு துருவ எல்லைகளுக்குள் இந்திய அரசியலை சுருக்கும் முயற்சிகளை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் முறியடித்துள்ளனர் என்றார். பிராந்திய கட்சிகள், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மேடையுடன் நிற்க நம்பிக்கை உருவாக்குவது இடதுசாரிகளின் பாத்திரமாக இருக்க வேண்டும் என்றார். ஒற்றுமையைக் கட்டியெழுப்ப, இடதுசாரி சக்திகள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, உடன்பாடு உள்ள பிரச்சனைகள் மீது இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் சார்பாக கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேபபிரசாத் பிஸ்வாஸ் மற்றும் ஆர்எஸ்பியின் அபானி ராய் ஆகியோரும் ஒன்றுபட்ட இடதுசாரி போராட்டங்கள் நோக்கிய அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் முயற்சிகளை ஆதரித்து உரையாற்றினர். நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் பாத்திரம் பற்றி பேசிய தேபபிரசாத் பிஸ்வாஸ், சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்துக்கு எதிராக, இடதுசாரிகள் நாடாளுமன்றத்துக்குள் எதிர்ப்பு காட்டத் தவறியது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
கேரளா, இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் தோழர் கே.எஸ்.அரிஅரன், தோழர் டி.பி.சந்திரசேகரின் தியாகம், ஒரு விடாப்பிடியான, ஜனநாயக, புரட்சிகர இடதுசாரி மேடையை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு வரலாற்று பொறுப்பை முன்வைத்துள்ளது என்றார். தோழர் டி.பி.சந்திரசேகர் இந்த நோக்கத்துக்காக உயிர் தந்தார் என்றும் இந்த லட்சியத்துக்காக இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டார்ஜிலிங், புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோபிந்த் சேத்ரி, செங்கொடியை, மார்க்சிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, கோர்க்காலாந்து கோரும் அவரது கட்சியின் போராட்டங்களைப் பற்றி விவரித்தார். கோர்க்காலாந்து ஒப்பந்தம் கோர்க்கா மக்களுக்கு நேர்ந்த மோசடி என்று விவரித்த அவர், தனிமாநில கோரிக்கைக்கான ஜனநாயகப் போராட்டங்களை இடதுசாரிகள் விடாப்பிடியாக ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இடதுசாரிகள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் வழிமரபை உயர்த்திப் பிடித்து, புரட்சிகர மாற்றத்துக்காகப் போராட வேண்டும் என்றார்.
கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், கருத்தரங்குக்கு ஒருமைப்பாடு தெரிவித்து காணொளிச் செய்தி அனுப்பியிருந்தார். 123 உடன்பாட்டுக்குப் பிறகு அமைக்கப்படும் அணு உலைகளை எதிர்க்கிற, ஆனால், அணு ஒப்பந்தத்துக்கு முன்னால் அமைக்கப்பட்ட கூடன்குளம் அணுஉலையை ஆதரிக்கிற சில இடதுசாரி கட்சிகளின் நியாயங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு கட்சிகளின் ஆதரவுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் நன்றி தெரிவித்த அவர், மக்கள் உரிமைகளை, நமது இயற்கை செல்வாதாரங்களை, சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கூடிய, ஒரு போராடும் இடதுசாரி சக்தி வலுப்பெறும் என்ற நம்பிக்கை மக்கள் இயக்கங்களுக்கு இருப்பதாக சொன்னார்.
எஸ்எஃப்அய் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் பிரசன்ஜித் போஸ், விலைஉயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றை நியாயப்படுத்த மன்மோகன் சிங் அரசாங்கம் முன்வைக்கிற பொய்களை அம்பலப்படுத்தினார். பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதன் மூலமோ, முலாயம் சிங் மற்றும் நிதின் கட்கரி பக்கம் நிற்பதன் மூலமோ, இடதுசாரி தன்னை மீட்டெடுக்கவோ, மறுஅறுதியிட்டுக் கொள்ளவோ முடியாது என்றும் ஓர் இடதுசாரி நிகழ்ச்சிநிரல் மீதான ஒன்றுபட்ட, சுதந்திரமான போராட்டங்கள் மூலம்தான் தன்னை அறுதியிட்டுக் கொள்ள முடியும் என்றும் சொன்னார்.
