இந்தியாவின் முதன்மை சேவகர் நரேந்திர மோடி கூட்டுகிறார்; பெருக்குகிறார். அவரது முயற்சிக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் கமல்ஹாசன் வரை ஆதரவு தருகின்றனர். அசுத்தமான இந்தியாவை, ஊடக வெளிச்சத்தில் சுத்தப்படுத்துகிறார்களாம்! அவ்வளவும் டில்லி வீதியில் நடந்தது. மோடியின் ஆடைகளில் ஏதாவது தூசி படிந்ததா அல்லது கூட்டி, பெருக்கி புகைப்படக் கருவிக்கு முன் நின்று திரும்பிய 5 நிமிடங்களிலேயே வேறு உடைக்கு மாறி விட்டாரா என்ற செய்தி எதுவும் நம்மை எட்டவில்லை. ஆனால் ஒரு துப்புரவுத் தொழிலாளி எழுப்பிய ஒரு கேள்வி மட்டும், நம் செவிகளை விட்டு நீங்கவே இல்லை. மலக்கிடங்கில் இறங்கி, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மலம் அப்படியே படிய, போஸ் கொடுத்துக் கொண்டு சிறீமான் மோடி போன்றவர்கள் இந்தியாவைச் சுத்தப்படுத்த முன்வருவார்களா? சுத்தப்படுத்தப் புறப்பட்ட இந்தக் கூட்டத்தின் மனமெல்லாம் எண்ணமெல்லாம் குப்பைகளே மண்டியுள்ளன.
எது தூய்மை இந்தியா?
வீடு வாசல் தெரு ஊர் எல்லாம் சுத்தமாக இருந்தால் மிகவும் நல்லதுதான். வீடு சுத்தமானால் வீதி சுத்தமானால் நாடு சுத்தமாகும் என அப்துல் கலாமிலிருந்து நரேந்திர மோடி வரை நாடகமாடுகிறார்கள். சமூகம் மாற வேண்டும், சமூகத்தில் ஒடுக்குமுறை சுரண்டல் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்ப தற்குப் பதிலாக, தனி மனிதர்கள் சரியானால், நாடு சரியாகி விடும் என்பது, முதலாளித்துவ மோசடி வாதமாகும்.
வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ள முதலாளித்துவ சமூகம், பொருளுற்பத்திக்காக, இயற் கையோடு உறவாடி இயற்கை மீது வினையாற்றுகிறது. லாப வெறி கண்ணை மறைக்க, தட்பவெட்ப நிலை மாறுபாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அணுக் கழிவுகள் எங்கே கொட்டப்படும்?தொழில்துறை கழிவுகள் என்ன ஆகும்? இயற்கையின் மீது, சுற்றுச் சூழலின் மீது, இயற்கை - மானுடம் இடையிலான சமன்பாட்டின் மீது, தொடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்தப்படாமல், சுத்தப்படுத்துவது பற்றி நாடகமாடுவது வீண். முதலாளித்துவ சமூகத்தில், உருவாகிற அனைத்து கழிவுகளையும் குப்பைகளையும் முதலாளித்துவம் போக்கும், நீக்கும் என்பவர் கள், ஏமாற்றுகிறார்கள்.
மேலை நாடுகளின், காலாவதியான, குப்பைத் தொட்டியில் வீசப்படும் தொழில் நுட்பங்களை, இயந்திரங்களை, உற்பத்தியை, இந்தியாவிற்குக் கொண்டு வருவது நிற்காமல், இந்தியா சுத்தமாகுமா? இந்தியாவின் நகரங்களே, உலகமயப் பின்னணியில், உபரி மக்கள் தொகை கொட்டப்படும் குப்பைக் கூளங்கள் ஆகி விட்டனவே. சிறீமான் மோடி, அந்த மக்களை, வங்கக் கடலில் அரபிக்கடலில் இந்துமகா கடலில் வீசி எறிந்து சுத்தப்படுத்தி ஸ்மார்ட் சிட்டிக்கள் உருவாக்குவாரா? காந்திய மரபில் இருந்து, காலனியத்திற்கு எதிரான வெகுமக்கள் விழிப்புணர்வு, பொருளாதார சுயசார்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை சுத்திகரித்து நீக்கி விட்டு, ‘தூய்மை இந்தியாவை’ அக்டோ பர் 2 அன்று, வெற்றுப் பிரச்சார முழக்கமாக்கி உள்ளனர்.
