கைதி எண் 7402, செல் எண் 23
சேர மன்னனின் இளவல் இளங்கோவடிகள் எழுதிய சிலம்பின் கதையை, பாரதி, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றான். இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் மூலம் மூன்று செய்திகள் சொல்ல வந்ததாக எழுதுகிறார். அதில், முதல் செய்தி, ‘அரசியல் பிழைத் தோர்க் கறங்கூற்றாவதூ உம்’ என்பதாகும். பழந்தமிழ் இலக்கியம், அரசியல்ரீதியாகத் தவறு செய்தவர்களுக்கு, அறம், அதாவது தர்மம் - நியாயமே, கூற்றாக, அதாவது இறுதி தீர்ப்பாக மாறும் என்கிறது. கூற்றுவன் உயிர் பறிப்பான் என்பதும் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையாக அப்போது இருந்துள்ளது.
27.09.2014 அன்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில், கைதியாக அடைக்கப் பட்டார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதிரிகளே தெரியவில்லை என்றவர், இடைத் தேர்தல்களில் வெற்றிமேல் வெற்றி பெற்றவர். ஒரு படுக்கை, ஒரு மின் விசிறி, ஒரு குளியலறை கொண்ட சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளார்.
தண்டனைக் கைதியாக அவருக்கு ஒரு வெள்ளை சேலை தரப்பட்டது. அவருக்கு இரவு உணவாக ஒரு கேழ்வரகு உருண்டை, 200 கிராம் சாதம், 2 சப்பாத்திகள் தரப்பட்டன. அவர், அவற்றை மறுத்து, பழங்கள் உண்டார். - இவை, தமிழ் கூறு உலகெங்கும் பரவிய, பரபரப்பான செய்திகள். ஹிட்லர் முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் இந்திராகாந்தி போன்றவர்கள், சிகரங்களின் உயரத்திலே எப்போதும் இருப்போம் எனக் கருதியவர்கள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதை வரலாறு நமக்குச் சொல்கிறது. ஜெயலலிதா, பதவியில் இருக்கும் முதல்வராய், முதலில் சிறை செல்லும் அவப்புகழ் பெறுகிறார். நரசிம்மராவ், சுக்ராம், ஓம்பிரகாஷ் சவுதாலா, லாலு பிரசாத் வரிசையில், ஆனால், அதே நேரம், ஒரு முறை முன்னாள் முதல்வராக, மறுமுறை பதவியில் உள்ள முதல்வராக, ஜெயலலிதாவே சிறை சென்றுள்ளார். ஒப்பாரும் மிக்காரும் இல்லைதான்.
18 ஆண்டுகள் தாமதமாய் வந்தாலும், வரவேற்கத் தக்க தீர்ப்புதான்
எத்தனை இழுத்தடிப்புக்கள். எத்தனை தந்திரங்கள். எத்தனை வாய்தாக்கள். அரசு வழக்கறிஞர், இனி வாய்தா வாங்கினால் ஒரு நாளுக்கு ரூ.20,000 அபராதம் என நீதிபதி சொன்ன பிறகே, ஆட்டம் காட்டுவது நின்றது. ரூ.66.56 கோடி சொத்து குவிப்பு வழக்கு. கூடவே சதிக் குற்றம். 27.09.2014 காலை 11.05 மணிக்கு, நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா 1,232 பக்கங்கள் தீர்ப்பைப் படிக்கத் துவங்கினார். ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீங்கள் நால்வரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆகி உள்ளது. உங்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும்’ தீர்ப்பைக் கேட்டதும், ஜெயலலிதா கண் கலங்கினார் என தி இந்து தமிழ் நாளேடு குறிப்பிடுகிறது. அந்த நாளேட்டிலிருந்து அடுத்தடுத்த விவரங்களையும் பார்ப்போம்.
அதன் பிறகு 4 மணிக்கு தண்டனை விவரங்களை நீதிபதி டி குன்ஹா அறிவித்தார். ‘முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற 3 குற்றவாளிகளுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்கள் ஏலம் விடப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். வழக்கு விசாரணை செலவுத் தொகையாக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி வழங்க வேண்டும்.’ தண்டனைக் குறைப்பு, அபராதக் குறைப்பு வாதங்களுக்கு நீதிபதி டி குன்ஹா பின்வருமாறு தம் தீர்ப்பில் பதில் சொல்லி உள்ளார்; ‘குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, தண்டனையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. மேலும் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை, 1991 - 1996 கால கட்டத்தில் குற்றவாளிகள் 4 பேரும் குவித்த சொத்துக்களின் மதிப்போடு ஒப்பிட் டால் மிகவும் குறைவுதான். ஆகவே அதனைக் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும்.
