பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு கருத்தரங்கம்
மேற்கு வங்கத்தில் பெண்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து கொல்கத்தாவில் செப்டம்பர் 12 அன்று முற்போக்கு பெண்கள் கழகம் கருத்தரங்கம் நடத்தியது. பெண்கள் கழக மாநிலச் செயலாளர் தோழர் சைதாலி சென் கருத்தரங்குக்கு தலைமை தாங்கினார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி ஒருவர் கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது சகோதரிக்கு நடந்த கொடுமை பற்றி பேசினார். கவிஞர்கள் நபருன் பட்டாச்சார்யா, கிருஷ்ணா பாசு மற்றும் மாலெ கட்சி, முற்போக்கு பெண்கள் கழகம், ஏஅய்சிசிடியு தவைர்கள் கருத்தரங்கில் உரையாற்றனர்.
கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள்
முற்போக்கு, ஜனநாயக பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக மாநில பெண்கள் ஆணையம் புனரமைக்கப்பட வேண்டும்.
பெண்கள் மீதான ஒவ்வொரு வன்முறை சம்பவத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
பெண்கள் மீதான வன்முறை புகார்களை பதிவு செய்யும் மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
எல்லா மாவட்டங்களிலும் ஒன்றியங்கள்தோறும் பெண்கள் மீதான வன்முறை புகார்களை பதிவு செய்ய சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்.
காவல்நிலைய காவலில் பெண்கள் வன்முறைக்குள்ளாகும் சம்பவங்களில் குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
விளையாட்டு வீரர் பிங்கி பிரமானிக் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய விதத்தில் அவர் பாலின சோதனைக்குட் படுத்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
பாலியல்ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்வதில் முழு பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும்.