தமிழக பழங்குடியினர் வாழ்வுரிமையும் எதிர்காலமும்
சந்திரமோகன்
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜ÷லை 2011ல் ஊட்டியில் வசிக்கும் படுகர் சாதியினரை தமிழக பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார். கோரிக்கையை பழங்குடியினர் விவசாயத்திற்கான அமைச்சரகம் நிராகரித்துவிட்டது. சுமார் 8 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ள, தமிழகத்தில் 1% மட்டுமே, கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற்றிருக்கிற, தமிழகப் பழங்குடியினருக்கு அச்சுறுத்தலாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட சமூக, பொருளாதாரத்தில் முன்னேறிய படுகரை நிறுத்த முயற்சித்தனர். தேயிலை பாக்டரி முதலாளிகள் எனப் பல வண்ண சேர்க்கையை கொண்ட பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள சாதியை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரியது ஏதோ கொடநாடு பாசத்தினால் அல்ல. வாக்கு வங்கி அரசியல் என்ற சந்தர்ப்பவாத அரசியலே ஆகும். தமிழக பழங்குடியினரின் நிலையை பற்றி, குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களின் மிக மிகப் பின்தங்கிய இருத்தல் குறித்த அக்கறையற்ற, கரிசனமற்ற அணுகுமுறையே.
2012 ஆகஸ்ட் 11, 12 தேதிகளில், தருமபுரியில் நடைபெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யால் வழிநடத்தப்படுகிற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாட்டு தீர்மானங்கள், மாநாட்டையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் போன்றோரின் பேச்சுக்கள், தமிழக பழங்குடியினர் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் அதிகப்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதுமுள்ள காட்டுநாய்க்கன், குருமன்ஸ், கொண்டாரெட்டி போன்ற பழங்குடியின ருக்கு பல மாவட்டங்களிலும் சாதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்கிறது, தீர்மானம். குரும்பர், குரும்பா, மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழை வழங்க மத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன; இவர்களுக்கு பழங்குடியினர் அங்கீகாரம் விரைந்து வழங்கிட வேண்டும் என்றார் பிருந்தா கரத். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சிபிஎம் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரும்பர்/குரும்பா என்கிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை பழங்குடியினர் பட்டியலுக்குக் கொண்டு வர கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். தங்கள் மலைவாழ் மக்கள் சங்கத்தில், நடவடிக்கைகளில் அணி திரட்டியும் வருகின்றனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குரும்பர்/குரும்ப கவுண்டர் என்ற சமூக, பொருளாதா ரத்தில் முன்னேறிய பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டுமென்பது, 1% இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதற்கு கூட வழி வகைகள், வாய்ப்புகள் அற்றுள்ள தமிழக பழங்குடியினரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு சவால் விடுக்கும் அச்சுறுத்தலாகும்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக பழங்குடியினர் மக்கள் தொகை 6,51,321. இது தமிழக மக்கள் தொகையான 62,405,679ல் 1.04%. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தொகை கூடியுள்ளது; இன்னமும் அது வெளியிடப்படாததால், ஒப்பிடுவதற்கும், கணக்கிடுவதற்கும் அடிப்படையாக 2001 சென்சஸ் இங்கு எடுத்துக் கையாளப்படுகிறது. 16 மாவட்டங்களில் பழங்குடியினர் பரவலாக இருந்தாலும், 6 மாவட்டங்களில் கணிசமானோர் குவிந்திருக்கின்றனர். சேலம் 1,03,921, திருவண்ணாமலை 72,760, விழுப்புரம் 63,920, வேலூர் 63.040, தருமபுரி 59.548, நாமக்கல் 51,416 ஆகும்.
தமிழக பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ள 36 குலங்களில், மலையாளி எனப்படுகிற தமிழ் பேசுகின்ற பழங்குடியினர் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவராவர். இருளர் 1,60,000க்கும் மேற்பட்டவராவர். ஆறு பழங்குடி பிரிவினர், அதாவது தோடர், கோட்டா, குரும்பா, இருளர், பனியன் மற்றும் காட்டுநாய்க்கன் பாதிப்புக்குள்ளான தொல்பழங்குடிகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த பழங்குடிப் பிரிவினரின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. அல்லது அப்படியே நீடிக்கிறது. 6 பழங்குடியினரில் தோடர், கோட்டா, குரும்பா, பனியன், காட்டுநாய்க்கன் நீலகிரி மாவட்டத்தில் குவிந்து இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பழங்குடியினரும் சேர்ந்து மக்கள் தொகை(2001 சென்சசின்படி) 28,373 மட்டுமே ஆகும்.
