தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவி!
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000
வேலையிழந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கு!
வெள்ளப்பெருக்கால் மஞ்சளாறு சீனாவின் துயரமானது. வறட்சியால் காவிரியாறு தமிழகத்தின் துயரமானது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் துரோகத்தால் காவிரி டெல்டா மக்கள் பெரும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். அண்டை மாவட்டங்களின் பஞ்சம் போக்கிய தஞ்சை மாவட்டம் இன்று தன் பஞ்சத்தை போக்கிக் கொள்ள அண்டை மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ஆலாய் பறந்து கொண்டிருக்கிறது.
டெல்டா மண்டல விவசாய நெருக்கடிகளுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் சிபிஅய் (எம்.எல்) கட்சியும் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கமும் செப்டம்பர் 17ல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கும்பகோணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் இதை அறிவித்தார்.
செப்டம்பர் 17ல் நாகை - தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.இளங்கோவன் தலைமையில் தஞ்சை, புதுக்கோட்டையைச் சேர்ந்த தோழர்கள் 150 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது சாலையிலேயே காவல் துறையால் இருப்பு தடுப்பு சுவர் வைத்து தடுக்கப்பட்டார்கள். தடையை மீறி முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர் களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் தள்ளு முள்ளு நடந்ததால் சில தோழர்கள் காயமடைந்தார்கள். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொது மக்களும் கூடிவிட்டார்கள். அனைவரையும் கைது செய்வதாக சொன்ன காவல் துறையினர் போராட்டத்தை வழி நடத்திச் சென்ற தலைவர்கள் சாதுர்யமாக பேசி கலெக்டரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்கள். ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் நடந்து கொண்டிருந்த போதிலும் போராட்டக்காரர்கள் ஆட்சியரை உடனடியாக சந்திக்க காவல்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்கள். சந்திப்பின்போது மணலூரில் தொழிலாளர்களிடம் இருந்து வேலை அட்டையை திருப்பணந்தாள் பி.டி.ஓ. பறித்து வைத்திருப்பது பற்றி வாய்மொழி புகார் தரப்பட்டது. ஆட்சியர் பிடிஒவை அழைத்து உடனடியாக சம்பளத்துடன் அட்டையை திருப்பி கொடுக்க உத்தரவிட்டார்.
போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் சட்டக்கூலி ரூ.132யை உடனடியாக வழங்க வேண்டும்.
வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும். நாள் கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
பேரூராட்சி பகுதிகளுக்கும், விவசாய வேலைகளுக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000மும் வேலையிழந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10,000மும் நிவாரணமாக வழங்க வேண்டும்.
போராட்டத்தில் புதுகை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் தேசிகன், டிகேஎஸ்.ஜனார்தனன், மு.வளத்தான், ரமேஷ்வர் பிரசாத், அவிதொச மாநில துணைத்தலைவர் தோழர் டி.கண்ணையன், துணைத் தலைவர் அ.ராஜாங்கம், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.ராஜன், கே.இளவரசன் பெண்கள் கழக தலைவர்கள் தோழர்கள் ரேவதி, ஆர்.மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நல்ல நாள் நல்ல நேரம் பார்த்துக் கூடிய காவிரி நதிநீர் ஆணையம் நல்லது எதுவும் செய்யாமலேயே கலைந்து போனது. நல்லது நடக்கும் வரை போராட்டம் தொடரும்.
கூடன்குளம் போராட்டக்காரர்களுக்கு
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருமைப்பாடு
கூடன்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பப்படுவதற்கு எதிராக, அணுஉலை இயக்கப்படுவதற்கு எதிராக, கூடன்குளம் மக்களின் வீரமிக்க போராட்டத்திற்கு அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு ஒருமைப்பாடு தெரிவிக்கிறது. மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு, தமிழ்நாடு அரசு போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துள்ள கொடூரமான ஒடுக்குமுறையை அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பு அமைப்புக்களான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்), மகாராஷ்டிரா, இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு, (கேரளா), புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (டார்ஜீலிங்) ஆகியவை கூடன்குளத்தில் மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய தடியடி, கண்ணீர் புகை பிரயோகம், துப்பாக்கிச் சூடு மற்றும் போராடுகிற கிராம மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பயங்கரம், பெண்கள், குழந்தைகள் என பலரும் கைது செய்யப்படுவது பற்றி ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.
போராட்டத்தின் மீது ஒடுக்குமுறையை ஏவுவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். கூடன்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் விருப்பத்துக்கு மாறாக அணுஉலை வேலைகள் நடப்பதை நிறுத்தி அணுஉலை மூடப்பட வேண்டும் என்றும் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு கோருகிறது. இந்திய அரசு மக்கள் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.