ஜனநாயக
வழக்கறிஞர் சங்கத்தின் மாட்டுக் கறி உண்ணும் போராட்டம்
இறைச்சிக்கு
மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதைக் கண்டித்தும் மாட்டுக் கறி
விழா நடத்திய சென்னை அய்அய்டி மாணவர் சூரஜ் மீது காவிக் காலிகள் நடத்திய
தாக்குதலைக் கண்டித்தும் தாக்குதல் நடத்திய காவி காலிகள் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தியும் ஜுன் 1 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் மாட்டுக் கறி
உண்ணும் போராட்டம் நடத்தியது.
சங்கத்தின் மாநில அமைப்பாளர் தோழர் பாரதி, மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கார்க்கி வேலன்,
வழக்கறிஞர்கள் தோழர்கள்
சுரேஷ், அதியமான்,
சட்ட மாணவர்கள் தோழர்கள்
சீதா, புவனேஸ்வரி ஆகியோருடன்
வழக்கறிஞர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். மதிய உணவு வேளையில்
அனைவரும் கூடும் இடத்தில் தோழர்கள் மாட்டுக்கறி உண்பதை வழக்கறிஞர்கள், வழக்காடிகள், அவர்களுடன் வந்தவர்கள் என பலரும் ஆர்வத்துடன்
பார்த்த படி வந்துகொண்டும், போய்க்கொண்டும்
இருந்தனர்.