மக்கள் தீர்ப்பு சட்டப்படியான குற்றத்தை துடைத்தெறிந்து விடுமா?
இஸ்லாமியப் படுகொலை நடத்தியவர்கள் முதல் தேசத்தின் செல்வங்களை சூறையாடும் அரசியல்வாதிகள் வரை, ஊழல் வழக்குகளில் தமக்கு வழங்கப்படும் தண்டனை, தேர்தல் களில் தாம் பெறும் வெற்றிகளால் ரத்தாகி விடும் என பொருள்படும் விதம் பேசுகிறார்கள், பேச வைக்கிறார்கள். செ.கு.தமிழரசன் சொல்கிறார்; ‘1996ல் வழக்கு போடப்பட்ட பிறகு இரண்டு முறை மக்களால் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு கூட மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மக்கள் மன்ற உணர்வை நீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை’ சட்டத்தின் ஆட்சி, சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றெல்லாம் வசதிக்கேற்ப பேசுகிற முதலா ளித்துவ அரசியல்வாதிகள், தேர்தல் முடிவு களைக் காரணம் காட்டி குற்றவியல் வழக்கு களில் நீதிமன்ற தீர்ப்புக்களிலிருந்து தப்பிக்க முடியுமா? ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, தமிழக மக்கள் என்ற மக்கள் நீதி மன்றம் முன்பு விசாரிக்கப்படவில்லை. தமிழக மக்கள், தேர்தல்களில், ஜெயலலிதா சந்தித்த குற்றவியல் வழக்குகள் மீது தீர்ப்பு வழங்க வில்லை. சட்டத்திலோ, அரசியல் மரபுகளிலோ, இதற்கெல்லாம் இடமில்லை. சட்டப்படி தப்பிக்கவே, வசதியானவர்களுக்கு அதிகாரத்தி லுள்ளவர்களுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் இருக்கும்போது, 18 வருடங்களாக வழக்கை இழுத்தடித்தவர்கள், தீர்ப்பை சட்டப்படிதான் எதிர்கொள்ள வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீதிதேவன் மயக்கம்
ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு அவர் சந்திக்கும் முதல் குற்றவியல் வழக்கு அல்ல. டான்சி, பிளசண்ட் ஸ்டே ஹோட்டல், கலர் டி.வி., ஸ்பிக் பங்குகள், நிலக்கரி இறக்குமதி, லண்டன் ஹோட்டல், வருமான வரி மீறல் என பல வழக்குகளை சந்தித்துள்ளார். சட்ட வாய்ப்புக்களை அவர் திறம்பட பயன்படுத்தி, சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில், பல வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ளார்.
டான்சி வழக்கு, சற்று வித்தியாசமான வழக்கு. அது, ஏழைக்கொரு நீதி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வேறு ஒரு நீதி என்பதற்கான அவமானகரமான சாட்சியமாக என்றும் இருக்கும். 21.09.2001ல் டான்சி வழக்கை ஒட்டி ஜெயலலிதா பதவி விலகினார். டான்சி என்ற அரசு நிறுவன நிலத்தை, ஜெயா பப்ளி கேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் சார்பாக, முதல்வர் ஜெயலலிதா அதிகாரத்தை முறை கேடாக பயன்படுத்தி வாங்கினார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக சிறப்பு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ராஜேந்திரபாபுவும், பி.வி.ரெட்டியும் வினோதமான தீர்ப்பு வழங்கினார்கள்; ‘முதலமைச்சர் சில சொத்துக்களை வாங்கத் தயாராக இருக்கிறார் என்ற விசயம் அதிகாரிகளுக்கு தெரிந்த பிறகு, அதிகாரத்துவ வர்க்கம் சிக்கலில்லாமல் அந்த சொத்து விற்பனை நடப்பதற்கும், முதலமைச்சர் விரும்பிய விலைக்கு விற்பதற்கும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்ற விசயத்தில் எங்கள் மனங்களில் தெளிவாக இருக்கிறோம்’. இது வரை பிரமாதம்! ‘அரசின் சிறு அதிகாரிகளுக்கு ஒரு சட்டமும் முதல்வருக்கு ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இது போன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பர பொருள்தானா? அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா?’ இது அதை விடப் பிரமாதம்!