மதவாதக் கறை - காவிக்கறை, வெளுக்குமா?
அது கறையல்ல, அதுவே அழகு என்கிறார்கள். பன்மைவாத இழைகளால் பின்னப்பட்டுள்ள இந்தியா எங்கும், காவிக் கறையைப் பரப்புகிறார்கள். விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் பிறந்தது. அதே விஜயதசமி அன்று, ஆர்எஸ்எஸ் பிறந்த தினத்தன்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தூர்தர்ஷனில் தோன்றி உரையாற்றினார். விஜயதசமி என்ற அந்த இந்துப் பண்டிகை நாளில் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாடுகிறார்.
ஜப்பானுக்கு, அய்க்கிய அமெரிக்காவுக்குப் போன மோடி, தான் இந்தியாவின் பிரதமர் என்பதைத் தாண்டி, ‘இந்து பிரதமர்’ என்பதைத் தயக்கமின்றி அடையாளப்படுத் தினார். பகவத் கீதை, நவராத்திரி விரதம், டோக்கியோ பெண் மாணவர்களிடம், இந்தியப் பெண்மையை தெய்வீகப் பீடத்தில் ஏற்ற லட்சுமி, சரஸ்வதி, அன்னபூர்ணாவை அறிமுகப்படுத்துவது என, இந்துப் பாரம்பர்யமே இந்தியப் பாரம்பர்யம் என, விதவிதமான வண்ணவண்ணமான உடைகளில் தோன்றி உணர்த்தினார் மோடி. சுற்றுச்சூழல் பற்றிப் பேசும்போது, இயற்கையையும் பசுவையும் ஒப்பிட்டு, பசுவிலிருந்து பால் கறப்பது போல் இயற்கையிலிருந்து எடுத்துக் கொள்ளலாமே தவிர, பசு வதையும் இயற்கை அழிப்பும் கூடாது என இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிற்குள், சங்பரிவார், காவிக் கறையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. காவியே, பண்பாட்டு தேசியம் என்கிறது. உத் தரபிரதேசம், அஸ்ஸôம், சட்டிஸ்கர், ஒடிசா, கர்நாடகா, அரியானா, மத்தியப்பிரதேசம் என நாடெங்கும், ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற மதவெறி நஞ்சு பரப்பப்படுகிறது.
சீற்றத்துடன் படமெடுத்து ஆடும் மதவெறி நச்சுப் பாம்பு, இசுலாமியர்களை, கிறிஸ்தவர்களை, தலித்துகளை, பெண்களை அச்சுறுத்துகிறது. மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, இந்தியர்களை இந்துக்கள் என அழைப் பதில் தவறேதும் இல்லை என்கிறார். தமிழ்நாட்டில் பொன். ராதாகிருஷ்ணன் இந்துக்கள் ஒன்றுபட்டிருந்தால், கேரளம் குமரியையும் தமிழகம் கோவில் நகரமான திருப்பதியையும் இழந்திருக்காது என்று பேசி வரலாற்றை பின்னோக்கி திருப்புகிறார்.
வேலூரில் வெங்கையாநாயுடு இந்துஸ்தானமே இந்திய தேசிய அடையாளம், கல்வி இந்தியமயமாக வேண்டும் என அறை கூவல் விடுகிறார். தமிழ்நாட்டில் சங்பரிவார், மதச் சார்பின்மையா - வெங்காயம் எனத் துணிந்து பேசுகிறது. சங் பரிவார் நாடெங்கும் மதவாத நச்சுக் குப்பையை கொட்டிக் குவிக்கிறது.
