‘இயற்கைச் சீற்றங்களால்
பயிர்கள் அழியும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பேரழிவைக் போக்கிடும்
திட்டமாக தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் பயிர்க்
காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்தத்
திட்டத்தின்படி, காப்பீடு செய்யப்படும் தொகைக்கான காப்பீட்டுக் கட்டணம்,
அதாவது பிரீமியம், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்றாற் போல் 2% முதல் 3.5%
வரை இருந்தது. இந்தக் காப்பீட்டுக் கட்டணத்தில், 50% தொகையை அரசே செலுத்தி
வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர்’.
‘இந்தத் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு வழங்கப் பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டு நிறுவனங் களால் வசூல் செய்யப்பட்ட காப்பீட்டுக் கட்டணங்களுக் குள் இருந்தால் அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனங் களே வழங்கிவிடும். வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகை காப்பீட்டுக் கட்டணத்தை விடக் கூடுதலாக இருந்தால், தேவைப்படும் அந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் விவசா யிகளுக்கு வழங்கும். இந்தத் திட்டத்தை ஒரு முழுமையான காப்பீட்டுத் திட்டமாகக் கருத முடியாது என்றபோதிலும் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாகவே இது இருந்து வந்தது. இந்த நிலையில், மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே முந்தைய மத்திய கூட்டணி அரசு கடந்த நவம்பர் மாதம் திடீரென இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டம் திருத்திய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்ற இரு அம்சங்களைக் கொண்டது. திருத்திய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அந்தந்த இடங்களில் கடந்த காலங்க ளில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பின் அடிப்படையில் காப் பீட்டுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு நிர்ணயிக் கப்பட்ட காப்பீட்டுத் தொகை ஒரு ஹெக்டேருக்கு (சுமார் 2 1/2 ஏக்கர்) ரூ.6,440 மட்டுமே. இதற்கான காப்பீட்டுக் கட்டணம் ரூ.3,349. இதில், மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.1,256 செலுத்த வேண்டும்.
மீதமுள்ள ரூ.837 விவசாயி செலுத்த வேண்டும். இழப்பீடு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே அளிக்கும். இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே, 2% மேல் உள்ள காப்பீட்டுக் கட்ட ணத்தை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆலோசனை தெரிவித்திருந்தேன். அதை முந்தைய அரசு நிராகரித்துவிட்டது. இது குறித்து தற்போது மத்திய அரசுக்கு எனது தலைமையிலான அரசு அனுப்பிய கருத்துருவை ஏற்று இந்த ஆண்டு மட்டும் பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையே நடை முறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2014ல் பழைய காப்பீட்டுத் திட்டத்தையே அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது’ என கடந்த 20ஆம் தேதி ஜெயலலிதா அறிவித்தார்.
அவர் அறிவிப்பில் உள்ளபடி புதிய பயிர்க் காப் பீட்டு திட்டம் விவசாயிகளிடம் பணத்தை பிடுங்க வருகி றது என்பது உண்மைதான். ஆனால், ஜெயலலிதா, புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தன் பங்கைக் குறைக்க முயற்சிக்கிறது என்று சொல்கிறாரே தவிர, இத் திட்டம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறது, தனியாரை கொழுக்கச் செய்கிறது என்பதை மறைத்துவிட்டார். ஜெயலலிதா சொல்வதுபோல் பழைய திட்டத்தின்படி தமிழக விவசாயிகளை பாலும் தேனுமா பருகச் செய்துவிட்டார்? அவர் உதாரணமாகக் காட்டியிருக்கும் திருவாரூர் மாவட்டத்தில், பக்கத்தில் உள்ள நாகை மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1985 முதல் சுமார் 25 ஆண்டுக ளாக 2010 - 2011 வரை பழைய காப்பீட்டு முறையிலேயே ஏக்கருக்கு பயிர்க் காப்பீட்டு கட்டணம் (பிரீமியம்) பருவத் திற்கு ரூ.129 ஆகவும் இழப்பீட்டுத் தொகை ரூ.12,944 ஆகவும் இருந்தது. 2011-12, 2012-13 ஆண்டுகளில் இழப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு ரூ.6,000 என்றும் அடுத்து ரூ.4,000 என்றும் குறைக்கப்பட்டு இப்போது ரூ.2,000 ஆகிவிட்டது என்கிறார்கள் அங்குள்ள விவசா யிகள். புதிய காப்பீட்டு முறையில் இழப்பீடு குறைக்கப் பட்டுள்ளது பற்றி பேசும் ஜெயலலிதா, இழப்பீட்டுத் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம், 4 ஆயிரம் என்று குறைக்கப்பட்டபோது கண்டு கொள்ளவேயில்லை. இப்போதும் இந்த ஆண்டு பழைய காப்பீட்டு முறையே நடைமுறையில் இருக்கும் என்று சொல்லும்போது, பிரீமியத் தொகை வேண்டுமானால் விவசாயிக்குக் குறையலாமேயொழிய, இழப்பீட்டுத் தொகையோ அதே ரூ.6 ஆயிரம், 4 ஆயிரம், 2 ஆயிரம்தான்.