பட்டியலிடப்பட்டுள்ள 36 பிரிவினரில், 6 பிரிவினர் மட்டும் தொல் பழங்குடியினராக வகைப்படுத்தப் பட்டுள்ளதற்கான அடிப்படையான காரணம் இவர்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. (அதாவது அழிந்து வருகிறது) அல்லது அதிகரிக்காமல் அப்படியே நீடிக்கிறது என்பதாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாற்பதாண்டுகளில் இருளர் எண்ணிக்கை 100 சதம் கூடுதலாக உயர்ந்தபோது, காட்டுநாய்க்கர் எண்ணிக்கை 800 சதவீதமாக உயர்ந்தது. 1991ல் வெரும் 8 பேர் என கணக்கிடப்பட்ட கொண்டாரெட்டி 2001ல் 19,400 ஆக உயர்ந்துள்ளது கிளைக் கதையாகும். ரெட்டி, நாய்க்கர்/நாயுடு போன்ற சாதிகளைச் சேர்ந்தோர் போலி பழங்குடி சாதி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு இடஒதுக்கீடு வாய்ப்புகளை பறித்துக் கொண்டனர். இவை குறித்து தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குரும்பா மற்றும் குருமன்ஸ் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெறுவதற் கான முயற்சிகளில், முன்னேற முடியாத குரும்பர்/குரும் பகவுண்டர் தங்கள் சாதி அமைப்புகள் மூலமாகவும், சிபிஎம்மின் தநா மலைவாழ் மக்கள் சங்கம் மூலமாக வும், ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் மூலமாகவும் பட்டியலுக்குள் வர முயற்சிக்கின்றனர்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டிஷாரால், காப்பி, தேயிலை போன்ற தோட்டங்களை உருவாக்குவதற்காகவும், கோடை வாசஸ்தல பங்களாக் களை அமைத்துக் கொள்வதற்காகவும், ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளில், மலைகளிலிருந்து பழங்குடியினர் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவது துவங்கியது. பரம்பரையாக நிலங்களின் மீது உரிமை பெற்றிருந்த பழங்குடியினரின் நில உரிமைகளை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரால், மாவட்ட வருவாய் துறையினர் வனப்பகுதி, ரெவின்யூ பகுதி என நிலங்களை பிரித்தனர். கனிம வளங்கள் நிறைந்த மலைப் பகுதிகள் முதலாளிகளுக்கு வழங்குவதும், 1950களில் துவங்கியது எஸ்டேட்டுகளில் பணியாற்றுவதற்கு வெளியிலிருந்து தொழிலாளர்கள் வருகையும், மரங்களை வெட்டுவதற்கு வியாபாரிகளின் வருகையும் சேர்ந்தது. விலை உயர்ந்த சந்தனம், தேக்கு மரங்களை சூறையாடுவதற்கு கொள்ளையர்களுடன் அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டனர். தனிமைப்பட்டு இருந்த நிலை, போக்குவரத்து சாலை இல்லாமை, பின் தங்கிய விவசாய உற்பத்தி ஆகியவை அன்றாட வாழ்க்கையை பழங்குடியினருக்கு சிக்கலாக்கியது. வெளியிலிருந்து வந்த பணக்காரர்கள், அரசியல் வாதிகள் பழங்குடியினரின் நிலங்களை அற்ப, சொற்ப விலைக்கு வாங்கினர். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட, பழங்குடியினர் நிலங்களைப் பாதுகாக்கும் அரசு ஆணை 15-4பி(1932) கடைபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்த மலைப்பகுதிகள், பழங்குடியினர் உரிமைகள், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 244(1) ன் அடிப்படையிலான 5வது அட்டவணை மூலமாக வும் பாதுகாக்கப்படவில்லை. திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில், அரசியல்வாதிகளின் ஆதரவோடு, காட்டுக்கொள்ளையர் உருவெடுத்தனர். தமிழக முழு வதுமுள்ள சந்தன மரங்களை வெட்டினர் வாச்சாத்தி வன்முறை, சந்தன வீரப்பன் வேட்டை நிகழ்ச்சிப் போக்கெல்லாம் இதன் பின்னணியில் நடைபெற்றன. நில வியாபாரம், ரியல் எஸ்டேட் சூடு பிடித்தபொழுது திமுக, அதிமுக கட்சித் தலைவர்கள் முதல் முதலாளிகள் வரை மலைகளில் இருந்த பழங்குடியின மக்களின் நிலங்களை அச்சுறுத்தியும், ஏமாற்றியும் வாங்கினர். நில அபகரிப்புகள் இயக்கப் போக்கு ஆயின. பழங்குடியின ருக்கு என வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்ட நிலங் களை பிற சாதியினர் வாங்க முடியாது. 20 ஆண்டு களுக்குப் பின்னரும் கூட விற்க முடியாது போன்ற நிபந்தனைகள், 2சி கண்டிசன் பட்டா அடிப்படையில் நிலங்கள் இருந்தாலும் கூட, நிலப் பரிமாற்றங்களில், ஆவணங்களை பதிவு செய்வதில் பல்வேறு தில்லு முல்லுகள் நடைபெற்றுள்ளன. தநாவில் உள்ள பல்வேறு பத்திரப் பதிவு அலுவலர்கள் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில், அரசியல்வாதிகளோடு கைகோர்த்து நிற்கின்றனர்.
