கூடன்குளம்:
‘அரசு என்பது ஒடுக்குமுறை கருவி’
ஜி.ரமேஷ்
‘இன்னும் இரண்டு கேஸ்களில் எங்களைச் சிறையில் அடைக்கத்தான் இங்கு கொண்டு வந்துருக்காங்க. இன்னும் எத்தனை பொய் வழக்குகளை எங்கள் மீது போடுவார்களோ. போடட்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம். எங்களை காலி பண்ணச் சொல்லும் அணு உலையை வேண்டாம் என்கிறோம்’. செப்டம் பர் 21 அன்று திருச்சி சிறையில் இருந்து வள்ளியூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இடிந்தகரை சேவியர் அம்மாள் மற்றும் 6 பெண்களிடம் வள்ளியூர் நீதித்துறை நடுவர், உங்களை எதற்காக அழைத்து வந்துள்ளார்கள் எனத் தெரியுமா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் அது.
சுந்தரி, செல்வி, பெட்லின் மூன்று பேருக்கும் 36 வயது. சேவியர் அம்மாள், சவேரியாள் 45 வயதைக் கடந்தவர்கள். ரோஸ்லினுக்கு 63 வயது. செப்டம்பர் 10 அன்று காவல்துறையினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு கடலுக்குள் விழுந்து காயம்பட்ட இவர்களை கடற்கரையிலேயே கைது செய்து கொண்டு போனது போலீஸ். இவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இப்போது அவர்கள் பிணையில் வந்து விடக் கூடாது என்பதற்காக மீண்டும் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு உட்பட இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. வீட்டில் படுத்திருந்த முதியவர்கள், பள்ளி சென்று திரும்பிய சிறுவர்கள் என எல்லோரையும் பிடித்து தேசத் துரோக வழக்கு, வெடிகுண்டு வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது ஜெயலலிதாவின் காவல்துறை. இதுவரை 56 பேர் சிறையில் உள்ளனர். கூடங்குளம், வைராவிகிணறு ஊர்களில் பெரும் பாலான வீடுகளில் ஆண்கள் இல்லை. ஊருக்குள் வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலை. பெண்கள் மட்டுமே இருக்கும் வீடுகளுக்கு இரவு நேரத்தில் காவல்துறையினர் சென்று கதவைத் தட்டி வீட்டிற்குள் யார் இருக்கிறார்கள். யாருடன் படுத்திருக்கிறாய் என்று ஆபாசமான வார்த்தையினால் பேசித் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இடிந்தகரை சுனாமிக் காலனியில் 450 வீடுகளிலும் இருந்தவர்களை விரட்டி விட்டு அந்த வீடுகளை தங்களின் இரவு நேரக் கேளிக்கை விடுதிகளாக்கி கும்மாளமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் காவல்துறையினர். பல வீடுகளில் பீரோ உடைக்கப்பட்டு நகைகளை, பணத்தைக் கொள்ளடித்துள்ளனர். சுனாமி குடியிருப்பு மக்களுக்கு இப்போது மாதாகோவில்தான் குடியிருப்பாக உள்ளது.
செப்டம்பர் 10 அன்று நடந்த தாக்குதல்களில் காயம்பட்டவர்கள் ஏராளம். மினி லாரி, ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், பள்ளி வாகனங்கள், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் என எல்லாவற்றையும் காவல்துறையினரே அடித்து நொறுக்கி விட்டு இப்போது பொதுச் சொத்தைச் சேதம் விளைவித்தாக வழக்கு போட்டுள்ளார்கள். கடற்கரையில் அமைதியாக உட்கார்ந்திருந்தவர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, எல்லை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தக் கூடிய ஸ்டன் கிரனேட் - ஆன்டிரியாட் என்னும் கெமிக்கலைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதன் விளைவாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அத்தனை பேர் முகமும் உடம்பு தீக்காயங்கள் பட்டதுபோல் பொத்து வடிந் துள்ளன. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அந்தக் கெமிக்கல்கள் எல்லாம் 2001, 2004 ஆண்டுகளில் காலாவதியாகிப் போனவை. அதனால், அவற்றின் வீரியம் குறைந்து சேதம் குறைந்துள்ளது. அந்தக் கெமிக்கலை அடித்தவுடன் ஒரு நிமிடம் நிலைகுலைந்து கீழே விழுந்துதான் பின்னர் எழுந்து ஓடினோம் என்கிறார்கள் அத்தனை பேரும். காவல்துறையினர் சொந்த நாட்டு மக்கள் மீது அந்நியர்கள் மீது வீசும் அபாயகரமாக கெமிக்கல்களை வீசியுள்ளார்கள். பெண்களை கையைப் பிடித்து இழுத்து ஆபாசமாகப் பேசி அடித்துள்ளார்கள். லவினா இரண்டு கால்களும் நடக்கமுடியாத 23 வயது பெண். தன் ஒரே குழந்தையுடன் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். தடியடித் தாக்குதல் நடந்தவுடன் தான் ஒரு பக்கமும் தன் குழந்தை ஒரு பக்கமும் பிரிந்து விட்டார்கள். எல்லாரும் ஓடும் போது தன்னால் ஓட முடியாத நிலையில், தன் குழந்தையைத் தேடி கடல் பக்கம் சென்றுள்ளார். அப்போது நீல நிற உடையணிந்த காவல்துறை கயவன் அந்த ஊனமுற்ற பெண்ணை பிடித்து வைத்துக் கொண்டு மிக அசிங்கமான வார்த்தைகள் பேசி படுக்கச் சொல்லி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அந்த வழியாக வந்த உள்ளூர் போலீஸ்காரர் அப்பெண்ணைக் காப்பாற்றி போகச் சொல்லியிருக்கிறார். காக்கி உடையணிந்துவிட்டால் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நினைப்பு ஆண், பெண் காவலர்களுக்கு வந்து விடுகிறது போலும். பத்து வயது சிறுவன் ஒருவனை பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய பூட்ஸ் காலால் மிதித்துத் தள்ளிய கொடுமையும் நடந்துள்ளது.
