COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, October 16, 2014

பாலியல் வன்புணர்ச்சி கலாச்சாரம் இருப்பதை அங்கீகரித்து அதை தடுத்திடுவோம்!

‘ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி (நமது பெண் கள் அமைப்பு மாத்திரமல்ல) என்ற வகையில் நாம் உயர்ந்த அழுத்தம் கொடுத்திட வேண் டும். ஆணாதிக்கப் பொதுப்புத்தி சமூகத்தின் மீது அதனால் கட்சி அணிகள் மீதும், சொல்லப் போனால் கட்சி அரசியல் தலைமை மீது இறுக் கமான பிடி கொண்டுள்ளதை நாம் அங்கீகரிக்க வேண்டும். எனவே நமது அரசியல் நடைமுறை என்பது ஈவிரக்கமில்லாமல் விடாப்பிடியாக சுய பரிசோதனை செய்வது மற்றும் ஆணாதிக்க கருத்தியல் மற்றும் நடைமுறையை பகுப்பாய்வு செய்து அதை எதிர்கொள்ள முயற்சிப்பது என்பதோடு இணைந்ததாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே முற்போக்கு மற்றும் ஜனநாயக ஆணாதிக்க எதிர்ப்புக் கருத்துக்களுக்கு உயிர் தந்து, நமது ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் பரந்த சமூகத்துக்கும் ஆற்றல் தரும் பொருளாயதச் சக்தியாக அதை மாற்ற முடியும்.’
-இகக(மாலெ) விடுதலையின் 9ஆவது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இயக்கம் மீதான தீர்மானத்திலிருந்து

இந்தத் தீர்மானத்தோடு இணைந்த படிப்புக்கான குறிப்புரையில் கட்சியின் கல்விப் பிரிவு கீழ்கண்டவாறு குறிப்பிட்டது.

‘இன்னும் அதிகமான பெண் தலைவர்களை மற்றும் ஊழியர்களை வளர்த்தெடுக்க அதே சமயம் ஆண் தோழர்களுக்கும் கல்வி அளிக்க நாம் அமைப்பு மற்றும் கல்விக்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’

‘..... வகுப்புகள் நடத்துவதும், பெண்களின் ஒடுக்குமுறை பற்றிய சரியான கருத்தியல் புரிதல் ஏற்படுத்திக் கொள்வதும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போதுமானதல்ல. நமது நடைமுறையில், பெண் உறுப்பினர்களை அணுகும்போது, நமது தொழிற்சங்க இயக்கத்தில், முன்முயற்சிகளில், நமது பல்வேறு வெகுசன அமைப்புகளில் (முற்போக்கு பெண்கள் கழகம் மாத்திரமல்ல), நமது அன்றாட அமைப்பு வாழ்க்கையில், இன்னும் சொல்லப்போனால் குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் நமது புரட்சிகர புரிதல் உண்மையிலேயே  பிரதிபலிப்பதை நாம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அதற்கு, இந்தப் பிரச்சனைகளை வெளிப்படையாக தொடர்ந்து நாம் விவாதிக்க வேண்டும்,  நம் நடைமுறையில் எந்த அம்சத்தையாவது சரி செய்ய வேண்டுமா அல்லது மேம்படுத்த வேண்டுமா என்பது பற்றி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

அப்போது மட்டுமே, நமது சரியான புரட்சிகர புரிதல், ஆவணங்களின் பக்கங்களிலிருந்து வெளிவந்து நம் சொந்த தோழர்களின் மற்றும் பரந்த சமூகத்தின் புரிதல் மற்றும் நடைமுறையின் ஒரு அங்கமாக மாறும்.’

9ஆவது கட்சி காங்கிரஸ் தீர்மானங்களின் உணர்வின் அடிப்படையில் அப்போது, கட்சியின் பெண்களின் துறை, மேற்கண்ட பிரச்சனைகள் மீது தோழர்களிடையே விவாதத்தை துவக்க முயற்சி செய்தது. இதுபோன்றதொரு குறிப்புரையை அவ்வப்போது கால இடை வெளிவிட்டு சுற்றுக்கு விடலாம் என முன்வைக்கப்பட்டது. கட்சி கமிட்டிகளும் வெகுமக்கள் அமைப்பின் யூனிட்டுகளும் விவாதங்களை அமைப்பாக்க இது போன்ற குறிப்புரைகள் துவக்கப் புள்ளியாக இருக்கலாம். நமது ஒவ்வொரு செயல்வீரர்களும், தலைவர்களும், வெகுசன தலைவர்களும், தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளும் மற்றும் உறுப்பினர்களும் இது போன்ற விவாதங்களில் பங்கேற்க செய்ய நமது முயற்சி இருக்க வேண்டும்.

