ஊரை அடித்து உலையில் போட்டு சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவும் அவர் உடன்பிறவாச் சகோதரி வகையறாக்களும் தண்டிக்கப்பட்டு சிறைக்குள்ளே தள்ளப் பட்டதற்காக அ(ராஜக)திமுகவினர் தமிழகம் முழுவதும் அடாவடித்தனம் செய்து கொண்டிருக்க, அதை காவல்துறை வேடிக்கை பார்த்துத் கொண்டிருந்தது மட்டுமின்றி, அதிமுகவினரின் அழுகுரலும் அமர்க்களமும் தவிர வேறு எந்த அரசியல் நிகழ்ச்சியும் தமிழகத்தில் நடைபெறக் கூடாது என திட்டமிட்டு அரசும் காவல்துறையும் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில், திருப்பூரில் ஏஅய்சிசிடியுவின் 8ஆவது மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள் தோழர்கள்.
அதிமுகவினர் தங்கள் இஷ்டத்திற்கு பேனர்கள் வைத்துக் கொண்டும் எந்த அனுமதியும் பெறாமல் அறப்போராட்டம்(!) நடத்திக் கொண்டிருக்கும் போது ஏஅய்சிசிடியு மாநாட்டிற்கு கொடிகள் கட்டக்கூடாது பேனர்கள் வைக்கக் கூடாது என்றது திருப்பூர் காவல்துறை. ஆனால், தோழர்களின் தொடர் முயற்சி, விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக திருப்பூர் நகரெங்கும் செங்கொடிகளும் பேனர்களும் சுவரொட்டிகளும் அக்டோபர் 4, 5 நடைபெற்ற ஏஅய்சிசிடியு மாநாட்டை பறைசாற்றின.
ஒரு நெருக்கடியான அரசியல் சூழலில் 04.10.2014 அன்று திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், தோழர் கங்காராம் கோல் நினைவு அரங்கில் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. அக்டோபர் 4 அன்று ஏஅய்சிசிடியு கொடியை, மூத்த தோழர் குப்பாபாய் ஏற்றிய பின்னர் அஸ்ஸôமில் தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்களுக்காகப் போராடி, தியாகியான தோழர் கங்காராம் கோல் உருவப்படத்திற்கு தலைவர்களும், பிரதிநிதிகளும் மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தோழர் எ.எஸ்.குமார் வரவேற்புரையுடன் பொது மாநாடு துவங்கியது.
பொது மாநாட்டில் ‘வலதுசாரிப் பாதையை முறியடிப்போம், இடதுசாரி திசைப் பயணத்தை உறுதி செய்வோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தோழர் என்.கே.நடராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் ‘முறைகேடாகச் சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார். ஆனால், அந்த ஊழலுக்கு அனுதாபம் தேடுகிற வகையில் தமிழகத்தில் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் மத்திய ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி நாட்டை கூவிக் கூவி விற்றுக் கொண்டு இருக்கிறார். மிக மோசமானவர்கள் ஆட்சிக்கு வந்தி ருக்கிற, மதவாதம், சாதியவாதம், பிற்போக் குத்தனங்கள் தலைதூக்குகிற இச்சூழலில் இடதுசாரிகள் கரம் கோர்த்துப் போராட முன் வர வேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.
கருத்தரங்கத்தில் ஏஅய்யுடியுசி மாநிலத் தலைவர் தோழர் அனவரதன் சங்பரிவாரின் ஒரு அவதாரமான பாஜக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி குருட்டு நம்பிக்கையை வளர்க்கிறது என்றார். பிரிட்டனில், இஸ்ரேலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் பேரணி நம்பிக்கை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சாதி, மதம், மொழி ஆகிய வற்றின் பெயரால் போராட்ட உணர்வை ஒழிக்க முற்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றார்.