திருவாரூர் மாவட்டத்தில் 2012-13ல் வறட்சி பாதித்த விவசாய நிலங்களுக்கு குறைந்த அளவே நிவாரணம் அளிக்கப்பட்டு, அதற்கெதிராக விவசாயிகள் மறு கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி, கர்நாட காவில் இருந்து தண்ணீர் கிடைக்காதது போன்றவற்றால் சம்பா சாகுபடி, காலம் கடந்து தொடங்கப்பட்டது. விவ சாயிகளுக்கு உதவுவதாகச் சொல்லி காப்பீட்டு பிரீமியத் தொகையைக் கூட தமிழக அரசே செலுத்தியது. அதே நேரத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள், சில கூட்டுறவு வங்கிகளும் கடன் வாங்கியவர் களிடம் இருந்து பிரீமியத் தொகையை பிடித்தம் செய்து காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தின. இதில், நிலம் இல்லாதவர்கள், குத்தகை சாகுபடி செய்யாதவர்களுக்கும் கடன் கொடுக்கப்பட்டு அவர்களிடம் பிடித்தம் செய்த பிரீமியத் தொகையும் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தப் பட்டது. இதனால், தமிழகத்தின் சாகுபடி பரப்பளவைவிட இரண்டு மடங்கு கூடுதலான சாகுபடி பரப்பளவாக காப்பீட்டு நிறுவனத்தில் பதிவாகிவிட்டது.
தமிழகத்தில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ. 740 கோடி என காப்பீட்டு நிறுவனம் அறிவித்து தமிழக அரசு தனது முழுமையான பங்குத் தொகையை விடுவித்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசோ சாகுபடி பரப்பளவுக்குரிய பங்குத் தொகையை மட்டும் செலுத்தி விட்டு கூடுதலாக பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகையை செலுத்தவில்லை. அந்தக் குளறுபடியால் 2012-13ம் ஆண்டு காப்பீடு வழங்குவது கால தாமதமானது. விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக காப்பீட்டு நிறுவனம் ஒரு குத்து மதிப்பு கணக்காக தமிழக அரசு செலுத்திய பங்குத் தொகைக்கு ஏற்ப ரூ.641 கோடியை மட்டும் விடுவித்து விவசாயிகளுக்குப் பிரித்து கொடுத்தது. அது மட்டுமின்றி, திருவாரூர் மாவட்டத்தில் இழப்பீட்டு சதவீதத்திற்குக் குறைவான அளவே பாதிப்பு உள்ளதாக ஆதாரமற்ற அறிவிப்பையும் வெளியிட்டு, இழப்பீட்டுத் தொகையும் குறைத்து வழங்கப்பட்டது. இப்படித்தான் அம்மா அரசு விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கிறது.
பழைய காப்பீட்டு முறையில் இழப்பீட்டுக் கணக் கெடுப்பு முறையும் அபத்தமானது. உதாரணமாக, திருவாடனை தாலுகாவில், 7 பிர்காக்களும் 95 வருவாய் கிராமங் களும் (குரூப்) உள்ளன. 2012-13ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டு திருவாடனை தாலுகாவில் உள்ள தொண்டி பிர்காவிற்கு ஏக்கருக்கு ரூ.2,132, திருவாடனை பிர்காவிற்கு ஏக்க ருக்கு ரூ.1,886, ஆர்.எஸ் மங்கலம் பிர்காவிற்கு ரூ.7,380, ஆனந்தூர் பிர்காவிற்கு ரூ.7,708, சோழந்தூர் பிர்காவிற்கு ரூ.7,462, மங்கலகுடி பிர்காவிற்கு ரூ.841 என ஒதுக்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட புல்லூர் குரூப்பிற்கு இழப்பீட்டுத் தொகை ஒதுக்கப்படவில்லை. முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஓரே மாதிரி இழப்பீடு வழங்கப்பட்டது. இதற்குக் காரணம் பிர்கா வாரியாக பாதிப்பை கணக்கெடுப்பு செய்வதே ஆகும்.