விவாதங்கள் சுதந்திரமாக மனம்விட்டு விவாதிக்கக் கூடிய சூழலில் நடத்தப்பட வேண்டும். பெயரைக் குறிப்பிடுவதோ அல்லது சங்கடப்படுத்துவதோ, அல்லது ஏதாவது ஒரு கருத்தின் மீது கடும் வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதையோ தோழர்கள் நிச்சயமாக தவிர்க்க வேண்டும். தோழர்கள் தங்கள் கருத்துக்களை, சந்தேகங்க ளை சுதந்திரமாக தெரியப்படுத்த வேண்டும்.

இன்றைய குறிப்புரையில், வன்புணர்ச்சி கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் பாலியல் வன்முறைக்கான பதில்வினையாக உள்ள பாதிக்கப்பட்டவர் மீது பழி போடுதல் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்.

இடதுசாரி இயக்கத் தோழர்கள், பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ள ஆதிக்கத்திலிருக்கும் கலாச்சாரம் மற்றும் கருத்தியலின் தடயங்களைக் கொண்டிருக்கிறார்கள். இடதுசாரியை, புரட்சிகர கட்சியை இதிலிருந்து பிரித்து நிறுத்துவது எதுவென்றால், இந்தக் கருத்துகளுக்கு எதிராக போராடுவதும் புதிய, போராட்ட, புரட்சிகர கருத்துக்களை மனதிற்கு புகட்டுவதிலுள்ள கடப்பாடும்தான். ஆதிக்க கருத்தியலுக்கு எதிரான போராட்டமும், புரட்சிகர கருத்தியலை உள்வாங்கி, இயல்பாக்கிக் கொள்வதும் ஏதோ ஒருமுறை ஊசி போட்டுக் கொள்வது அல்லது தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற காரியமல்ல. மாறாக இது தோட்டத்தை பராமரிப்பது போன்றது. புதிதாக களைகள் மீண்டும் மீண்டும் முளைக்கும், நாம் நமது சொந்தக் கருத்துக்களில் நடைமுறைகளில் உள்ள களைகளை கவனமாக களையா விட்டால், களைகள் செழிப்பாக எல்லா பக்கமும் வளர்ந்து நிற்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும்.

‘துரதிஷ்டவசமாக, இன்றும் நாம் பல தோழர்களிடம் சொல்கிறோம், ‘ஒரு கம்யூனிஸ்டை (ஆண்) கீறிப்பாருங்கள், நீங்கள் ஒரு அற்பவாதியைப் பார்க்கலாம். கூருணர்வு மிக்க இடத்தைக் கீறினீர்கள் என்றால் பெண்கள் பற்றிய அவர்கள் மனோபாவத்தை அறிந்து கொள்வீர்கள்’ என்றார் லெனின். (அற்பமான, சலிப்புத் தட்டுகிற வீட்டு வேலைகளை செய்வதில் பெண்கள் எப்படி களைத்துப் போகிறார்கள், அவர்கள் நேரம், சிந்தனை மற்றும் வலிமை எப்படி வீணாகிறது என்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஆண் தோழரை உதாரணமாகக் கொண்டு லெனின் இதை விவரிக்கிறார். நாமும் கூட, வீட்டு வேலைகளில் பெண்களின் உழைப்பை ‘இயல்பானது’, ‘ஏற்றுக் கொள்ளக்கூடியது’ என்று ஏற்றுக் கொள்கிறோமா?)

எனவே, நாம், நமது சொந்த கூருணர்வு உள்ள பகுதிகளை கீறிப் பார்ப்போம், நமக்குள் உள்ள ஆணாதிக்கக் கருத்துக்களை இனங்கண்டு போராடுவோம். நாம் அவ்வப்போது நமது புரட்சிகர உணர்வை புதுப்பித்து, புத்துணர்வாக்கிக் கொள்வோம்.

பாலியல் வன்புணர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் எல்லோரும் அங்கம் வகித்திருக் கிறோம். டிசம்பர் 2012 இயக்கத்திற்குப் பிறகு, மிக முக்கியமான அம்சம் பாலியல் வன்புணர்ச்சிக் கலாச்சாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பழி சொல்லுதல் ஆகியவற்றுக்கு சவால் விடுவதற்கான அழுத்தம் ஆகும்.
பாலியல் வன்முறை என்றால் என்ன?

சில ஆண்கள் மிருகமாக அல்லது தீயவர்களாக இருக்கிறார்கள் என்பதால் பாலியல் வன்புணர்ச்சி ஏற்படுவதில்லை. பாலியல் வன்புணர்ச்சி என்பது அதிகாரத்தை அறுதியிடுவது. எப்படி ஒடுக்கப்பட்ட  சாதியினரை அவமானப்படுத் தும் நோக்கோடும் நீங்கள் கீழ்படிந்தவர்கள் என்பதை நினைவுபடுத்தவும் சாதிய கலவரங்கள் நடத்தப்படுகின்றனவோ அதே போல்தான் பெண்களை அவமானப்படுத்தவும் அவர்களின் கீழ்நிலையை உணர்த்தவும் பாலியல் வன்புணர்ச்சி நடத்தப்படுகிறது.

நீங்கள் திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணின் மீது அல்லது ‘உங்களுக்கு உடைய வரில்லாத’ ஒரு பெண்ணின் மீது கொண்டிருக்கும் ஆசை என்பது பாலியல் வன்முறை ஆகாது. அவர் விரும்பாதபோது அல்லது அவரின் ஒப்புதல் இல்லாதபோது பாலியல் கவனத்தை திணிப்பது என்பதுதான் பாலியல் வன்முறை ஆகும்.

வெளியே தெரியக் கூடிய காயங்களை பெண்கள் மீது ஏற்படுத்துபவை மட்டும் பாலி யல் வன்புணர்ச்சி அல்லது பாலியல் வன்முறை அல்ல. ஒரு சொல், ஒரு தொடுதல் கூட பெண்களின் ஒப்புதல் இல்லாமல் திணிக்கப்படும் போது அது பாலியல் வன்முறை நிகழ்வாகும்.

ஒரு பெண்ணின் உடல் மீது எந்தவகையிலாவது வலுக்கட்டாயமாக நுழைய முற்படுவது என்பது பாலியல் வன்புணர்ச்சியாகும்.மேலும் தேவையற்ற வெறித்துப் பார்த்தல், தேவை யற்ற பாலியல் சொற்கள், தேவையற்ற தொடுதல் ஆகியவை பாலியல் துன்புறுத்தல் ஆகும்.

பாலியல் வன்புணர்ச்சி கலாச்சாரம்

பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்புணர்வு கலாச்சாரத்தால் வளர்க்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரம்தான் வன்புணர்ச்சிக்கான காரணங்களை உருவாக்குகிறது. இது வன்புணர்ச்சியாளரைத் தவிர பெண்கள் அல்லது ஆடைகள் அல்லது சீன நூடுல்ஸ் அல்லது சாராயம் அல்லது வன்புணர்ச்சிக்காக ஏதோ ஒன்றை சொல்லி பெண்கள் மீது பழி சுமத்துவதற்கான வழியை கண்டு பிடிக்கிறது. 
வன்புணர்ச்சிக் கலாச்சாரத்தின் சில பொதுவான வடிவங்களை அங்கீகரிக்க நாம் முயற்சிப்போம்.    

    அவள் அவனோடு சேர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் அவள் தன் சம்மதத்தை நிச்சயமாக தெரிவித்துக் கொண்டிருப்பாள். அவள் அவனை தனது வீட்டிற்கு அழைத்தாள்/அவள் அவன் வீட்டிற்கு சென்றாள். ஒரே வீட்டில் இருவரும் இரவு ஒன்றாக தங்கியிருந்தார் கள் எனவே நிச்சயமாக அவள் சம்மதம் தெரிவித்திருப்பாள்.

    அவள் தூண்டும் விதம் ஆடை அணிந்திருந்தாள். அவன் தூண்டப்பட்டதனால் அவளை வன்புணர்ச்சி செய்தான்.

    அவள், அவனுடன் சேர்ந்து காதலியைப் போல் சுற்றிக் கொண்டிருந்தாள் அதனால் அவனை குற்றம் சொல்ல முடியாது. இவள் விருப்பமாய் இருந்திருப்பாள்.

    அவள் அவனது மனைவி/தோழி. எனவே அவள் தன்னை அவன் வன்புணர்ச்சி செய்து விட்டான் என்று சொல்ல முடியாது.

    அவள் துணிச்சலானவள். அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. அதனால் அவளை யாரும் வன்புணர்ச்சி செய்ய முடியாது.

    சம்பவத்திற்கு பிறகு அவள் இயல்பாக இருந்தாள். அவள் கூச்சலிடவோ அல்லது அழவோ இல்லை; நீண்ட கால தாமதத்திற்கு பின்னர்தான் புகார் கொடுத்தார். எனவே அவள் பாலியல் வன்புணர்ச்சிக்கு/வன்கொடுமைக்கு உடன்பட்டிருக்க வேண்டும்.

    அவர் உடம்பில் எவ்வித காயமும் இல்லை. எனவே அவர் சும்மா படுத்திருக்க வேண்டும்.

நாம் இந்தப் பட்டியலிலுள்ள எல்லாவற்றையும் இணைத்துக் கொள்ளலாம். இந்தப் பட்டியல்தான் ‘வன்புணர்ச்சி கலாச்சாரம் மற்றும் பாதிக்கப்பட்டவரையே பழி சொல்லுதல்’ ஆகும்.

இதை நாம் ஏன் வன்புணர்ச்சி கலாச்சாரம் என்று சொல்கிறோம்? இதைப் புரிந்து கொள்ள‘ஒப்புதல்’ என்பதை சுருக்கமாக விவாதிப்போம். 

Search