ஏஅய்சிசிடியு கர்நாடக மாநிலத் தலைவர் தோழர் பாலன் ‘மோடி நாட்டை தூய்மைப் படுத்தும் இயக்கத்தை துவக்கியிருக்கிறார்.ஆனால், உண்மையிலேயே இந்த நாட்டை தூய்மைப்படுத்துவது மாதம் ரூ.5,000 கூட சம்பளம் பெறாத தலித் பெண்மணிகளே’. ‘இன்று அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதல் வில்லனாக நீதிமன்றங்களே இருக்கின்றன.தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்புகள் வீசி எறியப்பட வேண்டும்’ என்றார்.
சிஅய்டியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் ஆறுமுகம் ஆர்எஸ்எஸ்ஸ÷ம், ஆனந்த மார்க்கமும் சுதந்திரப் போராட்டத்தில் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை, ஆனால் இன்று காந்திக்கு விழா எடுக்கிறார்கள். நாம் தொழிலாளர்களுக்கு பொருளாதாரப் போராட்டத்தோடு தத்துவப் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என்றார்.
ஏஅய்டியுசியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் டி.எம்.மூர்த்தி, அன்று குடியிருப்பு பகுதி பிரச்சனைகள் அனைத்தையும் சங்கம் பார்த்துக் கொண்டது. குடிநீர் வராவிட்டால் கூட சங்கத்தில் சொன்னால் தண்ணீர் வந்து விடும் என்பர். அந்த நிலை மீட்கப்பட வேண்டும்.தொழிற்சங்க கூட்டுப் போராட்டத்தில் ஏஅய்சிசிடியு இடம் பெறுவது போராட்டங்களுக்கு உக்கிரம் கொடுக்கக் கூடியது என்றார்.
கருத்தரங்கத்தில் இறுதியாக ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி பேசினார். அவர், நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படி விமர்சிக்காமல் இருக்க முடியுமா? மக்கள் மனசாட்சிபடி அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொன்னதை, பாபர் மசூதி வழக்கில் பெரும்பான்மை கருத்து நம்பிக்கை என்று நீதிமன்றம் சொன்னதை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா? பிரச்சனைகளின் அடிப்படையில் அனைத்தும் பார்க்கப்பட வேண்டும். முதலமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு பதவி பறிபோனபின் அவர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருக்க அருகதையற்றது. அது பதவி விலக வேண்டும் என்றார். இன்றைய சூழலில் இடது ஜனநாயக குரலோடு ஏஅய்சிசிடியு கை கோர்க்கத் தயார் என்றும் தொழிற்சங்க ஒற்றுமையின் மய்ய கருவாக இடதுசாரிகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தோழர்கள் ஜவகர், பழனிவேல், ராமன், சுசீலா, ஏ.கோவிந்தராஜ், தாமோதரன், குப்பாபாய் ஆகிய 7 பேர் கொண்ட தலைமைக் குழு தலைமை தாங்கியது. தலைமைக் குழுவிற்கு, தோழர்கள் ரமேஷ், தேசிகன், சேகர் ஆகியோர் கொண்ட தொழில்நுட்பக் குழு உதவியது.
பிரதிநிதிகள் மாநாட்டை ஏஅய்சிசிடியு அகில இந்தியச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘மத்தியில் அமைந்துள்ள புதிய மோடி அரசாங்கம் தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. போராடிப் பெற்ற உரிமைகள் பறிக் கப்படுகின்றன. மோடி -இந்தியாவில் தயார் செய்வோம் - என்ற முழக்கத்தின் மூலம் இந்தி யாவை விற்கப் பார்க்கிறார். ஜெ தண்டனை பெற்றதையடுத்து தமிழக அரசாங்கம் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டது’ என்றார். அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டத்திற்கும் 2015ல் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டிற்கும் தமிழக ஏஅய்சிசிடியு அனைத்து வகையிலும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மாநாட்டை வாழ்த்தி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளரும் ‘சோளகர் தொட்டி’ நாவலாசிரியருமான தோழர் பாலமுருகன் பேசினார். அவர், இன்றைய சூழலில் திட்டமிட்டுப் பரப்பப்படும் வலதுசாரிக் கருத்துக்களுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் உரிமை பறிக்கப்படுவதற்கு எதிராகவும் முற்போக்கு ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து மாநாட்டினை வாழ்த்தி, ஏஅய்சிசிடியுவின் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழகத் தலைவர் தோழர் சத்ய கிருஷ்ணன், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி ஆகியோர் உரை யாற்றினர். எழுத்தாளர்கள் தோழர் முருகவேள், தோழர் திருப்பூர் குணா ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், மாநாட்டு நகல் அறிக்கை முன்வைத்தார். பிரதிநிதிகள் அறிக்கையின் மீது கருத்துக்கள் முன்வைத்தார்கள்.
