கட்டுரை
கற்றுத்தரப் பார்க்கும்
மன்மோகனுக்கு கற்றுத் தருவோம்
காம்ரேட்
பணம் மரத்தில் காய்க்காது என்று மன்மோகன் இந்திய மக்களுக்கு, கற்றுத் தருகிறார். பணம் மரத்தில் காய்க்காது என்பது சரிதான். உலகம் பண்டங்களால் (பொருட்கள், சேவைகள்) நிறைந்தது. இவற்றை வாங்க விற்க பணம் தேவை. பணம் இல்லாதோர்க்கு இவ்வுலகம் இல்லை. ஏன் பல கோடி மக்களிடம் பணம் இல்லை? சிலர் கைகளில் எப்படி எல்லா பணமும் குவிகிறது? இயற்கையும் உழைப்பும் சேர்ந்துதானே எல்லா பண்டங்களும் உருவாகின்றன. அந்தப் பண்டங்களை உருவாக்கிய நகர்ப்புற நாட்டுப்புற பாட்டாளிகள் உழைக்கும் விவசாயிகள் ஏன் வறுமையில் சிக்கி உள்ளனர்? இந்தக் கேள்விகளுக்கு மன்மோகன் பதில் சொல்லமாட்டார்.
பேசாத பிள்ளை எப்போது பேசியது? என்ன பேசியது? அமெரிக்க ஊடகங்கள் மன்மோகன் செயல்படாத பிரதமர் என எழுதின. இந்தியாவின் பெருநிறுவன அதிபர்கள் (கார்ப்பரேட் எசமானர்கள்) இந்திய அரசைக் கொள்கை முடக்குவாதம் என்ற நோய் பீடித்துள்ளதாகச் சாடினர். மன்மோகனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. இது வரை அவருக்கு இரு முறை ரோஷம் பொத்துக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவோடு அணு ஆற்றல் ஒப்பந்தம் போடாவிட்டால், ராஜினாமா செய்வேன் என்றபோது, முதல் முறை அது வெளிப்பட்டது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுக் கட்சிகள் தடங்கல்கள் பற்றி எல்லாம் கவலை இல்லை, டீசல் விலையை உயர்த்தியே தீருவேன், மான்ய விலை எரிவாயு உருளைகள் எண்ணிக்கையை எப்படியும் குறைப்பேன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய கோடி முதலீட்டைக் கொண்டு வந்தே தீருவேன், பொதுத்துறை தனியார்மயத்திற்குப் பங்குகளை விற்காமல் விடமாட்டேன் என உரத்துப்பேசி மவுனம் கலைந்து இரண்டாம் முறையாக ரோஷப்பட்டுள்ளார். இந்த வீர உரைகளோடு நில்லாமல், மிகுந்த இறுமாப்புடன் (சாமான்ய மொழியில் வாய்க் கொழுப்புடன்) பணம் மரத்தில் காய்க்கிறதா எனக் குதர்க்கமாய்க் கேட்டுள்ளார்.
மன்மோகனுக்குச் சில கேள்விகள்
பணக் குவியல், செல்வக் குவிப்பு, மூலதனத் திரட்சி பற்றி சில விவரங்கள் சொல்லி சில கேள்விகள் எழுப்புவோம். கடல் போல் வறுமை பெருகியுள்ள நாட்டில் மலைபோல் செல்வம் குவிந்துள்ளது. பில்லியனர்கள், அல்ட்ராஹை நெட்ஒர்த் இன்டிவிஜ÷வல்ஸ், அதாவது ரூ.5000 கோடிக்கு மேல் சொத்துடையவர்கள், அதிஉயர் நிகர மதிப்புடையவர்கள் கைகளில் செல்வம் குவிந்துள்ளது. மக்கள் உழைத்து உழைத்து செல்வத்தை உருவாக்கிக் குவித்தார்கள். மன்மோகனும் உலகமயச் சீர்திருத்தங்களும், அந்தச் செல்வங்களைச் சிலர் கைகளில் குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7730 அதிஉயர் நிகரமதிப்பு தனிநபர்கள் கைகளில் 925 பில்லியன் டாலர் அதாவது ரூ.45,75000 கோடி குவிந்துள்ளது. சராசரியாய் இவர்களிடம் ஆளுக்கு ரூ.593 கோடி உள்ளது. இவர்களில் 109 பேரிடம் ரூ.5000 கோடிக்கு மேல் உள்ளது. மரத்தில் காய்க்காமல், சொத்தாய்க் குவிந்துள்ள செல்வங்களின் கதை இது என்றால், வருமானம் தொடர்பான கதை ஒன்றும் உள்ளது.