அடுத்து வருவது, பெரிய மனிதர்கள், சட்டத்தின் சந்துபொந்துகளை, ஆளே சுலப மாக வெளியே வந்துவிடக்கூடிய அளவுக்கு பெரிய வாசல்களாகவே மாற்ற முடியும் என்பதைக் காட்டும். ‘இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, டான்சி நிலப்பத்திரத்தில் அவருடைய கையெழுத்தை மறுக்கக் கூடிய அளவுக்கு சென்றுள்ளார். ஜெயலலிதா நிபந்தனைகள் இல்லாமல் சொத்துக்களை திரும்ப ஒப்படைப்பதோடு, நாங்கள் என்ன கூறியிருக்கி றோம் என்ற அடிப்படையில், தன் மனசாட்சிக்கு பதிலளிக்க முன்வர வேண்டும்’. கடைசியில், குற்றத்தோடு அவரை தொடர்புபடுத்த சாட்சியம் இல்லை என்று நீதிமன்றம் சொல்லி, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது என்றபோதும், தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள மற்ற பகுதிகள், நீதிமன்றத்தின் தயக்கத்தை, தடுமாற்றத்தை, குழப்பத்தை வெளிப்படுத்தின. மாட்சிமை மிகுந்த நீதிமன்றங்கள், மன சாட்சிக்கு பதில் சொல்லச் சொல்லிவிட்டு, சாமான்ய மக்களுக்கு விடுதலை தர முன்வருவார்களா?
இதே உச்சநீதிமன்றம், சட்டக் கோட்பாடு களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாடாளு மன்றம் மீதான தாக்குதல் வழக்கில், தேசத்தின் மனசாட்சிப்படி அப்சல் குருவுக்கு மரண தண்டனை எனச் சொன்னதை மறக்க முடியுமா? அலகாபாத் உயர்நீதிமன்றம் பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் இருந்தது என்பது காலாகாலமாக நிலவி வந்த மக்களின் நம்பிக்கை என்று சொல்லி அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதை மறக்க முடியுமா? நாட்டில் உள்ள ஊழல் எதிர்ப்பு சூழலில், ராஜா, கனிமொழி சிறையிலிருந்தனர்; எடியூரப்பா தண்டிக்கப்பட்டார். இப்போது அவர் பங்கிற்கு ஜெயலலிதாவும் பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டுள்ளார். மக்கள் மன்றம் ஊழல் எதிர்ப்பு உணர்வு தணியாமல் பார்த்துக் கொண்டு, அந்த உணர்வை விசிறிவிட்டு பரப்பி வளர்க்கும் போது, நிச்சயம், அந்த உணர்வு, நீதிமன்றங்கள் மீதும் தாக்கம் செலுத்த வாய்ப்பு உண்டு.
தீர்ப்பை அடுத்து
அடுத்து ஓர் இடைக்கால முதல்வர், திரும்பவும் அம்மையாரே வருவார் என்ற ஓர் எண்ணம் நிச்சயமாக திட்டமிட்டு பரப்பப் படுகிறது. அதற்காகவே திரு.ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக்கப்பட்டுள்ளார். டான்சி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபோது, அப்போதைய பாஜகவின் பொது செயலாளராக இருந்த திரு.நரேந்திர மோடி, அத்தீர்ப்பு ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் என்றார். இப்போது அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ பிரதிநிதி திரு.நக்வி, பெங்களூரு தீர்ப்பு இறுதியானது அல்ல, துரதிர்ஷ்வசமானது, வேதனைக்குரியது என்கிறார். கருணாநிதி உடனடியாக கருத்து ஏதும் சொல்ல முன்வரவில்லை. தமிழகத்தின் மற்ற முக்கிய கட்சிகள், இகக, இகக( மா) ஆகியோரும் கூட அரசாங்கம் பதவி விலக வேண்டும், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரவில்லை.
அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது அவ்வளவு மரியாதையா? தேர்தலில் வென்றவர்கள் தேர்தல்கள் மூலம்தான் வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான், எப்போதும் நியாயம், எப்போதும் சரி எனக் கூற முடியுமா? தேர்தல் நடந்தாலும், அனுதாபத்தால் அஇஅதிமுகவே திரும்பவும் வரும் என அஞ்சுகிறார்களா? அல்லது அம்மையாருக்கு நேர்ந்தது நாளை தங்களுக்கும் நேரும் என்ற வர்க்க கூருணர்வோடு செயல்படுகின்றனரா? விவகாரம், கோட்பாடு தொடர்பானது. முதலமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியில் நீடிக்க முடியாதென்றால், அவர் தலைமையில் வென்ற அஇஅதிமுக, அரசாங்கத்தை எப்படி தொடர்ந்து நடத்த முடியும்?
‘அரசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூ உம்’ என்ற வகையில், அஇஅதிமுக அரசு பதவி விலகி தேர்தல்களை சந்திக்க வேண்டும்