செப்டம்பர் 27க்குப் பிறகு தமிழ்நாட்டின் அஇஅதிமுக அமைச்சர்கள் நிமிர்ந்த நிலையில் நடக்கிறார்கள். நிற்கிறார்கள். ஆனால், வராத கண்ணீரை துடைத்தவாறே இருக்கிறார்கள். (வாலு போயி கத்தி வந்தது). கிளிசரின் போட்டால் கண்ணீர் வரும் என்று கூட அவர்களுக்குச் சொந்தமாகத் தெரியாமல் போனது. விசுவாச வெளிப்பாட்டில் முந்துவதில் அத்தனைப் பதட்டம்.
சமூக நலத்துறை அமைச்சர் கோகுல இந்திராவைத்தான் யாரும் தாண்டிச் செல்ல முடியவில்லை. தீச்சட்டி ஏந்திவிட்டார். ஈரோடு மேயர் அங்கப் பிரதட்சணம் செய்தார். அஇஅதிமுக தொண்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மொட்டை அடித்துக் கொண்டார்கள். மண்சோறு சாப்பிட்டார்கள். விசேச பூஜைகள் செய்தார்கள். பாலாபிஷேகம் நடத்தினார்கள். தமிழக மண்ணில், அன்று இயற்கையாக மரணித்த பெரியாரை, இன்று அடித்தே கொன்றார்கள்.
பேருந்துகளை கொளுத்தினார்கள். கடைகளை அடைத்தார்கள். சூறையாடினார்கள். மக்களின் அன்றாட வாழ்வை முடக்கும் சகல நடவடிக்கைகளிலும் இறங்கினார்கள். உழைக்கும் மக்கள் போராட்டங்களை வன்முறை என்று சொல்பவர்கள், இந்த அத்தனை வன்முறை செயல்பாடுகளையும் ‘அறப் போராட்டம்’ என்று அழைத்தார்கள்.
ஜெயலலிதா அவரை, சிறையில் பார்க்கச் சென்ற யாரையும் பார்க்க மறுத்துவிட்டாராம். எப்படி பார்ப்பார்? அவராகச் சென்று யாரைப் பார்த்தார் இது வரை? அவர் இருந்த இடம் தேடி, பல படிகள் தாண்டியல்லவா அவரை யாரும் பார்க்க முடியும்? இப்போது, சிறை அறைக்குள் இருந்து, சிறிது தூரம் நடந்து, அவர் வந்து மற்றவர்களைப் பார்ப்பதா? தெய்வம் வந்து பக்த கோடிகளைப் பார்ப்பதா? அடுக்குமா?நடக்குமா?
அடுத்து என்ன? ஜெயலலிதா இல்லாமல் அஇஅதிமுக ஆட்சி நடத்த வேண்டும். ஜெயலலிதா மக்களின் முதல்வர் என்று அஇஅதிமுககாரர்களால் அழைக்கப்படுகிறார். அப்படியானால், ஓ.பன்னீர்செல்வம் யார்?
உச்சநீதிமன்றம் பிணை தருகிறதா இல்லையா என்பதை ஒட்டி இந்தக் கேள்விகளுக்கு சற்று கூடுதலாக தெளிவான பதில் கிடைக்கலாம். எப்படியா யினும் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் இல்லை. எனது தலைமையிலான ஆட்சி என்று அவர் இதை சொல்லிக் கொள்ள முடியாது.
ஆனால், தமிழ்நாட்டில் அஇஅதிமுக ஆட்சி பதவி விலக வேண்டும் என்று இகக மாலெ எழுப்பிய குரல் வலுப்பெறத் துவங்கிவிட்டது. ஆட்சி நிர்வாகம் முறையாக நடைபெற வில்லை என்ற அடிப்படையில் பழ.நெடுமாறன் ஆட்சி விலகல் கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆட்சி நிர்வாகம் முறையாகி விட்டாலும் இந்த ஆட்சி தொடரக் கூடாது. இந்த ஆட்சி ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஒருவரை பொதுச் செயலாளராகக் கொண்ட கட்சி நடத்தும் ஆட்சி. எனவே அது தொடரக் கூடாது.
தொண்ணூறு வயதிலும் பதவி ஆசை படுத்துகிறது. கருணாநிதி பேசத் துவங்கியுள்ளார். ஆனால், அவர் பேசுவதுதான் சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. ஊழல் பிரச்சனை ஒரு பக்கம். நோக்கியா பற்றி அவர் பேசுவதை எப்படித்தான் அவர் நியாயப் படுத்த முடியும்? ஆலைகள் மூடப்படுகின்றன. 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டார்கள்.