மாநில அரசு செயற்கோள் விவரப்படி ஒரு குரூப்பில் 3 இடங்களின் சர்வே எண்ணில் கணக்கெடுப்பு செய்து, அந்த நிலத்தின் விளைச்சலின் அடிப்படையில் பிர்கா முழுவதும் சராசரியாக இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட வர்க்கு குறைவான இழப்பீடு கொடுப்பதும், பாதிப்பே இல்லாதவர்க்கும்கூட இழப்பீடு வழங்கப்படுவதும் நடக்கிறது. இந்தக் குளறுபடியைப் போக்க அவரவர் நிலங்களில் ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு தரப்பட வேண்டும் என்றும் அதற்கு தனி நபர் காப்பீட்டு முறை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து 40-50 அடி தண்ணீர் திறந்துவிட்டாலே சில நாட்களில் நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்துவிடும். ஆனால், இப்போது 112 அடி தண்ணீர் திறந்து விட்டு பல நாட்கள் கடந்த பின்பும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் முழுமை யாக, விவசாயத்திற்குத் தேவையான அளவு வந்து சேரவில்லை என்கிறார்கள் அங்குள்ள விவசாயிகள்.
நாகை மாவட்டம் அரிச்சந்திரன் வாய்க்கால் பக்கத் தில் உள்ள பள்ளமான பகுதியை ஏரியாக மாற்ற ரூ.640 கோடி ஒதுக்கி இருக்கிறது தமிழக அரசு. அந்தப் பள்ளப் பகுதியை ஏரியாக மாற்றினால், ஒரு டிஎம்சி அளவுதான் தண்ணீர் சேமிக்க முடியும். அதற்கு ரூ.640 கோடி வெட்டி யாய்ச் செலவு செய்யப் போகிறாங்க என்று குமுறுகிறார் கள் விவசாயிகள். டெல்டா பகுதிகளில் 40,000க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த குளங்களை இப்போது தேடினாலும் கிடைக்காது. காவிரி டெல்டா பகுதிகளில் தொடர் மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயராது. களிமண் பாங்கான பகுதிக ளாக இருப்பதால் மழை பெய்தும் வீணாகும் என்பதால் கல்லணை கட்டப்பட்டது என்கிறார் தஞ்சாவூர் பிரைஸ்ட் பல்கலைக் கழக பேரிடர் நிர்வாக மய்ய இயக்குநர் ஜி.விக்டர் ராஜமாணிக்கம். தேவை தடுப்பணைகளும் குளங்கள் தூர்வாரப்படுவதும் என்கிறார்கள் விவசாயிகள்.
புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள இரண்டு அம்சங்களில் ஒன்று வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத்திட்டம். வானிலை மாற்றம் பற்றி முன் கூட்டியே அறிந்து கொண்டு அதன்படி பல்வேறு வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் இழப்புகளையும் காப்பீட்டுத் தொகைகளையும் இழப்பீடுகளையும் கணக் கிடுகிறார்கள். வானிலையை செயற்கைகோள் மூலம் துல்லியமாக(!) அறிந்து சொல்வதற்காக ஸ்கைமெட் வெதர் என்ற தனியார் நிறுவனத்தின் தானியங்கும் வானிலை மய்யத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது. ஸ்கைமெட் வெதர் இந்தியாவில் 2014ம் ஆண்டின் பருவ நிலை மாற்றத்தை ஏற்கனவே முன்கூட்டியே கணித்து விட்டதாம். பயிர் இழப்பீட்டினை வானிலை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கும் இந்த ஸ்கைமெட் வெதர் உத்தரகாண்ட்டிலும் ஜம்மு காஷ்மீரிலும் என்ன செய்து கொண்டு இருந்ததோ? புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இந்தியா முழுவதிலும் முன்னோட்டமாக 50 மாவட்டங் களில் நடைமுறைப்படுத்தப்படுகிறதாம்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும் இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மழையை மட்டுமே நம்பியுள்ள வானம் பார்த்த பூமியை அதிகமாகக் கொண்டது. இந்த மாவட்டத்தில் குன்றாண் டார்கோவில் ஒன்றியத்தில் கடந்த ஆண்டில் தண்ணீர் இல்லாமல் கரும்புப் பயிர் முற்றிலுமாக கருகிப் போய் விட்டது. - நாங்க பயிர் செய்கிற கரும்பை குரும்பூர் சர்க் கரை ஆலைக்குக் கொடுக்கிறோம். சர்க்கரை ஆலையே காப்பீட்டுப் பிரீமியத்தை கட்டிவிடும். கடந்த ஆண்டு எனக்கு இருந்த 4 ஏக்கர் கரும்பும் கருகிப் போச்சு.