உத்தர்கண்ட் லோக்வாஹினியின் தலைவர் ஷம்ஷேர் சிங் பிஷ்ட், நமது நிலமும் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பேராசை பிடித்த பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்படுவதை, மக்கள் போராட்டங்களின் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து எதிர்க்க வேண்டும் என்றார்.
பாட்னா பல்கலை கழகத்தின் பேராசிரியர் நவால் கிஷோர் சவுத்ரி, அரசின் அனைத்துக் கரங்களும், ஊடகங்கள், இப்போது பல்கலை கழகங்கள் கூட, பெருநிறுவனங்களால் கைப்பற்றப்படுகின்றன. பெருநிறுவனங்களின் இந்தக் கட்டுப்பாட்டை எதிர்க்க, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டங்கள் வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பஞ்சாப் பல்கலை கழகத்தின் பேராசியர் மன்ஜித் சிங், உலகம் முழுவதும், அமெரிக்கா, அய்ரோப்பாவிலும் பெருநிறுவன ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடப்பதாகவும், தாம் உருவான நாடுகளிலேயே தோற்றுப் போய்விட்ட இந்தக் கொள்கைகளை நமது ஆளும் வர்க்கங்கள் இந்தியாவில் திணிக்கின்றன என்றும் சொன்னார்.
மத்திய பிரதேசத்தின் முல்தாய் பகுதியில் நடக்கிற விவசாயப் போராட்டங்கள் பற்றி பேசிய டாக்டர்.சுனிலம், அவர் மீது 100 வழக்குகள் போடப்பட்டுள்ளது பற்றி விவரித்தார். அனைத்து ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் இதுபோன்ற கொடூரமான ஒடுக்குமுறை ஏவப்படுகிறது என்றும், டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் சோசலிச வழிமரபை பின்பற்றுவதாகச் சொல்லும் பல சக்திவாய்ந்த அரசியல் கட்சிகள் அதற்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் நாட்டில் வேறு பல சோசலிச சக்திகளின் போராடுகிற நீரோட்டங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தில் இடதுசாரி மற்றும் சோசலிச நீரோட்டங்கள் கரம் சேர்க்க வேண்டும் என்ற அவர், இந்தத் திசையில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் முன்முயற்சியை பாராட்டினார்.
மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகை ஆசிரியர் சுமித் சக்ரவர்த்தி, இடதுசாரி இயக்கத்தின் வெற்றிடம் மதவெறி பாசிஸ்டுகளுக்கு இடம் அளித்துள்ளது என்றும், கேரளாவிலும் வங்கத்திலும் இடது முன்னணியின் துன்பகரமான தவறுகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஒட்டு மொத்த இடதுசாரிகளும் இந்த அனுபவத்தில் இருந்து பாடம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு இதற்கு வழிகாட்ட முடியும் என்றும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் மய்யமாக அது இருக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
பகத்சிங் வழிமரபு பற்றி ஆய்வு செய்கிற, எழுதுகிற ஜவஹர்லால் நேரு பல்கலை கழக பேராசிரியர் சமன் லால், பாகிஸ்தான், லாகூரில், பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தூக்கில் இடப்பட்ட முன்னாள் லாகூர் சிறை இருந்த இடமான ஷத்மன் சவுக், பாகிஸ்தானின் இடதுசாரி சக்திகளின் நீண்டகால முயற்சிகளின் விளைவாக, பகத்சிங் சவுக் என்று பெயர் மாற்றப்பட்ட உற்சாகமான செய்தியைச் சொன்னார்.