சின்ன கல்ராயன் மலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு, டிஎம் செல்வகணபதிக்கு, நூற்றுக்கணக்கான ஏக்கர் பழங்குடியினர் நிலங்களும், புறம்பபோக்கு நிலங்களும், ஏற்காடு மலையில் கனிமொழிக்காக கீரைக்காட்டில் 248 ஏக்கரும், கிரேஸ் புரோக் எஸ்டேட்டும், ஏலகிரி மலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முதல் கருணாநிதி குடும்பம் வரை, சத்திய மங்கலம் வனப்பகுதியில் கோவை, ஈரோடு மாவட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், முதலாளிகளின் பிடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள், நீலகிரி முதல் கூடலூர் வரை ஆ.ராசா, கனிமொழிக்கு நிலங்கள், கொடநாடு எஸ்டேட் முதல் கோத்தகிரி மலையில் ஜெயாவிற்கு நிலங்கள், பல்வேறு கல்வி வியாபாரிகளின் பிடியில் பழங்குடியினர் நிலங்கள் என மிகப் பெரிய பட்டியல் உள்ளது. இந்தியாவிலேயே, மலைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பழங்குடி மக்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டதில், தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அரசியல்வாதிகள் பெரும் பங்கு வகிப்பதால் தான், திமுக, அதிமுக ஆட்சி காலங்களில், 1990களிலிருந்து இன்று வரையும் கூட, தமிழக பழங்குடியினர் நில உரிமையை பாதுகாக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் 2006 (பழங்குடியினர் மற்றும் பரம்ப ரையாக காடுகளில்/வனங்களில் வசிப்போரின் வனத்தின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டம்), நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்ட பின்னரும் கூட, தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியவில்லை. 2009க்குள் அமல்படுத்தி முடித்திட வேண்டுமென நிபந்தனை இருந்தபோதும் கூட, முன்னாள் வனத் துறை அதிகாரிகள் உயர்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் காரணமாக அமல்படுத்தப்படவில்லை என்கிறது தமிழக அரசாங்கம். 10 ஏக்கர் வரை தங்களது பயன்பாட்டில் இருக்கும் நிலத்தின் மீதான பட்டா உரிமை, காட்டில் விளையும் பொருட்கள் மீதான உரிமை போன்றவை தமிழக பழங்குடியினர் பெற முடியவில்லை. 21,781 கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில மாவட்டங்களில் (சேலம், தருமபுரி, கிரஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்) கோரிக்கை மனுக்கள் வாங்குவது கூட நடைபெறவில்லை. மற்றொருபுறம், புலிகள் சரணாலயம் என்ற பெயரில் ஈரோடு சேலம் நீலகிரி மாவட்டங்களில் சத்தமில்லாமல் நிலங்களிலிருந்து பழங்குடியினரை வெளியேற்றுவதும் நடைபெறுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகள், சில கிராமங்களைக் கொண்ட நாடுகள், 5000க்கும் அதிகமான மக்கள் தொகை என்றெல்லாம் இருந்த போதிலும் கூட சாலைகள் இல்லாத மலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களோ, பள்ளிக்கூடங்களோ, மின்சார இணைப்புக் கூட இல்லாத மலைக் கிராமங்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. பிரசவத்திற்கு கர்ப்பிணிப் பெண்களை தூளியில் வைத்து கீழே தூக்கி வருவதும், பிரசவத்திற்கு பிறகு தாயையும், குழந்தையையும் உயிரோடோ, பிணமாகவோ தூளியில் எடுத்துச் செல்லும் அவல நிலை இன்றளவும் வத்தல் மலை(தருமபுரி மா.வ.) கண்ணம்பாடி மலை(சேலம்.மா.வ.) என பலவற்றிலும் பார்க்க முடிகிறது. செல்போன் டவரும், இண்டெர்நெட் வசதியும் மிக்க வத்தல் மலைக்கு, சாலை அமைப்பதற்கான நிதி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு பல ஆண்டுகளானப் பின்னரும் தார்ச் சாலை அமைக்கப்படவே இல்லை. கண்ணம்பாடி மலையில் அவல நிலையை சுட்டிக் காட்டி விஆர்டிபி என்ற தொண்டு நிறுவனம் முதலாளித்துவ கம்பெனியாக மாறியதுதான் நடைபெற்றது. சேலம் பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நெய்யமலை முதல் பல கிராமங்களில் இன்றளவும் மின் இணைப்பு கிடையாது. மாணவ, மாணவியர் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று கல்வி கற்கும் நிலை இன்றும் நிலவுகிறது. பள்ளிக் கல்வியே முடிக்க முடியாத நிலை நீடிப்பதால், உயர்கல்விக்கு செல்வோர் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். இந்த ஆண்டு 2012 பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்கில் அரசு ஒதுக்கீடு 1804 இடங்களாகும். சேர்ந்தது 365 பேராகும். 80 சதம் பழங்குடியினருக்கான இடங்கள் 1439 காலியாகவே இருந்தது. பல்வேறு அரசாங்கத் துறை களில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள் நூற்றுக்கணக்கில் நிரப்பப்படாமலேயே உள்ளன. ஒருங்கிணைந்த பழங்குடிப் பகுதி வளர்ச்சித் திட்டம் (அய்டிடிபி) உள்ளிட்ட பலத் திட்டங்களும், உண்டு உறைவிடம் பள்ளிகளும் பெரியளவு வளர்ச்சிகளை கொண்டுவரவே இல்லை. தாலுகா தலைநகர்களுக்கு செல்வதற்கு கூட 70 கி.மீ.வரை பயணம் செல்ல வேண்டிய நிலையே நீடிக்கிறது.