எவ்வளவுதான் கூட்டினாலும் பெருக்கினாலும் மறையாமல் விஸ்வரூபம் எடுத்துள்ளது மூலதன சேவைதான்
தமிழ்த் திரைப்படத் துறையினர் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு, மோடி பஞ்ச் வசனங்களை அள்ளிவிடுகிறார். தேர்தலுக்கு முன் சொன்ன, அச்சே தின் நல்ல காலம் வருகிறது பஞ்ச் வசனம், பஞ்சராகிவிட்டது. விலை உயர்வு, விழி பிதுங்க வைக்கிறது. ரயில் கட்டணத்தை உயர்த்தி, நல்ல காலத்தை துவக்கி வைத்தவர், மிகப்பெரும் ரயில் கொள்ளையாய் (த கிரேட் டிரெயின் ராபரி), விமானக் கட்டணங்களை நெருங்கும் தத்கல் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அந்நிய நேரடி முதலீடு (ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்) என்பதற்கு, முதலில் இந்தியாவை வளர்ப்போம் (ஃபர்ஸ்ட் டெவலப் இந்தியா) என்று பொருள் சொல்லி, தேசிய முகமூடி அணிகிறார் மோடி. பாதுகாப்பு துறை, காப்பீடு, நிதித்துறை, நிதிச் சந்தைகள் என எங்கும் அந்நிய முதலீட்டுக்கு கதவை அகலத் திறந்து வைத்துவிட்டு, முதலில் இந்தியாவை வளர்ப்போம் என்று சொல்வது எவ்வளவு குரூரமான விசயம்?
அம்பானி, பிர்லா, டாடா, அசீம் பிரேம்ஜி, அதானி என்ற முதலாளித்துவ உலகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட செப்டம்பர் 25 நிகழ்ச்சியில், ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற இயக்கத்திற்கு மோடி அழைப்பு விடுத்தார். வியாபார காந்தங்கள் அனைவருமாக, எக்ஸ்ட்ரீம்லி ப்ரோக்ரசிவ் அதாவது ஆகத் தீவிரமாக முற்போக்கானது என இந்த இயக்கத்தை வியந்து போற்றினர். கொள்கை பிரச்சனைகளில் தெளிவில்லாததால் தொழில் துறையில் அவநம்பிக்கை நிலவுகிறது; இந்திய தொழில் துறையினர் சூழல் சரியில்லை எனச் சொல்லி வெளிநாட்டிற்கு போவதைக் கேட்டு மனம் வருந்தினேன்; அதனால் மாற்றங்கள் கொண்டு வருகிறேன் என்று சொன்ன மோடி, ‘இந்த தேசம் உங்களுடையது. நீங்கள் இந்த தேசத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. நம் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகள் போல் ஒளி வீச வேண்டும்’ என்ற அழைப்பையும் விடுத்தார்.
மோடியின் இந்த இயக்கத்துக்கு, அசோக சக்கரத்தால் ஆன இயந்திர சிங்கம் அடையாளச் சின்னமாக்கப்பட்டது. ‘ஆட்டோமொபைல் முதல் அக்ரோ ப்ராடக்ட் வரை, ஹார்டுவேரில் இருந்து சாஃப்ட்வேர் வரை, சேட்டிலைட்டில் இருந்து சப்மரைன் வரை, டெலிவிசனிலிருந்து டெலிகாம் வரை, ஃபார்மாவிலிருந்து பயோ டெக் வரை, பேப்பரிலிருந்து பவர் பிளான்ட் வரை, ரோடுகளிலிருந்து பிரிட்ஜ்கள் வரை, ஹவுசசலிருந்து ஸ்மார்ட் சிட்டி வரை, பிரண்டஷிப்பிலிருந்து பார்ட்னர்ஷிப் வரை, ப்ராஃபிட்டிலிருந்து ப்ரோக்ரஸ் வரை, எது செய்ய வேண்டுமானாலும், (கம் மேக் இன் இன்டியா) இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற மோடியின் அழைப்பை முதலாளித்துவ ஊடகங்கள் தலை மேல் வைத்துக் கொண்டு கொண்டாடினர். லாபம், முன்னேற்றம் என்ற மய்யமான விசயத்தை வலியுறுத்துவதற்காகவே, எதுகை மோனையுடன், ஏற்கனவே இந்தியாவில் தயாராகும் விசயங்கள், ஏதோ புத்தம் புதியவை போல் காட்டப்பட்டுள்ளன.