பஞ்சாப் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் மங்கத்ராம் பாஸ்லா, கருத்தரங்கில் நிறைவுரையாற்றினார். காலனிய ஆட்சியை உயர்த்திப் பிடிக்கிற, ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவை செய்த, இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை இந்தியா பிரதமராக கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்றார். அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு போராடும் இடதுசாரி சக்திகளை ஒன்றிணைக்கும் திசையிலான ஒரு முயற்சி என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு ஒரு மிதமான ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை எட்டியிருப்பதாகவும், அது பற்றி அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு நியாயமான பெருமிதம் கொண்டிருப்பதாகவும் சொன்னார். இடதுசாரிகள் தங்கள் கருவான கோட்பாடுகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். சமாஜ்வாதிக் கட்சியுடனோ, பஞ்சாபில் அந்நிய நேரடி முதலீட்டை ஒரு நாள் எதிர்ப்பதாகவும் மறுநாளே ஆதரிப்பதாகவும் சொல்கிற சுக்பீர் பாதலுடனோ, மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி காண்பதை அவர் உதாரணமாகச் சொன்னார். அதுபோன்ற சக்திகளை ஆதரிப்பதன் மூலம், இடதுசாரிகள் தங்கள் சொந்த நம்பகத்தன்மையை இழந்துவிடுவார்கள் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியுடன் காத் திரமான வேறுபாடுகளும் வாதங்களும் இருக்கிற அதே நேரம், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து இடதுசாரி சக்திகளுடனும் பரந்த போராட்ட ஒற்றுமை காண அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு கடப்பாடு கொண்டுள்ளது என்றார். இடதுசாரிகள் ஒரு போராடும் நிகழ்ச்சிநிரலில் ஒன்றுபட்டு, ஒரு விடாப்பிடியான அரசியல் மாற்றை தர வேண்டும் என்று, நாடெங்கும் உள்ள போராடுகிற மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகவும் போராடுகிற இடதுசாரிகள் இந்த சவாலை ஏற்க வேண்டும் என்றும் சொன்னார்.
அய்முகூ அரசாங்கத்தை வெளியேற்ற, ஏகாதிபத்திய ஆதரவு, பெருநிறுவன ஆதரவு கொள்கைகளை பின்னோக்கித் திருப்ப, மதவெறி சக்திகளை எதிர்க்க, அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக, கருப்புச் சட்டங்களுக்கு எதிராக, பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைக்கு எதிராகப் போராட 12 அம்ச தீர்மானங்களை கருத்தரங்கம் நிறைவேற்றியது.
கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் இருவார கால ஒருமைப்பாட்டு இயக்கம் நடத்துவதென்றும், இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, அக்டோபர் 1 2012 அன்று கூடன்குளம் செல்வதில் இந்த இயக்கம் துவங்கும் என்றும் கருத்தரங்கம் முடிவு செய்தது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பெருநிறுவனங்களுக்கு விலக்கு, விலை உயர்வு, மான்ய வெட்டு ஆகியவற்றுக்கு எதிராகவும், அய்முகூ அரசாங்கம் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரியும் நாடு முழுவதும் இயக்கம் நடத்த கருத்தரங்கம் முடிவு செய்தது.
அக்டோபர் 5 அன்று பஞ்சாபில் 17 அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள பஞ்சாப் முழுஅடைப்பு அழைப்புக்கு ஆதரவாக பஞ்சாப் முழுஅடைப்பு நடத்த கருத்தரங்கம் முடிவு செய்தது.
நவம்பர் 9 அன்று பாட்னாவில் மாற்றத்துக்கான பேரணி நடத்துவதென கருத்தரங்கம் முடிவு செய்தது.
மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள, பிப்ரவரி 20, 21 இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தத்தை நாடு தழுவிய வெகுமக்கள் அரசியல் வேலை நிறுத்தமாக மாற்ற கருத்தரங்கம் அறைகூவல் விடுத்தது.
பேராசிரியர் அமித் பாதுரி, மது பாதுரி, அரியானாவைச் சேர்ந்த டாக்டர் சி.டி.ஷர்மா, பத்திரிகையாளர்கள் ஜாவித் நக்வி, ஆனந்த் பிரதான், ராஜேஷ் ஜோஷி ஆகியோரும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கருத்தரங் கில் 2010 முதல் 2012 வரையில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் பயணம் பற்றியும் தோழர் டி.பி.சந்திரசேகருக்கு நிழற்பட அஞ்சலி செலுத்தும் விதமும் நிழற்பட கண்காட்சி வைக்கப்பட்டது.