நாங்கள் கடற்கரையில் சமைத்து வைத்திருந்த சாப்பாட்டையெல்லாம் கொட்டிக் கவிழ்த்து விட்டு எங்களுக்கு உணவு தண்ணீர் கிடைக்காமல் தடை செய்துவிட்டு திருச்சியில் அன்னதானம் போடுகிறாராம் ஜெயலலிதா. உங்களில் ஒருத்தி நான். உங்களோடு போராட வருவேன் என்று சொன்னவர் இப்போது எங்களைக் கொல்லப் பார்க்கிறார் என்று குமுறுகிறார்கள் பெண்கள்.
இந்தக் கொடுமை கண்டு கலங்கிப்போன உதயக்குமார் தானும் மற்ற தலைவர்களும் மக்களை காவல் துறையினரிடம் இருந்து காப்பாற்ற தான் கைதாகப் போவதாக அறிவித்தார். ஆனால், போராடும் பெண்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. இளைஞர்கள் தங்கள் தலைவர்களை தூக்கி கொண்டுபோய் வைத்துக் கொண்டார்கள். போராட்டக்காரர்களின் மாயவலையில் மக்கள் இல்லை. மக்கள்தான் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று ஜெயலலிதாவிற்கு பதிலடி கொடுத்தார்கள். உடனே, காவல்துறை அவரைக் கைது செய்ய, நெருக்கடி கொடுக்க 30க்கும் மேற்பட்டவர்கள் உள்ள வழக்கில் உதயக்குமாருக்கும் அவரது மனைவி மீரா உதயக்குமாருக்கும் மட்டும் சமன் அனுப்பி நீதிமன்றத்தில் ஆஜராகச் சொன்னது.
இடிந்தகரை, கூடங்குளம் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள், பால், எண்ணெய், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து அனைத்தையும் தடை செய்தது. இது கண்டு செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்ல திட்டமிட்டபோது அதைத் தடுத்து நிறுத்திவிட்டார் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மாவட்டத் தலைவராக இருக்கும் நெல்லை மாவட்ட ஆட்சியர். இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் அப்படியொன்றும் கஷ்டப்படவில்லை. அவர்கள் அனுதாபத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். செஞ்சிலுவைச் சங்கம் அங்கு சென்றுவிட்டால் அது சர்வதேசப் பிரச்சனை ஆகிவிடும் என்றாராம். அடக்குமுறைக்குக் காரணமாக இருப்பவர்களிடம் ஆபத்துக்கு கை கொடுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்.
இப்படி இடிந்தகரையில் கொடுமைகள் ஒருபுறம் தொடந்து கொண்டிருக்க, மறுபுறம் அன்று கூத்தங்குழியில் குண்டு வெடிக்கிறது. கூடங்குளத்தில் காவல்துறை இருக்கிறதா? இல்லையா? முதல்வர் போராட்டக்காரர்களை தூண்டிவிடுகிறார் என்றெல்லாம் பேசிய கருணாநிதி, செப்டம்பர் 11க்குப் பிறகு கடற்கரை கிராமங்களிலும் கல்லூரிகளிலும் உலகெங்கும் போராட்டங்கள் வெடித்தவுடன் கூடங்குளம் தடியடி, துப்பாக்கிச் சூட்டிற்கு தமிழக அரசே பொறுப்பு என்றும் இடிந்தகரை போராட்டம் இப்போது போராட்டக்காரர்களிடம் இருந்து பொது மக்களிடம் போய்விட்டது என்றும் சொன்னார். ஆனால், அணுஉலை மூடப்பட வேண்டும் என்று மட்டும் சொல்லத் தயாராக இல்லை.
