COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, October 6, 2012

ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் சங்கத் தேர்தல்
அகில இந்திய மாணவர் கழகம் பெரும்பான்மை வெற்றி
செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மற்றும் டில்லி பல்கலை கழக மாணவர் சங்கத் தேர்தல்களில் அகில இந்திய மாணவர் கழகம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தைப் பொறுத்தவரை இடதுசாரி சக்திகள் பெரும் வெற்றிபெற்றுள்ளன. சங்கத்தின் பெரும்பான்மை இடங்களை அகில இந்திய மாணவர் கழகம் மீண்டும் வென்றது. ஜவஹர்லால் நேரு பல்கலை கழக எஸ்எஃப்அய்யும் எஅய்ஒய்எஃப்பும் இணைந்து தேர்தலை சந்தித்தன.

நான்கு நிர்வாகிகள் பதவிகளில் 3 பதவிகளிலும் 12 கவுன்சிலர் பதவிகளிலும் அகில இந்திய மாணவர் கழகம் வெற்றி பெற்றது. ஜவஹர்லால் நேரு பல்கலை கழக எஸ்எஃப்அய் வேட்பாளர் தலைவர் பதவியில் வெற்றி பெற்றுள்ளார். துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளில் அகில இந்திய மாணவர் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
அகில இந்திய மாணவர் கழக இணைச் செயலாளர் வேட்பாளரான பியுஷ் ராஜ் 1566 வாக்குகள் பெற்று 139 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அகில இந்திய மாணவர் கழக பொதுச் செயலாளர் வேட்பாளரான ஷகீல் அஞ்சும் 1719 வாக்குகள் பெற்று 980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அகில இந்திய மாணவர் கழக துணைத் தலைவர் வேட்பாளரான மீனாட்சி புராகோஹேன் 1816 வாக்குகள் பெற்று 920 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டில்லி பல்கலை கழக மாணவர் சங்க தேர்தல்களில் அகில இந்திய மாணவர் கழகம் போட்டியிட்ட நான்கு பதவிகளிலும் 3000 முதல் 4700 வாக்குகள் பெற்றது. தலைவர் பதவியில் 3000 வாக்குகளும், பொதுச் செயலாளர் பதவியில் 4700, துணைத்தலைவர் பதவியில் 3600, இணைச் செயலாளர் பதவியில் 3700 வாக்குகளும் பெற்றது. பதவிகள் வெல்ல முடியவில்லை எனும்போதும், டில்லி பல்கலை கழகத்தில் இடதுசாரி கருத்துக்களின், அகில இந்திய மாணவர் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.

Search