பெருநிறுவன அதிபர்கள் சம்பள விவரங்கள் 2011-2012க்குத் தரப்பட்டுள்ளது. 2011 -2012ல் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்டின் நவீன் ஜிண்டால் பெற்ற சம்பளம் ரூ.73.42 கோடி. சன் நெட்ஒர்க்கின் கலாநிதியும் காவேரியும் ஆளுக்கு ரூ.57.1 கோடி சம்பளம் பெற்றனர். ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷனின் பவான் முஞ்சாலும், பிரிஜ் மோகன் முஞ்சாலும் ஆளுக்கு ரூ.34.55 கோடி சம்பளம் பெற்றனர். மெட்ராஸ் சிமென்ட்சின் பி.ஆர். ஆர்.ராஜா ரூ.29.34 கோடி சம்பளம் பெற்றார். மாருதி சுசுகியின் ஷின்சோ நாகநாகி ரூ.28.12 கோடி சம்பளம் பெற்றார். முதல் பத்து பேர் ஆண்டு சம்பளம் ரூ.387 கோடி. மரத்தில் காய்க்காமல், பணம் சம்பளமாய்ச் சென்றது. நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்திற்குக் குறையாமல் சிலர் பெறும்போது, சிலர் பெறுவதால், மாதம் ரூ.2000 கூடப் பெற முடியாமல் பலகோடி பேர் நாட்டில் உள்ளனர். கார்ப்பரேட் கனவான்களும் சீமாட்டிகளும் ஒரு நாளில் பெறும் ரூ.10 லட்சத்தை, கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் அமைப்புசாராத் தொழிலாளர்களும் 18 முதல் 58 வயது வரை 40 ஆண்டுகள் வேலை செய்தாலும், பெற முடியாது.
இப்படி ஆனது எப்படி?மார்க்சியத்திற்கு மூன்று உள்ளடக்கக் கூறுகளும் தோற்றுவாய்களும் இருப்பதாக, தோழர் லெனின், ஜெர்மானிய சித்தாந்தம் பிரெஞ்சு சோசலிசம் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்துவார். உலகமயச் சீர்திருத்தங்கள் வேகம் பிடித்துள்ள இந்தியாவில், மூலதனத் திரட்சி, மூன்று வழிகளில் நடைபெறுகிறது. சாமான்ய மொழியில், மூன்று வழிகளில் செல்வம் குவிகிறது.
முதல் வழிகூலி குறைய லாபம் உயரும், லாபம் உயர கூலி குறையும். இந்த விதியின் கீழ்தான் முதலாளித்துவப் பொருளாதாரம் இயங்கும். இந்த விதியைப் பலப்படுத்தத்தான் மாருதியில் தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை வதை முகாமாக, சிறைச்சாலை யாக மாற்றப்பட்டு, துப்பாக்கி முனையில் உற்பத்தி நடக்கிறது. அவுட்சோர்சிங், சப் காண்ட்ராக்டிங், தற்காலிக, ஒப்பந்த, பயிற்சியாளர் முறை எல்லாமே, இதற்காகத்தான் அமல்படுத்தப்படுகின்றன. இதற்காகத்தான், குறைந்தபட்ச கூலி ரூ.15,000 என்ற கோரிக்கையை வெறுக்கிறார்கள். தொழிலாளியை அடக்கி ஆளத்தான், வேலையில்லா சேமப் பட்டாளமும் உபரி மக்கள் தொகையும் (உற்பத்தியிலிருந்து விலக்கி வைக்கப்படும்) பல கோடி பேர் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். விவசாயத்தை ஒழித்துக்கட்டி குறைந்த கூலி பெற ஒரு பட்டாளத்தை நகரம் நோக்கி விரட்டுகிறார்கள். கூலி குறைகிறது. லாபம் அதிகரிக்கிறது. மூலதனம் குவிகிறது.
