கட்டுரை
பகத்சிங் கனவு கண்ட இளைய இந்தியா எங்கே?
கே.ஜி.தேசிகன்
செப்டம்பர் 28, பகத்சிங் பிறந்த நாள். 2012ல் அதே நாளில் பாகிஸ்தானின் லாகூர் மாவட்ட நிர்வாகம், பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இடமான சாட்மான் சவுக் என்ற இடத்தை பகத்சிங் சவுக் என பெயர் மாற்றம் செய்து அறிவித்தது. இந்திய நாட்டுக்காரர் பெயரை வைக்கக் கூடாது என்று பலத்த எதிர்ப்பு இருந்த போதும், பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி புரட்சிகர, ஜனநாயக இயக்கங்கள் நடத்தி வந்த தொடர் பிரச்சாரத்தினால் லாகூர் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இளைஞர்களின் ஆதர்ச திருவுருவாக இருக்கும் பகத்சிங் கனவு கண்ட இந்தியாவில் இளைஞர்கள் மாணவர்களின் இன்றைய நிலை என்ன?
வியாபாரமாகிவிட்ட கல்வியும், வேலையில்லாத் திண்டாட்டமும்
அனைவருக்கும் கல்வி, சமச்சீர் கல்வி, கல்வி உரிமை சட்டம் போன்ற தம்பட்டங்கள் கல்வியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அத்தியாவசியத் தேவை யான குடிநீரும், கழிப்பறையும் பள்ளிகளில் நிறுவ இப்போதுதான் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது. தமிழகத்தில் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் பின்பற்றபடுவதில்லை. அல்லது வேறுவேறு பெயர்களில் தனியாக வசூலிக்கப்படுகின்றன. சில விதிவிலக்குகள் தவிர ஜனநாயக கல்வி சூழல் எங்கும் கிடையாது. மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படுவதேயில்லை. மாணவர் பேரவை என்றாலே படிப்பு கெட்டுப் போய்விடும் என்ற கருத்து குடிமக்கள் மத்தியில் ஆளும் வர்க்கத்தால் விதைக்கப்பட்டிருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் மாணவர் விடுதிகளின் நிலையில் மாற்றம் இல்லை. தமிழகம் முழுக்க புற்றீசல் போல் தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் முளைத்துக் கொண்டிருக்கின்றன. கல்வி அறக்கட்டளைகள் பெயரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைத்து போடப்பட்டிருக்கின்றன.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து முடித்தவுடன் வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விலேயே வேலை என்ற தூண்டில் போட்டு மாணவரையும், பெற்றோரையும் இழுக்கின்றன. லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து படித்த பின்னர் உலகம் முழுவதும் நெருக்கடி, பொருளாதார மந்த நிலை காரணமாக வளாக நேர்முகத் தேர்வுக்கு நிறுவனங்கள் வரவில்லை என்று கையை விரித்து விடுகிறார்கள். அப்படியே வந்த ஒரு சில நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றன. கையில் பணியில் சேருவதற்கான ஆணை இருக்கும். எந்த தேதி என்றுதான் தெரியாது. இந்த சூழல் நிலவுவதால் முதுகலை பட்டம் படித்து வைத்துக் கொள்ளலாம் என்று மாணவர்கள் அதில் சேர்கிறார்கள். இந்த வருடம் மட்டும் முதுகலை படிப்பு சேர்க்கை 15 - 20% உயர்ந்திருக்கிறதாம். கல்வி வியாபாரிகளுக்கு கொள்ளை லாபம். பள்ளி கல்வி முடித்தவர்கள், கலைக் கல்லூரியில் படித்தவர்கள் என்று லட்சோபலட்சம் பேர் எதிர்காலம் பற்றிய கேள்வியோடு, ஆணும், பெண்ணுமாக வருடாவருடம் வெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டமும், கிடைக்கின்ற வேலையும்
கண்களில் கனவுகளோடு, வேலையில்லா இளைஞர்களின் பெரும் பட்டாளம் காத்திருக்கிறது. சாதாரண எழுத்தர், தட்டச்சர் போன்ற குரூப் 4 அரசு வேலைக்கு 10,000 பேருக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். பள்ளிக் கல்வி தகுதியே போதுமான வேலைகளுக்கு முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக் கின்ற அவல நிலை. ஆயிரம் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதுகிறார்கள். உயர் போலீஸ் அதிகாரி நடராஜை தேர்வாணையத் தலைவராக போட்டாலும் கேள்வித்தாள் தேர்வுக்கு முன்னர் வெளிவந்துவிடுகிறது.
கடினப்பட்டு தயார் செய்து தேர்வு எழுதி நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களின் வாழ்வில் மண் விழுகிறது. இன்னொரு புறம் அய்டி நிறுவனங்கள் கீ போர்டு அடிமைகளையே வைத்திருக்கிறார்கள். அய்டி துறை உயர்நிலை ஊழியர் சம்பளம் இந்தியாவில் வருடத்திற்கு ரூ.21.5 லட்சம் என்றால் இதே வேலைக்கு ஸ்விஸ் நாட்டில் ரூ.93 லட்சம் கொடுக்க வேண்டுமாம். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூட நம்பிக்கை என்ற போதிலும் 31.12.2010 வரை மொத்தம் தமிழகத்தில் 67,54,807 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மட்டும் 11,60,874 பேர்.
