செவ்வணக்கம்
தோழர் கொகன் மஜும்தார்!
2017, மே 29 அன்று தோழர் கொகன் மஜும்தார் நம்மை விட்டுப் பிரிந்தார். அப்போது
நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு நிறைவை நாம் சிலிகுரியில் அனுசரித்துக் கொண்டிருந்தோம். இந்த அய்ம்பது
ஆண்டு காலமும் தோழர் கொகன் மஜும்தார் தன்னாலான
அனைத்தையும் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குத் தந்தார். நக்சல்பாரி துவங்கும்
முன்னரே அவர் அந்தப் பணியில் இருந்தார். நக்சல்பாரியை வடிவமைத்த சிற்பிகளில்
அவரும் ஒருவர். தனது வாழ்வின் இறுதி வரை இகக மாலெயின் கடப்பாடு கொண்ட தலைவராக,
உண்மையிலேயே மக்கள்
நலன்களை பாதுகாப்பவராக அவர் இருந்தார். உத்வேகம் தரும் அவரது மரபுக்கு தலை
வணங்கும், அதே நேரம்
நிறைவுறாத அவரது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல, இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளும்
விருப்பங்களும் எதிர்கொள்கிற பாசிச
அச்சுறுத்தலை எதிர்கொள்ள நம்மாலான அனைத்தையும் செய்ய உறுதியேற்போம்.