அக்டோபர் 5 அன்று இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் வாழ்த்திப் பேசினார். இந்திய, தமிழக அரசியல் பற்றி விரிவாக உரை நிகழ்த்திய அவர், தமிழக நடப்புகளில் இப்போது ‘அழுகாச்சி அரசியல்’ என்ற புதிய சொல்லாடல் உருவாகியிருக்கிறது என்றார். மோடி தனது விஜயதசமி உரையில் தீமையை நன்மை வெல்வதைக் குறிப்பதுதான் விஜயதசமி என்று குறிப்பிட்டு. காங்கிரசை பாஜக வென்றதைக் குறிப்பிட்டு பேசியதைச் சுட்டிக்காட்டிய தோழர் பாலசுந்தரம் ஒரு தீமையை இன்னொரு தீமையால் எப்படி வெல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். அகில இந்திய அளவில் இகக (மாலெ) பாஜக வின் மோடி அரசுக்கு எதிராக முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து இயக்கங்களை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு அறிவாளிப்பிரிவினர், முற்போக்காளர் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். தமிழகத்தில் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயகுமாரும் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
பிரதிநிதிகள் அறிக்கை மீது விவாதித்த கருத்துக்கள் மீது தோழர் சங்கரபாண்டியன் தொகுப்புரையாற்றினார். அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாநாடு புதிய மாநிலப் பொதுக்குழுவையும் செயற்குழுவையும், நிர்வாகிகளையும் தேர்வு செய்தது. மாநிலச் சிறப்புத் தலைவராக தோழர் ஜவஹர், மாநிலத் தலைவராக தோழர் என்கே.நடராஜன், பொதுச் செயலாளராக தோழர் சங்கரபாண்டியன் உட்பட 27 நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டார்கள். மாநாட்டில் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் என மொத்தம் 340 பேர் கலந்து கொண்டனர்.
மாநாட்டுத் தீர்மானங்களை தோழர் எ.எஸ்.குமார் முன்வைத்தார். அவற்றில் சில:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் அஇஅதிமுக அரசாங்கம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அஇஅதிமுக அரசு ஒட்டு மொத்தமாக பதவி விலக வேண்டும். நம்பிக்கையைப் பெற மறுதேர்தல் நடத்த வேண்டும்.
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ15,000 சட்டமாக்குதல், ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம், கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுமைதூக்கும் தொழிலாளர்கள், கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகள். பீடி, விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகள் உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் அக்டோ பர் 28 சிறை செல்லும் போராட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டும்.
தேசந்தழுவிய அளவில் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக டிசம்பர் 5ல் நடைபெறும் அனைத்துத் தொழிற் சங்கப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து முயற்சியிலும் ஈடுபட வேண்டும்
தமிழக மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட வேண்டும்.
அஇஅதிமுக அரசின் தேர்தல்கால வாக்குறுதியான 3 சென்ட் நிலம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
தொழிற் சங்க அங்கீகாரச் சட்டம் உடனடியாக கொண்டுவர வேண்டும்.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி வாழ்த்துரை ஆற்றினார்.
அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதில் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர் களை அணிதிரட்ட வேண்டியது பற்றியும் நம்முள்ள சவால்கள் பற்றியும் புதிய மாநில நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்களின் கடமை, பொறுப்பு, அவர்களின் பங்கு பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
மோடி அரசுக்கு எதிராகவும், அதிமுக அரசு பதவி விலகக் கோரியும் அரங்கம் அதிர தோழர்கள் முழக்கங்கள் எழுப்ப மாநாடு நிறைவு பெற்றது.