COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 1, 2014

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தல்

அகில இந்திய மாணவர் கழகம் மீண்டும் அமோக வெற்றி ! டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தலில் இரண்டு மடங்கு வாக்குகள் பெற்று குறிப்பிடத்தக்க மூன்றாவது சக்தியாக உதயம் !

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் அனைத்து 4 பதவிகளையும் வென்று அகில இந்திய மாணவர் கழகம் (அய்சா) மீண்டும் இந்த வருடமும் அமோக வெற்றி பெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அய்சாவின் அசுதோஷ் 1,386 வாக்குகள் பெற்று, இடது முற்போக்கு முன்னணியின் வேட்பாளரை 377 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அய்சாவின் ஆனந்த் பிரகாஷ் நாராயண் 1,366 வாக்குகள் பெற்று ஏபிவிபி வேட்பாளரை 610 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அய்சாவின் சிந்துகுமாரி 1,605 வாக்குகள் பெற்றார். இவர் ஏபிவிபி வேட்பாளரை 814 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இணைச் செயலாளராக வெற்றி பெற்ற சவுகத் ஹ÷சைன் பட் 1,209 வாக்குகள் பெற்று இடது முற்போக்கு கூட்டணி வேட்பாளரை 240 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

‘பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும், ஏபிவிபியும், ‘நல்ல காலம்’ வந்துவிட்டது என சொல்லி அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் அய்சா பெற்றுள்ள மிகப் பெரிய, தெளிவான வெற்றி, ஜேஎன்யு மாணவர்கள் மதவாத பாசிச மற்றும் பெருந்தொழில் குழும நிகழ்ச்சிநிரலை தீர்மானகரமாக நிராகரித்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது’ என்றார் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அசுதோஷ்.

‘இது உண்மையான மதச்சார்பற்ற ஜனநாயக சமூகம் என்ற கருத்தை பாதுகாப்பவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாகும். மேலும் மாணவர்களின் கல்வி மற்றும் உள்கட்டுமானத் தேவைகளுக்காகப் போராடுகிற மாணவர் சங்கத்துக்கு, உயர் கல்வியை கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக் கொள்வதை எதிர்த்து போராடும் மாணவர் சங்கத்துக்கு, பல்கலைக்கழக வளாகத்திற்குள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுகிற சங்கத்துக்கு, பெருந்தொழில் குழும நில அபகரிப்புக்கு எதிரான முற்போக்கு குரல்களோடு தன்னை இணைத்துக் கொள்கிற, பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான, மதவாத வெறுப்பு வாய்வீச்சுக்கு எதிரான, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான ஜேஎன்யு மாணவர் சங்கத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பாகும்’ என்றார் அவர்.

இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஅய்) மற்றும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஆகிய அமைப்புகள் அரசியலில் ஆளுமை செலுத்தும் டெல்லி பல்கலைக்கழக வளாகங்களில், சமீபத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலிலும் கூட அய்சாவின் வாக்கு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஏபிவிபியின் மதவாத நிகழ்ச்சிநிரலுக்கும், என்எஸ்யுஅய் - ஏபிவிபியின் பெருந் தொழில்குழும ஆதரவு அரசியலுக்கும் மிகவும் வலுவான எதிர்ப்பைக் கட்டமைக்கக் கூடிய சக்தியாக, அய்சா வலுவான போட்டியாளராக எழுந்து வந்துள்ளது.

அய்சா வெற்றி பெற்றுள்ள எல்லா பதவிகளுக்கான வாக்குகளும் பெருமளவு உயர்ந்துள்ளது. செயலாளர் பதவிக்கு 12,932 வாக்குகள் வாங்கி அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ளது. துணைத் தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளில் என்எஸ்யுஅய்யைவிட 2,100 முதல் 2,600 வாக்குகளே குறைவாகப் பெற்றுள்ளது.

ஓர் இடதுசாரி மாணவர் அமைப்பு - அல்லது டெல்லியின் ஆளும்வர்க்கக் கட்சிகள் ஏதாவது ஒன்றின் அரசியல் பின்புலம், பணபலம், அடியாள் பலம் இல்லாத ஓர் அமைப்பு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இவ்வளவு ஆதரவும், வாக்குகளும் பெறுவது இதுவே முதன்முறை. கிட்டத்தட்ட 45 கல்லூரிகள் டெல்லி நகர் முழுவதும் பரந்துவிரிந்து இருப்பதும், ஏபிவிபியும், என்எஸ்யுஅய்யும் வெளிப்படையாகவே தேர்தல் விதிமுறைகளை மீறி எல்லா வகையான ஊழல் நடைமுறைகளிலும் ஈடுபடுவார்கள் என்பதால், இந்தப் பல்கலைக்கழக தேர்தல் ஆகக் கூடுதல் சவால் மிக்கது.

4 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பு (எஃப்ஒய்யுபி)க்கு எதிரான தொடர் பிரச்சார இயக்கம், மாணவர்களுக்கான போக்குவரத்து மற்றும் கட்டுபடியாகக் கூடிய தங்குமிட வசதி ஆகியவற்றுக்கான போராட்டம், டெல்லியில் பாலியல் வன்கொடுமை மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றால் டெல்லி பல்கலைக் கழக மாணவர்களின் ஆதரவை அய்சாவால் வெற்றி கொள்ள முடிந்தது. டில்லி மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் அய்சாவின் அறுதியிடல், நாடு முழுவதுமுள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு ஆதரவான முக்கியமான சொத்தாகவும் ஆதாரமாகவும் அமையும்.



Search