மோடி, அய்க்கிய அமெரிக்காவில், பெப்சி, கூகுள், சிட்டி குரூப், ஜெனரல் எலக்ட்ரிக், கோல்ட்மென் சாக்ஸ், மாஸ்டர் கார்ட், கேட்டர் பில்லர், அய்பிஎம், போயிங் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கரிசனத்திற்கு, தீர்வு காண்பதாகத் தெரிவித்தார். வரி விதிப்பில் வோடாஃபோன் பிரச்சனையில் நேர்ந்த சங்கடம் நேராது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பையும் வாய்ப் பாக்கித் தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.
உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு நல்ல காலங்கள் என அடித்துச் சொன்ன மோடி, அவர்கள் முன்பு ஒரு 3டி படமும் காட்டினார். டெமாக்ரசி (ஜனநாயகம்), டெமோக்ரஃபி (மக்கள் தொகை நிலைமைகள் - இளைய, மலிவு விலை உழைப்பு), டிமாண்ட் (தேவை) ஆகியவை முதலீட்டிற்கு உகந்த நிலைமைகள் என்ற விற்பனை மொழி பேசப்பட்டது.
மோடி, தந்திரமாக, சீனாவோடு இந்தியாவை ஒப்பிட்டு தமது இந்த திருப்பணிகளை விளக்க முற்படுகிறார். சீனத்தில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பால், சுற்றுச் சூழலுக்கு சுகா தாரத்துக்கு நேர்ந்த பாதிப்பு, சமூக ஏற்றத் தாழ்வு, பிராந்திய ஏற்றத்தாழ்வு போன்றவை உலகறிந்த விசயங்களே. ஆனால், சீனம், புரட்சிக்குப் பின், நிலச் சீர்திருத்தம், சமூக - பொருளாதார மறுகட்டமைப்பு ஆகிவற்றைச் சாதித்தது. சமூக மூலதனம், வலுவான திடமான உள்கட்டுமானம், சுயமாக வளர்ந்தன. இதற்கு, அதற்கு, அந்நிய நேரடி முதலீடு தேவைப்பட வில்லை. அந்நிய நேரடி முதலீட்டின் பெரும் பகுதியையும் வெளிநாடு வாழ் சீனர்களே வழங்கினர். அந்நிய நேரடி முதலீடு தொடர்பான திறன்மிக்க ஒழுங்காற்று வரையறைகள் சீனத்தில் உள்ளன. ஆகவே, இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது.
மோடியின், வெளிப்படையான 3டிக்குள் நான்காவது டி ஒன்று அதாவது டெஸ்பரேஷன் (மூர்க்கம்) ஒளிந்திருக்கிறது. கார்ப்பரேட் பெருந்தொழில் குழும முதலீடு மற்றும் லாபத்திற்கு ஏற்ப, ஜனநாயகத்தை கட்டுக்குள் வைக்க மோடி தயாராகிவிட்டார். இந்திய காப்புரிமைச் சட்டங்கள், இனி, அய்க்கிய அமெரிக்காவால் கண்காணிக்கப்படும். அய்க்கிய அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முன்பு, இந்தியா மண்டியிட்டுவிட்டது. உயிர் காக்கும் மருந்துகள் மீதான விலைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுவிட்டது.
வீதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது நல்லதுதான். அதை விட, பெரும்தொழில் குழும (கார்ப்பரேட்) மதவெறி சக்திகளையும், அரசு மற்றும் சமூக ஒடுக்குமுறையையும், மாபெரும் மக்கள் போராட்டங்கள் மூலம், வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் வீசுவது, மிகமிக நல்லதாகும்.