இரண்டாம் வழிஎண்ணெய் மானியம் ஆண்டுக்கு ரூ.1.6 லட்சம் கோடி ஆகிவிட்டது, இதற்கு மேல் போனால் நல்லதல்ல என்கிறார் மன்மோகன். ஆனால், அரசியல் அதிகாரம் முதலாளிகள் கைகளில் இருப்பதால், அதைவிட 3 மடங்கு அதிகமாக, சுமார் ரூ.5 லட்சம் கோடி வரிகளை, முன்னுரிமை பெற்ற வரி செலுத்துவோருக்கு மான்யம் என, பெருநிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்கிறார்கள். அரசு கஜானாவிற்கு வர வேண்டிய பணம், பெருநிறுவனங்களின் கஜானாவிலேயே நின்றுவிடுகிறது.
வோடோஃபோன் வரிப் பிரச்சனை உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, நேரடி வரிச் சட்டம் மூலமும் 2012 - 2013 நிதிநிலை அறிக்கைப்படியும் இந்தியாவில் ஜெனரல் ஆண்ட்டி அவாய்டன்ஸ் ரூல் (எஅஅத) அமல்படுத்தப் போவதாகச் சொன்னார்கள். (எஅஅத பொது வான வரிதவிர்ப்பு எதிர்ப்பு விதி) வரி ஏய்ப்பு சட்டவிரோதம் வரி தவிர்ப்பு சட்டபூர்வமானது என்ற இரண்டிற்கும் இடையிலான எல்லைக் கோடு மங்கலானது என்பதால், வரி தவிர்ப்பு எதிர்ப்பு வேண்டும் என, குடியரசுத் தலைவர் ஆகும் முன் நிதி அமைச்சராக இருந்த பிரணாப் சொன்னார். இதனைப் பின் தேதியிட்டுச் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். இப்போது இம்முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்முடிவு மெல்லச் சாகும். வாராக் கடன், வரி தவிர்ப்பு, வரி விலக்கு என்ற இரண்டாம் வழியிலும் மூலதனம் குவிகிறது.
மூன்றாம் வழிஇதனை அக்யுமலேஷன் பை டிஸ்பொசஷன் என்கிறார்கள். சூறையாடுவதன் மூலம் குவிப்பது. நிலம், கனிம வளங்கள், இயற்கை வளங்களைச் சூறையாட, பெருநிறுவனங்களுக்கு வழிவகை செய்வதுதான் மூன்றாவது வழி. நாட்டு மக்களிடமிருந்து, பழங்குடியினரிடமிருந்து, விவசாயிகளிடமிருந்து, நாட்டிடமிருந்து, சொத்துக்களைச் சூறையாடுவதுதான் இந்த மூன்றாவது வழி. இதைத்தான், முன்னேற்றத்தின் அமிர்தம் கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளிலிருந்து பருகப்படுகிறது என மார்க்ஸ் எழுதினார். சிங்கூர், நந்திகிராம், அலைக்கற்றை, நிலக்கரி, கிரானைட், பசுமை வேட்டை, போன்ற அனைத்தும், இந்த மூன்றாவது வழியோடு தொடர்புடையவை. இப்படி முதலாளித்துவ பொருளாதாரத்தைக் கொழுக்க வைக்க, முதலாளித்துவத்திற்கு தில்லுமுல்லு சேவை செய்ய, முதலாளித்துவ அரசியலுக்குக் கிடைப்பதுதான், ஊழல் பணம்.
இந்த மூன்று வழிகளும் சேர்ந்ததுதான் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப்பாதை. இப்பாதை தேசத்திற்கும் மக்களுக்கும் விரோதமானது.
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி சிறந்தது?இந்தப் பாதையைப் பின்பற்றுவதில், காங்கிரசில் இருந்து பாஜக மாறுபட்டதல்ல. மாயாவதி, முலாயம், மமதா, நிதிஷ், மோடி, நவீன், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய அனைவர்க்கும், இப்பாதையில் கருத்தொற்றுமை உண்டு. இந்த அடிப்படையான உண்மை மிக முக்கியமானதுதான். ஆனால், மதவாத பாஜக ஆபத்து என்று சொல்லி, மன்மோகன் அரசை நீடிக்க விட முடியுமா?
மாற்றுக் கொள்கைககள், மாற்றுப் பாதை அடிப்படையிலான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் என்ற திசை மட்டுமே வெளிச்சம் நோக்கி இட்டுச் செல்லும்.
பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால், பணக்காரர்களே நடத்தும் மன்மோகன் ஆட்சிக்கு, பாடம் கற்றுத் தருவோம்.