தொழிலுறவு பேணப்படவில்லை. இவை நடக்கும் ஆட்சி பற்றிய கருணாநிதியின் குற்றச்சாட்டுகள். இந்த நிலைமைகளுக்கு எதிராக போராட்டம் என்கிறார். நோக்கியா, ஹூண்டாய் போன்ற பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தன் இதய சிம்மாசனத்தில் அவர் தந்திருந்த இடம் என்னவானது? நோக்கியா இடத்தில் ரெனால்ட் நிசானோ, வேறு பன்னாட்டு நிறுவனமோ வந்து குடி கொண்டுவிட்டதா?
அக்டோபர் 4, 5 தேதிகளில் திருப்பூரில் நடந்த ஏஅய்சிசிடியு 8ஆவது மாநில மாநாட்டில் பேசிய ஒரு பிரதிநிதி சொன்னார்: ஹூண்டாய் நிறுவனத்தில் 2003ல் 1810 நிரந்தரத் தொழிலாளர்கள் இருந்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு 18 கார்கள் உற்பத்தி செய்தார்கள். 2014ல் 2130 நிரந்தரத் தொழிலாளர்கள் இருக் கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 110 கார்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
உலகமயம் என்றால் வளர்ச்சி என்றார்கள். ஆனால், இந்த 11 ஆண்டுகளில், ஹூண்டாயில் வெறும் 300 புதிய வேலை வாய்ப்புக்கள்தான் உருவாகியிருகின. இந்த மொத்த உற்பத்தியும் நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்கள் கொண்டு மட்டும் நடக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் 3,000 பயிற்சியாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டார்கள். இந்த 11 ஆண்டுகளில் 33,000 பயிற்சியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களில் 300 பேர் வரை மட்டுமே நிரந்தரம் பெற்றுள்ளார்கள். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
திருபெரும்புதூரில் ஒரு நிறுவனத்தில் மட்டும் 11 ஆண்டுகளில் 33,000 தொழிலாளர்கள் வெளி யேற்றப்பட்டுள்ளார்கள் என்றால், திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் பகுதிகள் முழுவதும் லட்சக்கணக்கான பயிற்சியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்று சொல்ல முடியும். அவர்கள் மீண்டும் வேறு ஒரு நிறுவனத்தில் பயிற்சியாளர்களாகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களால் சொல்லப்படும் வளர்ச்சியில் தொழிலாளர் நிலைமை இதுதான். அவர் பேச்சில், தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்கள் நாளும் படும் துன்பத்தின் வலி தெரிந்தது. அந்த 11 ஆண்டுகாலத்தில் கருணாநிதியும் ஆட்சி செய்தார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பப் புறப்பட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். மோடியைப் போலவே எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார். நவம்பர் 1 முதல் மூடப்படவுள்ள நோக்கியாவில் எஞ்சி யுள்ள தொழிலாளர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் பற்றி மட்டும் அவர் பேசவில்லை. திருபெரும்புதூர் தொழிலாளி துன்பம் பற்றி பேசினால், ‘மேக் இன் இந்தியாவுக்கு’ எதிராக அவர் பேச வேண்டியிருக்கும். மோடி சொல்லும் ஒவ்வொரு திட்டத்துக்கும் மறுப்பு சொல்ல வேண்டியிருக்கும். ஆகவே, தமிழிசை அவர்களே, தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று ஒரு போதும் கனவு காணாதீர்கள். பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாவீர்கள்.
தமிழ்நாட்டில் கவுரவப் படுகொலைகள் சாதாரணமாக நடக்கின்றன. இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை பற்றிய அச்சம் முற்றிலும் அகன்று போயிருக்கிறது. அஇஅதிமு ககாரர்கள் அராஜக நடவடிக்கைகளை மட்டும் அல்ல, கவுரவக் கொலைகள் பிரச்சனையிலும் தமிழ்நாட்டின் காவல்துறை வேடிக்கைதான் பார்க்கிறது. அம்மா வெளியே இருந்தபோதும் இதுதான் நிலைமை. அவர் இல்லாதபோதும் இதுதான் நிலைமை.
தமிழ்நாட்டில் பிரச்சனை ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனது அல்ல. சாமான்ய மக்கள் வாழ்வுரிமை இழப்பது. அவர்கள் ஜனநாயக உரிமைகள் முடக்கப்படுவது. நோக்கியா மூடப்படுவது பற்றி, மீதமுள்ள 850 தொழிலாளர்களும் வேலை இழப்பது பற்றி கேட்டபோது, மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், இனி மேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார். அதாவது, நோக்கியா தொழிலாளர் வாழ்க்கை போனது போனதுதான், மத்திய அரசு ஒன்றும் செய்யாது என்பது அதன் பொருள். தமிழக மக்களும் இதுபோன்ற ஆட்சியாளர்கள் இனி எந்த ஆட்சியிலும் அமர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள அனைத்து விதங்களிலும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.