ஜெய்தாபூர் அணு உலை பிரான்ஸ் தொழில் நுட்பம். அது நிரூபிக்கப்படாதது. கூடங்குளம் அணு உலை ரஷ்யத் தொழில் நுட்பம் அது நிரூபிக்கப்பட்டது. (செர்னோபிலில் வெடித்து நிரூபித்தது இந்த கூடங்குளம் தொழில் நுட்பம் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் போலும்) அதனால் ஜெய்தாபூர் வேண்டாம். கூடங்குளம் வேண்டும். இல்லையென்றால், இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் இழப்பு என்றெல்லாம் பேசிவந்த பிரகாஷ் கரத்தின் தோழர்கள், மக்களின் போராட்டச் சீற்றம் கண்டு இடிந்த கரைக்கே சென்று தடியடி சம்பவத்தைக் கண்டித்தார்கள். அணு உலையை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்கள் அச்சத்தைக் போக்காமல் இப்படி தடியடித் தாக்குதல் நடத்தியதைக் கண்டிக்கிறோம் என்று பேசினார்கள். அதையும் இடிந்தகரை மக்கள் ஆவேசப்படாமல் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். இது ஒன்றே சாட்சி அவர்கள் எந்த அளவிற்கு அமைதிவழிப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்கு.
மத்தியப் பிரதேசத்தில் ஆற்றிற்குள் இறங்கி கழுத்தளவு தண்ணீருக்குள் நின்று விவசாயிகள் போராடியதுபோல், இடிந்தகரையில் கடலுக்குள் இறங்கி நின்று போராடினார்கள். 600 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டபோதும், மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறபோதும் எட்டிக் கூட பார்க்காத இந்திய கடற்படைக் கப்பலும் கடற்படை விமானமும் இடிந்தகரை மக்கள் போராடியபோது வேவு பார்த்தது. விமானம் மிகத் தாழ்வாகப் பறந்ததால் அதிர்ச்சியில் கீழே விழுந்து இறந்துபோனார் சகாயம். மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் மகனையும் வைத்துக் கொண்டு அவர் மனைவி திக்கற்று நிற்கிறார். சகாயம் இறந்தது விமானம் தாழ்வாகப் பறந்ததால்தான் என்பதைக் கூட பதிவு செய்ய மறுத்தது காவல்துறை. உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் செப். 17 அன்று மாலை சகாத்தின் உடல் இடிந்தகரைக்கு வந்தது. 10000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அவரின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் இகக(மாலெ)வின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர்கள் சங்கரபாண்டியன், ரமேஷ், தேன்மொழி மற்றும் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஒருபுறம் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்துக் கொண்டிருக்க, மறுபுறம் மக்கள் போராட்டத் தினைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். செப். 22 மாபெரும் தூத்துக்குடி துறைமுக முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள். அணுஉலைக்கு எதிரான கருத்து மக்கள் மத்தியில் பரவலாகி வருவது கண்டு 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டை செயற்கையாக ஏற்படுத்தி அணுஉலைக்கு ஆதரவு திரட்டப் பார்க்கிறது அரசு. காற்றாலைகள் மூலம் மின்சாரம் இப்போது கிடைக்கிறது என்றபோதிலும் அதை வாங்கக் கூடாது என்று அரசு மின்வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் வாழ்வாதாரங்களைப் பறித்து மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி வரும் ஆட்சியாளர்களின் கொள்கைகள், திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை காவல் துறையைக் கொண்டு ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தி, வீடுகளைச் சூறையாடி, கொலைகள் செய்து ஜனநாயகப் படுகொலை நடத்தி வருவதற்கு எதிராக மாலெ கட்சி அக்டோபர் 1 மாநிலந் தழுவிய எதிர்ப்பு தினம் அறிவித்துள்ளது.
கூடங்குளம் அணு உலை மூடப்பட வேண்டும், உதயக்குமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக் கானவர்கள் மீது போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கு உட்பட அனைத்து வழக்கு களையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். தாக்குதலுக்குக் காரணமான தென்மண்டல் காவல்துறைத் தலைவர் ராஜேஷ் தாஸ், மாவட்டக் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிடாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இடிந்தகரை கூடங்குளம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படைகள் முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். சம்பவம் தொடர்பாக பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கோரி இகக (மாலெ) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடத்துகிறது. அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் குமாரசாமி, மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில் தென்மாவட்டங்களின் தோழர்கள் நெல்லையில் இருந்து இடிந்தகரை நோக்கி பயணம் மேற்கொள்கிறார்கள்.
அரசு என்பது ஒடுக்குமுறை கருவி என்ற மார்க்சியப் பாடத்தை ஜெயலலிதா அரசாங்கம் தனது நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடம் ஆழப் பதிந்துவிட்டது. இதை அழிப்பது சாத்தியம் இல்லை.