பழங்குடியினர் விளைவிக்கும் விவசாய பொருட் களுக்கு சந்தைப்படுத்த சாலை வசதியில்லாதது பெரும் பிரச்சினையாக உள்ளது. குறைந்த விலைக்கு நகர்ப்புற வியாபாரிகளுக்கு விற்கும் நிலையும் உருவாகிறது. மற்றொரு புறம் வேதாந்தா போன்ற பெருங்குழுமத்தின் கனிமச் சுரங்கத்தினால் ஜீவாதாரமும், விவசாய நிலமும் பாழ்பட்டுப் போவதும் நடைபெற்றுள்ளது. பெருங்குழும பொறுப்புணர்ச்சி மிக்க வேதாந்தா பழங்குடியினருக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. சட்ட விரோத கிரானைட் மற்றும் கல்குவாரிகளுமாக சேர்ந்து இயற்கையை சீரழித்தது மட்டுமல்லாமல், பழங்குடியினரின் வாழ்வுரிமையையும் பறித்து வருகின்றன.
வாச்சாத்தி - அப்பாவி பழங்குடி மக்கள் (குறிப்பாக மலையாளிப் பழங்குடி பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான) தாக்குதலுக்கு மறவாத சாட்சி யமாக நிற்கிறது. சிறப்பு படையிலிருந்த 269 பேர் மீது வழக்கு பதிவாகி நீதி கிடைக்க 20 ஆண்டுகள் ஆனது. தாமதமான நீதியாக இருந்தாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை செசன்ஸ் நீதிபதி குமரகுரு எழுதினார்.
அதிமுகவின் பெரும்புள்ளிகள் ஆதரவுடன் மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம், தருமபுரி வனப் பகுதியில் வீரப்பன் கும்பல் சந்தன மரங்களை வெட்டி யது. 1993ல் வீரப்பனை வேட்டையாட தமிழ்நாடு, கர்நாடக கூட்டு சிறப்பு அதிரடிப்படை நிறுவப்பட்டது. வீரப்பனோடு தொடர்பு இருந்ததாக பழங்குடியினர் பலரும் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டனர். வாச்சாத்தி போலவே, கூட்டு அதிரடிப் படையினர் தண்டிக்கப்பட வேண்டிய நீதி/தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
அடிப்படை வசதிகள் கோரிப் போராடியதற்காக இன்றும் பழங்குடியினர் மீதான பல வழக்குகள் விசார ணையில் உள்ளன. மலைப்பகுதிகளில் சோதனைச் சாவடி மூலமாக பழங்குடியினரைத் தாக்குவது அன்றாட நிகழ்வாகத்தானிருக்கிறது. விழுப்புரத்தில் இருளர் பெண்கள் மீதான வன்முறையும் அதன் மீதான தமிழக காவல்துறையின் விசாரணையும் பழங்குடியினரை குற்ற சமூகமாக சித்தரிக்க முயற்சிக்கிறது. இவற்றிற்கு எதிராகவும் நில அபகரிப்புகளுக்கு எதிராகவும் வன உரிமைச் சட்டம் 2006அய் அமலாக்கக் கோரியும் பழங்குடி கிராமங்களுக்கான உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகவும் கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும் பழங்குடியினரின் உரிமைகளைப் பறிக்கும் அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளுக்கு எதிராகவும் புரட்சிகர இடதுசாரிகள் போராடும் பழங்குடி மக்களோடு கரங்கோர்த்து நிற்கின்றனர்.