அதிகாரிங்க வந்து நிலத்துல என்னை நிக்க வைச்சு போட்டோ எல்லாம் எடுத்துட்டுப் போனாங்க. இன்னிக்கு வரைக்கும் எனக்கு இழப்பீட்டுத் தொகை வந்து சேரல- என்கிறார் விவசாயி செல்வம். - சுய உதவிக்குழுக்கள் மூலமான எங்களுக்கு லோன் தருவாங்க கூட்டுறவு வங்கில. அப்படியே இன்சூரன்ஸ் பிரிமீயமும் பிடிச்சுக்கு வாங்க. போன ஆண்டு மழை இல்லாம வறட்சி. நஷ்டமாகிப் போச்சு. இது வரை இன்சூரன்ஸ் பணம் வரல. இந்த லட்சணத்துல புதுசா பயிர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து எங்களிடம் பணத்தையும் புடுங்கி எங்கள நாசப்படுத்தப் போறாங்க.விவசாயத்துக்கு தண்ணீருக்கு வழி சொல்லமாட்டேங்குறாங்க இந்த அரசாங்கங்க - என்கிறார் பாண்டித் துரை.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட அறிக்கைபடி, 2012 - 2013ம் ஆண்டு புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 24 லட்சம் விவசாயிகள் தான் பயனடைந்துள்ளார்கள். அதில் மஹாராஷ்டிராவில் 13.18 லட்சம் விவசாயிகளும் தமிழகத்தில் 6.91 லட்சம் விவசாயிகளும் கர்நாடகாவில் 2.74 லட்சம் விவசாயிகளும் அடங்குவர். மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் விவசா யத்தில் ஈடுபட்டிருக்கும் போது, நாட்டில் வெள்ளமும் வறட்சியும் தலைவிரித்தாடும்போது அரசு கொடுத்துள்ள காப்பீடு சொற்பம்தான். தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் இல்லை. மாநிலத்தில் வறட்சி என அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஆதர வாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், அம்மாவின் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், - வறட்சி எங்கு உள்ளது? எதிர்க்கட்சிகள், இல்லாத ஒன்றை பிரச்சனையாக்குகிறார்கள்.
வறட்சியே இல்லாத போது வறட்சி என்று அரசு எப்படி அறிவிக்க முடியும்- என்று அம்மாவின் குரலைப் பிரதிபலித்தார். தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது என்று அறிவிக்கக்கூட தயாராக இல்லாத ஜெயலலிதா, தான் தற்போதுள்ள மத்திய அரசிடம் பேசி இந்தாண்டு பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தச் செய்துள்ளதாக ரொம்பவே அக்கறையாக அறிவிப்பு விடுகிறார். அம்மாவின் இந்த அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர்தான், மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், இப்போது நடைமுறையில் உள்ள தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்குப் பயன் உள்ளதாக இல்லை, எமது அரசாங்கம் வேறொரு புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர இருக்கிறது, அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது, அந்த திட்டம் விவசாயிகளை வெள்ளத்தில், வறட்சியில், பயிர்கள் மீதான பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்றும், அத்திட்டத்தின் விவரங்கள் வரும் நிதிநிலை யின் அறிக்கையின்போது முன்வைக்கப்படும் என்றார்.
அதாவது 2013 நவம்பரில் மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் கொஞ்சம்தான் தனியார் வங்கிகளும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்த விவசாயத்தையும் கபளீகரம் செய்வதற்கேற்ப பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்போகிறோம் என்கிறார். அதை உறுதி செய்யும் விதம் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலம் தும்கூரில் உணவுப் பூங்காவைத் திறந்து வைத்துப் பேசிய நரேந்திர மோடியும், விவசாயிகள் நாட்டுக்கு எல்லாவற் றையும் கொடுக்கிறார்கள், ஆனால், அவர்கள் மட்டும் ஏழ்மையில் இருக்கிறார்கள், விவசாயிகள் வளம் பெற் றால்தான் நாட்டின் கஜானா நிறையும், விவசாயிகளைப் பாதுகாக்க விவசாய வளர்ச்சியில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். புதுத் திட்டம் வரப்போவது தெரிந்து, கடிதம் எழுதியே நல்ல பெயர் எடுக்க நினைக்கும் ஜெயலலிதாவும் விவசாயி நண்பர் வேடம் போட்டிருக்கிறார். மொத்தத்தில், உழவன் பெயரைச் சொல்லி உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக் கிறார்கள் மோடியும் லேடியும்.