ஜுன் 8, மாநிலம் தழுவிய எதிர்ப்பு நாள்
மத்தியபிரதேசத்தில்
போராடுகிற விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்
நீட் தேர்வை
இந்தியை திணிக்கின்ற, மாட்டுக்கறி
விற்பதை உண்பதை தடை செய்கின்ற
தமிழ்நாட்டு
மக்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற
மதவாத பாசிச மத்திய
அரசைக் கண்டித்தும், மண்டியிடுகிற
மாநில அரசைக் கண்டித்தும்
மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை
இந்தியை திணிக்கின்ற, மாட்டுக்கறி
விற்பதை உண்பதை தடை செய்கின்ற, தமிழ்நாட்டு
மக்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற மதவாத பாசிச மத்திய அரசைக் கண்டித்தும்
மண்டியிடுகிற மாநில அரசைக் கண்டித்தும் இகக மாலெ ஜுன் 8 அன்று தமிழ்நாடு தழுவிய எதிர்ப்பு நாள்
கடைபிடித்தது. கோவை, சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவள்ளூர், குமரி, கடலூர், நாமக்கல் ஆகிய
மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மத்தியபிரதேசத்தின்
மான்சார் மாவட்டத்தில் நியாயமான கோரிக்கைகள் எழுப்பி ஜனநாயகரீதியாக போராட்டத்தில்
ஈடுபட்ட விவசாயிகள் அய்ந்து பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக்
கண்டித்தும், மாட்டுக்கறி
சாப்பிட்டதற்காக சென்னை அய்அய்டியில் மாணவர் சூரஜ் இந்துத்துவ கும்பல்களால் தாக்கப்பட்டதைக்
கண்டித்தும், தாக்குதல்
நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரியும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
விழுப்புரத்தில் ஜுன் 5 அன்று இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள்
நடத்திய கூட்டு ஆர்ப்பாட்டத்தில் இகக மாலெ தோழர்களும் கலந்துகொண்டனர். இதே
கோரிக்கைகளை வலியுறுத்தியும், சேலத்தில்
சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க
வலியுறுத்தியும் ஜுன் 11 அன்று நெல்லையில் புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.