உயிர் பிழைத்திருக்க, கிடைக்கிற வேலை வாய்ப்புகளை நோக்கி ஓட வேண்டியுள்ளது. அதனால்தான் கொத்தனார் வேலைக்கும், உணவு விடுதிகளிலும் பட்டம் பெற்றவர்கள் சேர்கிறார்கள். தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் கோவை, திருப்பூர், சென்னையை நோக்கி படை எடுக்கிறார்கள். மறுபுறம் குறைந்த கூலிக்கு வட மாநிலத்தவரும் சாரை சாரையாக வருகிறார்கள். திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் இருந்த கொஞ்சநஞ்ச நிரந்தர வேலைகளும் இப்போது இல்லை. திருப்பூரில் 12 மணி நேரம் வேலை பார்த்து ஒருவர் பெறும் சராசரி மாத சம்பளம் ரூ.6000 மட்டுமே. எல்லா கட்டணமும் உயர்ந்துவிட்ட நிலையில் மூச்சு திணறுகின்றன குடும்பங்கள். திருப்பூர் அடுத்த தற்கொலை பூமியாக மாறிக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தின் கடும் மின் வெட்டு இந்த கூலியையும் பறித்துக் கொள்கிறது. இப்பகுதியின் மொத்தமுள்ள 4 லட்சம் தொழிலாளர்களில் சுமார் 2 லட்சம் பேர் இடம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள்.
கோவை, திருப்பூர் பகுதிகளில் பெண்க ளுக்கான வேலை வாய்ப்பாக இருப்பது சுமங்கலித் திட்டம் மட்டுமே. வறட்சியான தென்மாவட்டங்களுக்கு கங்காணிகளை அனுப்பி வறுமையில் வாடும் பெரும்பான்மை தலித் பெண்களை இத்திட்டத்திற்கு கொண்டு வந்து கொத்தடிமைகளாக நடத்துவது தொடர்கிறது. சட்டத்தின் ஆட்சியின் லட்சணம் இதுதான். இன்றைக்கு தமிழகம் முழுவதும் எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லாத அத்தக் கூலி வேலைகளே கிடைக்கின்றன. சமூக பாதுகாப்பு மாத்திரமல்ல, உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பில்லாத கட்டுமானத் துறை, பட்டாசு தொழில், பவுண்ட்ரி போன்ற வேலைகளில்தான் இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. தங்கள் இளமையை, ஆரோக்கியத்தை இளைஞர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்கள் வெளியே தள்ளுவதால் நகரத்தை நோக்கி வரும் இந்த இளம் தலைமுறையினருக்கு குடியிருப்பு மிகப்பெரிய பிரச்சினை. நகரத்தின் புறம்போக்குகளை வளைத்துப் போட்டிருப்பவர்கள் அதில் தகரக் கொட்டகை போட்டு 10 அடிக்கு 10 அடி என்ற சிறிய அளவில் அறைகளாக பிரித்து வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத இந்த வீடுகள் வாடகை, செல்வ செழிப்பு மிக்க பகுதிகள் அளவுக்கு சதுர அடி வாடகை ரூ.80 வரை போகிறதாம். இவர்கள் தன்னையும் பார்த்து, தொலை தூரத்திலுள்ள குடும்பங்களுக்கும் பசியாற்ற வேண்டும். மேலும் சிறு சிறு வியாபாரம் பார்த்து பிழைப்பு நடத்தும் கோடிக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தைப் பறிக்க இப்போது சிறு வணிகத்திலும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு கதவு திறந்துவிடப்பட்டிருக்கிறது.
கூடங்குளத்தில் பல்டி அடித்ததுபோல், இவ்விசயத்தில் ஜெயலலிதா தனது நிலையை மாற்றிக் கொள்வார் என்று ஊடகங்கள் எழுதி வருகின்றன. இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகள் எதற்கும் ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டம் 2023ல் விடையேதும் இல்லை. மன்மோகன், ஜெயலலிதாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் செல்வம் சிலர் கைகளில் குவிவதும், விலையேற்றமும், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் பறிபோவதும் தவிர்க்க முடியாமல் நடக்கும்
மாற்றத்திற்காக அணி திரளும் மய்யமாக புரட்சிகர இளைஞர் கழகமும், அய்சாவும்
புரட்சிகர இளைஞர் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் தமிழகம் முழுவதும் மாணவர், இளைஞர் மத்தியில் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை அம்பலப்படுத்தி மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்கான தொடர் பிரச்சாரங்களுக்கு திட்டமிட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 14, 15, 2012ல் நடைபெற இருக்கும் புரட்சிகர இளைஞர் கழக அகில இந்திய மாநாட்டுக்கும் தயாராகி வருகிறது. 50,000 உறுப்பினர்கள் சேர்ப்பு, 1 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம், நவம்பரில் அரசியல் கல்வி முகாம், பெண் மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம், 2013 பிப்ரவரி 21, 22 தேதிகளில் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைப்பது என்றும், மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளில் பகத்சிங்கின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து சட்டமன்றத்தை முற்றுகையிடுவது எனவும், அதற்கு முன்பு திருப்பெரும்புதூரில் இருந்து சென்னை வரை பிரச்சார பயண இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளது.