ஆற்றல் (கெப்பாசிட்டி)
யதார்த்தம் (ரியாலிட்டி), இந்த இரண்டு சொற்களும் மானுட யதார்த்தத்தில்,
மிகுந்த ஆற்றல் மிக்கவை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உற்பத்தி
உறவுகள் என்ற கூடு தடையாக மாறும்போது, கூடு உடைக்கப்படுவதே புரட்சி என,
மார்க்சியம் போதிக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில், சமூகமயமாக்கப்பட்ட
விதத்தில் நடைபெறும் உற்பத்தி, மேலும்மேலும் பிரும்மாண்டமாக வளரும் ஆற்றல்
கொண்டது. ஆனால், தனி உடைமை, மலையென உருவாகும் செல்வங்களை அபகரித்துக்
கொண்டு, மனிதப் பெருந்திரளினருக்கு வறுமையையே வழங்குகிறது. வேலை
கிடைக்காதோர் கரங்க ளாலான காடு, மேலும்மேலும் அடர்த்தியாக, வேலை
கிடைக்காதோரின் கரங்கள், மேலும் மேலும் மெலிந்து போகின்றன. அதாவது, மூலதனம்
- கூலிஅடிமை என்ற உற்பத்தி உறவில் லாபம் குவிந்து மூலதனம் திரளும் போது,
கூலி குறைந்து, மக்களின் வாங்கும் சக்தி சரிவதால், முதலாளித்துவப்
பொருளுற்பத்தி, ஒரு கட்டத்திற்குமேல் வளர்வதில்லை. அதனால்தான் அங்கு ஆற்றல்
யதார்த்தமாவதில்லை.
பாட்டாளி வர்க்கம், தனக்குள் ஒரு வர்க்கமாகவே இன்று இருக்கிறது. அது தனக்கான ஒரு வர்க்கமாகும்போது புரட்சி வெல்லும். அதாவது, பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளுக்குள் ஓர் ஆற்றல் இருக்கிறது. அது யதார்த்தமாக வேண்டும். சுரண்டப்படுவதை ஒடுக்கப்படுவதை மட்டுமே புரிந்து கொள்ளும் நிலையில் பாட்டாளி வர்க்கம் சுருங்கி நிற்கும் போது, அது தனக்குள் ஒரு வர்க்கமாக உள்ளது. எதனால் எப்படி சுரண்டப்படுகிறோம் ஒடுக்கப்படுகிறோம் என்பதையும், அந்த சுரண்டலை ஒடுக்குமுறையை வீழ்த்துவது எப்படி என்ப தையும் பாட்டாளி வர்க்கம் உணரும்போது செயல்படும்போது, அது தனக்கான ஒரு வர்க்கமாகிறது. அப்போதுதான், அதற்குள் உறைந்திருக்கும் ஆற்றல் யதார்த்தமாகிறது.
ஏஅய்சிசிடியுவின் ஆற்றலை யதார்த்த மாக்க, அது தனது அக்டோபர் 4 - 5, 2014, திருப்பூர் எட்டாவது மாநில மாநாட்டை நெருங்கும்போது எடுத்த முயற்சிகளைப் பார்ப்போம்.
முதலாளித்துவத்தில், இயந்திரத்திற்கு ஆற்றல் இருக்கிறது. அதற்கேற்ப, சில தொழிற்சாலைகளில் டச் டைம் நோ நார்ம்ஸ் என்கிறார்கள். அப்படியானால், உற்பத்தி தருவ தற்கு உச்சவரம்பே கிடையாது. எட்டு மணி நேரம் இயந்திரம் பக்கத்தில் இருந்து இயந்திர ஆற்றல் அளவுக்கு உற்பத்தி தரவேண்டும். ஏஅய்சிசிடியுவின் ஆற்றலை எப்படிக் கணக்கி டுவது? ஏஅய்சிசிடியு என்ற மய்ய சங்கத்திற்கு இணைப்பு சங்கங்கள் உள்ளன. இணைப்பு சங்கங்களில் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை என்ன வேலை செய்ய வைக்க முடியும் என்பதோடு, ஆற்றல் தொடர்புடையது. இந்த ஆற்றல், வளரும் தன்மை கொண்டது. இந்த ஆற்றல், வளர்க்கப்பட வேண்டி உள்ளது.
புரட்சிகர இளைஞர் கழகத்தின் 21.09.2014 கூட்டத்தில், ‘முதலாளித்துவம் (கொடூரமாக) வேலையைப் பறிக்கும்; போராட்ட செங்கொடி, மாலெ கட்சியின், ஏஅய்சிசிடியுவின், புரட்சிகர இளைஞர் கழகத்தின் போராட்ட செங்கொடி, பாட்டாளிகளுக்கு, இளைஞர்களுக்கு வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் வேலை தரும்; முதலாளித்துவத்தை வீழ்த்து வதை நோக்கிய வேலை தரும்; நாளும் உழைத்து, லாபத்தைப் பெருக்கி மூலதனத் திரட்சிக்கு உதவி, நம்முடைய மற்றும் நம் சந்ததியினரின் மீது போடப்பட்டுள்ள கூலி அடிமைச் சங்கிலிகளைப் பலப்படுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுகிற நாம், ஒவ்வொரு நாளும், அந்தக் கூலி அடிமை முறையையே வீழ்த்தும் பணியில் ஈடுபட வேண்டும்’ என்ற கருத்து வலுவாக முன்வந்தது.
வர்க்க ஆற்றலில், வேறொரு விஷயமும் உள்ளது. The whole is more than the sum of its parts. அதாவது, பகுதிகளின் கூட்டுத் தொகையைக் காட்டிலும் முழுமை கூடுதலானது. தனித்தனி தொழிலாளர்களுக்கு பலங்களும் உண்டு, பலவீனங்களும் உண்டு. அவர்கள் தனி மனிதர்களாக, தனித்தனி மனிதர்களாகச் செயல்படும்போது, தமக்குள்ளேயே போட்டி போடுமாறு நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அவர்கள் வர்க்கமாகச் செயல்படும்போது, அவர்களது ஆற்றல் அதிகரிக்கும். பலவீனங்கள் பின்னுக்குப் போய் பலங்கள் முன்னுக்கு வரும்.
மேலே கண்ட இரண்டு விஷயங்களும், ஏஅய்சிசிடியுவின் ஆற்றல், அதில் உறுப்பினர்களாகச் செயல்படும் தொழிலாளர் தோழர்களின் ஆற்றலோடு தொடர்புடையது என்பதையும், அவர்களது ஆற்றல், நமது முன்னணித் தோழர்கள், தொழிலாளர்களை அரசியல்படுத்தும் சங்கங்களை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளின் அளவிற்கு ஏற்பவே யதார்த்தமாகும் என்பதையும், புலப்படுத்தும்.
கோவை ஏஅய்சிசிடியு மாவட்ட மாநாடு 06.07.2014 அன்று நடந்தது. அதற்குப் பிறகு திரும்பத்திரும்ப பல முயற்சிகள் மாநில மாநாட்டுப் பணிகளை முடுக்கி விடுவதை நோக்கி நடைபெற்றன. 14.09.2014, 16.09.2104 தேதிகளில் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற கூட்டங்கள், சாந்தி கியர்ஸ் ஆலை வாயிலிலும் வெளியேயும் நடைபெற்ற கூட்டங்கள், நமது சங்க உறுப்பினர்களின் ஆற்றலை யதார்த்தமாக்கத் திட்டமிட்டன.
பிரிக்காலை ஒட்டி, 21.09.2014 அன்று, கூடலூர், கவுண்டன்பாளையம், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் அனைத்து வார்டுகளிலும் மாநாட்டுப் பிரச்சா ரம் செய்து வசூல் செய்ய முடிவானது. இந்த வேலைகளுக்குள், வாக்குச் சாவடிகள் மட்ட வேலைகள் என்ற அம்சத்தை நுழைப்பது என முடிவானது. அதே போல் சிங்காநல்லூர் சூலூர் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில், சாந்தி கியர்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும், உழைப் போர் உரிமை இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களைக் கொண்டு பிரச்சாரம் வசூல் 60 குழுக்களாகச் செய்வது எனவும், திருப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்குவோர் சங்கத் தோழர்கள் மூலம் பிரச்சாரம், வசூல் செய்வதெனவும் முடிவானது.
வேறொரு தளத்திலும் யோசிக்கலாம். நம் தலைமைத் தோழர்கள், அரசு சமூகத்திலிருந்து தோன்றியிருந்தாலும் தன்னை சமூகத்திலிருந்து அயலானாக காட்டிக் கொள்வதுபோல், அந்நியப் பட்டு நிற்பது போல், ஏஅய்சிசிடியு திட்டங்கள் முடிவுகள் வேலைகளிலிருந்து அந்நியப்பட்டு எதையும் அணுகக்கூடாது. வெளியிலிருந்து பேசக் கூடாது. உள்ளுக்குள்ளிருந்து பேச வேண்டும். தனி நபர் பொறுப்போடு, ஒன்றுபடுத்தும் அணுகுமுறையோடு, கூட்டுத்தலைமையைப் பலப்படுத்திட வேண்டும்.
இவை அனைத்தையும், குடியிருப்புப் பகுதி - அமைப்புசாரா தொழிலாளர் - நகர்ப்புற வறியவர் வேலைகள் செய்வதற்காக, செய்யும்போது சாத்தியமாக்க வேண்டும். நாம் இந்த வேலையை செய்யவே இல்லை, நமக்கு இந்த வேலை செய்வது பற்றி எதுவும் தெரியாது என்று பேசுவது யதார்த்த விவரங்களோடு பொருந்துவது போல் தெரியவில்லை. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் அசையும். விடாப்பிடியாய் தொடர்ந்து செய்ய வேண்டும். போதுமான விடாப்பிடியான தொடர் முயற்சிகளுக்குப் பிறகு அனுபவத்தில் இருந்து பரிசீலிப்பது பேருதவியாக இருக்கும். அதற்காக, யாராவது ஒரு சில தலைமைத் தோழர்கள், தமது சொந்தப் பரிசோதனைக் கூடங்களைத் தேர்வு செய்து பணியாற்றலாம். தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் மத்தியில் அமைப்பை நிறுவ, இயக்கம் கட்ட, நாம் செய்கின்ற இந்த அவசர அவசிய வேலை, தொழிலாளர் வர்க்கத்திற்குள் பொதிந்திருக்கும் ஆற்றலை வெளியே கொண்டுவந்து யதார்த்தமாக்க உதவும். அந்த வகையில் ஏஅய்சிசிடியுவின், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் பாய்ச்சலான வளர்ச்சிக்கு உதவும்.
குடியிருப்புப் பகுதி வேலைகளிலிருந்து, (அமைப்புசாரா தொழிலாளர்கள்) கோவை, குமரி, நெல்லையில், சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பல நூறுகளில் சில ஆயிரங்களில் திரட்ட (அக்டோபர் 4 - 5லிருந்து அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டம் வரை எடுக்கும் நடவடிக்கைகள் மூலம்) நம் அமைப்பிற்கு ஆற்றல் உள்ளதா என யோசித்தால், நமக்கு நிச்சயம் அத்தகைய ஆற்றல் உள்ளது என்றே தெரிகிறது.
உழைக்கும் மக்கள் சாசனத்தை, சாராயக் கடை அகற்றுதல், குடிநீர், விலை இல்லாப் பொருள் வழங்காமை, ரூ.15,000 குறைந்த பட்சக் கூலி, வீட்டுமனைப்பட்டா 3 சென்ட் நிலம் ஆகியவற்றை சில நூறுபேர் 20 நாட்கள் ஓரிரு லட்சம் பேர் வரை அழுத்தமாகப் பிரச்சாரம் செய்தால், கோவையில் 2000/2500/3000 பேர் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வைப்பது நிச்சயம் முடியும். இதே போல் மற்ற பகுதிகளிலும் முடியும். பிரிக்கால் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் போக, 20 நாட்களில் சில ஆயிரம் பேரை பல நூறு பேரை சிறை நிரப்பும் போராட்டத்திற்கு திரட்டும் ஆற்றல் நமக்குண்டு.
அம்பத்தூரில், திருபெரும்புதூரில், நெல்லையில், குமரியில் இந்த ஆற்றல் நமக்கு உள்ளது. மாநாட்டில் இந்த ஆற்றலை சரியாக அடையாளம் கண்டு மதிப்பிடுவது பற்றியும், அதனை யதார்த்தமாக்குவது பற்றியும் பிரதிநிதிகள் விவாதிப்பார்கள்.
அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்ட அணிதிரட்டல், வருங்கால அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கப் பணிகளுக்கு அடித்தளமாய் இருக்கும். தொழிலாளர் வர்க்கத்தின், தனக்கான வர்க்கமாக மாறும் உள்ளாற்றலை யதார்த்தமாக்குவதை நோக்கிய பயணத்திற்கு பங்களிக்கும்.
மக்கள் கருத்து

- கோவையில் செப்டம்பர் 21 அன்று நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் 500 பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் மற்றும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டலில் ஈடுபட்டனர். பிரிக்கால் தொழிலாளர்கள் 15 குழுக்களாகவும், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் 26 குழுக்களாகவும், உழைப்போர் உரிமை இயக்கத் தோழர்கள் 29 குழுக்களாகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
- அதே நாளில் திருப்பூரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட 60 தோழர்கள் 15 குழுக்களாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர்.
- இந்த 85 குழுக்கள், செப்டம்பர் 21 ஒரே நாளில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை சந்தித் துள்ளனர். ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் நிதி திரட் டியுள்ளனர். கோவையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் கலந்துகொண்ட தோழர்கள் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். திருப்பூரில், பகுதிக்கு வெளியில் இருந்து சென்ற தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர், வீரபாண்டி பேரூராட்சிகளிலும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியிலும் 130 பிரிக்கால் தொழிலாளர்கள், 15 குழுக்களாக பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் ரூ.50,000 வரை திரட்டியுள்ளனர்.
- சாந்தி கியர்ஸ் நிரந்தரத் தொழிலாளர்கள் 150 பேர், உழைப்போர் உரிமை இயக் கத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 150 பேர் சின்னியம்பாளையம் முதல் கருமத்தம் பட்டி, குரும்பபாளையம் முதல் ஒண்டிப்பதூர் என சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட் பட்ட பகுதியிலும், பீளமேடு ஹோப்காலேஜ் வரை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தொகுதியிலும், காளப்பட்டி, நேரு நகர் போன்ற கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலும், போத்தனூர், வெள்ள லூர், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குள்ளும் பிரச்சாரம் மேற்கொண்டனர். மக்கள் மத்தியில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் திரட்டினர்.
- பல்லடம், சூலூர், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, காங்கேயம், அவிநாசி பகுதிகளின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களும், நாமக்கல் மாவட்ட தோழர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு ரூ.10,000 வரை நிதிதிரட்டினர்.
வேறொரு தளத்திலும் யோசிக்கலாம். நம் தலைமைத் தோழர்கள், அரசு சமூகத்திலிருந்து தோன்றியிருந்தாலும் தன்னை சமூகத்திலிருந்து அயலானாக காட்டிக் கொள்வதுபோல், அந்நியப் பட்டு நிற்பது போல், ஏஅய்சிசிடியு திட்டங்கள் முடிவுகள் வேலைகளிலிருந்து அந்நியப்பட்டு எதையும் அணுகக்கூடாது. வெளியிலிருந்து பேசக் கூடாது. உள்ளுக்குள்ளிருந்து பேச வேண்டும். தனி நபர் பொறுப்போடு, ஒன்றுபடுத்தும் அணுகுமுறையோடு, கூட்டுத்தலைமையைப் பலப்படுத்திட வேண்டும்.
இவை அனைத்தையும், குடியிருப்புப் பகுதி - அமைப்புசாரா தொழிலாளர் - நகர்ப்புற வறியவர் வேலைகள் செய்வதற்காக, செய்யும்போது சாத்தியமாக்க வேண்டும். நாம் இந்த வேலையை செய்யவே இல்லை, நமக்கு இந்த வேலை செய்வது பற்றி எதுவும் தெரியாது என்று பேசுவது யதார்த்த விவரங்களோடு பொருந்துவது போல் தெரியவில்லை. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் அசையும். விடாப்பிடியாய் தொடர்ந்து செய்ய வேண்டும். போதுமான விடாப்பிடியான தொடர் முயற்சிகளுக்குப் பிறகு அனுபவத்தில் இருந்து பரிசீலிப்பது பேருதவியாக இருக்கும். அதற்காக, யாராவது ஒரு சில தலைமைத் தோழர்கள், தமது சொந்தப் பரிசோதனைக் கூடங்களைத் தேர்வு செய்து பணியாற்றலாம். தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் மத்தியில் அமைப்பை நிறுவ, இயக்கம் கட்ட, நாம் செய்கின்ற இந்த அவசர அவசிய வேலை, தொழிலாளர் வர்க்கத்திற்குள் பொதிந்திருக்கும் ஆற்றலை வெளியே கொண்டுவந்து யதார்த்தமாக்க உதவும். அந்த வகையில் ஏஅய்சிசிடியுவின், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் பாய்ச்சலான வளர்ச்சிக்கு உதவும்.
குடியிருப்புப் பகுதி வேலைகளிலிருந்து, (அமைப்புசாரா தொழிலாளர்கள்) கோவை, குமரி, நெல்லையில், சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பல நூறுகளில் சில ஆயிரங்களில் திரட்ட (அக்டோபர் 4 - 5லிருந்து அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டம் வரை எடுக்கும் நடவடிக்கைகள் மூலம்) நம் அமைப்பிற்கு ஆற்றல் உள்ளதா என யோசித்தால், நமக்கு நிச்சயம் அத்தகைய ஆற்றல் உள்ளது என்றே தெரிகிறது.
உழைக்கும் மக்கள் சாசனத்தை, சாராயக் கடை அகற்றுதல், குடிநீர், விலை இல்லாப் பொருள் வழங்காமை, ரூ.15,000 குறைந்த பட்சக் கூலி, வீட்டுமனைப்பட்டா 3 சென்ட் நிலம் ஆகியவற்றை சில நூறுபேர் 20 நாட்கள் ஓரிரு லட்சம் பேர் வரை அழுத்தமாகப் பிரச்சாரம் செய்தால், கோவையில் 2000/2500/3000 பேர் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வைப்பது நிச்சயம் முடியும். இதே போல் மற்ற பகுதிகளிலும் முடியும். பிரிக்கால் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் போக, 20 நாட்களில் சில ஆயிரம் பேரை பல நூறு பேரை சிறை நிரப்பும் போராட்டத்திற்கு திரட்டும் ஆற்றல் நமக்குண்டு.
அம்பத்தூரில், திருபெரும்புதூரில், நெல்லையில், குமரியில் இந்த ஆற்றல் நமக்கு உள்ளது. மாநாட்டில் இந்த ஆற்றலை சரியாக அடையாளம் கண்டு மதிப்பிடுவது பற்றியும், அதனை யதார்த்தமாக்குவது பற்றியும் பிரதிநிதிகள் விவாதிப்பார்கள்.
அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்ட அணிதிரட்டல், வருங்கால அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கப் பணிகளுக்கு அடித்தளமாய் இருக்கும். தொழிலாளர் வர்க்கத்தின், தனக்கான வர்க்கமாக மாறும் உள்ளாற்றலை யதார்த்தமாக்குவதை நோக்கிய பயணத்திற்கு பங்களிக்கும்.
மக்கள் கருத்து
- வீரபாண்டி பேரூராட்சியில் 4ஆவது வார்டில் நடந்த பிரச்சாரத்தின்போது, தோழர்களிடம் வசூலின்போது, ஒரு பெண், ‘நீங்கள் யார்? அடையாள அட்டை இருக்கிறதா?’ என்று கேட்டுக் கொண்டிருந்த போதே, வயதான ஒரு பெண், செங்கொடியை பார்த்தவுடன் ரூ.200அய் எடுத்து வந்து உண்டியலில் போட்டுவிட்டு ‘என் கணவரும் கம்யூனிஸ்ட்’ என்றார்.
- கூடலூர் பேரூராட்சியில் 2ஆவது வார்டு சரஸ்வதி நகரில் ஒரு பெண் வழக்கறிஞர், ‘தேர்தலில் தோல்வி அடைந்தால் மக்களிடம் செல்ல மாட்டார்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் மக்களை சந்திக்கிறீர்கள். இது வரை எனது வீட்டிற்கு 7 முறை வந்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்’ என்றார். பகுதியில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.